ரோமர் 8:28-30 விளக்கம்
view and download pdf file
தேவனுடையத் தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் உலக நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதா? (ரோமர் 8:28)
✍🏻 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு ஏதுவாக
(ரோமர் 8:29)
எவர்கள் முன்குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டுமிருக்கிறார்களோ, அவர்கள் நீதிமான்களாகிறதற்கேதுவாக, எவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள்மகிமைப்படுவதற்கேதுவாக
(ரோமர் 8:30)
✍🏻 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு ஏதுவாக
(ரோமர் 8:29)
எவர்கள் முன்குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டுமிருக்கிறார்களோ, அவர்கள் நீதிமான்களாகிறதற்கேதுவாக, எவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள்மகிமைப்படுவதற்கேதுவாக
(ரோமர் 8:30)
சகலமும் நடக்கிறது!
இங்கு சகலமும் என்னப்படுவது என்னவென்றால்:
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிடுவது.
் (ரோமர் 8:35)
உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம், பட்டயம்
(ரோமர் 8:36)
மரணம், ஜீவன், தேவதூதர்கள், அதிகாரங்கள், வல்லமைகள் நிகழ்காரியங்கள், வருங்காரியங்கள்.
(ரோமர் 8:38)
உயர்வு, தாழ்வு, மற்ற எந்த சிருஷ்டியும்
(ரோமர் 8:39) ஆகும்.
இவைகளால் உண்டாகும் நன்மைகள்:
கிறிஸ்துவுடனேகூடப் பாடுபடுவதால்,
்அவருடனேகூட மகிமைப்படுவோம்.
(ரோமர் 8:17)
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். (ரோமர் 8:37)
நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பில் உறுதிப்படுகிறோம். (ரோமர் 8:39)
ஆகவே,
தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் உலகப்பிரகாரமான
(இம்மைக்குரிய) நன்மைக்குஏதுவாக அல்லாமல், (மறுமைக்குரிய) நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28).
- போதகர்.
க.காட்சன் வின்சென்ட்.
