அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 7: சோதனையை மேற்கொள்ளல்
மனித இனத்தின் பொதுவான குணங்களில் ஒன்றாக இருப்பது தவறு என்று தெரிந்த பின்பும் அத் தவறைச் செய்வதாகும். நாம் சிலவேளைகளில் தவறு செய்யாதவண்ணம் வெற்றிகரமாக தவறை எதிர்த்து நிற்கின்றோம். சில நேரங்களில் தவறைச் செய்கின்றோம். தவறு செய்வதற்கு தூண்டுதல் அல்லது வேண்டுதலைச் சோதனை என்று அழைக்கின்றோம். விசுவாசிகளாகிய நம்முடைய முன்னேற்றம் இச் சோதனைகளை நன்கு அறிந்து அவற்றைத் தேவனுடைய வார்த்தையினால் வெற்றிகரமாக எதிர்த்து நிற்பதை அடிப்படையாகக்கொண்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சோதனையின் பொருள்
வேதாகமத்தில் சோதனை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளது.
(1) சோதித்தல் அல்லது புடமிடுதல். தேவன் மனிதனுடைய விசுவாசத்தைச் சோதிப்பது ஆகும் (ஆதி.22:1 ; யாத்.15:25 ; 16:4). விசுவாசத்தைத் தேவன் சோதிப்பது நேரடியாக இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலியிட வேண்டியது நேரடியான சோதனையைக் குறிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவை மறைமுகமான சோதனையைக் குறிக்கிறது (யாக்.1:2-3 ; 1.பேது.1:6 ; 4:12). நம்முடைய விசுவாசத்தின் உண்மைத் தன்மையைச் சோதித்துப் பார்ப்பதே இச் சோதனையாகும்.
(2) தேவனுக்கு மனிதன் சவால் விடுதல் அல்லது அவரைக் கோபமூட்டுதல் என்பதும் சோதனையின் இன்னொரு பொருளாகும் (யாத்.17:7 இ அப்.15:10 ; 1.கொரி.10:9; எபி.3:8). ஒருவன் தேவனை எப்படிச் சோதிக்கிறான் என்றால் அவருடைய அன்பையும் வல்லமையையும் குறித்துச் சந்தேகம் கொள்வதாலும் வேதத்திற்குப் புறம்பான செயல்களாலும் அவருக்கு விரோதமாக கலகம் செய்து தேவனைச் சோதிக்கிறான். இப்படிப்பட்ட செயல்கள் தேவனுடைய கோபத்தைத் தூண்டுகிறது (சங்.107:29 ; ஏசா.5:25).
(3) தேவனுடைய பார்வையில் தவறாகவும், தீமையாகவும் காணப்படுபவைகளைச் செய்ய இச்சைகளினாலே இழுக்கப்படல் என்பதும் சோதனையின் இன்னொரு பொருளாகும் (யாக்.1:14 ; கலா.6:1 ; 1.தீமோ.6:9 ; 1.தெச.3:5). இதுவே இங்கு அடிப்படைப் பாடமாக இருக்கிறது. தேவன் மனிதனை ஒருபோதும் நேரடியாக இம்மாதிரியாகச் சோதிப்பவர் அல்ல (யாக்.1:13). ஆனால் சாத்தான் அப்படிச் செய்வதற்கு அனுமதிக்கிறார். சில சமயங்களில் பிசாசு விசுவாசிகளைச் சோதிக்கும்படியாக தேவன் அவனுக்கு அனுமதியளிக்கிறார் (யோபு 1:12 ; 2:3-6).
இவ்விதமான மூன்றுவித சோதனைகளை வசனத்தின் அடிப்படையிலுள்ள எடுத்துக்காட்டோடு பார்ப்போம். சங்கீதக்காரன் தேவனிடத்தில் தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23). என்கிற வேண்டுகோளை முதல்வகை சோதனையைச் சார்ந்தது. சோதனைக்காரன் இயேசுவை நோக்கி தேவாலயத்தின் உப்பரிகையில் இருந்து குதியும் அப்பொழுது தூதர்கள் அவரைக் காப்பாற்றுவார்கள் என்று கூறியபோது இயேசு சோதனைக்காரனைப் பார்த்துக் கர்த்தரைப் பரீட்சை பாராது இருப்பாயாக (லூக்.4:9-12) என்று கூறி தேவனை சோதிக்கவில்லை. இது இரண்டாவது வகை சோதனையைச் சார்ந்தது. கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கப்படுகின்ற ஜெபத்தில் எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாதேயும்
என்கிற வாக்கியமும் அதே வசனத்தில் பிற்பகுதியில் கூறப்பட்டுள்ள தீமையில் இருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் (மத்.6:13) ஆகியவை மூன்றாவது வகை சோதனையைக் குறிக்கிறது. தேவனுடைய வார்த்தையில் இப் பகுதியைப் படிப்பது நமக்குத் தைரியமூட்டுவதாக இருக்கும். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார் (1.கொரி.10:13). தேவன் சோதனையைத் தன்னுடைய நோக்கத்திற்காவும் மனிதனுடைய நலனுக்காகவும் பயன்படுத்துகிறார். அதன்மூலம் அவர் விசுவாசத்தையும் உண்மையையும், நற்குணங்களையும் விளங்கப்பண்ணுகிறார். எதிரியின் வாயை மூடிப்போடுகிறார்.
தீமை செய்வதற்கு இழுத்துச் செல்லும் மூன்று ஆதாரங்கள்
மூன்று திசைகளில் இருந்து மனிதன் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இந்த மூன்று வித தாக்குதல்களைப் படிப்பது மிகவும் நல்லது.
1)பிசாசு:
தீமைக்குக் காரணமாய் இருப்பவன் பிசாசு. மனிதன் தேவனைப் பின்பற்றுவதில் இருந்து அவனை வழிவிலகச் செய்கிறான். சோதனைக்காரன் என்று இவன் அழைக்கப்படுகிறான் (மத்.4:3 ; 1.தெச.3:5). பிசாசு என்ற சொல்லின் பொருள் குற்றம்சுமத்துபவன் அல்லது பழிச்சொல் கூறுபவன் ஆகும். மனிதனிடத்தில் தேவனைப் பற்றிக் குற்றம் கூறினான் (ஆதி.3:5). தேவனிடத்தில் மனிதனைப் பற்றிக் குற்றம் சுமத்துகிறான் (வெளி 12:10). சாத்தான் என்ற சொல்லின் பொருள் விரோதி என்பதாகும். ஏனென்றால் அவன் தேவனுக்கும், மனிதனுக்கும் விரோதியாக இருக்கிறான் (1.பேது.5:8). இந்தத் தீமையின் துவக்கத்தைப் பற்றி எசேக்கியேல் 28:12-19 லும் ஏசாயா 14:12-14 லும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தையைப் பற்றி சந்தேகத்தைக் கிளப்புவதன் மூலமும் பிசாசு செயற்படுகிறான் (ஆதி.3:1) ஐனங்களை சரீரப்பிரகாரமும், மனரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் துன்புறுத்துகிறான் (அப்.10:38) மனிதனை அழிவுக்கு நேராக பிசாசு இழுத்துச் செல்கிறவனாக இருக்கிறவன் ஆகையால் அவனுக்கு அபெத்தோன் அல்லது அப்பொல்லியோன் என்ற பெயர் உள்ளது. இதன் அர்த்தம் அழிப்பவன் என்பதாகும் (வெளி 9:11). இவன் செயல் மனிதன் தன் ஆத்துமாவை இழந்துபோகின்ற நிலைக்கு அவனைத் தள்ளிவிடுகிறது. பிசாசானவன் ஆத்துமாவைக் கொலைசெய்கிறான் (யோ.8:44).
2) உலகம்:
உலகம் தவறான வழிகளில் நடத்துகின்ற கொள்கைகளையும், கோட்பாடுகளையும், பக்தியற்ற தாக்கத்தையும் கொண்டுள்ளது. இவைகள் உலகத்தைத் தேவனைவிட்டுத் தூரமாக இழுத்துச் செல்கிறது. உலகம் என்ற சொல்லைக் கேட்டவுடன் குழம்பிவிடக்கூடாது. ஏனென்றால் இது ப+மியாகிய கிரகத்தையோ அதில் வசிக்கின்றவர்களையோ குறிக்கவில்லை. தீமையான முறைகள் நிறைந்த உலகத்திற்கு சாத்தான் அதிபதியாகவும், தலைவனாகவும் இருக்கிறான் (யோ.12:31 ; எபேசி.2:2). குழந்தை, தாயின் கையில் இருப்பதுபோல் உலகமானது பொல்லாங்களாகிய சாத்தானின் கையில் உள்ளது (1.யோ.5:19). உலகத்திற்குச் சிநேகிதனாய் இருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாய் இருக்கிறான் (யாக்.4:4). விசுவாசிகள் இவ்வுலகத்தில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள் (யோ.13:1). என்றாலும் உலகத்திற்கு ஏற்ப ஒத்து வாழ்கிறவர்களாக அல்ல (யோ.15:19). மறுபடிபிறந்து உலகத்தை ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள் (1.யோ.5.4).
3)மாமிசம்:
வேதாகமத்தில் மாமிசம் என்ற வார்த்தை மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது. இது (1) பொதுவான மனித இனத்தைக் குறிக்கிறது (அப்.2:17). மனித சரீரத்தைக் குறிக்கிறது (யோ.1:14 ; 3:6 ; 6:51). இங்கு நாம் இறுதியாகக் கூறப்பட்டுள்ள இச்சையோடு உள்ள ஆவலைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். மாம்சம் ஒருவனைக் கட்டுப்படுத்துகின்ற பொழுது இயற்கையாகவே இருக்கின்ற ஆசை அல்லது ஆவல் எல்லையைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. உதாரணமாக பால்உணர்வு இது திருமண வாழ்க்கைக்குள் நியாயமான ஒன்று. அதே சமயம் திருமணத்திற்கு வெளியே அது வேசித்தனம். சரீரத்தின் தேவைக்காக உணவு உண்பது சரி, எப்பொழுதும் சாப்பிடுவதற்காகவே வாழ்கிறோம் என்று நினைத்து உணவு உண்பது பெருந்தீனியைக் குறிக்கிறது. மாம்சத்தின் செயல்கள் எவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தரிப்பதில்லை (கலா.5:19-21).
இரண்டு விதமான சுபாவங்கள் - ஆவிக்கு எதிராக மாமிசம்
கிறிஸ்துவுக்குள் உள்ள விசுவாசிகள் தங்களுக்குள் நடைபெறுகின்ற ஒரு போராட்டத்தைத் தெரிந்திருப்பார்கள். சில நேரங்களில் இப் போராட்டம் இரண்டு சுபாவங்களுக்குள்ளான போராட்டமாகும். நல்லது செய்யவேண்டும் என்கிற சுபாவத்திற்கும் தவறு செய்யத்தூண்டும் சுபாவத்திற்கும் இடையே உள்ள போராட்டம். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டும் என்கிறவைகளைச் செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கிறது. (கலா.5:17). விசுவாசி இரட்சிக்கப்படுகிறார் ஆனால் சுபாவம் அல்ல. புதிய பிறப்பால் சுபாவம் மாற்றப்படுவதில்லை. சுபாவம் என்பது மனநிலை, ஆனால் குணம் அல்லது ஒன்றைச் செய்வதற்குரிய தகுதியைக் குறிக்கிறது. நாய் குரைப்பதற்கு எத்தனித்தாற்போல பழைய சுபாவம் பாவம் செய்ய எத்தனிக்கிறது. இது மனிதனுடைய பிறப்பிலிருந்தே உள்ள மனநிலையாகும். ஆதாமிலிருந்து சுதந்தரித்ததாகும் (ரோ.5.12). சுபாவத்தின்படி மனிதன் இச்சிக்கிறான். மாம்சமும் மனதும் விரும்புகிறதைச் செய்ய எத்தனிக்கிறான் (எபேசி.2:3). சிலவேளைகளில் இந்த சுபாவம் பழைய மனிதன் என்றும் அழைக்கப்படுகிறது (எபேசி.4:22 ; கொலோ.3:9). மாம்ச சிந்தை என்றும் அழைக்கப்படுகிறது ( ரோ. 8:7 ). இந்த சுபாவமே தீமைக்கு மூலமாக இருக்கிறது ( மாற். 7:21-23 ) . அக்கிரமத்தால் நிறைந்திருக்கிறது . (சங்.51:5). தேவனுக்கு விரோதமாகவும், இதன் மூலம் அவரை பிரியப்படுத்தவும் முடியாது. (ரோ.8:7-8 ) நன்மையான ஒன்றும் மாம்சத்தில் இருந்து வராது. (ரோ.7:18).
நாம் மறுபடி பிறக்கிறபொழுது ஒரு புதிய சுபாவத்தைப் பெறுகிறோம் (2. பேது.1:4) நாம் புதிய சிருஷ்டியாக்கப்படுகிறோம் (2.கொரி.5:17) புதிய மனிதனாகவும் இருக்கிறோம் (எபேசி.4:24) தேவனுடைய வித்து நமக்குள் தரித்திருக்கிறது. (1.யோ. 3:9). பழைய மனிதன் நம்மை விட்டு நீக்கப்படாமலும், வளராமலும் இருப்பதால், ரோமர் நிருபத்தில் கூறப்பட்டுள்ளபடி (ரோ.7:15-23) இவ்விரு சுபாவங்களுக்கும் போராட்டம் நடைபெறுகிறது . புதிய சுபாவம் பழைய சுபாவத்தின் மீது அதிகாரம் செலுத்த வேண்டியது மிக முக்கியமாகும், இதற்கு நாம் தேவனுடைய வல்லமையைப் பெற வேண்டும், புதிய சுபாவத்தை எல்லா வழிகளிலும் வளர்த்து, விருத்தியாக்கி, பழைய சுபாவத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் என்கிறார் (1.கொரி.9:27) இது சுய கட்டுப்பாட்டைப் பற்றி கூறுவதாக உள்ள சொல்லாகும் .
தீமை செய்வதற்கு இழுத்துச் செல்லல் பற்றிய இரண்டு விளக்கங்கள்
மூன்று விதமான வழிகளில் சோதனையில் மனிதன் விழும்படி தாக்கப்படுகிறான். முதல் மனிதனின் வரலாறு இதை நமக்கு விளக்குகிறது (1.யோ.2:16). விலக்கப்பட்ட கனி ஏவாளுக்கு முன்னால் சோதனைக்காரனால் காட்டப்பட்ட பொழுது (ஆதி.3:6) அது புசிப்பதற்கு நல்லதும் ( மாம்சத்தின் இச்சை ) பார்வைக்கு இன்பமும் ( கண்களின் இச்சை ) புத்தியைத் தெளிவிக்கிறதும் ( ஜீவனத்தின் பெருமை ) ஆக இருந்தது.
கர்த்தராகிய இயேசுவை சோதனைக்காரன் சோதித்த விதமும் இதே மாதிரியை கொண்டதாகவும் இருக்கிறது. அவர் பசியாயிருக்கின்ற பொழுது முதலாவது சோதிக்கப்பட்டார். கற்களை அப்பமாக்க சோதனைக்காரன் கூறினான், இது மாம்சத்தின் இச்சை (மத்.4:3) அடுத்து அவரை தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் நிறுத்தி தாழ குதிக்கக்கூறி தூதர்கள் காப்பாற்றுவார்கள் என்று கூறினான் இது ஜீவனத்தின் பெருமை (மத்:4:5-6) இறுதியாக பிசாசை சேவித்தால் உலகின் மகிமையைக் காட்டி அதைத் தருவேன் என்பது கண்களின் இச்சையை விளக்குகிறது
(மத்.4:8).
இச்சைகளில் இருந்து வெற்றிபெற தேவன் என்ன செய்திருக்கிறார்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சோதனையை வெற்றி கொண்டார். அதன் மூலம் நம்முடைய வெற்றிக்கு வழி வகுத்துள்ளார் . இயேசு கிறிஸ்து சந்தித்த சோதனையல்லாமல், வேறு எந்த சோதனையும் மனிதனை எதிர்கொள்ளாது .
1)பிசாசின் தோல்வி:
கர்த்தராகிய இயேசுவால் சிலுவையிலே பிசாசு தோற்கடிக்கப்பட்டான் (யோ.12:31 ; 16:11 ) . அவனுக்கு விசுவாசிகளின் மீது இருந்த வல்லமை முறியடிக்கப்பட்டது (கொலோ.2:15 ; எபி.2:14) . நாம் பிசாசுக்கு பயப்படவேண்டும் என்று கூறப்படவில்லை ஆனால் நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் அப்பொழுது அவன் ஓடிப் போவான் (யாக்.4:7). விசுவாசியின் மீது பிசாசுக்கு அதிகாரம் இருக்குமானால் இப்படி அவன் நிச்சயமாக ஓடமாட்டான் . இருந்தாலும் பிசாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறோம் (எபேசி.4:27 ) அவனால் தீமைசெய்தத் தூண்ட முடியும், ஏமாற்ற முடியும், விசுவாசிகளை தாக்கவும் முடியும் என்றாலும் அவனை தேவனுடைய வல்லமையால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் எதிர்த்து நிற்கவும் முடியும் (வெளி 12:10-11).
2) உலகத்தின் தோல்வி:
உலகத்தைத் தோற்கடித்தது நம்முடைய கர்த்தருடைய மேலும் ஒரு வெற்றியாகும். அவர் கூறுகிறார் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் (யோ.16:33). உலகத்தை ஜெயித்தது மட்டுமல்ல அதை முழுதுமாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் (யோ.12:31 ; 1.கொரி.11:32). இதன் காரணமாகத்தான் நாம் உலகத்திலிருந்து பிரிந்தவர்களாகக் காட்டவேண்டும் (2.கொரி.6:14-17). இது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட்டுத் தனியாகப் பிரிந்திருப்பதைக் குறிக்காது (மத்.11:19). ஆனால் அதன் பொருள் என்னவென்றால் அசுத்தப்படுத்துபவைகளில் இருந்தும், ஒத்துப்போதல் மற்றும் சமநிலையற்ற உறவுமுறையில் இருந்து விலகுவதாகும். நாம் உலகின்மீது அன்புகூரக்கூடாது (1.யோ.2:15). விசுவாசத்தினாலே அதை ஜெயிக்கவேண்டும் (1.யோ.5:4).
3) மாம்சத்தின் தோல்வி:
கர்த்தராகிய இயேசு சிலுவையிலே மாம்சத்தைத் தோற்கடித்தார் (ரோ.6:6), மாம்சத்தினாலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் (ரோ.8:3). ஒரு காலத்தில் நாம் பாவத்திற்கு அடிமையாயிருந்தோம். இப்பொழுதோ சுயாதீனமுள்ளவர் களாயிருக்கிறோம் (ரோ.6:20-22). கிறிஸ்து இரண்டு சுகத்தை விசுவாசிகளுக்கு பாவத்தில் இருந்து தந்திருக்கிறார். அவர் நம்மைப் பாவத்தின் குற்றத்தில் இருந்தும் அதன் வல்லமையிலிருந்தும் நம்மை இரட்சித்திருக்கிறார். நாம் எதிர்க்கமுடியாத இச்சைகளுக்குள் வீழ்ந்துவிட உதவியற்றவர்களல்ல. நாம் பாவம் செய்வதற்குக் காரணமான மாம்ச இச்சைகளை மேற்கொள்ள தேவனுடைய வல்லமை நமக்கு உண்டு.
இச்சைகளிலிருந்து வெற்றி பெற நாம் என்ன செய்யவேண்டும்?
நம்முடைய கர்த்தரால் வெற்றிகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளை நாம் சொந்தம் பாராட்டிக்கொள்ளவேண்டும். எந்த சோதனையிலிருந்தும் தப்புவதற்கு வழியுண்டு (1.கொரி.10:13). சோதனை நேரங்களில் மாம்சத்தின் பெலவீனத்தை அறிந்து ஜெபம்பண்ணுவது நல்லது (மத்.26:41). சோதனை மேற்கொள்வதற்கு நாம் ஆவியின் வல்லமையை நாடுவது தேவையாய் இருக்கிறது. புத்தியான சில செயல்களால் சில சோதனைகளைத் தவிர்க்கலாம் (1.கொரி.7:5). சுய பலத்தில் அதிக நம்பிக்கை கொள்வது ஆபத்துக்குரிய ஒன்று, இதைக் கண்டிப்பாக விலக்கிக்கொள்ள வேண்டும் (பிலி.3:3). வேதவாக்கியங்கள் நாம் வெற்றிப்பாதையில் எப்படிச் செல்லலாம் என்று கற்றுத்தருகிறது.
1) எண்ணிக்கொள்ளல்:
பாவத்திற்கு மரித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள் (ரோ.6:11). நாம் கிறிஸ்துவோடேக் கூட சிலுவையில் மரித்திருக்கிறோம் , நம்முடைய பழைய மனிதனும் அவரோடு கூட அறையப்பட்டள்ளார் என்று நம்முடைய மனதிலே நாம் எப்பொழுதும் நினைத்து அதன் படி செயல்ப்படவேண்டும் (கொலோ.3:3). மரித்துப்போன மனிதன் பாவத்தால் ஈர்க்கப்படுவதில்லை.
2) ஒப்புக்கொடுத்தல்:
மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் (ரோ.6:13). நாம் நம்முடைய சரீரங்களை தேவனுக்குப் பிரியமுள்ள ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோ.12:1). அப்பொழுது கட்டுப்பாடுள்ள வாழ்க்கையின் மூலம் ஆவிக்குரிய நதி பாயும் (யோ.7:38-39). ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா.5:16).
3) பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்:
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று நமக்கு புத்திசொல்லப்படுகிறது (யாக்.4:7). நாம் ஜெபம்பண்ணவேண்டும், தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் (மத். 4:1-11). நம்முடைய ஆவிக்குரிய யுத்தத்தின் வெற்றி, கிறிஸ்து நம்முடைய விரோதிமீது பெற்ற வெற்றியை சார்ந்து நிற்கிறது. நாம் அவரின் வெற்றியை உரிமை பாராட்டி சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
தோல்வியிலிருந்து மீளும் வழி
1) கிறிஸ்துவின் உதவியை நாடுங்கள்:
ஒரு கிறிஸ்தவன் பாவமற்றவனாக இருந்தாலும் பாவமற்றவன் அல்லன். ஆகையால்த் தான் பரிசுத்த வேதம் கூறுகிறது, ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார் (1.யோ.2:1). அடுத்த வசனம் கூறுகிறது, இயேசு கிறிஸ்து பாவத்தை நிவிர்த்தி செய்தாரென்று, எப்படியெனில் அவர் நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும், அதாவது இறந்தகால, நிகழ்கால, வருங்காலப் பாவத்திற்காக சிலுவையில் மரித்தார். இப்பொழுது இயேசு நமக்காகப் பிதாவிடம் பரிந்துபேசுபவராய் இருக்கிறார்.
2) தேவனிடத்தில் அறிக்கையிடுங்கள்:
தேவனோடுள்ள நம்முடைய ஐக்கியம் நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்பொழுது திரும்பவுமாக நிலை நிறுத்தப்படுகிறது (1.யோ.1:9). அறிக்கை என்ற சொல்லின் பொருள் பிறர் சொல்வதுபோல் சொல்வதாகும் அல்லது சம்மதிப்பதாகும். நாம் பாவங்களை அறிக்கைபண்ணும்போது தேவனோடு நாம் செய்கிறது தவறு என்று சம்மதிக்கிறோம். நாம் பாவம் செய்திருக்கிறோம் என்று கூறிவிடுவது மட்டும் போதாது. ஆனால் உண்மையாகவே என்ன பாவத்தைச் செய்தோமென்று தெளிவுபடக்கூறவேண்டும்.
3) தேவனுடைய மன்னிப்பை உரிமை கொண்டாடுங்கள்:
தேவனின் பரிப+ரண மன்னிப்பையும், மகிமையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாவத்தை ஒப்புக்கொண்டு, அதை விட்ட பின்பு தேவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள தவறுவது நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். ஏனென்றால் அவர் பாவமன்னிப்பை இந்த வகையில் அருளியுள்ளார். பழைய பாவங்களை தொடர்ந்திருத்தல் வருங்கால இடறுதல்களுக்கு தருணம் அமைத்துத் தருகிறது.
முடிவுரை
சோதனை என்பது கிறிஸ்தவர்களின் வாழ்க்கை உண்மையாகும். அவன் பிசாசு, உலகம், மாமிசம் ஆகிய தீமைகளைச் சந்திக்கிறான். இருந்தபோதிலும், கர்த்தராகிய இயேசு அந்தகாரத்திலிருந்து வெளிச்சத்தில் நடக்கவும், வெற்றியுள்ள வாழ்க்கை வாழவும், அதிக கனி கொடுக்கவும், மறுபடி பிறந்த வாழ்வைக் காட்டவும் நம்மை அழைத்திருக்கிறார். கிறிஸ்து சிலுவையில் நம்முடைய எதிரியைத் தோற்கடித்து, நம்முடைய இரட்சிப்பின் அதிபதியானபடியால் இதை நடைமுறைப்படுத்தியுமிருக்கிறார் (எபி.2:10). நம்முடைய அதிபதியான கிறிஸ்து வெற்றிபெற வழிநடத்த ஆவலுள்ளவராயும் நம்மூலமாக அவரைப் பற்றி அறிவின் நறுமணம் எங்கும் பரவவும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார் (2.கொரி.2:14). மேலும் நம்முடைய ஆவிக்குரிய யுத்தத்தைச் சந்தித்து வெற்றி பெற, கிறிஸ்து நான்கு வகையான மூல ஆதாரங்களைத் தந்துள்ளார்: நமக்குள் இருக்கிற பரிசுத்தஆவியானவர் (ரோ.8:9,11), கிறிஸ்து நமக்காகப் பரலோகத்திலே பரிந்து பேசுகிறார் (எபி.7:25), தேவனுடைய வார்த்தை நம்மைப் போஷிக்கிறது நமக்காக யுத்தம்பண்ணுகிறது, இறுதியாக ஜெபம் நமக்காகத் தேவனோடு உயிருள்ள தொடர்பை உண்டுபண்ணுகிறது (எபி.4:16).
நம்மை வெற்றி பெற நடத்துவதற்கு ஒரு அதிபதியும், மூல ஆதாரங்களும் இருந்தாலும், நாம் சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்களாகவும், அவற்றுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கவேண்டியது தேவையாக உள்ளது. இது அறிவுப+ர்வமாக அறிவதன்மூலம் ஏற்படாது. இயேசுவை ஆண்டவர் என்று சொல்லியும், அவர் சொல்லுகிறபடி செய்யாமல் இருப்பது மாய்மாலத்தின் முதன்மைத் தன்மையாகும் (லூக்.6:46). கீழ்ப்படிதல் ஆவிக்குரிய உண்மைத் தன்மையின் பரிசோதனை (1.யோ.2:3-4). அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பின் பரிசோதனை (யோ.14:15-21). அதுவே ஆவிக்குரிய வளர்ச்சியின் வழியாகும்.
பாடம் 7ற் கான கேள்விகள்
1) பரீட்சித்துப் பார்த்தலின் தொடக்கத்தையும், தன்மையையும், நோக்கத்தையும் (யாக்.1:2-12) சோதனையின் துவக்கத்தையும், தன்மையையும், நோக்கத்தையும் (யாக்.1:13-15) கூறி வேறுபாட்டைக் கண்டுபிடியுங்கள்.
2) கீழ்வரும் வசனங்களின் சோதனைக்கு மூல ஆதாரமாக இருப்பது எது என்றும் அவற்றின் பண்புகள் எது என்றும் அடையாளம் காண்க.
எபேசி.6:11-12
1.பேது.5:8
ரோ.12:2
2.தீமோ.4:10
1.யோ.2:15-16
மாற்.7:21-.23
3) சோதனையின்மீது நாம் பெறுகின்ற இறுதி வெற்றி எதன் அடிப்படையில் உள்ளது (யோ.12:31-33; ரோ.6:6)?
4) சோதனையைப் பற்றி இரண்டு முக்கியமான பகுதி ஆதியாகமம் 3:1-6 யோசுவா 7:20-21 ஆகும். உங்களுடைய கருத்துப்படி இப் பகுதிகளின் சோதனை எங்கு முடிகிறது? பாவம் எங்கு தொடங்குகிறது? இவ்விரு நிகழ்ச்சிகளில் காணப்படுகிற வளர்ச்சி என்ன?
5) ஆதியாகமம் 3:1-6 ; மத்தேயு 4:1-11 ஆகிய வசனங்களைப் படித்து அதில் சோதனைகளிலும், அதன் விளைவுகளிலும் உள்ள வேற்றுமை ஒற்றுமை என்ன?
6) 1.கொரிந்தியர் 10:13 ஐ உங்கள் சொந்த நடையில் எழுதுக.
இந்த வசனத்தில் குறைகள் பற்றியும், வழிமுறை பற்றியும் என்ன படிக்கிறீர்கள்? நீங்கள் எப்படிச் சோதனையைத் தாங்கிக் கொள்வதற்கு மேலாக இருக்கிறது என்று கணக்கிடுவீர்கள்?
7) ரோமர் 6ம் அதிகாரத்தைப் படிக்கவும், கிறிஸ்தவன் பாவம் செய்ய வேண்டியதிருக்குமா? உங்கள் பதில் என்ன?
8 ) சோதனையை ஜெயிப்பதற்கு எடுக்கவேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
சங்.119:9-11
மத்.26:41
2..தீமோ.2:22
யாக்.4:7
9) துர்இச்சைக்கு இடம் கொடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் (ரோ.13:13-14)?
அப்போஸ்தலர் 19:19ல் நீங்கள் காண்பது என்ன? இதை உங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிப்பீர்கள். விசுவாசிகள் இவ்வாறு செயற்பட்டதால் என்ன விளைவு ஏற்பட்டது (அப்.19:20)?
10) நாம் தோல்வி அடைகின்ற பொழுது என்ன செய்யவேண்டும் (1.யோ.1:9)? இதில் என்ன பங்கு பெறுகிறது (சங்.32:1-5)
இந்த வழிமுறை பாவம் செய்வதற்குரிய அனுமதியா (ரோ.6:1-2)?