மீனும் கிறிஸ்தவமும்


மீனும் கிறிஸ்தவமும்

மீன் என்பதற்கான கிரேக்க வார்த்தை I-CH-TH-U-S இக்தூஸ் என்பதாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பயங்கரமான பாடுகள் இருத்தன. கிறிஸ்தவர்கள் என்று பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாத நிலை.



இப்படிப்பட்ட சூழ்நிலையில்  ஒருவருக்கொருவர் தங்களை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வண்ணம் கடற்கரையோரம் நின்று கொண்டு பாதி மீனை வரைந்து வைத்து ஒளிந்து கொள்வார்கள். மீதி படத்தை யார் வந்து வரைகிறார்களோ, அவர் கிறிஸ்தவர் என்று புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்வர். அந்த மீன் என்பதற்கான கிரேக்க வார்த்தையில் வரும் ஒவ்வொரு முதல் எழுத்தும் கிறிஸ்துவை அடையாளப்படுத்தும் வண்ணமாக வைத்திருந்தனர். இதை ஆங்கிலத்தில் Acronym என்பார்கள்.


Pr.Davis

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.