யோவான் 3 விளக்கவுரை

ஆ) மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13)


யோவான் 3:6-8
6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்னஇடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
ஒவ்வொரு மனிதனிலும் ஏற்பட வேண்டிய அடிப்படையான மாற்றத்தை இயேசு நிக்கோதேமுவுக்குக் கா
ண்பித்தார். இந்த மாற்றம் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் பெரிய மாற்றமாகும். புதிய ஏற்பாட்டில் மாம்சம் என்ற வார்த்தை கடவுளைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடைய விழுந்துபோன சுபாவத்தையும் அழிவை நோக்கிச் செல்லும் ஒரு துன்மார்க்கனையும் குறிக்கிறது. அந்த வார்த்தை சரீரத்தை மட்டும் குறிக்காமல், கலகம் பண்ணும் மனதையும் ஆவிகளையும் குறிக்கிறது. இது முழுவதும் சீரழிந்த நிலை. இயேசு குறிப்பிட்டதுபோல, இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. எந்த மனிதனும் இறை வனுடைய இராஜ்யத்தில் நுழைவதற்குத் தகுதியானவன் அல்ல. மனிதன் பிறப்பிலிருந்தே தீயவனாக இருப்பதால் தீமையின் பிறப்பிடமாகவும் இருக்கிறான்.
ஆவி என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. சத்தியத்தினாலும், தூய்மையினாலும், வல்லமையினாலும், அன்பினாலும் நிறைந்த பரிசுத்த ஆவியாகிய கடவுளைக் குறிக்கிறது. கடவுள் தீயவர்களை வெறுத்துத் தள்ளாமல், மாம்சம் என்னும் பிரமாணத்தை கிறிஸ்துவினால் மேற் கொண்டிருக்கிறார். இது இரண்டாவது பிறப்பின் நோக்கத்தைக் காட்டுகிறது. நம்முடைய அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழும்படி நம்மில் இருக்கும் ஆவியானவர் நம்முடைய மாம்சத்தின் இச்சைகளை அழித்துப்போடுகிறார். நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? மாம்சத்தின் கொடுங்கோல் அட்சியிலிருந்து விடு விக்கப்பட்டிருக்கிறீர்களா?
மூன்றாவது முறையாக இயேசு நிக்கோதேமுவுடன் பொறுமை யாகப் பேசுகிறார். நீயும் உன்னுடைய சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், ஆபிரகாமுடைய வித்துக்கள் அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டும். இது ஒரு கடமை, பரிசுத்த கடமை. இயேசு மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்ன படியால் இது ஒரு கட்டளை என்று நாங்கள் சாட்சியிடுகிறோம். ஒரு அடிப்படையான புதுப்பித்தலின்றி இறைவனை நீங்கள் அறியவும் முடியாது, அவருடைய அரசில் நுழையவும் முடியாது.
காற்றடிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வீசும் காற்றைப் போலவே மறுபடியும் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். காற்று வெறுமையிலிருந்து வந்து வெறுமைக்குச் செல்லுகிறது. அதுபோலவே இறைவனுடைய பிள்ளைகளும் மேலிருந்து வந்து, தங்கள் பிதாவினிடத்திற்குச் செல்லுகிறார்கள். காற்றின் சத்தத்தை வைத்தே அங்கு காற்றிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம்.
மறுபடியும் பிறந்தவர்களுடைய வாழ்க்கை மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுவதே அவர்களுடைய மறுபிறப்பிற்கான தெளிவான அடையாளமாயிருக்கிறது. சாதாரண மனிதர்களுடைய சிந்தையிலிருந்து வருகிற இயற்கையான காரியங்களை நாம் பேசுவதில்லை. விசுவாசியில் இறைவனுடைய வல்லமையின் சத்தம் வருவதுபோல, இவ்வுலகத்திற்கு வெளியிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகிறார். அவர் உம்முடைய இருதயத்தில் இறங்கியிருக்கிறாரா?
யோவான் 3:9-13
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13 பரலோகத்திலிருந்திறங்கின வரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
கிறிஸ்து தந்த விளக்கத்தில் நிக்கோதேமு பரிசுத்த ஆவியின் தேவையை உணர்ந்து கொண்டார். அந்த தெய்வீக காரியத்தின் கவர்ச்சிக்கு அவருடைய இருதயம் மறுவினையாற்றத் தொடங் கியது. ஆனால் இந்த சத்தியத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவருடைய மனம் தடுமாறியது. இந்தக் காரியங்கள் எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே என்று முணகினார். அது அவருடைய இயலாமையை ஒத்துக்கொள்ளும் அறிக்கையாகும். இயேசு அவருக்குத் தொடர்ந்து வழிகாட்டினார். ஆம், மற்றவர்கள் என்னிடம் வந்து பேசத்தயங்குகிறார்கள். அது அவர்களுடைய அறிவுக்கும் அந்தஸ்துக்கும் இழுக்கு என்று நினைக்கிறார்கள். நீர் என்னி டத்தில் வந்து பேசுவது மதிப்பிற்குரிய போதகராகிய உமக்கு பெரிய காரியம்தான். ஆனால் உமக்குப் பரிசுத்த ஆவியானவரின் நோக்கங்கள் நன்கு விளங்கவில்லை. உங்கள் ஆராதனைகள், காணிக்கைகள், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணானவைகள். இறைவ னுடைய இராஜ்யத்தின் எளிய விதிமுறைகள்கூட உங்களுக்குத் தெரியவில்லை.
மூன்றாவது முறை, மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல் லகிறேன் என்று முக்கியமான வாக்கியத்தைக் கூறுகிறார். இவ்வாறு அவர் சொல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய வெளிப்பாட்டை அவர் அறிவிக்கிறார். மனிதர்களாகிய நம்முடைய மனங்கள் புரிந்துகொள்வதில் அத்தனை மந்தமுள்ள வையாயிருப்பதினால் இவ்வாறு அவர் கூறுகிறார்.
நிக்கோதேமு கற்றுக்கொள்ளும் புதிய பாடம் எது? கிறிஸ்து நான் என்ற ஒருமையிலிருந்து நாம் என்ற பன்மைக்குச் செல்லுகிறார். அவர் இப்போது நம்முடன் இணைந்து பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுக்கிறார். கிறிஸ்துவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள். அவரே மனுவுருவான கடவுளின் வார்த்தை. எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாத உண்மையை இயேசு போதிக்கிறார். அவர் பரிசுத்த ஆவியானவருடனுள்ள ஐக்கியத்தில் தான் கவனித்த காரியங்களுக்குச் சாட்சி கொடுக்கிறார். இந்த சாட்சியை நாம் ஏற்றுக்கொண்டு விசுவாசிக் கிறோம்.
மற்ற அனைத்து மனிதர்களையும்விட அவர் நன்கு அறிந்துள்ள இந்தக் காரியம் என்ன? அவர் இறைவனை அறிந்தவராக அவரை பிதாவே என்று அழைத்தார். பரிசுத்த ஆவியானவருடைய உதவி யின்றி இந்த தலைவர்களுடைய தப்பெண்ணமுள்ள மனதில் இந்த இரகசியம் ஒருபோதும் செல்லாது. கிறிஸ்து பிதாவினிடத் திலிருந்து வந்தவரும் அவரிடம் திரும்பச் செல்லுகிறவருமா யிருக்கிறார். அவர் பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோ கத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். இறைவனுடைய ஆவியானவர் இயேசுவில் மாம்சமானபோது இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையிலான பிரிவினை நீக்கப்பட்டது. நித்தியம் என்பது தூரமானதும் பயங்கரமானதுமல்ல, சமீபமானதும் மென்மையா னதுமாகிவிட்டது. இறைவனுடைய இந்த சத்தியத்தின் சாட்சியை மனிதர்கள் புரிந்துகொள்ளாதிருப்பது ஆச்சரியமானது. அவர்கள் விசுவாசிக்க மறுப்பதாலும், தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்ய தவறுவதாலும், பிதாவினாலும் ஆவியினாலும் பிறந்த ஒருவரை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மறுபிறப்பின் தேவையை உணராமல் தாங்கள் நல்லவர்கள் என்றும் புத்திமான்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுய திருப்தி பரிசுத்த திரித்துவத்தின் ஒருமையை அறிய அவர்களை வழிநடத்தாது.

இ) சிலுவையே மறுபிறப்பின் காரணி (யோவான் 3:14–16)


யோவான் 3:14-16
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
இயேசு தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது, உண்மையான மனந்திரும்புதலும், மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும், மனுக்குலத்திற்கு பதிலாளாக மரித்த இயேசுவில் வைக்கும் விசுவாசமும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் இயேசு இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார்.
சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்தார்கள்.
சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்தார்கள்.
ஏவாளுக்கு சோதனை ஏற்பட்ட காலத்திலிருந்து பாம்புதான் தீமைக்கு அடையாளமாக இருக்கிறது. இயேசு வந்தபோது மனுக்குலத்தின் பாவத்தைச் சுமந்தார். பாவமறியாதவர் நமக் காகப் பாவமானார். வனாந்தரத்திலிருந்த வெண்கலச் சர்ப் பத்தைப் போல இயேசுவும் விஷமற்றவராக, அதாவது பாவ மற்றவராக நம்முடைய பாவத்தைச் சுமந்தார்.
இறைவனுடைய மகன் இவ்வுலகத்தில் தோன்றியபோது பிரகாசமான தோற்றத்தில் காணப்படவில்லை. மனுமகனாக தாழ்மையின் கோலத்தில் காயங்களையும் வேதனைகளையும் சுமந்தவராக, நியாயப்பிரமாணத்தின் சாபத்தைச் சுமந்து தீர்த்தார். மனிதருடைய உருவில் அவர் நமக்காக மரிக்கக்கூடிய வராயிருந்தார். மனித குமாரன் என்பது அவரை வேறுபிரித்துக் காட்டும் அடையாளமாகும். எவ்வாறு உயர்த்தப்பட்ட வெண் கலச் சர்ப்பம் தேவகோபம் நீக்கப்பட்டதற்கு அடையாளமா யிருந்ததோ, அப்படியே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் தேவகோபம் நீங்கியதற்கு அடையாளமாயிருக்கிறார். தன்னுடைய மரணத்தினால் நம்மை விடுவிக்கும்படி நம்முடைய பாவம் அனைத்தும் அவர் மீது வைக்கப்பட்டது.
வனாந்தரத்தில் யாரெல்லாம் உயர்த்தப்பட்ட சர்ப்பத்தை, இறைவனுடைய வாக்குறுதியின் மேல் விசுவாசமுள்ளவர்களாக நோக்கிப் பார்த்தார்களோ, அவர்களுடைய பாம்புக்கடி குண மானது. இந்த கிருபையின் அடையாளத்தின்மீது கொள்ளும் பற்றுறுதி விசுவாசிக்கு வாழ்வைக் கொடுக்கிறது. யாரெல்லாம் சிலுவையைப் பார்த்து சிலுவையில் அறையப்பட்டவரோடு சேர்ந்துகொள்கிறார்களோ அவர்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். நான் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆகிலும் பிழைத்திருக்கிறேன். நானல்ல, கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார் என்று பவுல் கூறு கிறார். அவருடைய மரணம் என்னுடைய மரணம், அவ்வாறே அவருடைய வாழ்வும் என்னுடைய வாழ்வு. யாரெல்லாம் கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசிக் கிறார்களோ அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டு என்றென் றைக்கும் அவரோடு வாழ்வார்கள். இந்த இணைப்பு நம்மை அவருடைய உயிர்த்தெழுதலோடும் ஐக்கியப்படுத்துகிறது.
நியாயம் தீர்க்கப்பட்டவர்களாகிய நாம் மீட்கப்பட வேண்டுமானால் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் வழியாக அல்லாமல் வேறு எவ்வழியிலும் மனிதர்கள் கடவுளிடம் செல்ல முடியாது. அதனால்தான் சாத்தான் இரவும் பகலும் இரட்சிப்பின் இந்த இரண்டு கொள்கைகளையும் கொடூரமாகத் தாக்குகிறான். அவரு டைய தெய்வீக குமாரத்துவத்திலும் சிலுவை மரணத்திலுமே உலகத்தின் இரட்சிப்புத் தங்கியிருக்கிறது.
இறைவன் அன்புள்ளவர். அவருடைய இரக்கம் எல்லையற்ற சமுத்திரத்தைப் போன்றது. அவரைவிட்டு விலகிச் செல்லும் நம்முடைய உலகத்தை கைவிட்டுவிடாமல் அவருடைய அன்பினால் தொடர்ந்து நேசிக்கிறார். பாவமுள்ள கலகக் காரர்களை அவர் புறக்கணிக்காமல் இரக்கம் காட்டுகிறார். நம்முடைய இரட்சிப்புக்குத் தேவையான நீதியின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் அவருடைய குமாரனின் மரணம் நிறை வேற்றியது. குமாரனில்லாமல் இரட்சிப்பில்லை.
சகோதரனே, உம்முடைய நண்பர் ஒருவருக்காக ஆயிரம் ரூபாயை நீங்கள் இழப்பீர்களா? நீங்கள் அவருக்காக சிறைக்குச் செல்ல ஆயத்தமாயிருப்பீர்களா? அல்லது அவருக்காக மரிப்பீர்களா? அவர் உங்களுடைய நண்பராயிருந்தால் ஒரு வேளை நீங்கள் செய்யலாம். ஆனால் உங்களுடைய எதிரிக்கு நீங்கள் ஒருபோதும் இந்தக் காரியங்களைச் செய்ய மாட்டீர்கள். இது குற்றவாளிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக தன்னுடைய மகனையே பலியாகக் கொடுத்த இறைவனுடைய அன்பின் மேன்மையைக் காண்பிக்கிறது.
கிறிஸ்து சிலுவையில் இவ்வுலகத்திற்கான இரட்சிப்பை நிறைவேற்றி முடித்தார். எல்லா வகையான மனிதர்களும், படித்த வர்களும் படிக்காதவர்களும், தாழ்மையானவர்களும் அகம்பாவ முள்ளவர்களும், பணக்காரர்களும் ஏழைகளும், நல்லவர்களும் கெட்டவர்களும் யாருமே தங்களில் நீதியுள்ளவர்கள் அல்ல. கிறிஸ்து இவ்வுலகத்தைப் பிதாவோடு ஒப்புரவாக்கியிருக்கிறார்.
சிலுவையில் அறையப்பட்டவரை விசுவாசிப்பவர்களைத் தவிர வேறு எந்த மனிதருக்கும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. இரட்சகருடன் உங்களுக்கிருக்கும் உறவுதான் உங்களுடைய இரட்சிப்பை முடிவுசெய்கிறது. விசுவாசமில்லா விட்டால் நீங்கள் தொடர்ந்து இறைவனுடைய கோபத்திற்குக் கீழாகவே இருப்பீர்கள். இறைவனுடைய பரிசுத்தத்தின் வெளிச் சத்தில் உங்களுடைய செயல்கள் அனைத்தும் நேர்மையற்ற வைகளும் அழுக்கானவைகளுமாகக் காணப்படுகிறது. நியாயப் பிரமாணத்தினால் மீட்பு என்று நம்பிக்கொண்டிருந்த போதக ராகிய நிக்கோதேமு இந்தக் காரியங்களைக் கேட்டபோது ஆச்ச ரியப்பட்டார்.
அவமானச் சின்னமாகிய மரத்தில் உயர்த்தப்பட்ட குமாரனை விசுவாசித்து, சிலுவையின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வைப் பெற்றுக்கொள்வதோடு இறைவனுக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டதற்காக இயேசுவுக்கு நன்றி சொன்னதுண்டா? உங்கள் வாழ்வை அவருக்கு நீங்கள் ஒப்படைத்திருக்கிறீர்களா?
கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் வாழ்கிறார்கள். கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கி றார்கள். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்வதை விசுவாசம் உறுதிசெய்கிறது. நீங்கள் 14 முதல் 16 வரையான வசனங்களின் ஆழத்தை அறிந்துகொள்வீர்களானால், இந்த ஒரு பகுதி யிலிருந்தே நற்செய்தியின் சாராம்சத்தைக் கண்டுகொள்வீர்கள்.

ஈ) கிறிஸ்துவைப் புறக்கணித்தல் நியாயத்தீர்ப்புக்கு வழி நடத்துகிறது (யோவான் 3:17-21)


யோவான் 3:17-21
17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
யோவான் ஸ்நானகன் தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மேசியாவைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆனால் இயேசு நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யோவான் ஸ்நானகன் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, இயேசுவை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.
இறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப் பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் ஆபிரகாமுடைய சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லாருமே நியாயம் தீர்க்கப்படுவதற்குப் பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் இயேசு நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.
குமாரனை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படான் என்ற தனிச்சிறப்பான சொற்றொடரை கிறிஸ்து பயன் படுத்துகிறார். இவ்வாறு நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்த அனைத் துப் பயமும் நீக்கப்படுகிறது. ஆகவே கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது மரணத்திலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். இல்லாவிட்டால் நாம் அதற்குப் பாத்திரவான்களாயிருக்கிறோம். நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால் நியாயத்தீர்ப்பிலிருந்து விடு விக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தங்களுக்கு கிறிஸ்து தரும் இரட்சிப்புத் தேவையில்லை என்று அதைப் புறக்கணிப்பவர்கள் குருடர்களாகவும், மூடர்களாகவும், அவர் தரும் கிருபையிலிருந்து தங்களை விலக்கிக் கொள்பவர் களாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் வல்லமையை வரவேற் காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் ஒளிக்கதிர்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். கிறிஸ்துவின் மரணத்தைப் பரிகசிக்கிறவன் அல்லது மறுதலிக்கிறவன் இறைவனுக்கு விரோ தமாக கலகம் செய்து தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொள் கிறான். நம்முடைய செயல்கள் அனைத்துமே குறைவுள்ளவைகள், நாம் தேவனுடைய மகிமையை இழந்து போகிறவர்கள்.
ஏன் சில மக்கள் இரட்சிப்பை நிராகரிக்கிறார்கள் என்று இயேசு விளக்குகிறார்: அவர்கள் கடவுளுடைய நீதியைக் காட்டிலும் பாவத்தை அதிகமாக நேசிக்கிறார்கள். உலகத்தின் ஒளியிலிருந்து அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வதால், தங்கள் பாவத்தோடு ஒட்டிக்கொள்கிறார்கள். கிறிஸ்து நம்முடைய இருதயத்தையும் அதிலுள்ள கொடிய எண்ணங்களின் அடிப்படைக் காரணத் தையும் அறிவார். மனிதர்களுடைய செயல்கள் கொடியவை. எந்த மனிதனும் தன்னில்தான் நல்லவன் அல்ல. நம்முடைய சிந்தனை களும், வார்த்தைகளும், செயல்களும் இளம் பிராயத்திலிருந்தே தீயவைகளாயிருக்கின்றன. இந்தப் போதனைகள் நிக்கோதேமுவை ஆழமாகப் பாதித்தன. சிறப்பாக இயேசு அவனுடைய பெரு மையை உடைத்து மனந்திரும்புதலுக்கு அழைக்கத்தக்கதாக ஆரம் பத்தில் அவரோடு அன்புடன் பேசிய முறையினால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார்.
ஏன் சில மக்கள் இரட்சிப்பை நிராகரிக்கிறார்கள் என்று இயேசு விளக்குகிறார்: அவர்கள் கடவுளுடைய நீதியைக் காட்டிலும் பாவத்தை அதிகமாக நேசிக்கிறார்கள். உலகத்தின் ஒளியிலிருந்து அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வதால், தங்கள் பாவத்தோடு ஒட்டிக்கொள்கிறார்கள். கிறிஸ்து நம்முடைய இருதயத்தையும் அதிலுள்ள கொடிய எண்ணங்களின் அடிப்படைக் காரணத் தையும் அறிவார். மனிதர்களுடைய செயல்கள் கொடியவை. எந்த மனிதனும் தன்னில்தான் நல்லவன் அல்ல. நம்முடைய சிந்தனை களும், வார்த்தைகளும், செயல்களும் இளம் பிராயத்திலிருந்தே தீயவைகளாயிருக்கின்றன. இந்தப் போதனைகள் நிக்கோதேமுவை ஆழமாகப் பாதித்தன. சிறப்பாக இயேசு அவனுடைய பெரு மையை உடைத்து மனந்திரும்புதலுக்கு அழைக்கத்தக்கதாக ஆரம் பத்தில் அவரோடு அன்புடன் பேசிய முறையினால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார்.
நடைமுறையில் நம்முடைய விசுவாசத்தை செயல்படுத்துவது என்பது சரியான காரியத்தைச் செய்வதாகும். இறைவனுடைய உண்மையை ஏற்றுக்கொள்ளும் இந்த ஆயத்த நிலையே நம்முடைய புதுப்பித்தலுக்கான ஒரு நிபந்தனையாகும். அறிவின் அடிப்படையில் மட்டுமல்ல, முழு மனிதனாக யார் கிறிஸ்துவின் சத்தியத்திற்குள் நுழைகிறார்களோ, அவர்கள் ஒழுக்க ரீதியாக மறுரூபமடைகிறார்கள். பொய்பேசுகிறவர்கள் உண்மையுள்ள மனிதர்களாகிறார்கள், குறுக்குவழிக்காரர்கள் நேர்மையாளர்களாக மாறுகிறார்கள், துரோகிகள் விசுவாசமுள்ளவர்களாக மாறுகிறார்கள். மறுபிறப்படைந்தவர்கள் இதற்கு முன்பு நல்லவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்திருப்பதால் இறைவன் அவர்களை மன்னித்திருக்கிறார். பரிசுத்தமாகுதல் அவர்களில் ஆரம்பித்துவிட்டது. பரிசுத்த ஆவியின் செயல்களை நடைமுறைப்படுத்த அன்பின் வல்லமையை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார். அன்பின் செயல்களை அடையும்படிக்கு கிறிஸ்துவினால் விசுவாசிகளில் இறைவன் செயல்படுகிறார்.
நாம் நற்செயல்களை புறக்கணிக்கவில்லை, அவை நம்மிடத் திலிருந்து வராமல் இறைவனிடமிருந்தே வருகிறது. நாம் அதற்குரிய பெருமையை எடுத்துக்கொள்ள முடியாது, அது முழுவதும் இறைவனுடைய கிருபையினால் வருகிறது. இதை நாம் பெற்றுக்கொள்ளும்போது, சுயத்தை மையமாகக் கொண்ட நம்முடைய சுயநீதியை விட்டு விலகி, கிறிஸ்துவின் இரத்தத்தைச் சார்ந்து, கிருபையின் நீதிக்கு நம்மைத் திறந்துகொடுக்கிறோம். மறுபடியும் பிறந்து கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர்கள் இறைவனைப் பிரியப்படுத்துகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அவருடைய கிருபைக்கு நன்றியறிதலாக மாறிவிடுகிறது. மறு பிறப்பும் பரிசுத்த வாழ்க்கையும் இறைவனுக்குப் பிரியமான ஆராதனையாகும்.

3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)


யோவான் 3:22-36
22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் இரட்சிப்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.
யோவான் ஸ்நானகன் தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யோவான் ஸ்நானகனிடம் வந்து தங்களு டைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, இயேசுவைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.
பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு நேரடியாக கலிலேயாவுக்குப் போகாமல், வேறு இடங்களில் மனந்திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய ஊழியம் அதிக அதிகாரபூர்வமாயிருந்தபடியால் யோவானிடம் சென்றவர்களைக் காட்டிலும் பலர் இயேசுவிடம் வந்தார்கள். இதன் விளைவாக இரண்டு சாராருக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்த இரண்டு தலைவர்களில் நம்முடைய பாவங்களைச் சுத்திகரிப்பதற்கு ஏற்றவர் யார் என்பதே பிரச்சனையாக இருந்தது. இவர்கள் இருவரில் இறைவனுக்கு மிகவும் நெருக்க மானவர் யார்? அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழுவதும் பரிசுத்தப்படுத்த நினைத்தபடியால் இது முக்கியமான கேள்வியாக இருந்தது. சகோதரனே உங்களுடைய முழு குணாதிசயமும் மாற்றப்படக்கூடிய வழியைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்களை முழுவதும் சுத்திகரிக்க நீங்கள் போராடுகிறீர்களா அல்லது உங்களுடைய பாவத்தை முழுவதும் உங்களைவிட்டுத் தொலைத்துவிட தொடர்ந்து முயற்சிக்கிறீர்களா?
யோவான் ஸ்நானகன் மிகப்பெரிய சோதனையை வெற்றி கொண்டார். இயேசுவின் ஆச்சரியமான வெற்றியைப் பார்த்து அவர் பொறாமைகொள்ளவில்லை, தன்னுடைய ஊழியத்திற்குரிய எல்லையைப் புரிந்தகொண்டார். சாதாரண மனிதன் அப்படிப் பட்ட நற்கிரியையை தானாகச் செய்ய முடியாது. இறைவன் அவருக்கு வல்லமையையும், ஆசீர்வாதத்தையும், பலனையும் கொடுத்திருந்தால் மட்டுமே அவர் அதைச் செய்யக்கூடும் என்று தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய அறிவு, பிரார்த்தனைகள் மற்றும் அழகிய சொற் பொழிவுகள் இவற்றைப் பற்றி பெருமையடித்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு ஆவிக்குரிய வரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு மாயின், அது இறைவனிடமிருந்துதான் வர வேண்டும். இறைவன் விரும்புகிற எல்லாவற்றையும் செய்தால்கூட, நீங்கள் இன்னும் அடிமையாகவும் தகுதியற்றவராகவுமே இருக்கிறீர்கள். யோவான் ஸ்நானகன் தாழ்மையுள்ளவனாக இருந்தார், தன்னைப் பற்றி எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணவில்லை, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தினார்.
தான் மேசியா அல்ல என்பதை ஸ்நானகன் மீண்டும் தன்னுடைய சீஷர்களுக்குச் சாட்சியாக அறிவித்தார். கிறிஸ்து எருசலேமுக்குள் வெற்றிவீரராக நுழைவார் என்று அவர் ஒருவேளை எதிர் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக இயேசுவும் யோவானைப் போல ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் ஸ்நானகன் குழப்பம டைந்தாலும், கீழ்ப்படிதலோடும் தாழ்மையோடும் நிலைத் திருந்தார். கிறிஸ்துவுக்கு முன்னோடியாக அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவேண்டும் என்று இறைவனால் தனக்குக் கொடுக் கப்பட்ட பணியில் தன்னை அடக்கிக்கொண்டார்.
யோவான் தனக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். அவர் இயேசுவே மண வாளன் என்று சாட்சியிடுகிறார். மனந்திரும்புகிறவர்கள் மண வாட்டியாக இருக்கிறார்கள். இன்று ஆவியானவர் இந்த ஆவிக்குரிய ஐக்கியத்தை உருவாக்குகிறார். அதனால்தான் பவுல், நாம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். அவர் நமக்குத் தலையாயிருக்கிறார்; நாம் அவருடன் ஒன்றாயிருக் கிறோம் என்று கூறுகிறார். கிறிஸ்து இனி நமக்கு நியாயாதிபதி யல்ல, அவர் நம்முடைய இரட்சகரும் மணவாளனுமா யிருக்கிறார். திருமணத்தைக் குறித்த மகிழ்ச்சியான இந்த உருவகம் கிறிஸ்துவில் நமக்கு நம்பிக்கையிருப்பதைக் காட்டுகிறது.
ஸ்நானகன் தூரத்தில் நின்று, விசுவாசிகளின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அவர் இயேசுவின் சபையோடு நிற்காமல் அவருக்கு அருகில் நிற்கிறார். அவர் இயேசுவுக்கு உண்மையுள்ள நண்பன் என்று அறிக்கையிடுகிறார். அவர் வனாந்தரத்தில் இருந்தபோது, இயேசு நேரடியாக தலைநகரத்திற்குள் சென்று அற்புதங்களைச் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். ஸ்நானகன் இராஜ்யத்தின் முன் னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். மணவாளனின் பேச்சும் மேன்மையும் அவருக்குப் பிரியமாயிருந்தது. கிறிஸ்துவின் வெற்றிச் செய்திகள் அவருக்கு பரலோக இசையாக ஒலித்தது. யோவானுடைய ஊழியத்தின் இறுதி நாட்களின் கரடுமுரடான தன்மையை கிறிஸ்துவின் மென்மை சரிப்படுத்தியது. அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்காளியைப் போல மகிழ்ச்சியடைந்தார்.
தன்னுடைய சீஷர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கவலைப்படாத யோவான் மரணத்தைச் சந்திக்கவும் ஆயத்தமாயிருந்தார். விசுவாசிகள் வளரும்படியாக தான் குறை யவும் மறையவும் விரும்பினார்.
வாசகரே, யார் உங்களுடைய கூட்டங்களை நடத்துகிறார்? தலைமைத்துவத்துக்காக ஒருவரோடொருவர் போட்டியிடுகிறீர்களா அல்லது மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறீர்களா? கிறிஸ்து உங்களில் வளரும்படி நீங்கள் சிறுக ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று யோவான் ஸ்நாகனுடன் சேர்ந்து சொல்லுங்கள்.

யோவான் 3:31
31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
மனிதர்கள் உலகத்திற்குரியவர்களாகவும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். இயேசு மட்டுமே பரலோகத்திற்குரியவராகவும் நம்மைத் தன்னிடத்தில் இழுத்துக் கொள்ளவும் நம்மை இரட்சிக்கவும் மனிதனாக வந்தவராகவும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அவ்வளவாக இயேசு இந்த உலகத்திலுள்ள எல்லா தீர்க்கதரிசி களையும், தத்துவ ஞானிகளையும், தலைவர்களையும்விட உயர்ந்திருக்கிறார். மனிதனுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆச்சரியப்படத்தக்கவைகளாக இருந்த போதிலும் அவை இறைவன் படைத்த பொருட்களிலிருந்துதான் வருகின்றன. குமாரனே வாழ்வாகவும் ஒளியாகவும் நம்முடைய வாழ்விற்கே காரணமானவராகவும் இருக்கிறார். மற்ற எந்தக் காரியத்தையும் நாம் இறைவனுடன் ஒப்பிட முடியாது. காலங்களுக்கு முன்பா கவே குமாரன் பிதாவின் ஒரே பேறானவராயிருக்கிறார். அனைத்து படைப்புகளையும் விஞ்சிய நிலையில் அவர் பரிபூரண முள்ளவராயிருக்கிறார்.
யோவான் 3:32-35
32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
'
மனிதனாகிய இயேசு பரலோக சத்தியத்திற்கு கண்கண்ட சாட்சியாயிருக்கிறார். அவர் பிதாவைப் பார்த்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டவர். அவருடைய சிந்தனைகளையும் திட்டங்களையும் அறிந்தவர். அவர் பிதாவினுடைய மடியிலிருந்து பிறப்பட்டு வரும் இறைவனுடைய வார்த்தை. அவருடைய வெளிப்பாடு பரிபூரணமானது. தீர்க்கதரிசிகள் மூலமாக வந்த வெளிப்பாடு முழுமையானது அல்ல. இயேசு இறைவனுடைய சித்தத்தை இறுதியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துகிறார். அவர் பிதாவை மகிமைப்படுத்தி தன்னை அவருடைய குமாரன் என்று சாட்சிகொடுத்த காரணத்தினால், இரத்தசாட்சியாக மரித்த உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். அவருடைய சாட்சியை இன்றும் பலர் புறக்கணிப்பது கவலைக்குரியது. தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விரும்பாதவர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் கடவுளையும் விரும்புவதில்லை. அவர்கள் குமாரத்துவத்தையும் இறைவனுடைய தகப்பன் தன்மையையும் மறுதலிக்கிறார்கள்.
இவ்வாறு எல்லாருமே இறைவனையும் அவருடைய ஆவியையும் வெறுப்பதில்லை. அதற்காக அவருக்கு துதியுண்டாவதாக. பிதாவில் குமாரனைப் பார்ப்பவர்களும் அவருடைய பரிபூரண பலியை ஏற்றுக்கொள்பவர்களுமாகிய ஒரு கூட்டம் இருக்கிறது. அவருடைய வெளிப்பாட்டையும் மீட்பையும் நம்புகிறவர்கள் இறைவனைக் கனப்படுத்துகிறார்கள். இறைவன் பொய் சொல்ல முடியாது; குமாரன் சத்தியமாக இருக்கிறார். பிதா தன்னுடைய சிந்தனையின் வடிவங்களை ஒரு கொள்கை வடிவிலோ புத்தகத்திலோ வெளிப்படுத்தாமல், இயேசு என்னும் நபரில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவருடைய வார்த்தையின் ஆவிக்கு யார் திறந்துகொடுக்கிறார்களோ அவர்கள் புதுப் பிக்கப்படுகிறார்கள். நீங்கள் சத்தியத்தைப் பேசும்படியாக மட்டுமல்ல, அதன்படி வாழவும் அவ்வாறு செய்யவும் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். அப்படியானால் அவருடைய நற்செய்தி உங்களில் உள்ளடங்கியுள்ளது.
இயேசு கற்பனையாக அல்லது உறுதியற்ற அல்லது அவருடைய மனம்போன போக்கில் பேசவில்லை. அவருடைய வார்த்தைகள் படைப்பாற்றல் உள்ளவைகளும், வல்லமையுள்ளவைகளும் அதேவேளையில் தெளிவானவைகளுமாயிருக்கின்றன. இறைவனே தன்னுடைய குமாரனில் பேசியுள்ளார். அவரில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவளவற்றவர். முழுமையான ஞானத்தை யும் அதிகாரத்தையும் பிதா குமாரனக்குக் கொடுத்துள்ளார்.
"பிதா குமாரனை நேசித்து எல்லாவற்றையும் அவரிடத்தில் ஒப்படைத்துள்ளார். இறைவனுடைய அன்பு ஒரு கொடையாகும், குமாரன் தன்னுடைய பிதாவைக் கனம்பண்ணுகிறார். பிதாவா அல்லது குமாரனா யார் பெரியவர் என்பதல்ல கேள்வி. அப்படிப்பட்ட கேள்விகள் சாத்தானிடமிருந்து வருகிறது. பரிசுத்த திரித்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒருவரையொருவர் கனப்படுத்துகிறார்கள். இந்தக் கொள்கையை மறுதலிக்கிறவன் கர்த்தரை மறுதலிக்கிறான். குமாரனுடைய தாழ்மையையும், கீழ்ப்படிதலையும், முழுவதுமான ஒப்புக்கொடுத்தலையும் இறைவன் அறிந்திருப்பதால் குமாரனுடைய சர்வாதிகாரத்தைக் குறித்து பிதா பயப்படுவதில்லை. இயேசு சொன்னதுபோல, பரலோகத்திலும் பூலோகத்திலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளபடியால் அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார்.
யோவான் 3:36
”36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
நற்செய்தியாளனாகிய யோவான் இரட்சிக்கப்படுவதற்கான சூத்திரத்தை நமக்குக் கற்பிக்கிறார்: குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவ னாயிருக்கிறான். இந்தச் சிறிய வாக்கியத்தில் நற்செய்தியின் முழுமையும் அடங்கியுள்ளது. பிதாவிலும் குமாரனிலும் உதா ரத்துவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அன்பின் ஐக்கியத்திற்கு யாரெல்லாம் நெருங்கி வருகிறார்களோ அவர்கள் சிலுவை யில் வெளிப்பட்ட இறைவனுடைய அன்பை நெருங்கி வருகி றார்கள். நம்முடைய பாவங்களை ஆட்டுக்குட்டியானவர் நீக்கி விட்டார் என்பதை அறிந்து அவரைச் சார்ந்திருக்கிறார்கள். கிறிஸ்துவோடு இருக்கும் இந்த உறவில் நித்திய அன்பின் இரக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம். சிலுவையில் அறையப் பட்ட குமாரனில் வைக்கும் இந்த விசுவாசம் நம்மை அவருடைய மெய்யான வாழ்வுக்கு மாற்றுகிறது. நித்திய வாழ்வு என்பது மரணத்திற்குப் பிறகு ஆரம்பிக்கிற ஒன்றல்ல, அது இப்போதே ஆரம்பிக்கிறது. குமாரனை விசுவாசிப்பவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வருகிறார். கிறிஸ்துவின் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவருடைய குமாரத்துவத்தையும் சிலுவையையும் மறுதலிப்பவர்கள் பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு மன அமைதி எங்கும் கிடைக்காது. இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்காதவன் இறைவனையே எதிர்க்கிறான், அதனால் ஆவிக்குரிய மரணத்தில் நிலைத்திருக்கிறான். குமாரனையும் அவருடைய சிலுவையின் உபதேசத்தையும் மறுதலிக்கும் எந்த மதமும் இறைவனுடைய சத்தியத்தை தாக்குகிறது. அவருடைய அன்பைப் புறக்கணிப்பவர்கள், அவருடைய கோபத்தைத் தெரிவு செய்கிறார்கள்.
பவுலும் யோவானுடைய நிலைப்பாட்டை உறுதிசெய்கிறார்: எல்லாவிதமான அநியாயத்திற்கும் அவபக்திக்கும் விரோதமாக இறைவனுடைய கோபம் வெளிப்பட்டிருக்கிறது. எல்லாரும் தங்களுடைய அக்கிரமங்களினாலே பாவம் செய்து சத்தியத்தை எதிர்த்திருக்கிறார்கள். பேரழிவை ஏற்படுத்துகிற இறைவனுடைய கோபம் மனிதனுடைய தலையின் மேல் ஊற்றப்படுகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட சர்ப்பத்தைப்போல சிலுவையில் உயர்த்தப்பட்டவர் இறைவனுடைய கோபத்திலிருந்து நம்மைத் தப்புவிக்கும் அடையாளமானார். குமாரன் கிருபையின் காலத் தைத் திறந்து வைத்தார். சிலுவையிலிருந்து வரும் அவருடைய கிருபையைப் போக்கடிக்கிறவர்கள் தங்களுடைய நியாயத் தீர்ப்பில் நிலைத்திருக்கிறார்கள். சாத்தான் அவர்களில் ஆளுகை செய்கிறான். கிறிஸ்துவில்லாத மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். மற்ற மக்களும் குமாரனை விசுவாசித்து இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நீங்கள் எப்போது விண்ணப்பம் செய்ய தொடங்குவீர்கள்? உங்களுடைய சாட்சியின் மூலமாக இறைவ னுடைய வாழ்வைப் பெறும்படி நீங்கள் எப்போது அவர்களுடன் பொறுமையாகப் பேசத் தொடங்குவீர்கள்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.