சங்கீதம் 7 விளக்கவுரை

சங்கீதம் 7 விளக்கவுரை

தலைப்பு:-

"பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவனின் ஜெபம்"

வச.1-2 விடுதலை செய்ய
விண்ணப்பித்தல்

வச.3-5 நான் தவறு செய்திருந்தால்

வச.6-9 நியாயத்திற்காக வேண்டுதல்

வச.7-13 தேவனின் செயல்கள்

வச.14-16 தீயோரின் முடிவு

வச.17 நான் கர்த்தரைத் துதிப்பேன்

வச.1-6 தான் செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டதால் வந்த வேதனையால் தாவீது பாடிய பாட்டு இது (வச.3-6). வேதனையுடன் பாடிய போதிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்ததை ஆரம்பத்திலே கூறியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நம்புவீராக.


வசனங்களுக்கான விளக்கம்:-

சங்கீதம் 7:1

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

a). "என்" தேவனாகிய கர்த்தாவே என்று சொல்லும் அளவு கர்த்தரில் நெருங்கி இருந்தார் சங்கீதகாரன். நாம் எந்தளவு கர்த்தருடன் வாழ்கிறோம்.

b). "நான் உம்மை நம்பியிருக்கிறேன்" கர்த்தரை நம்புவது எனில் அவர் நேரடியாக வந்து உதவி செய்வார் என்று நம்புவது என்பது அல்ல, நேரடியாகவோ மனிதர்கள் மூலமாகவோ அவர் தெரிந்தெடுக்கும் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்வார் என்று நம்புவது ஆகும். எந்த மனிதனிடமும் சூழ்நிலையிலும் மருந்திலும் உதவி கிடைக்கும் என்று நம்புவது சரியன்று. மனிதனோ சூழ்நிலையோ மருந்து எதுவாயினும் தேவனுடைய வழிநடத்துதல் இன்றி நமக்கு உதவ முடியாது.

சங்கீதம் 7:4

என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

நன்மைக்கு தீமை செய்வது கொடுமை, நன்மைக்கு நன்மை செய்வது மனிதப் பண்பு, தீமைக்கு நன்மை செய்வது கிறிஸ்தவனின் கடமை (மத் 5:44; ரோம 12:20-21).

சங்கீதம் 7:8

கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

நியாயம் செய்யும்படி கர்த்தரிடம் வேண்டினார் தாவீது. மற்றவர்கள் நம்மை தவறாக குற்றம் சாட்டினால் நாம் என்ன செய்கிறோம்?. திருப்பிப் தாக்குவதை விட கர்த்தரிடம் விண்ணப்பம் செய்வது நல்லது (ரோம 12:17-21).

சங்கீதம் 7:9

துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

தேவன் மனிதர்களின் எண்ணங்களையும் அவர்களுடைய சுபாவங்களையும் அறிந்திருக்கிறார். பாவத்தில் வாழ்கிறவர்களுக்கு இது பயம் அளிப்பதாகவும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைகிறது இருந்தார் சீராக்குவார்.

சங்கீதம் 7:11

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

பாவம் செய்கிறவன் மீது தேவன் நான் தோறும் கோபம் கொண்டாலும் அவன் மனம் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கிறார்.  தொடர்ந்து அவன் பாவத்தில் வாழ்ந்தால் இறுதியில் தண்டனை அடைகிறான்.

சங்கீதம் 7:15

குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

மனம் திரும்பாத மனிதன் அவனுடைய செயல்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இவ்வசனங்கள் விளக்குகிறது.

சங்கீதம் 7:17

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

தான் என்ன செய்வதாக தாவீது கூறுகிறாரோ அதைச் நாம் செய்யலாமே. தேவனும் துதிக்கப் படவும் புகழ பாடவும் தகுதி உள்ளவர். எனவே சூழ்நிலை நன்மையாக மாறும் வரை காத்திராமல் எந்த நிலையிலும் கர்த்தரைப் புகழ்ந்து துதிப்பதும் அவருக்கு நன்றி செலுத்துவதும் சிறந்தது. இதுவே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெச 5:18).

இந்த சங்கீதத்தில் வரும் தேவனுடைய பெயர்கள்:-

ஏன் என் தேவனாகிய கர்த்தர் ,   
நீதி உள்ளவராய் இருக்கிற தேவரீர் ,
இருதயங்களையும் உள்ளம் திரியங்களையும் சோதிக்கிறார்,
செம்மையான இருதயம் உள்ளவர்களை ரச்சிக்கிற தேவன்,
நீதியுள்ள நியாயாதிபதி,
பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவன், உன்னதமான கர்த்தர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.