தானியேல் விளக்கவுரை அதிகாரம் 11

தானியேல் 10, 11, 12-ஆம் அதிகாரங்கள் தானியேல் கண்ட மூன்றாவது தரிசனமாகும். 10-ஆவது அதிகாரத்தின் தொடர்ச்சியே 11-ஆம் அதிகாரம். தானியேல் 10:21-ல் காபிரியேல் தூதன் சத்திய எழுத்திலே கண்டிருப்பதை உனக்கு தெரிவிப்பேன் என்று கூறுகிறார். அதன்படி 11-ஆம் அதிகாரம் மூன்றாம் தரிசனத்தின் விளக்கத்தின் தொடர்ச்சியாகும்.


மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்தில் தானியேல் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றான். அதுவரை பாபிலோனிய ராஜாக்களுக்கு துணைநின்ற தானியேல் இப்பொழுது மேதியனாகிய தரியூவுக்கு துணை நிற்கிறார். அப்பொழுது காபிரியேல் தூதன் வெளிப்பட்டு 'மெய்யான செய்தியை அறிவிப்பேன்'; என்று கூறி நடக்க போகிற காரியங்களை கூறுகிறான்.

தானியேலின் நாள் முதல் அலெக்சாண்டருடைய விழுகை வரை (தானி.11:2-4)

மேதியனாகிய தரியுவிற்கு பின்பு மூன்று  ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள் (கி.மு. 539-331).  தரியுவுக்கு பின்பு அனேக பெர்சிய இராஜாக்கள் எழும்பினாலும்  இந்த மூன்று பேரும் பிரபலமானவர்கள். வேதத்தில் யூதர்களுக்கு நன்மை செய்த மூன்று பெர்சிய இராஜாக்களை குறித்து பார்க்கலாம். முதலாம் இராஜா கோரேஸ். இந்த ராஜாவின் ஆளுகையின் நாட்களில் தான், தேவன் அவருடைய ஆவியை ஏவினதாலே, எருசலேமில் நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட ஆலயத்தை கட்ட செருபாபேல் தலைமையில் யூதர்களை அனுப்பினான். அதன்பின்பு, அர்த்தசஷ்டா என்ற பெர்சிய இராஜாவின் நாட்களில், அவன் நெகேமியாவை அலங்கத்தை கட்ட அனுப்புகிறான். இந்து தேசம் முதல் எத்தியோப்பிய தேசம் வரைக்கும் ஆண்ட அகாஸ்வேரு என்ற பெர்சிய ராஜாவின் காலத்தில் எஸ்தர் ராஜாத்தியாக காணப்பட்டார்;. அவனுடைய ஆட்சியிலும் யூதர்கள் வாழ்ந்திருந்தார்கள். அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஜசுவரிய சம்பன்னன். அவன் பெயர் ஓநசஒநள. அந்நாட்களில் எட்டு லட்சம் இராணுவ வீரர்களை வைத்திருந்தான். 200 கப்பல்களை வைத்திருந்தான். அவன் தன் ஜசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் தன் சகல ராணுவத்தையும் எழுப்பிவிட்டான்;. ஆனால் கிரேக்க தேசத்தில் பராக்கிரமமுள்ள ராஜாவாகிய  மகா அலெக்சாண்டர் எழும்பி, பெர்சிய ராஜாவை தோற்கடித்து, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடிசெய்கிறவானாக காணப்படுவான். அலெக்சாண்டருக்கு பின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும். ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல,  அவனுடையவர்களால்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம், என்று தூதன் கூறுகிறார். அப்படியே சம்பவித்தது. 
அலெக்சாண்டருடைய முடிவு பரிதாபம். அவன் 33-ஆம் வயதில் மரித்துபோனான். அவன் மரணத்திற்கு பின்பு, அவனுடைய ஒரு மனைவி ஸ்டேட்டிரா (ளுவயவசைய) மற்றொரு மனைவியாகிய ரோக்சானா (சுழஒயயெ) மூலம் கொலை செய்யப்படுகிறாள். அரியணைக்கு அலெக்சாண்டருடைய சகோதரன் அரிடேயுஸ் (யுசனையநரள) வருகிறான். அவனும் அவன் மனைவியும், அவனுடைய தாயாகிய ஒலிம்பியாஸால் (ழுடலஅpயைள) கொலைசெய்யப்படுகிறார்கள்.  பழிக்குபழியாக ஒரு ராணுவ வீரனால் ஒலிம்பியாஸ் கொலைசெய்யப்படுகிறாள். பின்பு கஸாண்டர் (ஊயளளயனெநச) என்ற மனுஷனுடைய கடடளையால் அலெக்சாண்டருடைய மகனும் (யுடநஒயனெநச யு. நுபரள) அவனுடைய தாயாகிய ரோக்சானாவும் (சுழஒயயெ) கொலைசெய்யப்படுகிறார்கள். இரண்டு வருஷங்களுக்கு பின்பு அவனுடைய மற்றொரு மனைவியாகிய பார்சைன் (டீயசளiநெ) மற்றும் ஹெர்குலஸ் (ர்நசஉரடநள) என்ற மகனும் பாலிஸ்பெர்ஷான் (Pழடலளிநசஉhழn) என்பவனால் கொலைசெய்யப்படுகிறான். 15 வருடங்களுக்குள் அலெக்சாண்டருடைய முழு குடும்பமும் அழிந்துபோகிறது. அரியணைக்கு வாரிசு இல்லாதவனாக மாறுகிறான். பின்பு அவனுடைய ராஜ்யம் அவனுடைய நான்கு இராணுவ தலைவர்களின் கீழ் பிரிந்துபோனது.

தென்திசை ராஜா - வடதிசை ராஜா(தானி.11:5-20)

10ஆம் அதிகாரம் வானமண்டலங்களில் நடக்கிற ஆவிக்குரிய யுத்தங்களைப்பற்றி கூறுகிறது. ஆனால் 11:5-20 வசனங்கள் பூமியில் நடக்கிற 2 ராஜாக்களின் யுத்தங்களைப்பற்றி கூறுகிறது.  2 ராஜாக்களும் அலெக்சாண்டருடைய ராணுவ தளபதிகள். வடதிசை ராஜா தென்றிசை ராஜாவை காட்டிலும் பலவானாயிருப்பான். ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப் பார்க்கிலும் பலவானாகி ஆளுவான். இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.  சில வருஷங்களுக்குப்பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள். அதன்மூலமும் சமாதானம் உணடாவதில்லை. வடதிசை ராஜா தன் யுத்த நாட்களில் சிங்காரமான தேசத்தில்(இஸ்ரவேல் தேசம்) தங்குவான். ஆனாலும் கடைசியில் நாசமடைவான்.

கடைசி வடதிசை ராஜா(தானி.11:21-45)

கடைசியாக எழும்புகிற அவமதிக்கப்பட்ட வடதிசை ராஜாவும், 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சின்னகொம்பும் ஒருவனையே குறிக்கிறது. இரண்டும் அந்திகிறிஸ்துவை குறிக்கிறது. சபை எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு, தோன்றுகிற கடைசி ரோம சக்ரவர்த்தியை குறிக்கிறது.  வரலாற்றில் ஆன்றியோகஸ் எபிபெனஸ் (யுவெழைஉhரள நுpiphயநெரள) என்ற பொல்லாத மனுஷனை குறிக்கிறதாக காணப்பட்டாலும் அந்திகிறிஸ்துவையே குறிக்கிறது. 8-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சின்னகொம்பிற்கும் 11-ஆம் அதிகாரத்தில் உள்ள கடைசி வடதிசை ராஜாவிற்கும் அனேக ஒப்புமைகள் காணப்படுகிறது. துவக்கத்தில் பிரபலமானவனாய் தோன்றுவதில்லை(8:9, 11:21,23). ஆனால் நாட்கள் செல்ல ராஜ்யத்தை கட்டிக்கொள்வான்;;. சுதான மேட்டிமையான வார்த்தைகளை பேசுவான்(8:12,23,25 -  11:21,23-27,32). அதபதிகளுக்கு அதிபதியாக காணப்படுகிற தேவாதி தேவனுக்கு விரோதமான காரியங்களை பேசுவான்(8:10,25 - 11:36). வஞ்சகத்தினால் காரியங்களை கைகூடி வரப்பண்ணுவான். சிங்காரமான தேசத்திற்கு விரோதமாய் எழும்புவான்;(8:9,11:41,45). அனேகரை கொலைசெய்வான்(8:24,25, 11:44). எருசலேம் தேவாலயத்தை தீட்டுபடுத்துவான் (8:11,9:27,11:30,31)  கடைசியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அழிக்கப்படுவான்(8:25, 11:45). அவனுடைய அழிவைப்பற்றி வெளி. 19:11-21 வசனங்கள் மூலம் அறியலாம். 'மிருகமும் கள்ளதீர்க்கதரிசியும் உயிரோடு அக்கினி கடலில் தள்ளப்பட்டார்கள்". அதன்பின்பு ஆயிர வருட அரசாட்சி துவங்கும்.

ஒரு தரிசனம், அதன்மூலம் தானியேல் நாளிலிருந்து, ஆயிரம் வருட அரசாட்சியின் துவக்கம் வரைக்கும் நடக்கிற காரியங்களை அறிந்துகொள்ளும்படி செய்கிறார் தேவன்;. பூமியில் தோன்றுகிற அதிகாரங்கள் எல்லாம் ராஜாதிராஜாவாகிய நம்முடைய தேவனுடைய அதிகாரத்தின் கீழ் காணப்படுகிறது என்பதையும் அறியலாம்.

Pastor. David .T
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.