👉🏾 இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
(ரோமர் 8:27) என்பதின் பொருள் என்ன?
✍🏻 ஒரு கிறிஸ்தவன் இரண்டு நிலைகளில் ஜெபிக்க வாய்ப்பு உண்டு.
1⃣ தன் சுய ஆவியில் ஜெபிப்பது.
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
யாக்கோபு 4:3
2⃣ தேவ ஆவியில் ஜெபிப்பது.
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.
எபேசியர் 6:18
நாம் வேண்டிக்கொள்ளும்போது, நம் சுய ஆவியால் நடத்தப்படுகிறோமா? அல்லது தேவ ஆவியால் நடத்தப்படுகிறோமா என்பதை தேவன் அறிவார்!
தேவ ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறதுப்போல(1 கொரி.2:10)
ஆவியின் சிந்தை இன்னதென்று தேவனும் அறிவார்.
(ரோமர் 8:27)
தேவ ஆவியானவரால் தூண்டப்பட்டு ஜெபிக்கிற ஜெபங்களுக்கு மட்டுமே தேவன் செவிகொடுப்பார்!
நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் பாதிப்படையாதபடிக்கு, நமக்கு எவைகள் அவசியம்? அவசியமில்லை என்பதை ஆவியானவரே அறிவார்!
எவைகளைக் கேட்டால் தேவன் பிரியப்படுவார். பதில் தருவார் என்பதை தேவ ஆவியானவரே அறிவார்!
குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, நாம் எதைக் கேட்கவேண்டும் என்பது ஆவியானவருக்கு
தெரியும்!
(யோவான் 14:13)
நாம் தேவனுடைய சித்தத்தின்படி எவைகளைக் கேட்கவேண்டும்
்என்று (1 யோவ.5:14)
நமக்கு ஆவியானவர்தான் சொல்லித்தர முடியும்!
ஆகவே, நாம் எவ்வளவு நேரம், எவ்வளவு அலங்காரமான வார்த்தைகளுடன், எதற்காக வேண்டிக்கொண்டாலும்; அதில், ஆவியானவரின் விருப்பம் எது, நமது சுயவிருப்பம் எது என்பதை தேவன் அறிவார்!
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
ரோமர் 8:5
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
ரோமர் 8:16
தேவ ஆவயானவரோடு இசைந்து நிற்காத, நமது சுய ஆவியினால் ஏறெருக்கப்படும் வேண்டுதல்களுக்கு, தேவனிடத்திலிருந்து பதில் வருவதில்லை!
❌ மீறி வந்தால், அது தேவனிடத்திலிருந்து இருக்க வாய்ப்பு இல்லை!
- போதகர்.
க. காட்சன் வின்சென்ட்.
