அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
பாடம் 6: சபை வாழ்வு
சர்வ வல்லமையுள்ள தேவன் தன்னாற் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக நேசிக்கிறார், பாதுகாக்கிறார். வேதவசனங்களில் படிக்கின்றபொழுது உண்மையிலேயே அவரின் அன்பு நம்மை அசைக்கிறது. சங்கீதக்காரன் கூறுகிறார். தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே தேவன் என்னை அறிவார் என்று (சங். 139:13-17). இப்படிப்பட்ட அன்பை அடிப்படையாகக் கொண்ட தேவனின் கரிசனைதான் தன்னுடைய ஒரேபேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி நாம் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளச் செய்தது (யோ.3:16). தனிநபர்களாக நாம் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ.1:12). சரீரமாக நாம் பிறந்ததுபோல மறுபடி பிறக்கவேண்டும் (யோ.3:5). வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனோடு ஒவ்வொரு மனிதனும் கொண்ட உறவைச் சார்ந்தே உள்ளது. இக் கருத்து நாம் தேவனுடைய பார்வையில் தனியான விசுவாசி என்று சிந்திக்க வகை செய்யலாம். ஆனால் இக் கருத்து வேதவாக்கியங்களிலிருந்து அப்பாற்பட்டது.
தேவனுடைய பிள்ளைகளில் ஒருவர் என்பது அவருடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என்பதைக் குறிக்கிறது (1.யோ.3:1 ; எபேசியர் 3:14). கூட்டாக நாம் தேவனுடைய ஐனம் (1.பேது.2:9-10 ; வெளி 21:3). தேவன் நம்மைப் பூமியில் உள்ள பரலோக காவலாளியாகப் பார்க்கிறார். ஆனால் நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது (பிலி.3:20). வேதாகமத்தில் இயேசுவைப் பின்பற்றுகிற வர்களைப் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் விசுவாசிகள் (அப்.5:14), சீஷர்கள் (அப்.9:1), பரிசுத்தவான்கள் (எபேசி.1:1), சகோதரர்கள் (யாக்.2:1), கிறிஸ்தவர்கள் (அப்.11:26) என அறியப்படுகின்றனர். வேதாகமத்தில் எங்கும் சாதாரண மக்கள் (டயலஅயn)இ மதகுருமார் (டயவைல) என்கிற பாகுபாடு இல்லை, ஒருபோதும் நாம் அவ்வாறு அழைக்கப்படவில்லை. அநேக புதிய ஏற்பாட்டு நிருபங்கள் விசுவாசிகளின் கூட்டங்களுக்கு எழுதப்பட்டது, தனி விசுவாசிகளுக்கு அல்ல (1.கொரி.12:12-27). அப்போஸ்தலர் காலத்தில் தேவன் இரட்சிக்கப்பட்டவர்களை விசுவாசிகளின் ஐக்கியத்தோடு அனுதினமும் சேர்த்து வந்தார் (அப்.2:47). இந்த ஐக்கியம் எக்கலேசியா (நமமடநளயை) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சர்ச் (உhரசஉh) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் சபை என்றழைக்கப்படுகிறது. இதுவே நடைமுறையிலுள்ள ஸ்தலவிசுவாசிகளின் செயல்படும் அமைப்பாக இருந்தது. இப்படிப்பட்ட ஐக்கியத்தின் ஒவ்வொரு விசுவாசியும் பங்குள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டமும் நோக்கமுமாக இருந்தது.
சபையின் விளக்கம்
சபை என்ற சொல் ஏராளமான அர்த்தங்களை உடையதாக இருக்கிறது. இந்த அர்த்தங்கள் எக்கலேசியா என்கிற மூல சொல்லிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகிறது. சிலர் இதை ஒரு கட்டடமாகக் கருதுகிறார்கள். சபை மூலையில் இருக்கிறது. கூட்டங்களும் ஆராதனைகளும் என்ற அர்த்தங்களிலும் நினைக்கப்படுகிறது. நாம் ஞாயிற்றுக்கிழமை சபைக்குச் செல்கின்றோம். சில நேரங்களில் குழுக்களில் செயற்பாடுகள் காணப்படுகிறது. நாம் சபையில் எப்பொழுதும் செயற்படுகிறவர்களாக இருக்கிறோம். நான் ரோமன் கத்தோலிக்கப சபையைச் சார்ந்தவன். இக் கருத்துக்கள் சபை என்ற சொல்லைச் சுற்றி காணப்படுகிறது. ஆனால் வேதாகமத்தில் இப்படிப்பட்ட அர்த்தங்களைக் கொண்டதாக சபை காணப்படவில்லை.
எக்கலேசியா என்ற சொல்லின் பொருள் அழைக்கப்படுபவர்களின் கூட்டம் அல்லது கூடுகை என்பதாகும். இதேசொல் அப்போஸ்தலர் 19:32, 39, 41 சீஷர்களின்
உபதேசத்திற்கு எதிராகக் கூடி கலகம் உண்டாக்கினவர்களைக் குறிக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கூட்டத்தையோ அல்லது ஐனங்கள் சேர்ந்திருப்பதையோ குறிக்கும் ஒரு சாதாரண சொல். இந்த சொல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவன் தனக்காக ஐனங்களை அழைக்கிறதற்கு பயன்படுத்துகிறார். அவர் நம்மை அந்தகாரத்தினின்று, ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்திருக்கிறார் (1.பேது.2:9). அன்பின் குமாரனுடைய இராஜ்ஜியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். (கொலோ.1:13). எக்கலேசியா வேதாகமத்தில் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களை குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்தையோ, செயல்களையோ, அமைப்புகளையோ குறிப்பது அல்ல.
சபையின் இரு தோற்றங்கள்
வேதாகமத்தில் சபையின் இரண்டு தோற்றங்கள் கூறப்பட்டுள்ளது. (1) உலகளாவிய சபை (ரniஎநசளயட ஊhரசஉh) (2) ஸ்தல சபை (டழஉயட உhரசஉh) உலகளாவிய சபை என்றால் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கும். இதில் ஜீவிக்கிறவர்களும், மரித்தவர்களும், எல்லாக் கோத்திரத்தாரும், சாதியரும் அடங்குவர். கிறிஸ்து சபையை நேசித்தார், அதற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார் (எபேசி.5:25,27) என்று வேதம் சொல்லுகிறபொழுது ழுமு சபையையும் குறிக்கிறது. சபை கிறிஸ்துவின் சரீரமாகும் (எபேசி.1:22-23 ; 4:4). அவர் மட்டுமே அதன் தலைவர் என்கிற விளக்கம் மிக உண்மையுள்ளது (கொலோ.1:18). இப்படிப்பட்ட சபை ஏதோ ஒரு இடத்தில் ஒரு அமைப்பின்கீழ் இருப்பது அரிதான காரியம். நடைபெறமுடியாத ஒன்று என்பது வெளிப்படையான உண்மை. தேவனுடைய மனதில் இப்பொழுது ஒரு தெய்வீக ஒற்றுமையாக சபை இருக்கிறது. உண்மையான சபை புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களாலும், தீர்க்கதரிசிகளாலும் கட்டப்பட்டது. அதன் பிரதான மூலைக்கல் இயேசு கிறிஸ்து ஆவார் (எபேசி.2:20). பரிசுத்தஆவியானவர் ஒருவரே நம்மைக் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுத்தி சபையின் அங்கத்தினர்களாக நம்மை மாற்றுகிறார் (1.கொரி.6.17 ; எபேசி.5:30). சபை பழைய ஏற்பாட்டிலும், நான்கு சுவிசேஷங்களிலும் இரகசியமாக இருந்தது (எபேசி.2:11-16 ; 3:6). கிறிஸ்துவின் சபை இன்னும் கட்டப்படவேண்டியிருந்தது (மத்.16:18). விசுவாசிகளைக் கிறிஸ்துவில் சேர்க்க ஆவியானவரின் ஞானஸ்நானத்தால் சபை ஏற்படுத்தப்பட்டது (1.கொரி.12:13). இது பெந்தேகொஸ்தே நாளில் துவங்கியது (அப்.1:5 ; 2:4 ; 5:11). இஸ்ரவேலர் வானாந்திரத்திலே பிரயாணம்பண்ணியபோது இருந்த சபைக்கும், இயேசு கிறிஸ்துவின் சபைக்கும் வித்தியாசம் உண்டு (அப்.7:58). ய+தர்கள், புறஐhதியர், சபை ஆகிய மூன்றும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமானது (1.கொரி.10:33). தேவன் இஸ்ரவேல் ஐனங்களை இப்பொழுது என்னுடைய ஐனங்கள் இல்லை என்கிறார் (ரோ.9:25 ; ஓசியா 2:23) இயேசு கிறிஸ்துவில் விசுவாச முள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய ஐனங்கள், இதுவே வேதம் நமக்கு கூறுகிறது.
உலகளாவிய சபையிலே நாம் ஒரு பகுதியாயிருப்பதால், ஸ்தல சபையிலே நாம் செயலற்றவர்களாக இருக்கமுடியாது. முதல்முதலாக கிறிஸ்துவை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எருசலேமில் உள்ள ஸ்தல ஐக்கியத்தில் சேர்க்கப்பட்டார்கள் (அப்.2:41). அவர்கள் மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து வாழ்க்கை நடத்தினர் (அப்.2:44). மிக விரைவாக அருகாமையுள்ள பகுதிகளில் சபை அமைக்கப்பட்டது (அப்.9:31 ; 15:41 ; 16:5). உலகில் பிற பகுதிகளான ஆசியா (1.கொரி.16:19), மக்கதேனியா (2.கொரி.8:1), கலாத்தியா (கலா.1:2) ஆகிய நாடுகளிலும் சபை பரவியது. இவைகள் கிறிஸ்துவின் சபைகள் என்றும் (ரோ.16:16), தேவனுடைய சபைகள் என்றும் (1.கொரி.11:16), பரிசுத்தவான்களின் சபைகள் என்றும் (1.கொரி.14:33) அழைக்கப்பட்டது. சில சமயங்களில் சபைகள் இருக்கின்ற பட்டணங்களின் பெயர்களைக் கொண்டு அவைகள் அழைக்கப்பட்டது. அவைகள் கொரிந்து (1.கொரி.1:2) அல்லது அந்தப் பட்டணத்தில் தங்கி வசிப்பவர்கள்
தெசலோனிக்கெயர் சபை (1.தெச.1:1). கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆராதனை செய்வதற்கு பொதுவான கட்டடங்கள் இல்லை. அவர்கள் வீடுகளிலேயே கூடினர் (ரோ.16:5 ; கொலோ.4:15). சபைகளில் உள்ள பரிசுத்தவான்கள் மத்தியில் மிக எளிமையான தலைமைத்துவ அமைப்பு இருந்தது. அவர்கள் கண்காணிகள் என்றும் உதவியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் (பிலி.1:1 ; 1.தீமோ.3 ; தீத்து 1). இங்கு கண்காணிகள், உதவிக்காரர்கள் பன்மையில் இருப்பதைக் காணலாம். சபையை நிர்வகிப்பதிலே இச் சபைகள் ஒரு நபரின் தலைமையை நாம் காணமுடியவில்லை. ஆதித்திருச் சபைகளில் ஒரு நபர் எல்லா அதிகாரத்தையும் வைத்து சபையை நிர்வகிக்கின்ற முறை இல்லாமல் இருந்தது. நடத்துகிறவர்களை மதித்து, கீழ்ப்படிந்திருக்கவேண்டும் (எபி.13:17 ; 1.தெச.5:12). நாம் கிறிஸ்துவுக்கு மட்டும் கீழ்ப்படிகிறவராயிராமல் நம்மைச் சபையிலே நடத்துகிற தலைவர்களுக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும்.
உண்மையான விசுவாசிகள் அனைவரும் உலகளாவிய சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஸ்தல சபையிலும் அவ்வாறே உள்ளனர். அநேகநேரங்களில் இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் உண்மையான விசுவாசமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லுகிறவர்கள் சபைக்குள்ளாக வருகின்றபொழுது, இயேசு கிறிஸ்து போதித்தார் களைகளும் கோதுமையும் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளரும் என்று (மத்.13:24-30,36-42). உண்மையற்ற விசுவாச அறிக்கை பண்ணியவர்கள் வரும் நாட்களில் நிராகரிக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்தலசபையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி (மத்.7:21-23).
சபையின் குணங்கள்
சபை என்று சொன்ன உடனே மக்கள் தங்கள் மனதில் ஒரு பெரிய அரங்கத்தை நினைக்கிறார்கள். ஒரு பேச்சாளரை நினைக்கின்றனர் அல்லது ஒரு தலைமைச் செயலகம் கொண்ட ஒரு பெரிய அமைப்பாகக் கருதுகின்றனர். இல்லையென்றால் ஏராளமான அதிகாரிகள், குருக்கள் கொண்ட ஒரு அமைப்பு என்று நினைக்கின்றனர். ஆனால் பரிசுத்த வேதம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தை உடையதாக இருக்கிறது.
1) ஒருமைப்பாடு (எபேசி.4:3-6)
சபை ஒன்றே, பிரிவினைகள் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய ஒருமைப்பாட்டை பேணிக்காக்க எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும் (எபேசி.4:3). விசுவாசிக்குள் உள்ள ஐக்கியத்தைச் சீர்குலைக்கிறவைகளைத் தவிர்க்கவேண்டும் (1.கொரி.1:10 ; 11:18 ; 12:25 ; 2.கொரி.12:20). பரிவினை உண்டாகிறது தவறான போதனைகளால்த்தான் (2.பேது.2:1). பிரிவினையை உண்டுபண்ணுகிறவர்கள் எச்சரிக்கப்பட்டு, பின்பு அவர்களை விட்டு விலகவேண்டும் (தீத்து 3:10).
2) வித்தியாசமான வரங்கள் (எபேசி.4:7 ; 1.கொரி.12:11)
வித்தியாசமான வழியாக இருந்தாலும், ஒவ்வொரு சபை அங்கத்தினரும், சபை பக்திவிருத்திக்கு தன்னுடைய பங்கைச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் சபைக்குச் செய்யவேண்டிய பணிகளின் மொத்தஉருவமே சபையாக இருக்கிறது. எதுபோல் என்றால் அநேக அவயவங்கள் சேர்ந்துதான் சரீரம் ஆவதுபோல் (1.கொரி.12:12-27 ; ரோ.12:4-5). சரீரத்திற்குள் பல அவயவங்கள் இருப்பதுபோல, ஒவ்வொரு விசுவாசியும் சபைக்குள் ஓர் அங்கமாக இருக்கிறான். கிறிஸ்து சரீரத்தின் தலையாக இருக்கிறார். அவர் தன்னுடைய விருப்பத்தின்படி ஆவிக்குரிய வரங்களை அளிக்கிறார் (1.கொரி.12:13). முக்கியமான வரங்களை நாடுங்கள் என்று வேதம் சொல்கிறபொழுது, ஸ்தலசபையே முழுவதுமே சில முக்கியமான வரங்கள் மீது மதிப்பை வைத்திருத்தலைக் குறிக்கிறதேயல்லாமல் (1.கொரி.12:31 ; 14:1). தனிநபர்களின்
தனிப்பட்ட ஆவலைக் குறிப்பதில்லை இப் பகுதியில் முக்கியமாக இருப்பது என்னவென்றால் ஒவ்வொரு அவயவங்களுக்கும் வரங்கள் உண்டு. அவைகள் சரீரத்திற்குள்ளாகச் செயல்பட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது (1.கொரி.12:27). ஒவ்வொரு அவயவமும் (உறுப்பினரும்) முக்கியமானவர்கள். ஒவ்வொருவரும் செயற்பட சரியான தருணம் உண்டு. ஒவ்வொருவரும் மதிக்கப்படவேண்டும். எல்லோருக்கும் ஒரேவிதமான வரங்கள் இருக்காது.
3) ஒன்றுக்கொன்று சார்புடைய தன்மை (எபேசி.4:12-13 ; 1.கொரி. 12:23-24)
நாம் ஒருவருக்கொருவர் தேவை உள்ளவராயிருக்கிறோம். நாம் மட்டுமே செயற்பட உண்டாக்கப்பட்டவர்கள் அல்ல. எல்லா விசுவாசிகளும் ஊழியத்தில் ஈடுபாடு காட்டவேண்டியதே பிரதான வரங்களின் நோக்கமாகும். அவர்கள் பார்வையாளராகவோ, தனிநபராகவோ, முடங்கிப்போன உறுப்புக்களாக சபையில் இருக்கவேண்டியதில்லை. எல்லா விசுவாசிகளும் ஸ்தல சபைகளில் செயற்படவே அழைக்கப்படுகிறார்கள்.
4) ஆராதனை (1.பேது.2:4-5)
நம்முடைய அதிசயமான தேவனைத் துதிப்பதற்காகவும், அராதிப்பதற்காகவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (யோ.4:23). ஆராதிக்கும் இச் செயல் சபை என்ற வடிவில் உள்ளது. இது தேவனுடைய ஆலயமாகவும் அல்லது தேவனுடைய வீடாகவும் இருக்கிறது (1.கொரி.3:9,16-17 ; 1.தீமோ.3:1 ; எபேசி.2:22) பழைய ஏற்பாட்டுக் காலத்து ஐனங்கள் வனாந்தரத்திலே ஆசாரிப்புக் கூடாரத்திலும், எருசலேமிலும் தேவாலயத்திலும் தேவனை ஆராதித்தார்கள். அதன்பின் தேவன் கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதை நிறுத்தினார் (அப்.7:48). இதுவே இஸ்ரவேல் ஐனங்களுக்கும், கிறிஸ்துவின் சபைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமாகும். தேவனுடைய வீடு இப்பொழுது ஆவிக்குரிய ஒன்று, ஜீவனுள்ள கற்களால் கட்டப்பட்டவை. நாம் தெளிவாக சொல்வோமானால் ஆவியானவர் தங்குகிற விசுவாசிகளே தேவனுடைய ஆலயம். இப்பொழுது நம்முடைய பலிகள் மிருகங்கள் அல்ல. அர்ப்பணிக்கப்பட்ட சரீரங்களும், நமக்குள்ள பொருட்களும், நம்முடைய துதிகளுமே ஆகும். கிறிஸ்துவுக்குள் உள்ள அனைத்து விசுவாசிகளுமே ஆசாரியர்கள் தான் (1.பேது.2:5,9). தேவனுடைய சபையில் ஆராதனை முதன்மையான செயலாகும். தேவனுக்குத் துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுப்பதே ஆராதனை. பிரசங்கத்தை மட்டும் கேட்பதோ எழுதிவைக்கப்பட்ட ஒழுங்குமுறைகளைக் கையாண்டு திரும்ப திரும்ப ஒரே வர்ர்த்தையைச் சொல்வதோ ஆராதனை அல்ல.
5.) அன்பால் ஆன உறவு (எபேசி.5:23-24 ; 2.கொரி.11:2)
அன்பின் அடிப்படையிலான உறவை சபையின் வடிவில் நாம் காணலாம். சபை மணவாட்டிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. பெந்தேகொஸ்தே நாளில் இருந்து தேவனுடைய ஐனங்கள் ஒரு அழகான மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு, மணவாளனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறாள். கிறிஸ்து தன்னுடைய மணமகளை உயிரினும் மேலாய் நேசிக்கிறார். அவளைப் பரிசுத்தமாக தனக்குள்ளாக நிலைநிறுத்தவேண்டும் என்று அவலுள்ளவராய் இருக்கிறார். அதற்கு மாறாக இஸ்ரவேல் ஐனங்கள் மணமுறிவு (விவாகரத்து) செய்துகொண்ட பெண்ணிற்குச் சமமாக கருதப்படுகிறாள் (ஏசா.50:1). சபை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உள்ள நெருங்கிய, அன்பான உறவையும், அவரின் நிகழ்கால, வருங்கால நோக்கங்களில் தன்னுடைய முக்கிய செயலையும் தெரிந்துகொள்ளவேண்டும். தன்னுடைய மணவாட்டியைக் குறித்து, மணவாளனாகிய கிறிஸ்து தன் மனதில் நல்லதையே கொண்டுள்ளார். சபை எப்பொழுதும் தன்னுடைய கண்களை மணவாளனின் மீதே பதித்திருக்கவேண்டும்.
6) பிற குணங்கள்
சபை வளர்கின்ற ஒன்று. முடமாகிப் போகிறதில்லை. இல்லை என்றால் அழிந்துபோகின்ற ஒன்றுமல்ல (அப்.6:1,7 ; 12:24 ; 19:20). சபை ஜீவனுள்ளது, மரித்தது அல்ல. பரிசுத்தமுள்ளது (1.கொரி.3:17 ; 1:பேது.1:15-16). பரிசுத்தமான போதனைகளைக் கொண்டது, மாறுபாடான போதனைகளை அல்ல (1.தீமோ.1:3, 11 ; தீத்து 1:9-10 ; 2.பேது.2:1-3 ; வெளி 2:13-14,20). இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்ற போதனைகளான அன்பு, ஜீவன், ஒளி ஆகியவை உண்மையான பரிசுத்தவேதாகமத்தின் அடிப்படையில் உள்ள ஸ்தல சபைகளில் இருந்து ஒளிவிட்டுப் பிரகாசிக்கவேண்டும்.
சபையின் செயற்பாடுகள்
சபை என்னென்ன பணிகளைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளது? சுவிசேஷத்தை எங்கும் போதித்தலும், சீஷர்களாக மக்களை மாற்றுவதுமாகிய உன்னத பணியைக் குறிக்கிறது. சபை மிகவும் கரிசனையுள்ளதாக இருக்கவேண்டும் (மத்.28:19-20). இதன் மாதிரி அப்போஸ்தலர் 2:40-42ல் காணப்படுகிறது. ஐனங்கள் நற்செய்தியைக் கேட்டார்கள். அதை விசுவாசித்தார்கள். ஞானஸ்நானம் பெற்றார்கள். அதன் பிறகு சபை வாழ்வில் உற்சாகமாய்ச் செயலாற்றினார்கள். சபை ஜீவியமும், செயல்களும் நான்கு வகையான பணிகளை உள்ளடக்கியது. அப்போஸ்தல உபதேசம், அந்நியோந்நியம், அப்பம்பிட்குதல், ஜெபம்பண்ணுதல் ஆகியவையாகும். இவற்றைத் தெளிவாக நாம் கூறுவோமானால் ஆரோக்கியமான வேதபோதனை, பிறவிசுவாசிகளோடு ஐக்கியமாக இருத்தல், அப்பம்பிட்குதல் (திருவிருந்து) மூலம் கர்த்தரை நினைவு கூருதல், சக விசுவாசிகளோடு சேர்ந்து ஜெபித்தல் ஆகும். ஏன் அப்பம்பிட்குதல் அல்லது திருவிருந்து இவ் அட்டவணையில் கூறப்பட்டுள்ளது? ஆதிச் சபையின் கூட்டங்களில் அப்பம்பிட்குதல் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். (அப்.20:7; 1.கொரி.11:23-33). இம் மாதிரிகள் தேவன் ஆவிக்குரியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அப்பம் பிட்குதலாகிய அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது சரியல்ல. ய+தர்கள் உண்மையான பொருள் தெரியாமல் கடைப்பிடித்த அனைத்துச் சடங்குகளும் தேவனால் நிந்திக்கப்பட்டது என்று பார்க்கிறோம்.
ஆதிச் சபைகள் தங்கள் அன்பைச் செயல் வடிவில் காண்பித்ததின் மூலமே (அப்.2:45). வல்லமையால் தேவனுடைய வார்த்தையை பிரகடனப்படுத்தியது மூலமும் (அப்.4:13,29-31) உபத்திரவத்தின் நிமித்தம் விசுவாசிகள் சிதறடிக்கப்பட்டபோது, அவர்கள் வாழ்க்கையாலும், சாட்சியாலும், அவர்கள் விசுவாசமும் பரவியது. இப்படி அவர்கள் வாழ்க்கை நல்ல மாதிரியாக இருந்தாலும் அவர்களில் குறை இல்லை என்று சொல்லமுடியாது. சிலவேளைகளில் அவர்கள் மாமிசத்திற்கு உரியவர்கள் என்றும், மனித விருப்பங்களினால் நடத்தப்படுகிறார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டார்கள் (1.கொரி.3:1-4). சிலரை அவர்கள் கிறிஸ்தவர்களா என்று சோதித்து அறிய கூறினார்கள் (2.கொரி.13:5). தவறான உபதேசத்தால் சிலர் கடிந்துகொள்ளப்பட்டார்கள் (கலா.1:6-9 ; 3:1-4). கிறிஸ்து சபைகளின் மத்தியில் உலாவுகிறபொழுது நிறைவையும், குறையையும் கூறுகிறார் (வெளி 2-3). இவ்வாறு இருந்தாலும், நாகரீகமான உலகம் முழுவதும் சபை பரவி, கிறிஸ்தவ விசுவாசம் ஒரு வலுவானதாகக் காணப்படுகிறது. சபைகளில் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளில் ஜீவன் இருந்தது. மேலும் தேவன் நோக்கத்தைச் செயற்படுத்துகிறார்.
சபையின் வருங்காலம்
கர்த்தர் வானத்திலிருந்து இறங்கி வருகின்றபொழுது கிறிஸ்துவின் சபை அவருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மீது எடுத்துக்கொள்ளப்படும் (1.தெச.4:16-17). நாம்
மறுரூபமாக்கப்படுவோம் (1.கொரி.15:51-54). நாம் அவரோடே கூட இருபபோம். அவருக்கு ஒப்பாயிருப்போம் (1.யோ.3:2-3). இவ்வாறான சபையை உன்னதமான மகிமை நிலைக்குத் தேவன் உயர்த்தியிருக்கிறார் (எபேசி.2:6-7).
பாடம் 6 ற் கான கேள்விகள்
1) புதிய ஏற்பாட்டில் சபை என்ற சொல் உலகளாவிய மற்றும் ஸ்தல சபையைக் குறிக்கிறது. பின்வருகின்ற பகுதிகளில் எவை எல்லாம் உலகளாவிய சபையையும், ஸ்தல சபையையும் குறிக்கிறது ?
1.கொரி.10:33 கலா.1:1-2
எபேசி.5:25 கொலோ.1:18
1.தெச.1:1
2) உலகளாவிய சபையையும் அதன் அங்கத்தினர்களையும் பற்றி விளக்குக (எபேசி.1:22-23 ; 4:15-16).
3) அப்போஸ்தலர் 2:42ஐ சொந்த நடையில் எழுதுக.
இந்த வசனத்திலிருந்தும் மத்தேயு 28:19-20 ல் இருந்தும் ஸ்தல சபையின் அடிப்படைச் செயல்கள் என்ன?
4) கிறிஸ்தவ ஐக்கியத்தின் நோக்கம் என்ன (பிர.4:9-10 ; எபி.10:24-25)?
5) எனக்குச் சபைக்குப் போகத் தேவையில்லை நான் தங்குகிற அறையிலே தேவனை ஆராதிப்பேன் என்று கூறுகிறவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்?
6) ஸ்தல சபைக்குத் தேவன் தந்துள்ள ஆவிக்குரிய தலைவர்கள் யார் (பிலி.1:1)? அவர்கள் என்னென்ன தகுதிகள் பெற்றவர்களாக இருக்கவேண்டும் (1.தீமோ.3:1-13)?
ஸ்தல சபையில் உள்ள ஆவிக்குரிய தலைவர்களின் பொறுப்புகள் என்ன (எபி.13:17 ; 1.பேது.5:1-5)?
7) ஸ்தல சபையிலே உள்ள ஆவிக்குரிய தலைவர்களுடன் தனிப்பட்ட விசுவாசியின் பொறுப்பு என்ன (எபி.13:7,17 ; 1.பேது.5:5)?
என்ன வழிகளில் இந்த வேதவசனத்திற்கு கீழ்ப்படிகிறீர்கள்?
8 ) ஒவ்வொரு விசவாசியும் சபையில் தனிநபராக என்ன செயல்கள் உடையவராக இருக்கின்றனர் (1.கொரி.12:12-17)?
ஏன் தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய வரங்கள் கொடுத்துள்ளார் (எபேசி.4:11-16)?
ஸ்தல சபைகளில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் (எபேசி.4:2-3 ; யோ.13:34-35)?
9) உங்களுடைய கருத்தின்படி எப்பொழுது ஒருவர் ஸ்தல சபையில் செயற்படுகின்ற அங்கத்தினராவார்? விளக்குக.
10) நீ இருக்கின்ற இடத்தைவிட்டு இன்னொரு இடத்திற்கு மாறிச் சென்றால் எப்படி ஸ்தல சபையைத் தெரிந்துகொள்வீர்கள்? எந்த வேத பகுதியை நினைவில் எடுத்துக்கொள்வீர்கள்?