யாக்கோபு 1:2-4 விளக்கம்
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
யாக்கோபு 1:2
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
யாக்கோபு 1:3
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
யாக்கோபு 1:4
விசுவாசிகளாகிய நமக்கு இப்பிரபஞ்சத்தில் பல விதமான சோதனைகள் வருகிறது. நமக்கு பாடுகளும் சோதனைகளும் உண்டாகிறது. கர்த்தரை உண்மையாக நாம் பின்பற்றும்போது நமக்கு உபத்திரவங்கள் உண்டாகிறது நமக்கு பாடுகளும் உபத்திரவங்களும் வேதனைப்படுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பாடுக
ளையும் வேதனைகளையும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும்.இப்பிரபஞ்சத்தில் நல்லவர்களுக்கும் சோதனைகள் வருகிறது நாம் சோதனைகளை உருவாக்குவது இல்லை. வேண்டும் என்று நாம் சோதனைகளில் சிக்கிக் கொள்வதும் இல்லை நாம் பாவம் செய்யாவிட்டாலும் பல சமயங்களில் சோதனைகளில் அகப்பட்டு விடுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட சோதனைகளில் அகப்படும்போது தைரியமாய் அதை கையாள வேண்டும்.
நமக்கு பலவித சோதனைகள் வரும் பொழுது நாம் துக்கத்தில் மூழ்கி விடக்கூடாது. நம்முடைய ஆத்துமா கவலையினால் முறிந்து விடக்கூடாது. சோதனை வரும்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று உலக தத்துவ ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிருபத்தை எழுதின யாக்கோபு கூறும் போது பலவிதமான சோதனைகள் நமக்கு வரும் பொழுது சந்தோஷப்பட வேண்டும் என்று கூறுகிறார்.
நாம் அனுபவிக்கும் சோதனைகள் நம்முடைய விசுவாசத்தை பரிசோதனை செய்து பார்க்கும். விசுவாசத்தின் பரீட்சையானது நமக்கு பொறுமையை உண்டாக்கும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் பொறுமை வேண்டும். பொறுமையில்லாமல் கர்த்தர் நமக்கு நியமித்து வைத்திருக்கும் ஓட்டத்தில் ஓட முடியாது.
நாம் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும். அவரையே சார்ந்து ஜீவிக்க வேண்டும். நாம் சந்தோஷமாக இருந்தாலும் வேதனையில் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவே நமக்கு கர்த்தராக இருக்கிறார். நாம் சோதிக்கப்படும் போது கர்த்தரை போற்றும் விசுவாசத்தை விட்டு விலகி விடக்கூடாது. நம்முடைய விசுவாசம் பரிட்சை செய்யும் பொழுது அது நமக்கு பொறுமையை உண்டாக்கும் என்பதை நினைவில் கொண்டு நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை விட்டு விலகி விடக்கூடாது (1:3).
நாம் கர்த்தரிடத்தில் எதை கேட்டாலும் அதை விசுவாசத்துடன் கேட்க வேண்டும். நம் கர்த்தரிடத்தில் கேட்பதை அவரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையோடு கேட்க வேண்டும் எந்த விதத்திலும் அதில் நமக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது. சந்தேகப்படுகிற one காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் (1:6).
விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குகிறது நாம் ஒரு கிருபையில் சோதிக்கப்படும் போது நமக்கு மற்றொரு கிருபை கிடைக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதுமே பெருமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமக்கு விரோதமாக செய்யப்படும் தீங்குகளை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும் பொறுமையானது பூரண கிரியை செய்ய வேண்டும்.
ஆதித்திருச்சபை காலத்தில் ஸ்தோயிக்கர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். மனுஷன் பாடுகளை படவே பிறந்திருக்கிறான் என்பது இவர்களது பிரதான உபதேசம் ஆகும். மனுஷனுக்கு சந்தோஷம் என்பது இல்லவே இல்லை என்றும் அவன் எப்பொழுதும் துக்கப்பட வேண்டியவர் என்றும் இவர்கள் உபதேசம் பண்ணினார்கள். நம்முடைய பாடுகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் கண்ணீரில் இருந்தும் விடுதலைப் பெற வழியுமில்லை வாய்ப்பும் இல்லை என்று அவர்கள் கூறினர்.
இயேசு கிறிஸ்துவின் உபதேசம் இவர்களது உபதேசத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. நமக்கு சோதனைகள் உண்டு ஆனாலும் நாம் சோதனைகளில் வருத்தப்பட வேண்டியது இல்லை. சந்தோஷப்படவேண்டும் சோதனைகளை பொறுமையோடு சகிக்க வேண்டும். சோதனைகளிலும் சந்தோஷப்பட வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் உபதேசம் ஆகும்.
கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமக்கு பொறுமையை தருகிறார். நாம் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கும் போது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுமையை பயன்படுத்த வேண்டும். விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும் பொறுமை சோதனை நேரத்தில் அற்புதம் செய்யும். அது நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பொறுமை பூர்வக் கிரியை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் ஒன்றிலும் குறைவில்லாத வர்களாய் இருக்கவேண்டும் என்றும் பூரண ராகவும் நிறைவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். தேவன் நியமித்திருக்கும் பாடுகள் மட்டுமே நமக்கு வரும். கர்த்தர் அனுமதித்திருந்தால் மட்டுமே நமக்கு வேதனைகளும் உபத்திரவங்களும் வரும். கர்த்தர் அனுமதித்திருக்கும் பாடுகளை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். அதை மிகவும் சந்தோஷமாக என்ன வேண்டும். பாடுகளில் சந்தோஷப்படும் போது பொறுமையானது பூரண கிரியை நடபிக்கும். பொறுமை பூரண கிளியை நடப்பிக்கும் போது நாம் ஒன்றிலும் குறைவு உள்ளவர்களாய் இருக்க மாட்டோம். நாம் பூரண ராகுவும் நிறைவு உள்ளவர்களாகவும் இருப்போம்.
யாக்கோபு கூறியிருக்கும் பூரணமான காரியங்கள்
1). பொறுமையின் பரிபூரண கிரியை (1:4)
2). குறைவில்லாத ஞானும் (பிலிப்பைன்ஸ் 3:15)
3). பூரண வரங்கள் (1:17)
4) பூரண பிரமாணம் (1:25)
5). கிரியை உண்டாகும் பூரண விசுவாசம் (2:22)
6). சொல் தவறாமல் இருக்கும் பூரண புருஷன் (3:2)
பூரண பொறுமையின் ஆசீர்வாதங்கள்
1). பூரணர்
2). நிறைவு உள்ளவர்
Download pdf
பிரசங்க குறிப்புகள் App Download
Free Christian karaoke App Download