எஸ்றா 10
(11) மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர்
வசனம் 10:1
எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று. ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாக எஸ்றா அழுது, ஜெபித்து அறிக்கையிட்டு ஊக்கத்தோடு வேண்டுதல் செய்தான். இந்தப் பெரிய அறிஞனும், போதகனும், கற்றறிந்த வேத பாரகனும், ஆசாரியனுமான எஸ்றா தேவனுக்கு முன்பாகத் தன் தலையை நிமிர்த்த துணியவில்லை. ஜெபம்பண்ணச்சென்ற ஆயக்காரன், வானத்திற்கு நேராக தன் கண்களை ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான் (லூக்கா 18:13). அதுபோல் இருந்தது எஸ்றாவின் ஜெபமும். ஜனங்கள் இதைப் பார்த்தபோது ஒரு பாவமும் செய்யாத எஸ்றா செய்த ஜெபம் அவர்களை நெஞ்சம் நெகிழச் செய்தது. அவர்கள் ஒவ்வொருவராக வந்து எஸ்றாவுடன் சேர்ந்துக் கொண்டு, கண்ணீருடன் அழுது ஜெபிக்க முற்பட்டனர்.

வசனம் 10:2-4
அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம். ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கும் நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம். நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. எழுந்திரும். இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது. நாங்களும் உம்மோடேகூட இருப்போம். நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
அந்த நிலையில் செக்கனியா என்பவன் எஸ்றாவை நோக்கி எல்லா ஜனங்களுக்காகவும் சில வார்த்தைகள் பேசலானான். அவன், அந்நிய ஸ்திரிகளைச் சேர்த்துக் கொண்டதினால் தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்தோம், என்றான். மேலும் அவன், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு என்று நம்பிப்பேசினான். அதற்கான ஒரேவழி, அம் மாதிரிச் சேர்த்துக் கொண்ட ஸ்திரீகளையும், அவர்களிடத்தில் பிறந்து பிள்ளைகளையும், அகற்றிப் போடுவோம் என்று தேவனோடே உடன்படிக்கை பண்ணக்கடவோம் என்று ஒரு திட்டத்தைக் கூறினான். இது மிகவும் கடுமையான செயல்தான். ஆனால் இதை எஸ்றா கூறவில்லை. எஸ்றா தேவனிடத்தில் அழுது ஜெபித்தான். கர்த்தர் தமது சித்தத்தை அவர்களின் இருதயங்களிலே விளங்கப்பண்ணினார். செய்ய வேண்டியது யாதென அவர்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினார். முதலாவது, தங்கள் குற்றங்களை அவர்கள் அறிக்கையிட்டு ஜெபித்தார்கள். பின்பு மனந்திரும்பினார்கள். பின்பு செய்ய வேண்டியது யாதென தேவனுக்கு முன்பாக உணர்ந்து செயல் படத்துவங்கினார்கள்.
பின்பு செக்கனியா, எழுந்திரும். இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கடுத்தது. நாங்கள் உம்டோடே கூட இருப்போம். நீர் திடன் கொண்டு இதைச் செய்யும் என்று எஸ்றாவிடம் சொன்னான்.

வசனம் 10:5
அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச் சொன்னான். அவர்கள் ஆணையிட்டார்கள்.
எஸ்றா உடனே எழுந்திருந்து செயல்படத் துணிந்தான். முதலில் எஸ்றா ஆசாரியரையும், லேவியரையும், தலைவர்களையும் அழைத்து, இந்த வார்த்தைகளின்படிச் செய்ய அவர்களை ஆணையிடச் சொன்னான். அவர்களும் ஆணையிட்டார்கள். எங்கும் எதிலும், முதலில் தலைவர்கள் முன்மாதிரியாகச் செயல்படவேண்டும். ஆனால் சில சமயங்களில் தலைவர்கள் செயலாக்கத்தின் பயன்கள் மட்டும், தங்கள் பதவிகளினால் அனுபவித்து மகிழ்வார்கள். ஆனால் செயல்படவேண்டிய முயற்சி சற்றுக்கடுமையாய் இருக்கும்போது பொறுப்புக்களைத்தட்டிக்கழித்து நிதானமாகவே முன்னேற்றம் காண்பர். இந்தச் நிலையில்தான் உண்மையான தலைவர்கள் யார் என்பதை நாம் காண இயலும்.

வசனம் 10:6
அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான். அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர்குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
எஸ்றா அதனிலும் ஒரு சிறந்த முறையில், ஒரு நல்ல தலைவனாகப் பணியாற்றினான். அவனுடைய தலைவர்கள், தங்களின் பணிப்பொறுப்புகளைக் குறித்து ஆணையிட்டுக்கொடுத்தவுடன், அதை எஸ்றா பெற்றவுடன் அவனுடைய வேலை முடிந்து விட்டதாக ஒருபோதும் அவன் எண்ணவில்லை. அவன் தானே எந்தத் தவறையும் செய்யவில்லை. மக்களை ஒன்று சேர்த்து, அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் உணரும்படி செய்து விட்டான். தனது பணிகள் யாவும் முடிந்து விட்டதென எண்ணி அவன் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றிருக்கக்கூடும். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. ஒரு தனி வீட்டில் சேர்ந்து உபவாசித்துத் தேவனை நோக்கி ஜெபிக்கிறான். அவர் ஓர் உண்மையான தேவ ஊழியன். ஜனங்களின் பெரிதான பாவங்கள் அனைத்தும் துயரப்படுத்தின. அதற்காக அவன் கர்த்தரிடத்தில் அழுது ஜெபிக்கிறான். ஜனங்களுக்காக அவன் கவலைப்பட்டான். அவனும் அவர்களில் ஒருவன் என நன்கு உணர்ந்திருந்தான். அதுபோல நாமும், செயல்படவேண்டும். நமது பாவங்களுக்காக நாம் உபவாசித்து, அழுது ஜெபித்தது உண்டோ என சிந்திக்கக்கடவோம்.

வசனம் 10:7-8
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.
எஸ்றா மேலும் செயல்பட்டான். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டுமென்று யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணுவித்தான். மூன்று நாட்களுக்குள்ளே அவர்கள் வந்து கூட வேண்டும். அப்படி வரத்தவறினால் அவருடைய பொருள் எல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு வரத்தவறியவர்கள் புறம்பாக்கப்படுவார்கள் என அறிவித்தான்.

வசனம் 10:9
அப்படியே யூதா பென்ஜமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள். அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது. ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஜனங்கள் யாவரும் அந்த உத்தரவிற்குக் கீழ்படிந்து வந்தனர். தேவனுடைய ஆலயத்தில் வீதியிலே அவர்கள் கூடினார்கள். அவர்கள் செய்த பாவத்திற்காகவும் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அமர்ந்திருந்து, எஸ்றா வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்கள்.

வசனம் 10:10
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
எஸ்றா எழுந்திருந்து பேசினான், அவன் அதிகமாகப் பேசவில்லை. குற்றங்களைக் குறித்து சமாதானம் பேசவில்லை. உள்ளதை உள்ளவாறே பேசினான். நீங்கள் இஸ்ரவேலில் மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கபண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணினதினால் பாவம் செய்தீர்கள் என்று எஸ்றா சொன்னான். பாவம் என்பது பாவமே. பாவம் நம்மை தேவனிடத்தினின்று பிரித்துவைக்கும். உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது என்று தேவன் எரேமியாமூலம் உரைக்கிறார் (எரேமி.5:25). அது கூறுகிறது போல் தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களும் நமக்குக் கிடைக்காமல் நமது பாவம் நம்மைப் பிரித்து வைக்கிறது.

வசனம் 10:11-12
இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரயத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான். அப்பொழுது சiபாயர் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம். நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
இந்த நிலையில் அவர்கள் செய்யவேண்டியது யாது? எஸ்றா சாக்குப் போக்காக எதையும் சொல்லவில்லை. கடுமையாக அவன் கூறியது, முதலாவது நீங்கள் உங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்ய வேண்டும் என்றான். அடுத்தது அவர்கள் செய்ய வேண்டியது: அந்தப்புறஜாதி இனத்தாரிடமிருந்தும் அவர்களிடமிருந்தும் அவர்கள் கொண்ட புறஜாதியின் மனைவியிடமிருந்தும் முற்றிலும் பிரிந்து விலகவேண்டும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனே இரக்கம் பெறுவான், என்று வேதம் கூறுகிறது (நீதி.28:31). பாவத்தை அறிக்கைசெய்தால் மட்டும்போதாது. அதை முழுவதும் விட்டுவிடவும் வேண்டும். ஒருவன் மனம் திரும்புவதாகக் கூறிக்கொண்டு அதே தவறைப் பாவத்தைத் திரும்பவும், திரும்பவும் செய்வதால் பயன் என்ன? ஒருவேளை, அந்தப் பாவம் மிகவும் சிறியது. அது யாரையும் பாதிப்பதுமில்லை என்று நாம் கூறலாம். அது சரியில்லை. பாவத்தை முழுவதுமாக விட்டு விட்டால் தேவன் சகல ஆசீர்வாதங்களையும் நமக்கு அருளுவார்.
இங்கே எஸ்றா கட்டளை மிகவும் கடுமையானது தான். அவர்களின் சொந்த மனைவிகள், அவர்கள் இஸ்ரவேலரல்லாதாராயின், புறஜாதி பெண்களாயின், அவர்கள் பிரிந்து ஒதுக்கப்படவேண்டும் ஆனால் அவர்களை முற்றிலும் மணந்து கொண்டது தேவனுக்கு விரோதமாக செய்த பாவச் செயலேயாகும். இத்தகைய பெண் கொள்ளலும், விவாகப்பணிகளும், தேவனுடைய பிள்ளைகளைக் கர்த்தரிடத்திலிருந்து பிரித்துத் தூரப்படுத்திவிடும். அது தொடர்ந்து இஸ்ரவேலர் மத்தியில் நடைபெற்றால் தேவனுடைய மக்கள் என அழைக்கப்பட்ட யூதர் இனமே பூண்டற்றுப்போகும் நிலை ஏற்படும். ஓவ்வொரு கிறிஸ்தவனும் இதை நன்கு உணரவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கை முறையும், தேவ வழிபாட்டு முறையும், பிற உலகமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தேவனுக்கு ஏற்றவையாக இருந்தல் வேண்டும். ஆகையால், எஸ்றா அவர்கள் கட்டாயம், புறஜாதி மனைவியிடமிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கட்டளையிட்டான். ஜனங்களும், ஏன், எப்படி என்று வாதிக்கவில்லை. ஆம் நீர் சொன்ன வார்த்தையின்படியே செய்ய வேண்டியதுதான் என்றார்கள். எஸ்றா சொன்னவுடன் அவர்கள் கீழ்படிந்தார்கள். நாம் எல்லாரும் அவ்வாறே செய்யக்கடமைப்பட்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தைகள், நம் ஒவ்வொருவருரின் வாழ்க்கையிலும் பூரணமாகச் செயல்புரியச் செய்யப்படவேண்டும்.

வசனம் 10:13
ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது. இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல. இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
எஸ்றா, ஜனங்களோடு பேசும்போது மழைபெய்துக் கொண்டேயிருந்தது. மழையில் நனைந்தபடியே அவர்களால் யாதும் செய்யக்கூடவில்லை. அந்தப் பிரித்தெடுக்கும் பணி மிகப் பெரியதாகையால் அதை ஓரிரு நாளில் செய்வதென்பதும் முடியாது. ஆனால் பெரிய பாவம் என்றே அனைவரும் ஒப்புக்கொண்ட அதை விடுத்து, பிரிக்கும் பணியை உடனே துவக்க அவர்கள் முடிவுசெய்தனர்.

வசனம் 10:14
ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும். இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
ஒத்துழைக்க முன்வந்த அவர்கள், தங்கள் பட்டணங்களில் மறு ஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயதிபதிகளோடும் குறித்த காலங்களில் வரக்கடவர்கள் என்று கூறினர். மேலும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி யூதர்களின் குடும்பங்களின் தலைவர்களை நியமித்தார்கள். அவர்கள் சபையெங்கும் தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களைவிட்டு திரும்பும்படி அப்படிச் செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். இங்கே அநேகர் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். கர்த்தருடைய வார்த்தைகள் அவர்களுக்குள் கிரியை செய்தபோது அவர்கள் மனந்திரும்பி அவர்களின் பாவங்களை அறிக்கையிட்டார்கள். ஆனால் அறிக்கையிடுதல் மட்டும் போதாது. பாவத்தை விட்டு விடுதலும் வேண்டும். ஆகையால் அதைச் செய்யத் தான் அவர்கள் உடனே செயல்ப்பட ஆரம்பித்தனர்.

வசனம் 10:15
ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படி வைக்கப்பட்டார்கள். மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
அதில் நான்கு பேர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் விசாரிப்புக்காரராகவும், உதவிக்காரராகவும் வைக்கப்பட்டார்கள்.

வசனம் 10:16
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள். ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதா வம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல்தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
சிறையிருப்பிலிருந்து வந்த அனைவரும் இத்திட்டங்களைக்கு ஒப்புக்கொண்டார்கள். பாபிலோனிலிருந்து அனைவரும் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள். இது ஒரு விசுவாசத்தின் காரியம். தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பிய அனைவரும் அதைச் செய்தனர். அவர்கள் இருந்த பாவமான நிலையில் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது.

வசனம் 10:17
அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
அந்நிய ஜாதியான ஸ்திரிகளைக் கொண்ட எல்லாருடைய காரியங்களையும் விசாரித்து முடிக்க மூன்றுமாதங்கள் ஆயிற்று. எஸ்றா, இப்படிப்பட்டவர்களின் வரிசைப் பட்டியலைத் தருவதை நாம் வேதத்தில் காண்கிறோம். 2ம் அதிகாரத்தில், பாபிலோனை விட்டு, தேவாலயப்பணிக்காக எருசலேம் புறப்பட்டுச் சென்றவர்களின் பட்டியலை மகிழ்சியோடே வாசிக்கும் நாம், அவர்களில் அநேகர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்துள்ளதை இங்கு வாசிக்கிறோம். பாவம் செய்தவர்களில் முதலாவது வரிசையில் ஆசாரியர்களின் பிள்ளைகளின் பட்டியலைக் காணமுடிகிறது. யாவருக்கும் முன்மாதிரியா இருக்க வேண்டியவர்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எருசலேமுக்குப்போக மனமற்றவர்களாயிருந்தனர். ஆனால் பயணம் தொடங்கியபோது, மொத்தம் சென்றவர்களில் 10 வீதம் பேர் ஆசாரியர் ஆவர். ஆனால் தவறு செய்து அந்நிய ஜாதியான ஸ்திரிகளைக் கொண்டணர்களில் அவர்களின் எண்ணிக்கை 15 வீதம் ஆகும். நாம் நமது சபைத் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது சிறந்த, தேவனுக்கேற்ற பணிகளே.

வசனம் 10:18-19
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எயியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்து. தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக்கொண்டவர்கள், தங்கள் மனைவிகளை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட சம்மதித்து, உறுதிகூற கையடித்துக் கொடுத்தனர். தாங்கள் செய்தது தவறு, அல்லது பாவம் என்றுணர்ந்த அவர்கள் செய்த குற்ற நிவாரண பலியாக ஓர் ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்த பாவங்களுக்காக பாவ நிவாரணபலியின் இரத்தஞ்சிந்துதல் தேவைப்பட்டபோது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை நமக்காகச் சிந்தினார் (எபி 9:26).

வசனம் 10:20-43
இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும், ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும். பஸ்கூரின் புத்திரரில் எயியோனபய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும், லேவியரில் யொசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும். பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும். மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரேஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும், ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும், சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும், பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும், பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும். பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலேயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும். ஆரீமின் புத்திரரில் எயியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், பென்ஜமீன், மல்லூக், செமரியா என்பவர்களும். ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும். பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவெல், பெனாயா, பெதியா, கெல்லூ, வனியா, மெரெமோத், எலெயாசீப், மத்தனியா, மதனாய், யாசாப், பானி, பின்னூயி, சிமெயி, செலேமியா, நாத்தான், அதாயா, மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, அசரெயேல், செலேமியா, செமரியா, சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும். நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யாதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
இவ்வசனங்களில், அந்நிய ஜாதியான மனைவிகளைக் கொண்டதினால் பாவம் செய்தவர்களின் பட்டியலை நாம் வாசிக்கிறோம்.
வசனம் 10:44இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும், ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும். பஸ்கூரின் புத்திரரில் எயியோனபய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும், லேவியரில் யொசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும். பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும். மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரேஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும், ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும், சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும், பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும், பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும். பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலேயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும். ஆரீமின் புத்திரரில் எயியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், பென்ஜமீன், மல்லூக், செமரியா என்பவர்களும். ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும். பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவெல், பெனாயா, பெதியா, கெல்லூ, வனியா, மெரெமோத், எலெயாசீப், மத்தனியா, மதனாய், யாசாப், பானி, பின்னூயி, சிமெயி, செலேமியா, நாத்தான், அதாயா, மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, அசரெயேல், செலேமியா, செமரியா, சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும். நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யாதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
இவ்வசனங்களில், அந்நிய ஜாதியான மனைவிகளைக் கொண்டதினால் பாவம் செய்தவர்களின் பட்டியலை நாம் வாசிக்கிறோம்.
இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள். இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
எஸ்றாவின் புத்தகத்தின் கடைசி வசனமான இதில் விசனமான ஒரு குறிப்பை நாம் காண்கிறோம். இவ்வசனத்திற்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் அனைவரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள். இது துயரமிக்க செய்தி. ஓதுக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களில் சிலர், அந்த மறு ஜாதியான மனைவிகள் மூலம் பிள்ளைகளையும் பெற்றிருந்தனர் என்று இங்கு காண்கிறோம். இந்த மனைவிகளும் எங்கு அனுப்படப்பட்டனர் என்று வேதம் நமக்குக் கூறவில்லை.
ஓருவேளை இந்தப் பிள்ளைகள் தங்களின் தந்தைகளுடன் இருந்தனரோ அல்லது 3 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் அவர்கள் தள்ளப்பட்டுப் போனார்களோ என்பதும் தெரியவில்லை.
இது கடுமையானதும், வருத்தப்படவேண்டியதுமான ஓர் ஒழுங்குமுறைதான். ஆனாலும் அவர்கள் புறஜாதியாரிடமிருந்து முற்றிலும் பிரிந்திருக்க வேண்டியது தேவனுடைய ஆசீர்வாதத்திற்குப்பட்ட அந்த நாளைய கற்பனைகளின் முறைமையாகும். அப்பணியை எஸ்றா செய்து முடித்தான்.
அடுத்து, எஸ்றாவைப்பற்றி வேதத்தில், நெகேமியா 8:1 வரையில் யாதொன்றும் கூறப்படவில்லை. தேவனால் அருளப்பட்ட ஒரு பொறுப்பான வேலையை அவன் செய்து முடித்தான் எனக் காண்கிறோம்.
காரியங்களை வாய்க்கச் செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென் !!!
Thanks - Tamil Christian Assembly