யாக்கோபு 1:1 இன் விளக்கம்

யாக்கோபு 1:1 இன் விளக்கம்
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் தன்னை அறிமுகம் செய்யும் பொழுது இயேசு கிறிஸ்துவின் சகோதரன் என்று மாம்ச ரீதியாக பெருமை கொள்ளாமல் தான் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரன் என்பதையே பிரகடனப்படுத்தி இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிமுகம் செய்கிறார்.

ஊழியக்காரன் என்பதின் பொருள்


ஊழியக்காரன் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க சொல்லின் நேரடி பொருள் அடிமை என்பதாகும். பழைய ஏற்பாடு இரண்டு விதமான அடிமைகளை குறித்து கூறுகிறது. 1. அடிமை 2. அன்பின் அடிமை.

அடிமை என்பவன் ஆறு வருடங்கள் தன்னுடைய எஜமான் இடத்தில் வேலை செய்யலாம் ஏழாவது வருடத்தில் அவன் விடுவிக்கப்பட வேண்டும். அன்பின் அடிமை என்பவன் ஆறு வருடம் வேலை செய்த பிறகு விடுவிக்கப்படுகிற ஏழாவது வருடத்தில் விடுதலைப் பெற மனதில்லாமல் தன்னுடைய எஜமான் தன்னிடத்தில் காட்டின அன்பிற்காக இரக்கத்திற்காக நன்மைகளுக்காக தொடர்ந்து அந்த எஜமான் இடத்தில் வேலை செய்ய விரும்பினால் அவனுடைய விருப்பப்படி அந்த எஜமான் தன்னுடைய வீட்டில் உள்ள நிலை கால்களின் சந்தில் வைத்து அவனுடைய காதுகளில் ஒரு துளை இட வேண்டும் இது அவன் மரண காலம் வரை என்னுடைய அன்பிற்காக அன்பின் அடிமையாக வேலை செய்வான் என்பதின் அடையாளமாக இருக்கும்.

இந்த ரெண்டு அடிமைகளில் அல்லது ஊழியக்காரன் களில் யாக்கோபு தன்னை அடிமை என்று அல்ல அன்பின் அடிமை என்று அறிமுகம் செய்கிறார். அன்பின் அடிமைக்கு நோக்கம் இல்லை எதிர்பார்ப்பு இல்லை சுயமாய் எதையும் செய்யவும் முடியாது அவனுடைய நோக்கம் செயல்பாடு விருப்பம் யாவும் தன்னுடைய எஜமான் எதை நினைக்கிறானோ எதை செய்ய சொல்கிறாரோ அவருடைய விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றுவது மட்டுமே ஆகும்.

நாமும் கூட இயேசுகிறிஸ்துவுக்கு அடிமைகளாக அல்ல அன்பின் அடிமைகளாய் அழைக்கப்பட்டவர்கள். இந்த உலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் செல்வம் வைத்திருந்தாலும் அதிகமான உறவினர்களை கொண்டவர்களாக இருந்தாலும் நாம் அல்ல இயேசு கிறிஸ்துவுக்கு அன்பின் அடிமைகளாய் இருக்கிறேன் என்பதையே பிரகடனப்படுத்தி பெருமை கொள்ள வேண்டும்.

யாக்கோபு இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் சிதறியிருக்கும் 12 கோத்திரத்தாருக்கும் வாழ்த்துகள் கூறி எழுதுகிறார். சிதறி இருக்கிறவர்கள் தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பல்வேறு தேசங்களில் சிதறிப்போய் குடியிருக்கிறார்கள். தாங்கள் இருக்கும் தேசங்களிலெல்லாம் தேவனுடைய வெளிச்சத்தை அங்கிருக்கும் ஜனங்களுக்கு காண்பிக்கிறார்கள்.

தேவனுடைய பிள்ளைகளில் சிலர் தேவனுடைய கோபாக்கினையினால் சிதறி போகிறார்கள். துன்மார்க்கருக்கு துன்பம் வரும் போது அவர்களோடு சேர்ந்து நல்லவர்களும் பாடுகளை அனுபவிக்கிறார்கள். துன்மார்க்கருடைய உறவினரும் அவர்கள் நிமித்தம் பல வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

சிதறி இருக்கிற யூதர்கள் ஏசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசித்து தங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் விசுவாசிகளுக்கு உபத்திரவம் உண்டாயிற்று. இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட விசேஷித்த ஜனங்கள். இவர்களும் கூட பல தேசங்களில் சிதறி இருக்கக்கூடிய சூழல் உண்டாயிற்று.

கர்த்தருடைய பிள்ளைகள் பல தேசங்களில் சிதறி இருந்தாலும் தேவன் அவர்களை அங்கு பாதுகாக்கிறார். அவர்களை அங்கு பராமரிக்கிறார் அவர்களின் நன்மைகளை விசாரிக்கும்படி தம்முடைய ஊழியக்காரர்களை அங்கு அனுப்புகிறார். தேவனுடைய சித்தத்தின்படி யாக்கோபு இந்த 12 கோத்திரத்தாருக்கும் வாழ்த்துகள் கூறி இந்த நிருபத்தை எழுதுகிறார். இந்த நிருபம் யாக்கோபு எழுதினாலும் இது உண்மையாகவே அவர்களுக்கு தேவனிடத்தில் இருந்துவந்த நிருபம் ஆகும்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட சில நேரங்களில் சிதறிப் போய் இருக்கலாம் நம் குடும்பங்களையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டு பிரிந்து இருக்கலாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் நம்மை மறந்து விட்டார் அவர் நம்மை கைவிட்டு விட்டார் அல்லது அவர் நம்மை புறக்கணித்து விட்டார் என்று நாம் சோர்ந்து போக தேவையே இல்லை. தேவன் நம்மை கைவிடுகிறார்கள் அல்ல நாம் சிதறி இருந்தாலும் நாம் சிதறி இருக்கிற இடத்தில் நம்மை ஆறுதல்படுத்த நம்மை ஆறுதல்படுத்த தம்முடைய ஊழியக்காரர்களை அவர் அனுப்புகிறாய் இருக்கிறார். தேவன் நம்முடைய பாடுகளையும் வேதனைகளையும் நினைவுக்கு வர இருக்கிறார் நாம் சிதறி இருக்கும் நேரங்களில் அவரே நமக்குப் பாதுகாப்பும் ஆறுதலும் தேறுதலும் ஆய் இருக்கிறார்.

யூதர்கள் சிதறிப்போய் இருந்தாலும் யாக்கோபு அவர்களை மறந்துவிடவில்லை அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் சிதறி இருந்தாலும் அவர்கள் ஆறுதல் அடைய வேண்டும் என்பது யாக்கோபின் விருப்பமாக இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் யாக்கோபு என்னும் பேர் மூன்று நபர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1. செபெதேயுவின் குமாரன் (மத் 4:21), 2. அல்பேயுவின் குமாரன் (லூக்கா 24:10),
3. இந்த நிருபத்தை எழுதின யாக்கோபு இவர் இயேசு கிறிஸ்துவின் சகோதரர் (மத் 13:5; மாற் 6:3; கலா 1:19).

மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்த பிறகு சில குமாரர்களையும் பெற்றெடுத்தாள் (லூக்கா 8:19). இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் வரை அவரது சகோதரர்கள் அவரை தேவனுடைய குமாரன் என்று அங்கீகரிக்கவில்லை (யோவான் 7:5). ஆனால் மற்ற இரண்டு யாக்கோபு களும் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அங்கீகரித்தனர்.


இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த தரிசனங்களை இந்த யாக்கோபு பெற்றிருந்தாலும் அப்போஸ்தலர்களில் ஒருவராக இவர் சேர்க்கப்படவில்லை (1கொரி 15:7). மற்ற இரண்டு யாக்கோபுகளும் அப்போஸ்தலர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு இருந்தனர் (மத்திய 10:2-3).

வேதாகமத்தில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வரும் பொழுது அவர்களை குறிப்பிடும்பொழுது வேதவசனம் எந்தவித குழப்பமுமின்றி அவர்களை தெளிவாகக் பிரித்து கூறும் . கன்னி மரியாளுக்கு ஒரு சகோதரி இருந்தாள் அவளுடைய பெயரும் மரியாள் அவளுக்கு இரண்டு குமாரரும் ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள் (மத் 27:56; மாற் 15:40; 16:4; லூக்கா 24:10). கன்னி மரியாளுக்கு தன்னுடைய சகோதரியாகிய மரியாளை விட அதிகமான பிள்ளைகள் பிறந்தார்கள் (மத் 13:5; மாற் 6:3).

இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபும் மற்ற இரண்டு யாக்கோபுகளும் வேத வசனத்தில் வேறு பிரிந்து கூறப்பட்டிருக்கின்றனர் (அப் 1:13-14).


யூதா இந்த நிருபத்தின் ஆசிரியரான யாக்கோபின் சகோதரன் ஆவார் (யூதா 1:1). வேத வசனங்களில் யோவானின் சகோதரன் செபெதேயுவின் குமாரன் அல்பேயுவின் குமாரன் இன்று தெளிவு படுத்தப் படாமல் யாக்கோபு என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்குமானால் அது இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபை குறிக்கும் பெயராகும். யாக்கோபு கிபி 62இல் இரத்தசாட்சியாக மரித்தார்.

இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் 10 கோத்திரங்கள் காணாமல் போய்விட்டன என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் யாக்கோபு இந்த நிருபத்தை எழுதும்பொழுது இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் இருந்தன என்பதை தெளிவுபடுத்துகிறது.


You have to wait 15 seconds.

Download pdf

பிரசங்க குறிப்புகள் App Download




 

Free Christian karaoke App Download




 

வேதாகம களஞ்சியம் App Download





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.