மூன்றாவது உலக மகா யுத்தம்


மூன்றாவது உலக மகா யுத்தம்

எழுதியவர்: ஐஸ்ரின் பிரபாகரன்

மூன்றாம் உலக மகா யுத்தம் PDF file

இஸ்ரேலிய அராபிய யுத்தக் களத்தில் ஜந்து கொடிய யுத்தங்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. இன்னிலைமையில் அதே மத்திய ஆசியாவில் உலக வல்லரசுகளை ஈடுபடுத்தக்கூடிய மிகப் பெரிய அணுவாயுத யுத்தமொன்று வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த யுத்தத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தின் 38 ம் 39 ம் அதிகாரங்களில் வாசிக்கலாம். இன்றைக்கு உலகில் நிறைவேறியுள்ள மிக முக்கியமான வேதத்தின் தீர்க்கதரிசனங் களில் ஒன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாகி இருப்பதே
ஆகும். 1948 ம் ஆண்டுக்குமுன் இஸ்ரேல் என்ற தேசமே உலகத்தின வரைபடத்தில் இருந்ததில்லை. இவ்வாறு இஸ்ரேல் உருவாகும் என்ற தீர்க்கதரிசனத்தின் ஒரு குறிப்பை எசேக்கியேல் 37ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதற்கு அடுத்த 38ம் அதிகாரத்தில் உருவான இஸ்ரேல் தேசத்திற்கும், இன்னொரு தேசத்திற்கும் நடக்கவிருக்கும் ஒரு பெரிய யுத்தத்தைக் குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். இஸ்ரேல் உருவாகும் என்ற தீர்க்கதரிசனம் 37ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கொடிய யுத்தத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் 38ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இஸ்ரேல் உருவான பிறகு நடக்கவேண்டிய மிக முக்கியமான சம்பவம் இந்த அணுவாயுத யுத்தமே என நிதானிக்கலாம்.





இந்த யுத்தத்தில் தாக்கப்படப் போகிற தேசம்:
பட்டயத்திற்கு நீங்கலாகி , பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய். நெடுநாளாய் பழாய்க் கிடந்து பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லோரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய் என்று எசேக்கியேல் 34ம் அதிகாரம் 8ம் வசனத்தில் வாசிக்கிறோம். யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களாய் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டு பின் தங்களின் சுய தேசத்திற்கு வேதத்தின் தீர்க்கதரிசனத்தின்படி இப்போது வந்திருக்கிறார்கள். இந்த வேதவசனத்தில் இவ்வாறு பற்பல ஜாதிகளுக்குள்ளும் சிதறடிக்கப்பட்டு பிறகு தங்கள் தேசத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தேசத்திற்கு விரோதமாயும், இஸ்ரேலின் மலைகளுக்கு விரோதமாயும், இந்த யுத்தம் நடக்கும் என்பதால், வெடிக்கப்போகிற அணுவாயுத யுத்தத்திலே தாக்கப்படப்போகிற தேசம் இஸ்ரேல் என்பது தெளிவாகிறது.


யுத்தத்தைத் தொடுக்கும் தேசம்:


இதைக்குறித்து எசேக்கியேல் கூறும்போது மேசேக், தூபால், மாகோகு என்ற மூன்று வார்த்தைகளை 38ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறான். இவர்களைக் குறித்து அறிய ஆதியாகமம் 10ம் அதிகாரத்தை வாசிக்கவேண்டும். நோவாவிற்கு சேம், காம், யாப்பேத் என்ற மூன்று மக்கள் இருந்ததாக வேதத்தில் வாசிக்கிறோம். மேசேக், தூபால், மாகோகு என்ற மூவரும் நோவாவின் மகனான யாப்பேத்தின் புத்திரர் என்று ஆதியாகமம் 10ம் அதிகாரம் 2ம் வசனத்தில் வாசிக்கிறோம். ஜலப்பிரளயத்திற்குப்பின் நோவாவின் வம்சாவழியினர் எங்கெங்கெல்லாம் போய்க் குடியேறினார்களோ அந்தந்த இடங்கள் அவனவன் மொழியின்படியேயும், அவரவர் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும் வௌ;வேறு தேசங்களாயப் பகுக்கப்பட்டது என ஆதியாகம் 10ம் அதிகாரம் 5ம் வசனத்தில் வாசிக்கிறோம். அவரவர்கள் சென்று குடியேறின தேசத்திற்கு அவரவர் பெயர் வைக்கப்பட்டது என இதனால் அறியலாம். மேசேக், தூபால், மாகோகு என்பவர்கள் ப+மியின் வடதிசையில் போய்க் குடியேறினார்கள் என்று பிளேவியஸ் ஜோசிபஸ் (குடயஎரைள துழளநிhரள ) உட்பட பல சரித்திர ஆராச்சியாளர்கள் குறிப்பு எழுதியுள்ளனர். இதனால் ப+மியின் வடதிசையிலுள்ள ஒரு தேசம் இஸ்ரேலைத் தாக்குமென்று நிதானிக்கலாம். உலகின் வடகோடியில் உள்ள தேசம் இன்றைய ரஷ்யா ஆகும்.

கோகு என்ற இன்னொரு வார்த்தையையும் 39ம் அதிகாரத்தின் 3ம் வசனத்தில் எசேக்கியேல் உபயோகிக்கிறான். கோகு என்ற வார்த்தைக்கு கடவுளுக்கு எதிரானவன் என்றொரு அர்த்தம் உண்டு. தேவன் இல்லை என்ற கொள்கையுடைய, கிறிஸ்தவத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்ட நாடு ரஷ்யா ஆகும். எனவே எசேக்கியேல் குறிப்பிடுகிற தேசம் இன்னதென்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ரஷ்யா ஆனது ஜரோப்பா, ஆசியா என்ற இருகண்டங்களிலும் பரவியுள்ள ஒரு நாடாகும். எசேக்கியேல் குறிப்பிட்டுள்ள பெயர்களை இன்றைய நடைமுறைக்குக் கொண்டுவந்தால் மாகோகு என்பது ஜரோப்பியக் கண்டத்திலுள்ள ரஷ்யாப் பகுதியினையும், தூபால் என்பது ஆசியாக் கண்டத்திலுள்ள ரஷ்யாப் பகுதியினையும் குறிக்கிறது. மேசேக் என்று எசேக்கியேலினால்க் கூறப்பட்டுள்ள பெயர் இன்றைய மொஸ்கோ ஆகியுள்ளது. இக்குறிப்புக்கள் ரஷ்யாவைத்தான் எசேக்கியேல் குறிப்பிடுகிறான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராய் வரும் இந்த சேனை வடதிசையிலிருந்து எழும்பும் என்று எசேக்கியேல் 38ம் அதிகாரம் 5ம் 6ம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடதிசை என்ற பதத்திற்கு மூலமொழியில் ( ருவவநச ஆழளவ ழேசவா ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு வடகோடியிலுள்ள தேசம் என்று அர்த்தம். இஸ்ரேலுக்கு வடக்கே வேறுசில நாடுகள் இருந்தாலும் எசேக்கியேல் கூறினபடி வடகோடியிலுள்ள தேசம் ரஷ்யா மாத்திரமே.

மேற்கண்ட மாகோகு, தூபால், கோகு என்ற வார்த்தைகளும் அல்லாமல் ( Pசinஉந ழக சுழளா ) என்ற இன்னொரு வார்த்தையும் மூலமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை அமெரிக்க மொழிபெயர்ப்பு வேதாகமத்திலும் புதிய ஆங்கில வேதாகமத்திலும் வாசிக்கலாம். ரோஷ் என்ற பதத்திற்கு கரடி என்றொரு அர்த்தம் உண்டு. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு மிருகம் அடையாளமாக அதாவது தேசிய மிருகமாக வைக்கப்பட்டுள்ளது. நமது பாரத தேசத்தில் 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்தபோது அப்பு என்ற யானைக்குட்டி அடையாளமாக விளம்பரம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 1980ம் வருட மொஸ்கோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி நடந்தபோது பனிக்கரடி ஒலிம்பிக்கொடியை பிடித்துச் செல்வதுபோல விளம்பரம் செய்யப்பட்டது. பனிக்கரடி ரஷ்யாவின் தேசிய மிருகமாகும். இந்தக் கரடி என்று அழைக்கப்படுகிற ரஷ்யா தான் இஸ்ரேலுக்கு எதிராய் யுத்தத்துக்கு வருமென்று இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே எசேக்கியேல் எழுதிவைத்துள்ளான்.

தீர்க்கதரிசனத்தின்படி ரஷ்யாவும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு கடுமையான கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. ரஷ்யாதான் எசேக்கியேலினால் குறிப்பிடப்படுகிற தேசமென்று சமீபத்திலோ அல்லது ரஷ்யாவின் இன்றைய இஸ்ரேலுக்கு எதிரான அயல்நாட்டு கொள்கையை வைத்தோ முடிவு செய்யப்படவில்லை. 1909ல் வெளியிடப்பட்டுள்ள ஸ்கோப்பில்டு ( ளுஉழகநைடன ) வேதாகமத்தில் எசேக்கியேல் ரஷ்யாவைத்தான் குறிப்பிடுகிறான் என்று அதன் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். அதற்கு முன் 1800ல் வெளியிடப்பட்ட எபிரேய லெக்சிகான் ( ர்நடிசநற டுநஒiஉழn ) ஆசிரியர்களும் எசேக்கியேலினால் குறிக்கப்பட்ட தேசம் ரஷ்யாவே எனத் தெரிவித்துள்ளனர். 1948ல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்து உதயமானபோது ரஷ்யா ஐ. நா. சபையிலே இஸ்ரேலுக்கு சுயஆட்சி உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இஸ்ரேலுக்குச் சாதகமாகவே வாக்களித்தது. இஸ்ரேல் உருவாக காரணமாயிருந்த ரஷ்யாவே இன்று எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின்படி இஸ்ரேலுக்கு எதிராய் மாறியுள்ளது.


ரஷ்யாவின் கூட்டாளிகள்:

வடதிசையிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராய் எழும்பிவரும் ரஷ்யாவோடு பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும், கோமேரும், தோகர்மா வம்சத்தாரும் இருப்பார்கள் என்று எசேக்கியேல் 38ம் அதிகாரம் 5ம் 6ம் வசனங்களில் வாசிக்கிறோம். இந்த நாடுகளும் ரஷ்யா அணியிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் என்று தெரிகிறது. அன்றைய பெர்சியா இன்றைய ஈரான் ஆகும். எத்தியோப்பியரும் லீபியரும் என்ற வார்த்தைகள் அல்ஜீரியா, மொராக்கோ, ருனேஷியா என்ற நாடுகளைக் குறிப்பதாகும். கோமர் என்பது இன்றைய ஜேர்மனி, போலந்து, செக்கோஸ்லவேக்கியா இவற்றைக் குறிப்பதாகும். தோகர்மா என்பது இன்றைய துருக்கியைக் குறிப்பதாகும். இத்தனை பெரிய நாடுகளின் கூட்டமைப்பு இஸ்ரேலைத் தாக்குமென்று எசேக்கியேல் தெரிவித்துள்ளான். இந்த எல்லா நாடுகளும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதிக்கத்தில் இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது


இஸ்ரேலின் கூட்டாளிகள்:

வெடிக்கப்போகிற இந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும் தர்ஷீசின் வர்த்தகரும் அதனுடைய பாலசிங்கங்களுமான அனைவரும் இருப்பார்கள் என்று எசேக்கியேல் 38ம் அதிகாரம் 13ம் வசனத்தில் வாசிக்கிறோம். இப் பெயர்கள் அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய பொதுச் சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இவற்றைக் குறிப்பதாகும். இந்த நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தில் நேரடியாக ஈடுபடுமா என்று வேதம் தெரிவிக்கவில்லை. இவர்கள் ரஷ்யாவுக்கு எதிராக நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாய் என்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும் மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாய் என்றும் சொல்லுவார்கள் என்று மாத்திரம் வேதம் கூறுவதால் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த நாடுகள் ரஷ்யாவைக் கண்டனம் மாத்திரம் செய்து இஸ்ரேலுக்கு ஆயுத, பண உதவிகளை மட்டும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


யுத்தம் ஆரம்பமாவதற்கான காரணம்:
இந்த யுத்தத்தை ரஷ்யாவும் இதர நாடுகளும் இஸ்ரேலின்மேல் தொடங்குவதற்கு இஸ்ரேலின்மேலுள்ள
பொறாமையும் இஸ்ரேலைக் கொள்ளையடிக்க வேண்டு மென்ற நோக்கமே காரணமாகும். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க் கிடந்து திருப்பிக் குடியேற்றப்பட்டதும் ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்திற்கு விரோதமாகவும் நீ உன் கையைத் திருப்பும்படிக்கு, உன் இருதயத்தின் யோசனைகள் எழும்ப நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்கள் இல்லாமல் இருக்கிற கிராமங்களுள்ள தேசத்திற்கு விரோதமாய்ப் போவேன். நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின் மேல் வருவேன். அவர்கள் எல்லோரும் மதில்கள் இல்லாமல் குடியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய் என்று எசேக்கியேல் 38ம் அதிகாரம் 10 முதல் 12 வரையுள்ள வசனங்களில் வாசிப்பதால் வடதிசை அணியினர் இஸ்ரவேலின்மேல் உள்ள பொறாமையினாலும் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடும் இந்த யுத்தத்தை ஆரம்பிப்பர் என உணரலாம். அன்றைக்கு வனாந்தரமாக இருந்த இஸ்ரேல் தேசம் யூதர்கள் குடியேறிய பிறகு செழிப்பான ப+மியாக மாறிக்கொண்டிருக்கிறது. சவக்கடலின் தாது உப்புக்களின் மதிப்பு மட்டும் ஒரு டிரிலியன் 270 மில்லியன் டொலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவக்கடலில் கிடைக்கும் பொட்டாஷ் என்ற தாதுஉப்பு இன்றைய வல்லரசுகளின் முக்கிய தேவை ஆகும். ஏனென்றால் இந்தப் பொட்டாஷ் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தயாரிக்க மட்டமல்ல, வெடிகுண்டுகள் தயாரிக்கவும் அவசியமான இரசாயனப்பொருளாகும். மேலும் சவக்கடலின் அருகே பெற்றோலியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் செல்வங்களை எல்லாம் கொள்ளையடிக்கத்தான் வடதிசைச் சேனை இஸ்ரேலுக்கு எதிராக வருமென எசேக்கியேல் முன் அறிவித்துள்ளான்.

சுதந்திரம் அடைந்து 36 ஆண்டுகளே ஆன இஸ்ரேல் இராணுவத்திறனிலும் விவசாய வளர்ச்சியிலும் விஞ்ஞானத்திலும் வெகுவாக முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றம் அநேக நாடுகளின் பொறாமையை அதற்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது. ரஷ்யா சிரியாவிற்கும் எகிப்துக்கும் கொடுத்த மிக் ( ஆபை ) போர் விமானங்களும் சாம் ( ளுயஅ ) ஏவுகணைகளும் இஸ்ரேலின் இராணுவத்தின்முன் நிற்கமுடியாமல் கடந்த இஸ்ரேலிய அராபிய யுத்தங்களில் நொருக்கப்பட்டதால் ரஷ்யா இஸ்ரேலைப் பொறாமைக் கண்களினால் காணக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.


யுத்தம் ஆரம்பிக்கும் நேரம்:

வடதிசைச் சேனை இந்த யுத்தத்தை இஸ்ரேல் மீது, அது நிர்விசாரமாய் சுகத்தோடு இருக்கும்போது ஆரம்பிக்கும் என்று 38ம் அதிகாரம் 12ம் வசனத்தில் வாசிக்கிறோம். ஐந்து இஸ்ரேலிய அராபிய யுத்தங்கள் நடந்து முடிந்த நிலையிலும் இன்னொரு யுத்தம் சிரியாவோடு வெடிக்கக்கூடிய நிலையிலும்தான் இன்றைய சூழ்நிலை மத்திய ஆசியாவில் உள்ளது. எப்பொழுதும் ஆயத்தமான ஒரு சூழ்நிலையிலேயே இஸ்ரேல் இன்று இருந்து வந்தாலும் ஒரு சமாதானமான சூழ்நிலையும் கூடவே உருவாகிக்கொண்டிருக்கிறது. ஏற்பட்டிருக்கிற இந்த சமாதான சூழ்நிலை வளரும்போது இஸ்ரேல் தனக்குக் கிடைத்த பாதுகாப்பான சூழ்நிலையினால் நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கும்போது வடதிசைச் சேனை இந்த யுத்தத்தைத் தொடுக்கும்.


கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம்:

ஏசாவின் வாரிசான அராபியருக்கும் யாக்கோபின் வாரிசான யூதருக்கும் நடந்துகொண்டிருக்கும் கொடிய யுத்தங்களுடனே ஒரு சமாதான சூழ்நிலையும் இஸ்ரேலிய அராபிய உறவில் ஏற்பட்டிருப்பது அநேகருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், வேதத்திலும் அதற்கு ஆதாரம் உண்டு. ஏசாவின் ஆசீர்வாதத்தை யாக்கோபு பறித்துக்கொண்டதால் ஏசா யாக்கோபைக் கொலை செய்ய வகைதேடினான் என்று வேதம் கூறுகிறது. இதன் அடிப்படையிலே தான் ஏசாவின் வம்சாவழியிலே வந்த அராபியருக்கும் யாக்கோபின் வம்சவழியில் வந்த இஸ்ரவேலருக்கும் யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏசாவிற்குப் பயந்து தன் மாமன் வீட்டிற்கு ஓடின யாக்கோபு மணம் புரிந்துகொண்டு ஆடு மாடுகளோடு திரும்பி வரும் போது ஏசாவோடு சமாதானம் செய்துகொள்ளுகிறான். இந்தத் திருஷ்டாந்தத்தின்படி எழும்பினதுதான் கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம் ஆகும்.

நான்கு இஸ்ரேலிய எகிப்திய யுத்தங்களில் தோற்கடிக்கப்பட்ட எகிப்து இன்னொரு யுத்தத்தை இஸ்ரேலுடன் சந்திக்கத் தயங்கியது. சமாதானத்தை விரும்பிய எகிப்தின் அதிபர் அன்வர் சாதத், 1977ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சரித்திரச் சிறப்பு வாய்ந்த தமது இஸ்ரேல் பயணத்தை மேற்கொண்டார். பல வருடங்களாய் இருந்து வந்த இஸ்ரேலிய அராபியப் பகைமை இந்தப் பயணத்தினால் குறைய ஆரம்பித்தது. எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலிருந்து இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் செல்ல சுமார் 28 நிமிடங்கள் தான் ஆகின்றன. ஆனால் இச் சிறிய பயணத்தை மேற்கொள்ள இந்த ஏசா, யாக்கோபின் வாரிசுகளுக்கு இத்தனைகாலம் பிடித்தது. மோசே எகிப்தின் மன்னனான பார்வோனின் முன்பாக நின்றபிறகு இப்போதுதான் ஒரு ய+தரும், எகிப்தியரும் அரசியல் ரீதியில் சந்திக்கின்றனர் என்று உலகப் பத்திரிகைகள் இந்தச் சந்திப்பினை வர்ணித்தன. அதே ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று இஸ்ரேல் பிரதமர் பிகின் எகிப்துக்குச் சென்று பேச்சுவார்த்தைகள் நடத்த சமாதான மலர் மலர ஆரம்பித்தது. பிகினும் அன்வர் சதாத்தும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்பி அப்போது அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஐpம்மி கார்ட்டரின் உதவியை நாட அவர் அதற்கு இணங்க யூதரான பிகினும் கிறிஸ்தவரான ஐpம்மி கார்ட்டரும் இஸ்லாமியரான அன்வர் சதாத்தும் 1979ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் சந்தித்தனர். 13 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்ச் மாதம் 26ம் திகதி எகிப்திய இஸ்ரேலிய சமாதான ஒப்பந்தம் கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம் என்ற பெயரிலே கையெழுத்தாகியது. ஏசாவின் வாரிசாகிய அன்வர் சதாத்தும் யாக்கோபின் வாரிசாகிய மேனாட்சின் பிகினும் ஏசாவும் யாக்கோபும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டது போலத் தழுவிக்கொண்டனர்.

யாக்கோபு எப்படி அன்று ஏசாவுக்கு காணிக்கைகளைக் கொடுத்து அவனோடு சமாதானம் செய்துகொண்டானோ அப்படியே இஸ்ரேலும் எகிப்துக்கு சீனாய் மலைப் பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒத்துக்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்குக் காரணமாய் இருந்த அதிபர் சதாத் 1981ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதினால் இந்த ஒப்பந்தம் செயலிழக்கும் என்ற உலக அரசியல்வாதிகளின் எண்ணத்திற்கு மாறாக சதாத்திற்குப் பிறகு பதிவியேற்ற எகிப்தின் அதிபர் முபாரக்கிற்கும் இஸ்ரேலுடன் சமாதானத்தை விரும்புவதாக கருத்துத் தெரிவித்துள்ளார். இச் சமாதான ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் சீனாய் மலைப் பகுதிகளை எகிப்துடன் ஒப்படைக்காது என்ற அநேகரின் கருத்துக்கு மாறாக கடந்த 82ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி இஸ்ரேல் சீனாய் மலைப் பகுதிகளை எகிப்திடம் ஒப்படைத்ததினால் இந்த சமாதான ஒப்பந்தம் இன்னும் ஸ்திரப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு அதனுடைய தென்பகுதியிலிருந்து எகிப்தின் மூலமாய் வரும் ஆபத்து நீங்க பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு வடக்கே உள்ள லெபனானிலிருந்து செயல்பட்டு இஸ்ரேலுக்குத் தொல்லை கொடுத்து வந்த பாலஸ்தீன விடுதலை ஸ்தாபனம் கடந்த இஸ்ரேலிய லெபனான் யுத்தத்தினால் முறியடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டு விட்டதால் இஸ்ரேலிய வட எல்லையிலும் இஸ்ரேலுக்குப் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. ஜோர்டான் நாட்டோடு இஸ்ரேலுக்குக் கடந்த 67ல் நடந்த யுத்தத்திற்கு பிறகு ஒரு சுமூகமான உறவே இருந்து வருகிறது. 48ல் நடந்த இஸ்ரேலிய அராபிய யுத்தத்தில் இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றதும் இஸ்ரேலின் கொடிய விரோதியும் எண்ணைவளம் கொழிக்கும் அராபிய நாடுமான ஈராக் இஸ்ரேலைத் தாக்குவதற்காய்த் திட்டமிட்டு அணுக்குண்டுகளைத் தயாரிப்பதற்காய் பிரெஞ்சு உதவியுடன் நிறுவின அணுவாயுத நிலையத்தை இஸ்ரேலிய விமானிகள் 81ம் ஆண்டு யூன் 7ம் திகதி மாலை 6:30 மணிக்கு தாக்கி அழித்துவிட்டதால் ஈராக்கும் இஸ்ரேலை எதிர்க்க இப்போது தயங்கும் நிலையில் உள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலை அங்கீகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. எகிப்தின் அதிபர் முபாரக் எல்லா அரபு நாடுகளுமே இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தைப் போல ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இச் செய்திகளின் மூலம் இஸ்ரேல் ஒரு சமாதான காலத்திற்குள்ளாய் சென்று கொண்டிருக்கிறதென உணருகிறோம். இஸ்ரேல் இவ்வாறு ஒரு பாதுகாப்பான காலத்தினூடாச் சென்று நிர்விசாரமாய் வாழும்போது வடதிசைச் சேனை இஸ்ரேலைத் தாக்குமென்று எசேக்கியேல் தெரிவிக்கிறான்.


யுத்தத்தில் வெற்றி:





இஸ்ரேலுக்கும் ரஷ்ய அணிக்கும் நடக்கும் இந்த யுத்தத்தில் ரஷ்யாவும் அதன் கூட்டு நாடுகளும் முறியடிக்கப்படுமென்று எசேக்கியேல் தெரிவித்துள்ளான். இதற்குக் காரணம் இஸ்ரேலுக்கு ஆதரவாய் தேவன் நேரடியாய் இந்த யுத்தத்தில் போரிடப்போவதே ஆகும். என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாய் வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாய் இருக்கும். கொள்ளை நோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடு வழக்காடி அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும் பெருங்கல் மழையையும் அக்கினியையும் கந்தகத்தையும் வருஷிக்கப் பண்ணுவேன் என்ற எசேக்கியேல் 38ம் அதிகாரத்தின் 21ம் 22ம் வசனங்களிலிருந்து தேவன் சில இயற்கை விளைவுகளை வடதிசைச் சேனையின்மேல் வர அனுமதிப்பதினால் அது தோற்கடிக்கப்படும் என அறியலாம். உன் வில்லை உன் இடது கையிலிருந்து தட்டிவிட்டு உன் அம்புகளை உன் வலது கையிலிருந்து விழப்பண்ணுவேன் என்று 39ம் அதிகாரத்தின் 3ம் வசனத்தில் வடதிசைச் சேனைக்கு எதிராய்க் கூறப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில் வில்லையும் அம்மையும் வைத்து யாரும் யுத்தம் செய்யப்போவதில்லை. ஏவுகணைகளுடனும் அணுக் குண்டுகளுடனும் தான் யுத்தம் நடைபெறப்போகிறது. ஏவுகணைகளும் அணுக்குண்டுகளும் தவறாக உபயோகிக்கப்பட்டாலோ சாதகமற்ற இயற்கைச் சூழ்நிலை இருந்தாலோ அவைகளை உபயோகிப்போருக்கே அணுவாயுத அழிவைக் கொண்டுவந்துவிடும். வில்லையும் அம்மையும் உன் கையிலிருந்த கீழே தட்டி விழப்பண்ணுவேன் என்பதினால் வடதிசைச் சேனை அதனுடைய ஆயுதங்களினாலேயே அழிக்கப்படும் என உணரலாம்.


அணுவாயுத யுத்தம்:


நடைபெறப்போகிற இந்த இஸ்ரேலிய ரஷ்ய யுத்தம் எத்தனை நாட்கள் நடக்கும் என்ற குறிப்பு வேதத்தில் காணப்படாவிட்டாலும் இது ஒரு அணுவாயுத யுத்தமாக இருக்குமென்று எதிர்பாhக்கப்படுகிறது. அணுகுண்டுகள் முதன் முறையாக இரண்டாவது உலகமகா யுத்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. யப்பானுக்கு எதிராக கிரோஷீமா, நாகசாகி என்ற இரு நகரங்களின்மேல் அமெரிக்கா இந்த கைட்டிரஜன் குண்டுகளைப் போட்டது. இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பிறகு இது வரை சுமார் 130 யுத்தங்கள் நடந்துள்ளது. இது வரை எந்த நாடும் எந்த யுத்தத்திலும் அணுக்குண்டைப் பயன்படுத்தவில்லை. ஆனால் இஸ்ரேலிய ரஷ்ய யுத்தம் நிச்சயமாக ஒரு அணுவாயுத யுத்தமாக இருக்கப்போவதாக எசேக்கியேலின் வாhத்தைகளிலிருந்து அறியலாம்.

இந்த யுத்தம் முடிந்த பிறகு இஸ்ரேல் வம்சத்தார் இந்த யுத்தத்தில் மரித்தவர்களை ஆமோன் கோகின் பள்ளத்தாக்கில் புதைப்பார்கள் என்று எசேக்கியேல் 39ம் அதிகாரம் 11ம் வசனத்தில் வாசிக்கிறோம். இஸ்ரேல் தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் புதைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எசேக்கியேல் சொல்வதினால் ஒரு பெரிய உயிர்ச்சேதம் இந்த யத்தத்தினால் ஏற்படும் என்று அறியலாம். யுத்தத்தில் மரித்த இராணுவத்தினரின் உடல்களைப் புதைக்க இரண்டு பிரிவினர் வேலைக்கு அமர்த்தப்படுவார்களாம். ஒரு பிரிவினர் பிணங்களைத் தேடுகிறவர்களாகவும் இன்னொரு பிரிவினர் அவைகளைப் புதைக்கிறவர்களாகவும் இருப்பார்கள். முதல்ப் பிரிவினர் தேசம் முழுவதிலும் சுற்றித்திரிந்து யுத்தத்தில் மடிந்தவர்களின் பிணங்களாவது எலும்புக்கூடுகளாவது கிடக்கிறதா என்று பார்ப்பார்கள். அவ்வாறு ஒரு எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த இடத்தில் ஒரு அடையாளத்தை நாட்டிவிட்டு அந்த எலும்புக்கூட்டைத் தொடாமல் சென்றுவிடுவார்கள். பின்னால் வருகிற புதைக்கிற குழுவினர் அடையாளத்தைக் கண்டு எலும்பக்கூட்டைப் பாதுகாப்பாய்க் கொண்டுபோய் ஆமோன் கோகின் பள்ளத்தாக்கில் புதைப்பார்களாம்.

முதல்ப் பிரிவினர் எலும்புக்கூட்டைக் கண்டு பிடிக்கவும் அடையாளத்தை நாட்டவும் மட்டும் பயிற்சி பெற்றிருப்பார்கள். இரண்டாவது குழுவினர் எலும்புக்கூட்டைப் பாதுகாப்புடன் கொண்டுபோய்ப் புதைக்கப் பயிற்சி எடுத்திருப்பார்கள்.

வரப்போகிற யத்தம் ஒரு அணுவாயுத யுத்தமாக இருக்கப்போகிறது என்று பார்த்தோம். மேலும் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின் இது தான் அடுத்த அணுவாயுத யுத்தமாக இருக்கப்போகிறது. இரண்டாவது யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது கைட்ரஜன் குண்டாகும். ஆனால் இப்போது வல்லரசுகள் செய்த வைத்திருப்பவை நீயூட்ரன் குண்டுகளாகும்.

கைட்ரஜன் குண்டு ஓரிடத்தில் போடப்பட்டால் தீ விபத்தை உண்டுபண்ணியும் கட்டிடங்களைத் தகர்த்தும் அழிவை ஏற்படுத்தி மக்களைக் கொல்லும். ஆனால் நியூட்ரன் குண்டுபோட்டால் இது எந்தக் கட்டிடத்தையும் தகர்க்காது. அக் குண்டிலிருந்து கதிரியக்கம் மட்டும் வெளியாகி மக்களை இலட்சக் கணக்கில் கொன்று குவிக்கும். மக்கள் கட்டிடத்திள்குள் பாதுகாப்பாக இருந்தாலும் இந்தக் குண்டிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கொங்கிறீட் சுவரையும் ஊடுருவிச் சென்று கட்டிடத்தின் உள்ளேயிருக்கும் மக்களையும் கொன்று குவிக்கும். இவ்வாறு கதிர் இயக்கத்தின் மூலமாக மாத்திரம் நீயூட்ரன் குண்டு வேலை செய்து மக்களைக் கொல்லும் எனவே கைட்ரஜன் குண்டுகளை விட பெரிய உயிர்ச்சேதம் இதனால் எற்படும்.

இந்த நீயூட்ரன் குண்டுகளின் கதிரியக்கத்தால் தாக்கப்பட்டு மரிக்கிறவர்களின் எலும்புக்கூடுகளிலெல்லாம் இந்தக் கதிரியக்கம்போய்ப் படிந்துவிடும். இவ்வாறு நீயூட்ரன் குண்டு போடப்பட்டதனால், மரித்தவர்களின் எலும்புக்கூடுகள் தொடர்ந்து கதிரியக்கத்தை வெளியாக்கிக் கொண்டிருக்கும். அதனால் யுத்தம் முடிந்தபிறகும் பெரிய ஆபத்து உண்டு. எலும்புக்கூடுகளில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் இன்னும் அநேகரைத் தாக்கி கதிரியக்க வியாதியை, ( சுயனயைவழைn ளுiஉமநௌள) உண்டுபண்ணி பெரிய உயிர்ச்சேதத்தை உண்டுபண்ணும். ஆகவே இந்த எலும்புக்கூடுகள் பாதுகாப்போடு கையாளப்படவேண்டும். ஆமோன் கோகின் பள்ளத்தாக்கில் மட்டும் பாதுகாப்போடு புதைக்கப்படவேண்டும் என்று எசேக்கியேல் தெரிவிக்கிறான்.

அமெரிக்கா இந்த நியூட்ரன் குண்டைச் செய்யப்போவதாக சில வருடங்களுக்குமுன் அறிவித்தது. உலக நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. அதனால் இதைக் குறித்து வேறு தகவல்களை அமெரிக்கா வெளியிடவில்லை. இப்போது நீயூட்ரன் குண்டு ஒன்றை பிரான்சு வெடித்தது என்ற செய்தி தினமணி 27. 06. 1983 இதழில் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாடே இதை இப்போது வெடித்திருப்பதால் பெரிய வல்லரசான அமெரிக்கா முன்பே இதை இரகசியமாகச் செய்து ஆயத்தமாக வைத்துள்ளது என நம்பப்படுகிறது. ரஷ்யாவிடமும் இது தயாராக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எனவே எசேக்கியேலினால் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் யுத்தக்களத்தில் நிறைவேறுவற்கான ஆதாரங்களாய் இவைகள் இருக்கின்றன என உணரலாம்.


லிக்னோஸ்டோன்:

இந்த மூன்றாவது உலக மகா போரில் வடதிசைச் சேனை முறியடிக்கப்பட்ட பிறகு யூதர்கள் போய் யுத்தத்தில் மரித்த தங்கள் எதிரிகளின் ஆயுதங்களை எடுத்துவந்து எரிப்பார்களாம். இஸ்ரேல் பட்டணங்களின் குடிகள் கேடயங்களும் பரிசைகளும் வில்லுகளும் அம்புகளும் வளைதடிகளும் ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள். ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள். அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார் என எசேக்கியேல் 39ம் அதிகாரம் 9ம் 10ம் வசனங்களில் வாசிக்கிறோம். கேடகங்கள் பரிசைகள் வில்லுகள் இவற்றுடன் இந்த யுத்தம் நடைபெறப்போவதில்லை. நம்முடைய நவீன காலத்திற்கு இவ் வார்த்தைகளை ஒப்பிட்டால் துப்பாக்கிகள், மெசின்கன்கள், டாங்கிகள் எனக் கூறலாம். இவ்வாறு நேரிடையாக வேத்தில் சொல்லப்படவில்லையே எனச் சிலர் நினைக்கலாம். எசேக்கியேலுக்குத் தெரிந்ததும் அவன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதுமான ஆயதங்களின் பெயரைக் கூறி இக்கால நிலைமையைத் தேவன் இங்கு வெளிப்படுத்துகிறார். இவ்வாறு தீர்க்கதரிசனங்களை அர்த்தம் கொள்ளுவது ஒரு முறையாகும். எனவே இந்த யுத்தத்திற்குப் பிறகு போரில் மரித்த இராணுவத்தினரின் ஆயுதங்களை எடுத்துவந்து யூதர்கள் அடுப்பெரிப்பார்கள் என்று நிதானிக்கின்றோம். கடந்த லெபனான் இஸ்ரேல் யுத்தத்தின்போது P.டு.ழு விடமிருந்து கைப்பற்றிய ஆயதங்களைத் தாங்களே பயன்படுத்துவதுமின்றி மற்ற நாடுகளுக்கும் விற்று இஸ்ரேல் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இஸ்ரேலிய ஆராபிய யுத்தங்களில் எகிப்துக்கு ரஷ்யா கொடுத்திருந்த ஏவகணைகள், டாங்கிகள் இவைகளை இஸ்ரேல் கைப்பற்றி அவற்றின் இரகசியக் குறிப்புகளைக்( ளுநஉசநவ ஊழனந ) கண்டுபிடித்து இத்தகவல்களை அமெரிக்க இராணுவத்தினரின் ஒற்றர் படைப்பிரிவிற்கும் விற்பனை செய்துகொண்டிருக்கிறது. இக்குறிப்புகள் எதிரிகளின் ஆயுதங்களை இஸ்ரவேலர் மூன்றாவது உலக யுத்தத்தில் கொள்ளையிடுவார்கள் என்ற எசேக்கியேலின் கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

உலோகத்தினால்ச் செய்யப்படுகின்ற மெசின்கன் களையோ டாங்கிகளையோ வைத்து எப்படி எரிக்கமுடியும் என்று கேள்வி ஒரு சிலருக்கு எழும்பலாம். உலோகத்தினால்ச் செய்யப்படும் ஆயுதங்கள் எடை அதிகமாக இருப்பதனால் மரத்தை அழுத்தி பிளைவுட்டைப்போல உறுதியானதாகவும் இலேசானதாகவும் இருக்கத்தக்கதாய் விஞ்ஞானிகள் செய்துள்ளனர் என்றும் இதைக் கொண்டு ( றுழழனநn சுவைடந ) என்ற மரத்தினாலான துப்பாக்கியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்து பந்திரிகையில் வெளியான ஆதாரபூர்வமான செய்தி இதனை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. இந்து ஆங்கில நாளிதழில் புதன்கிழமைதோறும் வெளியாகும் ( ளுஉநைnஉந நுபெiநெநசiபெ வுநஉhழெடழபல ) என்ற பிரிவில் வெளியான செய்தி அப்படியே கீழே தரப்படுகின்றது.


செய்தியின் தமிழாக்கம்:

ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஒரு முறையின்படி மரத்தைப் பதப்படுத்தினால் அது உலோகத்தின் உறுதியைப் பெறக்கூடியதாக மாறுகின்றது.

மிருதுவான மரங்களின் பலகைகள் ரெசின் என்ற பொருளால் பூசப்பட்டு களவாயில் சுடப்படுகிறது. இப்படிப் பாடம்பண்ணப்பட்ட மரம் ஈரத்தினால் தாக்கப்படாததாகவும் இருக்கிறது. எழுதில் தீப்பற்றாததாகவும் பூச்சிகளினால் அரிக்கப்படாததாகவும் இருக்கிறது. அந்த மரப்பலகையை களவாயில் சுடுவதற்கு முன் அதை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு சக்கரம்போல இவ்வாறு மாற்றப்பட்ட மரம் மற்ற மரங்களைப்போல இரண்டுபங்கு காலம் நீடித்துப் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

இச் செய்தியில் மரம் இரும்பைப்போல உறுதியாய்ச் செய்யப்பட்டுள்ளது என்ற வார்த்தைகளும் அவ்வாறு பதப்படுத்தப்பட்டுள்ள மரம் ஈரத்தினால் தாக்கப்படாததாகவும் எளிதில் தீப்பிடிக்காததாகவும் இருக்குமென்ற வார்த்தைகளும் கவனிக்கப்படவேண்டியவை. எளிதில் தீப்பற்றாது ஈரத்தினால் பாதிக்கப்படாது என்ற தகுதிகள் நின்று எரியக்கூடிய ஒரு எரிபொருளுக்குத் தேவையானவை. மேலும் இது சக்கரங்களாகவும் செய்யப் பயன்படலாம் என்பதினால் யுத்தத்தளவாடங்கள் இதிலிருந்து செய்யப்படலாம் என்று நாம் தீர்மானிக்கலாம். மேலும் ரஷ்ய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது தீர்க்கதரிசனத்தை இன்னும் உறுதிப்படுத்துகிறது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த மரஉலோகத்தின் பெயர் லிக்னோஸ்டோன் எனத் தெரிய வருகிறது.


யார் அந்தப் பெர்சியர்:


இந்த மூன்றாவது உலக மகா யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக அதோடு சேர்ந்துகொண்டு இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளான பெர்சியா, எத்தியோப்பியா, லிபியா, கோமேர், தோகர்மா என்பவை இஸ்ரேலைச் சுற்றி கடிகாரமுள் செல்லும் திசையில் (ஊடழஉம றுளைந னுசைநஉவழைn ) வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உலகப்படத்தின் வைரபடத்திலிருந்து அறியலாம். இதில் பெர்சியா என்பது இன்றைய ஈரானைக் குறிப்பதாக இருந்தாலும் வேதாகமம் குறிக்கும் பெர்சியா இன்னும் பரந்து இருந்திருக்கின்றது. இந்து தேசம்முதல் எத்தியோப்பியா வரையிலான 127 நாடுகளையும் பெர்சியாவின் இராஜாவாகிய ஆகாஸ்வேரு ஆண்டதாக எஸ்தர் 1: 1ல் வாசிக்கின்றோம். பெர்சியாவில் இந்தியாவும் சேர்ந்திருந்தது என்பதினால் இந்தியாவும் ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டு இஸ்ரேலை இந்த யுத்தத்தில் தாக்கலாமென தீர்க்கதரிசன ஆராச்சியாளர்களினால் நம்பப்படுகிறது. நடுநிலமைக் கொள்கையுள்ள பாரததேசம் ரஷ்யாவுடன் இஸ்ரேலுக்கு விரோதமாகக் கூட்டுச்சேருமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். கடந்த 71ம் வருஷம் நடந்த பங்களாதேச யுத்தத்தின்போது இந்திய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்வாறு இந்தியாவும் இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் என்ற கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன. பங்களாதேச யுத்தத்திற்கு முன் பாக்கிஸ்தானிலிருந்து யுத்தமேகங்கள் இந்தியாவைச் ச+ழ ஆரம்பித்த நேரத்தில் அப்போது ரஷ்ய அதிபராக இருந்த பிரஷ்நேவ் அவர்களும் நமது பாரதப்பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் ஒரு 20 ஆண்டு ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர். ரஷ்யா எந்த நாட்டுடனாவது யுத்தத்திற்குச் சென்றால் இந்தியா அதற்கு உதவவேண்டும் இந்தியா எந்த நாட்டுடனாவது யுத்தத்தில் ஈடுபடுமானால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவவேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். இதற்குப் பின் நடந்த பங்களாதேஷ் யுத்தத்தில் இந்தியா வெற்றிகரமாக கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைய அமெரிக்கா தனது வலிமைவாய்ந்த ஏழாவது கடற்படையை வங்கக்கடலுக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக அனுப்பியது. ஏழாவது கப்பற்படையின் கப்பல்கள் சென்னைத் துறைமுகம் அருகே தென்பட்டன என்பது ரகசிய உண்மை. இந்நேரத்தில் ரஷ்யா ஒப்பந்தத்தின்படி தனது கப்பற்படையை வங்கக்கடலுக்குள் அனுப்ப மூன்றாவது உலகயுத்தம் மூளக்கூடிய சூழ்நிலை அப்போதே ஏற்பட யுத்தத்தைத் தவிர்க்க அமெரிக்கக் கடற்படை பின்வாங்க ரஷ்யாவின் பாதுகாப்பு ஆதரவோடு இந்தியா பங்களாதேஷ் யுத்தத்தை வென்றது. இந்த யுத்தத்தின் வெற்றிக்குப் பின் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அவர்கள் 1975ல் நாட்டில் அவசர நிலமையைப் பிரகடனம் செய்ய மக்கள் அதனால் அதிருப்தி அடைய அதைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் இந்திரா அவர்கள் ஆட்சியை இழந்தார்கள். தேர்தலில் வெற்றிபெற்ற ஜனதாக் கட்சித் தலைவரும் அமெரிக்க இஸ்ரேல் இவற்றின் சார்பு உடையவருமான திரு. மொர்ராஜீ தேசாய் பிரதமர் ஆனவுடன் இந்திய ரஷ்ய ஒப்பந்தம் இனிச் செல்லாது எனத் தெரிவித்தார். ஆனால் அவர் பதிவியேற்ற இரண்டு வருடங்களுக்குள் அவரது ஜனதாக் கட்சியில் குழப்பம் ஏற்பட தொடர்ந்து 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மாண்புமிகு இந்திரா காந்தி ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த ஆறாம் மாதத்தில் அதிபர் பிரஷ்நேவ் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து இந்திய ரஷ்ய ஒப்பந்தத்திற்கு மீண்டும் உயிரூட்டினார். இந்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யா இஸ்ரேலைத் தாக்கக்கூடிய பெரிய யுத்தம் வெடிக்கும்போது இந்தியா ரஷ்யாவோடு சேர்ந்து இஸ்ரேலை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நமது மத்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையிலும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கடுமையான கொள்கையைக் கொண்டிருக்கிறது. இந்தியா இஸ்ரேலிய அராபிய யுத்தங்களில் அராபியரையே ஆதரிக்கிறது. டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளிலும் உலக அணுசக்தி மகாநாட்டிலும் இஸ்ரேலைக் கலந்துகொள்ள இந்தியா அனுமதிக்கவில்லை. கொரில்லா இயக்கமான P.டு.ழு. ஸ்தாபனத்திற்கு பகிரங்க ஆதரவை இந்தியா கொடுத்துள்ளது. இந்தியாவில் பம்பாயைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு இடங்களில் தூதரகங்களே கிடையாது. கடந்த 1982ம் ஆண்டு நடந்த லெபனான் இஸ்ரேலிய யுத்தத்தின்போது பம்பாயிலிருந்து இஸ்ரேலியத் தூதர் அரபுநாடுகளின் எண்ணைக்காகவே இந்தியா அரபுநாடுகளை ஆதரித்து இஸ்ரேலை எதிர்க்கிறது என்ற கருத்தை ஒரு பேட்டியில் தெரிவிக்க அவர் 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசினால் கட்டளையிடப்பட்டார். இன்றைக்கும் பம்பாயில் இஸ்ரேலுக்கு உதவித் தூதர் ஒருவர்தான் உள்ளாரே தவிர தூதுவர் எவரும் இல்லை. மேலும் கடந்த லெபனான் யுத்தத்தின்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சும்மா இருக்க தமிழகம் மாத்திரம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையை P.டு.ழு. விற்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராகக் கொடுத்துள்ளது. மேலும் இஸ்ரேல் லெபனானை விட்டு வெளியேறாத பட்சத்தில் இஸ்ரேலை ஜ. நா. சபையைவிட்டு நீக்கவேண்டுமென்ற தீர்மானத்தை இந்தியா ஜ. நா. வுக்குத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையும் இந்திய ரஷ்ய உறவும் எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தின்படி ரஷ்யா இஸ்ரேலைத் தாக்கும்போது இந்தியாவும் அதற்கு உடன்போகும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது.


ஈரானிய ரஷ்ய ஒப்பந்தம்:


வேதாகமகாலத்தில் பெர்சியா என்று அழைக்கப்பட்ட தேசத்தின் மையப்பகுதியில் இன்றைய ஈரான் அமைந்துள்ளது. இப்போதைய ஈரானில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யாவோடு சேர்ந்துகொண்டு செல்லும் என்ற எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. ஈரானில் பதினாறு ஆண்டு கால இராணுவ ஆட்சிக்காலத்திற்குப் பின் மொகமத் ரேசா பல்கவி ( ஆழாயஅநன சுநணய Pரடாயஎi ) 1951ல் ஆட்சிப்பீடத்துக்கு வந்தார். ஈரானின் ஷா என்று அழைக்கப்பட்ட இவர் அமெரிக்க ஆதரவு பெற்றவர். இவர் காலத்தில் ஈரான் அமெரிக் சார்புடையதாக இருந்ததும் அல்லாமலும் ஈரான் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. ஈரானின் ஷா இஸ்ரேலிய வீரர்களையே தனது மெய்க்காப்பாளராக வைத்திருந்தார். அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஷாவிற்கு எதிராக உள்நாட்டுக் கலகம் எழும்பினது. அயல்துல்லா கொமேனியின் தலைலையில் நடந்த இப் புரட்சியை ஷாவினால் அடக்கமுடியவில்லை. ஈரானிலிருந்து தப்பியோடிய கொமேனி பிரான்சிலிருந்து செயல்ப்பட்டுப் புரட்சியினை வலுக்கச் செய்தார். நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டமுடியாத சூழ்நிலையில் ஷா ஈரானை விட்டு 1979ல் வெளியேறினார். 1979 பெப்ரவரியில் ஈரான் சென்று கொமேனி ஆட்சியைக் கைப்பற்றினார். கொமேனி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஈரானின் வெளிநாட்டுக் கொள்கை மாறியது. அதுவரை இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஆதரித்த ஈரான் இவை இரண்டிற்கும் எதிரான ஒரு கொள்கையை வகுக்க ஆரம்பித்தது. 1979ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி ஈரானின் தலைநகரான தெகரானிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தின்மேல் புரட்சியாளர்கள் திடீர்த்தாக்குதலை நடத்தி அறுபது அமெரிக்கப் பணியாளர்களை பணயக்கைதிகளாகச் சிறைவைத்தனர். ( யுஅநசiஉயn ர்ழளவயபந ஊசளைளை ) என்று இது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று புற்று நோய்க்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் ஷாவைத் திருப்பி ஈரானுக்கு அனுப்பவேண்டும். அவர் மீது விசாரணை வைக்கப்போகிறோம். அவர் திருப்பி அனுப்பப்பட்டால்த்தான் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்ற கடும் நிபந்தனையை கோமேனி விதித்தார்.

அமெரிக்கா ஈரானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பாங்குகளில் ஈரான் முதலீடு செய்திருந்த செல்வத்தை உபயோகிப்பதற்குத் தடைவிதித்தது. அமெரிக்க விமானப்படையின் ஒரு அதிரடிப் பிரிவு ஈரானுக்குள் புகுந்து பணயக்கைதிகளை விடுவிக்க முயன்றபோது விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறினால் அம்முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு அமெரிக்க விமானப்படை வீரர்கள் ஈரானுக்குள்ளேயே நுழைந்ததை அறிந்து கொமேனி சீற்றம் கொண்டார். முடிவில் ஒருவாறாய் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அமெரிக்க பணயக்கைதிகள் ஈரானில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்குள் அமெரிக்க ஈரானிய உறவு முற்றுமாய் முறிந்துபோனது. அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலையும் கொமேனி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்த 1970ம் ஆண்டு நவம்பர் மாதம் வெடித்ததுதான் ஈரான் , ஈராக் யுத்தம். அந்த இரு நாடுகளும் இஸ்ரேலுக்கு வெகு அருகாமையிலுள்ள நாடுகளாகும். இந்த யுத்தம் இஸ்ரேலுக்கருகில் ஒரு பதட்ட சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த யுத்தத்தைக் குறித்து கொமேனி கூறும்போது, தான் ஈராக்கை முறியடித்து ஈராக்கின் வழியாக எருசலேமைப் பிடிக்குமட்டும் யுத்தத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்தார்.

அயத்துல்லா கொமேனியுடன் சேர்ந்து ஷாவின் ஆட்சியைக் கவிழ்க்க கொமேனிக்கு உதவிய முக்கியமான கட்சிகளுள் ஒன்று ஈரானிய கம்ய+னிஸ்டு கட்சியாகும். இது ட்ய+டே கட்சி ( வுருனுநுர் Pயுசுவுலு ) என்று அழைக்கப்படும் இது ரஷ்ய ஆதரவைப் பெற்றுச் செயல்ப்படும் கம்யூனிஸ்டு கட்சியாகும். இந்த ட்ய+டே கட்சியின் அதரவோடுதான் கொமேனி ஆட்சிக்கு வந்தார். ஆனால் இப்போது கொமேனி ட்ய+டே கட்சியை ஈரானில் தடைசெய்திருக்கிறார். ட்ய+டே கட்சியின்மீது கொமேனி போர் என்ற தலைப்பில் தினமணி 17. 05. 1983 இதழில் கட்டரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ய+டே கட்சியின் தலைவர்கள் பலரைக் கொமேனி தூக்கிலிட்டிருக்கிறார். ட்ய+டே கட்சி மூலமாய் ரஷ்யா, ஈரானில் குழப்பம் விளைவிப்பதாக ரஷ்யாவை அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் டெலிவிஷனில் ட்யூடே கட்சியின் தலைவர்களை ரஷ்யாவிற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க நிர்பந்தித்தபோது ட்ய+டே கட்சியின் கைது செய்யப்பட்ட தலைவர் தன் பேட்டியில் பிரிட்டிஷாரை விட அமெரிக்கர்கள் மோசமானவர்கள், அமெரிக்காவைவிட பிரிட்டிஷார் மோசமானவர்கள் ஆனால் ரஷ்யா இவர்கள் இருவரையும் விட படுமோசமானது என்று கூறி முடித்தார். ட்யூடே கட்சியின் உறுப்பினர்கள் ரஷ்யாவுக்காகத் தாங்கள் உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்டனர்.

ட்ய+டே கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலமையைப் பார்த்து அதை ஆதரிக்கும் ரஷ்யா அடிபட்ட சிறுத்தையைப்போல் நிற்கிறது. இப்போது ரஷ்ய படைகள் ஈரானுக்கு அருகில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு நிலமையைப் பயன்படுத்தி ரஷ்யப்படைகள் 1979ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. உலக நாடுகளெல்லாம் ரஷ்யாவின் இச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை. வழக்கம்போல் இந்தியா ரஷ்யாவின் இச்செயலுக்கு எதிராக வாய்திறக்காமல் மௌனம் சாதிக்கிறது.

ஆப்கானிஸ்தானிலுள்ள ரஷ்யப் படைகள் எந்த நேரத்திலும் ஈரானைத் தாக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆதரவு பெற்ற ட்யூடே கட்சி ஈரானில் ஒடுக்கப்படுவதை ரஷ்யா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

தினமணிப் பத்திரிகை தனது 07. 01. 1982 இதழில் கொமேனிக்குப் பிறகு ஈரானில் முளைக்கக்கூடிய பிளவும் மோதலும் என்ற கட்டுரையில் ரஷ்யா ஈரான் எல்லையருகே 24 டிவிஷன் இராணவத்தினரை நிறுத்தி வைத்திருப்பதாகவும் 1200 முபுடீ யுபநவெள எனப்படும் ரஷ்ய ஒற்றர்கள் ஈரானுக்குள் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

எப்படி ரஷ்யா ஈரானுக்குள் நுழையமுடியும் எனக் கேள்வி எழலாம். இதற்கு உலகச்சரித்திரத்தில் இன்னும் பின்னால்ப்போய்ப் பார்க்கவேண்டும். கடந்த 1981ம் ஆண்டு ரஷ்யாவும் ஈரானும் செய்துள்ள ஒப்பந்தத்தின் ஆறாவது ஷரத்து பின்வருமாறு கூறுகிறது:

மூன்றாவது நாடு ஒன்று ஈரானை ஆக்கிரமித்தாலோ அல்லது ஈரானைத் தளமாக வைத்து ரஷ்யாவுக்குத் தொல்லைகொடுத்தாலோ ஈரானால் அந்த நிலமையைச் சமாளிக்கமுடியாத கட்டத்தில் ரஷ்யா தனது இராணுவத்தை ஈரானுக்குள் அனுப்பி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா ஈரானுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறதை உணருகிறோம். தற்போது கொமேனியின் உடல்நிலை மோசமாக உள்ளது. அடுத்த ஆள் யார் என்ற கேள்வி ஈரானில் எழும்பிவிட்டது. ரஷ்யாவிற்கு ஈரானில் கம்யூனிஸ்டுக்களின் ஆதரவு கணிசமாக உண்டு. ரஷ்யா பகிரங்கமாகவோ இரகசியமாகவோ ஈரான் அரசியலில் தலையிடுவது நிச்சயம். பிறகு ரஷ்யா இஸ்ரேலைத் தாக்க அவகாசம் தேவையில்லை.





அணுவாயுத யுத்தம்:


வெடிக்கப்போகிற இந்த மூன்றாவது உலக மகா யுத்தம் அணுவாயுத யுத்தமாக இருக்கப்போகிறதென்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்திலிருந்து அறியமுடிகிறது. அணுவாயுத யுத்தத்தை உலக வல்லரசுகள் ஆரம்பித்தால் இருதரப்பினருமே மிகப் பெரிய சேதத்தை அனுபவிக்கவேண்டியதாயிருக்கும். எனவே அணுவாயுத யுத்தத்தை இரு வல்லரசுகளுமே ஆரம்பிக்காமல் இருந்து வந்தள்ளன. இதுதான் 70ம் ஆண்டுகளில் பின்பற்றுப்பட்டவந்த யுத்தக்கொள்ளையாகும். இக் கொள்கையை ஆங்கிலத்தில் ( ஆரவரயட யுளளரசநன னுநளவசரஉவழைn ) அதாவது சுருக்கமாக ஆயுனு என அழைப்பர். பிறகு உலக வல்லரசுகள் கண்டுபிடித்த நவீன ஆயதங்களினால் இக் கொள்கை மாற ஆரம்பித்தது. ( ஆரடவipடந ஐனெநிநனெநவெடல வுயசபநவவநன சுந-நுவெசல ஏநாiஉடந ) என்ற நவீன ஏவகணைகள் யுத்தமுனைக்கு வந்ததினால் எந்த நாடு முதலில் யுத்தத்தை ஆரம்பிக்கிறதோ அது ஜெயிக்கும் என்ற கொள்கை 80ம் ஆண்டுகளில் உருவாக ஆரம்பித்தது. முதலில் யுத்தத்தை ஆரம்பிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதினால் யார் முதலில் ஆரம்பிப்பது என்பதற்காய் வல்லரசுகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறு யுத்தம் வெடித்தாலும் அது அணுவாயுதயுத்தமாக இருக்கப்போவதாலும் பெரிய அழிவு உண்டாகுமாதலால் அந்த அழிவுக்கான பழி முதலில் யுத்தத்தை ஆரம்பித்த வல்லரசின்மேல் விழும் என்பதினால் எந்த வல்லரசும் யுத்தத்தை ஆரம்பிக்கக் கொஞ்சம் தயங்குகிறது.

ஆனால் 1984ம் வருட ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய யத்தக்கொள்கையொன்று உருவாக ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைகள் ஐரோப்பாவிற்குக் கொண்டவரப்பட்டதிலிருந்து இக்கொள்கை உருவாக ஆரம்பித்துள்ளது. ஏவகணைகள் ஐரோப்பாவிற்கு வந்ததையடுத்து ரஷ்யாவும் தனது ஏவகணைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வல்லரசுகளின் போராட்டம் இப்பொழுது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் வந்துவிட்டது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிற ஈரான் ஈராக் யுத்தம் மத்திய ஆசியாவிலும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா தனது மிகப் பெரிய யுத்தக் கப்பல்களை வளைகுடாப் பகுதியில் நிறுத்தி எந்நிலைக்கும் ஆயத்தமாக உள்ளது. அணுவாயுத யுத்தத்தை ஆரம்பித்தால் உலகம் முழுவதும் கூட ஒருவேளை அழிக்கப்படலாம் என்பதால்த் தான் உலக நாடுகள் யுத்தத்தை ஆரம்பிக்காமல் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்துள்ளன. ஆனால் தற்போது வரையறுக்கப்பட்டதும் குறைந்த சேதத்துடனும் கூடியதுமான ஒரு அணுவாயுத யுத்தத்தை நடத்திவிட முடியுமென்று யுத்தவல்லுனர்கள் கருத்துத் தெரிவித்தள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் றீகன் அவர்கள் இக்கொள்கையைக் குறித்துச் சொல்லும்போது டுiஅவைநன ரேஉடநயச றுயச ளை Pழளளiடிடந என்று தெரிவித்துள்ளார். எசேக்கியேலினால் வெளிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனத்திலும் குறுகிய ஒரு அணுவாயுத யுத்தமே சம்பவிப்பதாக நாம் நிதானிக்கலாம். ஏனெனில் யுத்தம் முடிவுற்ற பிறகு யூதர்கள் எலும்புக்கூடுகளைப் புதைப்பதாகவும் ஆயுதங்களை வைத்து எரிப்பதாகவும் வாசிப்பதால் யுத்தத்தில் ஈடுபடுகிற ய+தர்களும் யுத்ததத்திற்குப் பிறகும் உயிரோடிருந்து பணியாற்றுகிறார்கள் எனபதினால் வெடிக்கப்போகிற ஆணுவாயுத யுத்தம் ஒரு சிறிய அணுவாயுத யுத்தமாக இருக்குமென்ற முடிவுக்கு நாம் வரலாம்.

சிலர் அணுவாயுத யுத்தமே வெடிக்காது எனக் கூறலாம். இன்று உலகத்திலே அணுக்குண்டுகளைச் செய்யும் திறன் படைத்த நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவையே ஆகும். இந்த வரிசையில் இஸ்ரேலும் ரஷ்யாவும் இருப்பதால் இவையிரண்டும் மோதினால் நிச்சயமாக அணுவாயுத யுத்தம் வர வாய்ப்புண்டு. இஸ்ரேலிடம் சுமார் இருபது அணுவாயுதங்கள் இருப்பதாக இரகசிய செய்திகள் கூறுகின்றன. கடந்த 73ம் ஆண்டு இஸ்ரேலிய அராபிய யுத்தத்தின்போது இஸ்ரேல் ஆரம்பத்தில் யுத்தத்தில் தோற்கக்கூடிய நிலை ஏற்பட்டபோது அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அவர்கள் அணுக்குண்டை யுத்தத்தில் பயன்படுத்த தன் தளபதிக்குக் கட்டளையிட்டார். ஆனால் அதற்குள்ளாக யுத்தத்தில் இஸ்ரேலின் பக்கம் வெற்றி திரும்ப அணுவாயுத யுத்தம் வராமல் தவிர்க்கப்பட்டது. இக் குறிப்பகளின் அடிப்படையில்ப் பார்க்கும்போது எசேக்கியேலினால் உரைக்கப்பட்டபடியே அடுத்த யுத்தம் ஒரு அணுவாயுத யுத்தமாக இருக்குமென்று தீர்மானிக்கலாம்.


கடைசிக்காலம்:


இந்த யுத்தத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் என்ன சம்பந்தம் என ஒரு சிலருக்குக் கேள்வி எழலாம். கடைசி வருஷங்களில் இந்த யத்தம் சம்பவிக்குமென்று எசேக்கியேல் 38ம் அதிகாரம் 8ம் வசனத்தில் வாசிக்கிறோம். அப்பொழுது நீயும் உன்னுடனே திரளான ஜனங்களும் வடதிசையிலிருந்து வருவீர்கள். அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களுமாயிருப்பார்கள். நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட என் ஜனமாகிய இஸ்ரேலுக்கு விரோதமாக எழும்பி வருவாய். கடைசி நாட்களில் இது சம்பவிக்கும் என்று எசேக்கியேல் 38ம் அதிகாரத்தில் 15ம் 16ம் வசனங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்த யுத்தத்திற்கு உலக நாடுகளின் இராணுவ ஒப்பந்தங்களும் யுத்தக் கண்டுபிடிப்புகளும் நடவடிக்கைகளும் உலகத்தை ஆயத்தப்படுத்திக்கொண்டிருப்பதால் நாம் கடைசி நேரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என உணரலாம்.

ய+தர்கள் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் அல்லாமல் வேறு சில புத்தகங்களையும் ஆராய்ந்து தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து அறிந்துகொள்கின்றனர். சைம் வலோஷைனர் ( ளூயin ஏயடழளாiநெச ) என்ற யூத ரபீ ஒருவர் சமீபத்தில் வானொலியில் பேசும்போது ய+த மகனே நீ உபவாசி இரட்டுடித்திக்கொள் மேசியா வந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். வடதிசைச் சேனையாகிய ரஷ்யா 1979ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி தனது ஸ்தானத்தைவிட்டுப் புறப்பட்டு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டது. மேசியா வரும் காலத்துக்குள்ளாக நாம் வந்தவிட்டோமென்பதை இக் குறிப்பு உணர்த்துகிறது. அது மட்டுமல்ல இஸ்ரேல் 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது பதிவியேற்ற முதல் பிரதமரான டேவிட் பென்குரியன் அவர்கள் சுதந்திரப் பிரகடனத்தை வானொலி மூலம் மக்களுக்குத் தெரிவிக்கும்போது நாம் இப்போது ஆராய்கிற எசேக்கியேல் 38ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை வாசித்த பின் தான் தன் செய்தியை ஆரம்பித்தார். இதனால் வெகுவிரைவில் இந்த யுத்தம் நடக்குமென்று யூதர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அறியலாம்.

இயேசு கிறிஸ்துவின் மறைமுக வருகையில் அவரைச் சேர்ந்தவர்கள் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்கள் எடுத்துக்கொள்ளப்பட இவ்வுலகம் அந்திக்கிறிஸ்து என்ற உலகத்தின் கடைசி சர்வாதிகாரியானவன் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படும் என்று வேதத்திலிருந்து அறிகிறோம். இந்த அந்திக்கிறிஸ்து வருகிறபோது ஒரு பொய்ச் சமாதானத்தை வாக்குப்பண்ணுகிறவனாக வருவான் என்று வேதத்திலிருந்து அறிகிறோம். முதல் உலக மகா யுத்தம் முடிந்தவுடன் உலக நாடுகள் சமாதானத்தை விரும்பினதால் டுநயபரந ழக யேவழைளெ என் உலக அரசை ஏற்படுத்தின. இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடனே உலக நாடுகள் சமாதானத்தை விரும்பி ஐக்கிய நாடுகளின் சபை (ஐ. நா. சபை) என்ற உலக அரசை ஏற்படுத்தின. எசேக்கியேலினால் உரைக்கப்பட்ட மூன்றாம் உலக யுத்தம் முடிந்தவுடனே பொய்ச் சமாதானத்தை வாக்குப் பண்ணுகின்ற அந்திக்கிறிஸ்துவின் கைகளில் உலகம் ஒப்புக்கொடுக்கப்படும். அதற்கு முன்னதாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை உண்மையாய் எற்றுக்கொண்டவர்களை மாத்திரம் அணைத்துக்கொள்ள வானத்தில் வந்திடுவார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் மரணமும் உயிர்த்தெழுதலும் எப்படி சரித்திர சம்பந்தமான சம்பவங்களோ அப்படியே அண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சியாய் இருக்கப்போகிறது. உலகத்தின் பாவத்தைச் சமந்து தீர்க்க முதன் முறையாக இரட்சகராக வந்த இயேசு இம்முறை நியாயாதிபதியாக வரப்போகிறார். அவரைச் சந்திக்க ஆயத்தப்படுத்துங்கள். உலகத்தின் யத்தக்களத்தில் வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இப் புத்தகத்தில் வேதத்தின் நிறைவேறிய தீர்க்கதிரசனங்கள் எவ்வளவு உண்மை என்று பார்த்தீர்களோ அப்படியே இயேசுவின் இரண்டாம் வருகையும் இருக்கப்போகிறது.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.