வேதாகம மொழி மாற்றங்கள்:-

வேதாகம மொழி மாற்றங்கள்:-

யூதர்கள் தங்களுடைய வேதத்தை கி.மு.285இல் கிரேக்க மொழிக்கு மொழியாக்கம் செய்தனர் இதற்க்கு செப்துவஜிந்த் என்று பெயர்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ரோம் மொழி இலத்தீனிலும், எகிப்திய மொழி காப்டிகிலும், சிரியா மொழி சீரியாகிலும் பழைய ஏற்பாடு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.



பல நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்க சபை பிரிவின் தலைமை, தங்கள் போதகர்கள் தவிர மற்றவர்கள் வேதத்தை வாசிந்பது தடை செய்திருந்தது. வேதத்தை கற்க்கவும் மொழி மாற்றம் செய்யவும் முற்ப்பட்ட அநேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

விக்லிஃப் என்பவர் கி.பி.1380இல் புதிய ஏற்பாட்டையும், 1382இல் பழைய ஏற்பாட்டையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

கி.பி.16ஆப் நூற்றாண்டில் டிண்டேல் என்பவர் வேதாகமத்தின் ஆங்கில மொழியாகத்தில் ஈடுபட்டு இரத்த சாட்சியாக மரித்தார். அவரது மொழியாக்கம் பிற்க்கால ஆங்கில வேதாகமத்திற்க்கு அடித்தளமாக அமைந்தது.
புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதியை அவர் மொழியாக்கம் செய்தார்.

அவரது நண்பரர் கவர்டேல் ஆங்கில வேதாகமத்தை கி.பி.1535இல் வெளியிட்டார். இதன் பிறகு தான் பலரால் பயன்படுத்தபட்டு வரும் kjv வெளியிடப்பட்டது.

ஸ்காட்லாந்தின் ஆறாவது ஜேம்ஸ் அரசர் இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் அரசரானார். அவர் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதற்க்கான சிறந்த வல்லுனர்களை நியமித்து, கவனமாக பணி புரிய செய்தார். அதன் பயனாக கி.பி.1611இல் king james Athorised Version வெளியிடப்பட்டது.

கி.பி.1466இல் ஜோகான் மென்றல் என்பவர் வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார். இதுவே உலகின் அச்சிடப்பட்ட முதல் வேதாகமம் ஆகும்.

கி.பி.1521இல் மார்டின் லூதர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் ழொழியில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து 1532இல் பழைய ஏற்பாட்டையும் , 1534இல் தள்ளுபடி ஆகமங்களையும் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார்.


தமிழ் வேதாகம வரலாற்றை தனி கட்டுரையாக விரைவில் தருகிறேன்.




<a data-action="share/whatsapp/share" href="whatsapp://send?text=http://charlesmsk.blogspot.in/2017/06/blog-post_65.html"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifxD2fyphf8Wr9oTAaroJR_SsgECCrQZ7By7YFqxn6xgAP2dnpG5tme8yqzwrOZo0UmG6aWI43o-pepYhwizEFNenfinYdcmIes8j8d4ObZ6emsUXVBWHihmIKrfMdhkBsoCV01Bd4lIE/s1600/Whatsapp-48.png" /></a>

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.