28. ஓசியா
அ) பின்னணி:
ஆசிரியர்: ஓசியா
காலம்: ஏறக்குறைய கி.மு.760 - 723 - இரண்டாம் யெரோபெயாம் ஆட்சி (ஓசியா: 1:1)
எந்நிலையில் எழுதப்பட்டது:
ராஜாவாகிய இரண்டாம் யெரோபெயாம் முதல், கடைசி இராஜாவாகிய ஓசியா வரையிலான ராஜாக்களின் ஆட்சி காலங்களில், விக்கிரக ஆராதனையிலும், விபச்சாரத்திலும் ஈடுபட்ட உண்மையில்லாத இஸ்ரவேல் ஜனங்களின் மீது தேவன் தம் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஓசியாவின் மூலம் பேசினார். ஓசியா இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தினுடைய கடைசி தலைமுறையின் தீர்க்கதரிசி என்பது குறிப்பிடத்தக்கது. (2இராஜாக்கள்: 14:23 - 20:21).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஓசியா”
எபிரேயு: “ஓஷியா” (Hoshea) “இரட்சிப்பு”
கிரேக்கு: “ஓசி” (Osee) “ஓசியா”
கருப்பொருள்:
மனஸ்தாபங்கொண்டுள்ள தம்முடைய “மனைவி” திரும்ப வீட்டிற்கு வரவேண்டுமென்று பொறுமையுடன் காத்திருக்கும் ஒரு அன்பின் தேவனிடம் வாருங்கள்.
நோக்கம்:
தம்மைவிட்டு வழிவிலகிப்போன இஸ்ரவேல் மக்களைத் தம்முடைய வழிகளுக்குத் திருப்பும்படி விடாது அழைக்கும் தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும் எடுத்துக்காட்டி பறைசாற்றுவது.
முக்கியவசனம்: ஓசியா: 14:1 - “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.”
29. யோவேல்
அ) பின்னணி:
ஆசிரியர்: யோவேல்
காலம்: உறுதியாகத் தெரியவில்லை கி.மு.835 முதல் 500 வரை
எப்போது எழுதப்பட்டது:
வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட நான்கு மடங்கான அழிவும், பஞ்சமும், தேவனுடைய மக்களின் தலைவர்கள் ஜெபத்திற்காகவும், உபவாசத்திற்காகவும், மனந்திரும்புதலுக்காகவும் ஒன்று கூடும்படி ஒரு தீர்க்கதரிசன அழைப்பை விடுக்கின்றன.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “யோவேல்”
எபிரேயு: “யோவேல்” (Yoel) “தேவன் யாவேயானவர்”
கிரேக்கு: லோயேல் (Loel) “யோவேல்”
கருப்பொருள்: வெட்டுக்கிளிகளின் கொள்ளையினால் ஏற்ப்பட்ட அழிவிலிருந்து மனந்திரும்புதலின் வாயிலாக விடுதலை
நோக்கம்: கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தை மீட்டு, கர்த்தருடைய நாளில் தேசங்களை நியாயந்தீர்ப்பதற்காக, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்று ஆவிக்குரிய தலைவர்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கும்படி அவர்களை அறிவுறுத்துதல்.
முக்கிய வசனம்: யோவேல்: 2:25,26 - “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் ... என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.”
30. ஆமோஸ்
அ) பின்னணி:
ஆசிரியர்: ஆமோஸ் (யூதாவிலுள்ள தெக்கோவாவிலிருந்து)
காலம்: ஏறக்குறைய கி.மு.760 - 750 வரை. இரண்டாம் யெரோபெயாம் ஆட்சி.
எந்நிலையில் எழுதப்பட்டது:
இரண்டாம் யெரோபெயாமின் ஆட்சி காலத்திலிருந்த மிகுதியான செழிப்பும், ஆவிக்குரிய சோர்வும், பெருமை, சுயநலம், பேராசை, அடக்குமுறை மற்றும் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றிற்கு வழி நடத்தியது; எனவே, தேவன் ஆமோஸின் மூலமாக மனந்திரும்புதலின் அழைப்பை விடுத்தார். (2இராஜாக்கள்: 14:23-15:7; 2நாளாகமம்: 26 ம் அதிகாரம் பார்க்கவும்.)
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: ஆமோஸ்
எபிரேயு: “ஆமோஸ்” (Amos) “பாரம், பாரம் சுமப்பவர்”
கிரேக்கு: “ஆமோஸ்” (Amos) “ஆமோஸ்”
கருப்பொருள்:
தேவனுடைய உடன்படிக்கையைக் காத்துக் கொள்ளத் தவறிய இஸ்ரவேலுக்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பின் பாரம்.
நோக்கம்:
தேவனுக்கு உண்மையற்றவர்களாய் இஸ்ரவேல் நடப்பித்த சமுதாய மற்றும் ஆவிக்குரிய பாவங்களின் விளைவாக அத்தேசத்திற்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்தல்.
முக்கிய வசனம்: ஆமோஸ்: 8:11 - “இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமுமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கா்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்.”
31. ஒபதியா
அ) பின்னணி:
ஆசிரியர்: ஒபதியா
காலம்: உறுதியாக அறியப்படவில்லை. ஒருவேளை கி.மு.586 க்குப் பிறகு இருக்கலாம்.
எப்போது எழுதப்பட்டது:
இப்புத்தகம் எருசலேம் வீழ்ச்சியடைந்த காலத்தை (கி.மு.586) சோ்ந்ததாக இருக்குமென்றால், பாபிலோனியா்கள் யூதாவை முறியடிக்கும்படி, அவர்களுக்கு ஏதோமியர்கள் அளித்த தவறான, சூழ்ச்சியான உதவியின் காரணமாக இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: ஒபதியா
எபிரேயு: ஒபதியா (Obedya) “தேவனுடைய ஊழியன்”
கிரேக்கு: “ஒப்படியு” (Obdiou) “ஒபதியா”
கருப்பொருள்:
ஏதோமின் பெருமை அதனுடைய வீழ்ச்சிக்கும், நியாயத்தீர்ப்புக்கும் காரணமானது. ஏனெனில், அது, தான் விதைத்தை அறுத்தது.
நோக்கம்:
இஸ்ரவேல் தேசத்திற்கு தொடர்ந்து “சரீரத்தின் முள்ளாக” இருந்த ஏதோமின் மீது வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் காரணத்தையும், தன்மையையும் ஆராய்தல்.
முக்கியவசனம்:
ஒபதியா: வசனம் 3 - “கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம் போக்குகிறது.”
32. யோனா
அ) பின்னணி:
ஆசிரியர்: யோனா
காலத்தின் தேவை:
நினிவேயினுடைய பாவத்தின் காரணமாகஅப்பட்டணத்திற்கு அளிக்கப்படவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பை அவர்கள் புற ஜாதிகளாக இருப்பதால் தடுக்க முடியுமென்றாலும், அவர்களுக்கு மனந்திரும்புதலை போதிக்கும்படி தேவன் ஒரு தீர்க்கதரிசியை அழைத்தார். நினிவேயின் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட “இயற்கை அழிவுகளின்” (கி.மு.765 மற்றும் 759 ல் ஏற்பட்ட கொள்ளை நோய்கள்; கி.மு.763 ல் ஏற்பட்ட சூரிய கிரகணம்) காரணமாக, யோனாவின் மூலம் தேவனால் அளிக்கப்பட்ட செய்தியைக் கேட்பதற்கு “ஆயத்தமாக இருந்தார்கள்”.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “யோனா”
எபிரேயு: “ஜோனா” (Jonah) “புறா”
கிரேக்கு: “ஜோனாஸ்” (Jonas) “யோனா”
கருப்பொருள்: மனந்திருமபிய புறஜாதி தேசங்களிடம் தேவன் பாராட்டிய எலலையில்லாத இரக்கம்.
நோக்கம்:
புறஜாதிகளிடம் தேவன் காண்பித்த அன்பிற்கும், இரக்கத்திற்கும் மாறாக, குறுகிய சிந்தையுள்ள ஒரு யூத தீர்க்கதரிசியின் அறியாமையையும், தவறான எண்ணத்தையும் எடுத்தக்காட்டுதல்.
முக்கியவசனம்:
யோனா: 4:2 - “...இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷிசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.” (அநீதிக்கான நியாயத்தீர்ப்பை அளிப்பதன் மூலம் தீங்கு செய்வதைக் குறித்து துயரப்படுகிறவர்).
33. மீகா
அ) பின்னணி:
ஆசிரியர்: மீகா
காலம்: யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியில் (மீகா: 1:1) ஏறக்குறைய கி.மு.735 - 700வரை.
எப்போது எழுதப்பட்டது:
பின்னணியில், மீகாவின் காலத்தைச் சோ்ந்த ஏசாயாவின் பின்னணியைப் போன்றது. ஏசாயா அரசியல் சார்ந்த தீங்குகளைக் குறித்த கரிசனை கொண்டிருந்தார்; மீகா ஆவிக்குரிய மற்றும் சமுதாய தீச்செயல் குறித்து கரிசனை கொண்டிருந்தார்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: மீகா
எபிரேயு: “மிக்காயாகூ” (Mekayahu) “தேவனைப் போன்றவர்” (மீகா: 7:18-20)
கிரேக்கு: “மிகையாஸ்” (Michaias) “மீகா”
கருப்பொருள்: தேவனுடைய நீதி மற்றும் சர்வ வல்லமையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய சீர்திருத்தம் மற்றும் தனிப்பட்ட நீதி.
நோக்கம்:
யூதாவிலுள்ள தேவனுடைய மக்கள் தேவனிடம் காண்பித்த மாறுபாட்டைக் குறிப்பிட்டு, அவர்கள் தனிநபர்களாகவும், ஒரு தேசமாகவும் மனந்திரும்பி, கர்த்தரிடம் திரும்பும்படி அவர்களுக்காக பரிந்து பேசுதல்.
முக்கியவசனம்: மீகா: 6:8 - “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்”
34. நாகூம்
அ) பினினணி:
ஆசிரியர்: “நாகூம்”
காலம்: ஏறக்குறைய கி.மு.660-630
எந்நிலையில் எழுதப்பட்டது:
கி.மு.627அசர்பனிபலின் மரணத்திற்கு பின்பு, கி.மு.626 ல் பாபிலோன் தன்னுடைய சுதந்தரத்தை நிலைநாட்டி, இறுதியாக மேதியருடன் சோ்ந்து அசீரியாவைத் தாக்கி, கி.மு.612 ல் அசீரியாவின் தலைநகரான நினிவேயை முற்றுகையிட்டபோது, அசீரியாவின் சாம்ராஜ்யம் தன்னுடைய முடிவைச் சந்தித்தபோது எழுதப்பட்டது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நாகூம்”
எபிரேயு: “நாகூம்” (Nahum) “தேறுதல், ஆறுதல்”
கிரேக்கு: “நாவோம்” (Naoum) “நாகூம்”
கருப்பொருள்: யூதாவுக்கான ஆறுதல் மற்றும் நினிவேயின் யுத்த மனப்பான்மைக்கான நியாயத்தீர்ப்பு.
நோக்கம்:
நினிவேயின் முற்றுகையையும் மற்றும் எருசலேமின் கொடிய அநீதியினாலும், கடுமையினாலும் ஏற்பட்ட அழிவையும், குறித்து எச்சரித்தல்.
முக்கியவசனம்:
நாகூம்: 1:7,8 - “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டு வருகிற வெள்ளத்தினால் சர்வகாரம் பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின் தொடரும்.”
35. ஆபகூக்
அ) பின்னணி:
ஆசிரியர்: ஆபகூக்
காலம்: கி.மு.605-598
எந்நிலையில் எழுதப்பட்டது:
யோயாக்கீம் ராஜாவாயிருந்த காலத்தில், யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் முதல் தொகுதியினர் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அநீதி நிறைந்த மக்களின் கரங்களால் நீதிமான்கள் அனுபவிக்கும் துன்பத்தின் பிரச்சினையைக் குறித்து ஆபகூக் தீர்க்கதரிசி விவாதிக்கிறார்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஆபகூக்”
எபிரேயு: “ஆபகூக்” (Habakkuk) “அணைத்தல்”
கிரேக்கு: “அம்பாகவோம்” (Ambakoum) “ஆபகூக்”
கருப்பொருள்:
தேவனுடைய மக்கள் அநீதி நிறைந்த ஒரு தேசத்தினால் கொடுமைப்படுத்தப்படும்போது, அவர்கள் தேவனுடைய இரக்கத்திலும் நீதியிலும், விசுவாசம் கொள்ளச் செய்தல்.
நோக்கம்:
தேவனுடைய மக்கள் தேவனை விசுவாசிப்பதற்காக, அவருடைய நியாயத்தீர்ப்பு மற்றும் அழைப்பின் வழிகளை வெளிப்படுத்துதல்.
முக்கிய வசனம்:
ஆபகூக்: 2:3,4 - “குறித்த காலத்தக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.”
36. செப்பனியா
அ) பின்னணி:
ஆசிரியர்: செப்பனியா (எசேக்கியா ராஜாவின் பேரனுடைய மகன்)
காலம்: ஏறக்குறைய கி.மு.640-620 (ஏசாயா மற்றும் மீகாவிற்குப் பிறகு யூதாவின் முதல் தீர்க்கதரிசி)
எப்போது எழுதப்பட்டது:
தீய எண்ணம் படைத்த மனாசே மற்றும் ஆமோனின் ஆட்சி காலங்களில், மேற்கு யூதா மற்றும் பெலிஸ்திய தேசங்கள் சீத்தியர்களால் தாக்கப்படக்கூடிய அச்சுறுத்தல், மனந்திரும்புதலின் ஒரு அழைப்பிற்குக் காரணமாயிருந்திருக்கக் கூடும்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “செப்பனியா”
எபிரேயு: “செப்பனியா” (Sepanya) “தேவன் மறைத்து வைக்கிறார்”
கிரேக்கு: “சோபோநியாஸ்” (Sophonias) “செப்பனியா”
கருப்பொருள்:
தங்களைத் தாழ்த்தி, நீதியைத் தேடும் மக்களை கோபாக்கினையின்போது பாதுகாப்புடன் மறைத்து வைக்கும் தேவனுடைய இரக்கம்.
நோக்கம்:
நியாயத்தீர்ப்பின் கோபாக்கினையில் கர்த்தருடைய இரக்கத்தைத் தேடும்படி தாழ்மையுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தல்.
முக்கியவசனம்:
செப்பனியா: 2:3 - “தேசத்திலுள்ள எல்லா சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்”
37. ஆகாய்
அ) பின்னணி:
ஆசிரியர்: ஆகாய்
காலம்: ஏறக்குறைய கி.மு.520
எந்நிலையில் எழுதப்பட்டது:
செருபாபேல் மற்றும் ஆகாயின் கீழ் நாடு கடத்தப்பட்டவர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பினபோது, ஆலயத்தைத் திரும்பக் கட்டாதபடி, புறம்பான எதிர்ப்புகளும் உள்ளான நெருக்கங்களும் அவர்களைத் தடுத்தன. எனவே, ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி ஆகாய் மக்களை ஊக்குவிக்கிறார்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: ஆகாய்
எபிரேயு: “ஹாகாய்” (Haggai) “பண்டிகை”
கிரேக்கு: “அகாயோஸ்” (Aggaios) “ஆகாய்”
கருப்பொருள்: ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்
நோக்கம்:
தேசத்திற்கு திரும்பியவுடன் நாடு கடத்தப்பட்டவர்கள் ஆலயத்தைக் கட்டத் துவங்கும்படி அவர்களைத்தூண்டுதல், ஏனெனில், ஆலயத்தைக் கட்டும் பணியில் தேவன் அவர்களோடிருப்பார் என்று ஆறுதல் கூறுதல்.
முக்கியவசனம்:
ஆகாய்: 2:4,5 - “வேலையை நடத்துங்கள், நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லகிறார். நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கையை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலை கொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்”
38. சகரியா
அ) பின்னணி:
ஆசிரியர்: சகரியா
காலம்: ஏறக்குறைய கி.மு.520-515
எப்போது எழுதப்பட்டது:
செருபாபேல் மற்றும் ஆகாயின் கீழ் ஆலயம் கட்டப்பட்டது. வரவிருக்கும் மேசியாவின் காலத்தையும், தேவனுடைய ஆட்சி நிறைவுபெறும் காலத்தையும் குறித்த வெளிப்பாட்டை சகரியாவிற்கு அளித்தது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: சகரியா
எபிரேயு: “சகரியா” (Zechariah) “தேவன் நினைவு கூறுகிறார்”
கிரேக்கு: “சகரியாஸ்” (Zacharias) “சகரியா”
கருப்பொருள்:
தேவனுடைய பராமரிப்பையும், இஸ்ரவேலின் இறுதி வெற்றியையும் குறித்து மீதியானவர்களுக்கு மீண்டுமாக உறுதியளித்தல்.
நோக்கம்:
செருபாபேலின் கீழ் தொடர்ந்து நடைபெறும் ஆலயக்கட்டுமான வேலையை ஊக்குவித்தல்; முடிவான வெற்றியை அடையவும் எதிர்பார்ப்போடு, கர்த்தருக்காக நீதியுள்ள வாழ்க்கை வாழும்படி ஊக்குவித்தல்.
முக்கியவசனம்:
சகரியா: 8:3 - “யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்தது போலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.”
39. மல்கியா
அ) பின்னணி:
ஆசிரியர்: மல்கியா (இப்பெயரின் பொருள் “தூதுவர்” என்பதால், இப்புத்தகத்தின் ஆசிரியர் மல்கியாவல்ல என்று சிலர் உணர்கிறார்கள்.
காலம்: ஏறக்குறைய கி.மு.433-420
எந்நிலையில் எழுதப்பட்டது:
தேவனுடைய மக்கள் தங்களுடைய மன உறுதியின்மை மற்றும் சோர்வின் காரணமாக, அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிவது பயனற்றது என்று கூறி , முறுமுறுத்துக் கொண்டு அவர் கட்டளைகளை கைக் கொண்டனர். அவருடைய அன்பை சந்தேகித்தனர். அப்போது இது எழுதப்பட்டது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: மல்கியா
எபிரேயு: “மலாகையா” () “என்னுடைய தூதுவன்”
கிரேக்கு: “மலாகையாஸ்” () “மல்கியா”
கருப்பொருள்: பாசுத்தமான வாழ்க்கை வாழுவதன் மூலம், தேவனிடம் நிச்சயத்தோடும், உண்மையோடும் திரும்புதல்.
நோக்கம்:
ஆராதனையில் தூய்மை, வாழ்க்கையில் பரிசுத்தம் மற்றும் கொடுப்பதில் உதாரத்துவம் ஆகியவற்றிடம் தேவனுடைய மக்கள் மீண்டும் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தல்.
முக்கியவசனம்:
மல்கியா: 3:7 - “நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக் கொள்ளாமல், அவைகளை விட்டு விலகிப் போனீர்கள்; என்னிடத்திற்கு திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்கு திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
பழைய ஏற்பாடு - சுருக்கமான தொகுப்பு
தெய்வீக வெளிப்பாடு:
அ) பொதுவானவை: (ஆதியாகமம்: 1:11)தெய்வீக வெளிப்பாடு:
1. சிருஷ்டிப்பின் மூலமாக (புறம்பானது; ரோமர்: 1:18-21 பார்க்கவும்)
2. மனசாட்சியின் மூலமாக (உள்ளானது; ரோமர்: 2:12-16 பார்க்கவும்)
ஆ) விசேஷித்தவை: (ஆதியாகமம்: 12 - மல்கியா: 4)
1. உடன்படிக்கையின் மூலமாக:
- “நான் உங்கள் தேவனாயிருப்பேன்”
- “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”
- “நான் உங்களில் வாசமாயிருப்பேன்”
2. கட்டளையின் மூலமாக:
1. தீர்க்கதரிசிகளால் - தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துதல்
2. ஆசாரியர்களால் - தேவனுடைய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டுதல்
3. ராஜாக்களால் - தேவனுடைய பிரதிநிதிகளாக ஆளுகை செய்தல்
மனிதனுடைய மறுமொழி:
(நியாயாதிபதிகள் - எஸ்தர், ஏசாயா - மல்கியா)
1. ஆவிக்குரிய - விக்கிரக ஆராதனை (“நீர் எங்களுடைய தேவனில்லை” ... பல தெய்வ வழிபாடு)(நியாயாதிபதிகள் - எஸ்தர், ஏசாயா - மல்கியா)
2. தனிப்பட்டது - ஒழுக்கமின்மை, முரண்பாடு (“நாங்கள் உம்முடைய ஜனங்களாக இருப்பதில்லை” ... பல மனைவிகள்)
3. சமுதாயத்திற்குரியது - நோ்மையின்மை மற்றும் ஒழுக்கச் சீர்கேடு (“நீர் எங்களில் வாசமாயிருப்பதில்லை” ... பல பாவங்கள், துயரங்கள்)
வாக்களிக்கப்பட்ட நம்பிக்கை:
1. உன்னதமான தீர்க்கதரிசி - பரலோகத்தின் மனுஷகுமாரன் (உபாகமம்: 18:15-18; தானியேல்: 7:13,14)2. பரிபூரணமான ஆசாரியர் - பாடனுபவிக்கும் ஓர் ஊழியர் (ஏசாயா: 9:6,7; 11:1-5 )
பழைய ஏற்பாடு 39 புத்தகங்களின் சுருக்கமான விளக்கம் முடிந்தது. அடுத்தது புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களின் சுருக்கமான விளக்கம் குறித்து பார்க்கப் போகிறோம். வாசித்து வரும் நமது உறவுகள் தொடர்ந்து வாசிக்கும்படி அன்புடன் கேட்கிறேன்.
“வேதாகமத்தின் மொத்த பொருள் இயேசு; அதன் திரண்டக் கருத்து இயேசுவே”
ஆதியாகமத்தில் இயேசு - “ஸ்திரியின் வித்து”யாத்திராகமத்தில் இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”
லேவியராகமத்தில் இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”
எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”
உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி”
யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி”
நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா”
ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்”
சாமுவேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்”
ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்”
எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்”
யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்”
சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்”
நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை”
பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்”
உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்”
ஏசாயாவில் இயேசு - “அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்”
எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்”
புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்”
எசேக்கியேலில் இயேசு - “அரசரும், ஆசாரியரும்”
தானியேலில் இயேசு - “மேசியாவும், அரசரும்”
ஓசியாவில் இயேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்”
யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்”
ஆமோஸில் இயேசு - ““கடிந்து மீட்டுக்கொள்பவர்”
ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி”
யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி
மீகாவில் இயேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா”
நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்”
ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்”
செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்”
ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை”
சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்”
மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்”
புதிய ஏற்பாட்டில்...
மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்”
மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்”
லூக்காவில் இயேசு - “மன்னிக்கும் எஜமானர்”
யோவானில் இயேசு - “சிருஷ்டிகர், இரட்சகர்”
அப்போஸ்தலரில் இயேசு - “பரமேறிய பிதா”
ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி”
1கொரிந்தியரில் இயேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை”
2கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு”
கலாத்தியரில் இயேசு - “இரட்சிக்கும் கிருபை”
எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்”
பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை”
கொலோசெயரில் இயேசு - “முதற்பலனானவர்”
1தெசலோனிக்கேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி”
2தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்”
1தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்”
தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை”
பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்”
1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி”
2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி”
யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை”
யூதாவில் இயேசு - “இரட்சகரான தேவன்”
வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற இராஜாதி ராஜா”
யூதர்களின் வாயிலாக...
பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு) என்பது தேவன் ஆபிரகாமுக்கு முன்பும் (ஆதியாகமம்: 6:18), ஆபிரகாமின் நாட்களிலும், சீனாய் மலையின் அடிவாரத்தில் மோசேயின் மூலமாகவும், இஸ்ரவேலுடன் செய்த உடன்படிக்கை பழைய உடன்படிக்கை ஆகும்.இந்த உடன்படிக்கையின் மூலம் தேவன் இஸ்ரவேல் மக்களுடன் சிறப்பான தொடர்பு கொண்டிருந்தார். இஸ்ரவேலர் ஒரு புது உடன்படிக்கையை நம்பி எதிர்பார்த்து இருந்தார்கள். (எரேமியா: 31:31-34; மத்தேயு: 26:28).
இப் புது உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது. 1கொரிந்தியர்: 11:25 ல் அப்போஸ்தலனாகிய பவுல் பழைய - புதிய உடன்படிக்கையைக் குறித்து எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார்.
பழைய, புதிய உடன்படிக்கைகளுக்கிடையுயேள்ள வேறுபாட்டை எபிரேய நிருப ஆக்கியோன் குறிப்பிடுகிறார். (எபிரேயு: 8:13).
யூதர்கள் இதுகாறும் பயன்படுத்தி வரும் அதே பழைய ஏற்பாட்டு ஆகமங்களைத்தான் கிறிஸ்தவர்களும், பழைய ஏற்பாட்டு ஆகமங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மோசேயின் காலத்திலிருந்து இதுவரை யூதர்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்ட அதே வேதாகமங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்காலம் நமது கையிலிருக்கும் பழைய ஏற்பாட்டு வேதாகமம், மூலமொழியாகிய எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும்.
பின்னர் கி.மு.2 ம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் திருத்தப்பட்ட பழைய ஏற்பாட்டு ஆகமங்களோடு சில தள்ளுபடி ஆகமங்களும் சோ்த்து இணைக்கப்பட்டன. ஆனால் அந்த தள்ளுபடி ஆகமம் பண்டைய காலத்திலிருந்து யூதர்கள் பயன்படுத்தி வந்த எபிரேய மொழியில் எழுதப்பட்டது. இருப்பினும், அது பழைய ஏற்பாட்டு வேதாகமத்தில் ஒருக்காலும் இடம் பெற்றதே இல்லை. யூதர்கள் தள்ளுபடி ஆகமத்தை ஒருக்காலும் பரிசுத்த சத்திய வேதாகமாக கருதவில்லை. அவை எக்காலத்திலும் தள்ளுபடி ஆகமங்களாகவே யூதர்களால் தள்ளப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, இப்பொழுது நமது கையில் இருக்கும் வேதாகமம் நம் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட அசல் பரிசுத்த வேதாகமம்.
பழைய ஏற்பாடு தரும் யூத வரலாற்றுக்கும், உலக வரலாறு தரும் யூத வரலாற்றுக்கும் முழு ஒற்றுமை உண்டு. எள்ளளவும் வேற்றுமையில்லை. தொல்பொருள் ஆராய்ச்சி தரும் தகவல், பழைய ஏற்பாடு தரும் தகவலோடு பரிபூரணமாய் ஒத்துள்ளது; இம்மியளவும் வேறுபாடு இல்லை.
பழைய ஏற்பாட்டு வரலாறும், யூதர்களின் வரலாறும் ஒன்றாகவே திகழ்கிறது. எனவே, பழைய ஏற்பாட்டு வரலாறு மாந்தரின் நம்பிக்கைக்குரியது. நாம் அதை பரிபூரணமாய் நம்பி பற்றிக் கொள்ள வேண்டும்.
யூதர்கள் எதிர்பார்த்து இருந்த மேசியாதான் உலக இரட்சகர் இயேசு. யூதர்களின் வழியாகவே உலகத்திற்கு இரட்சிப்பு (மீட்பு) வந்துள்ளது. யூத குலத்தில் வந்துதித்த இறைவன் இயேசு இரட்சகரே இவ்வையகத்து இரட்சகராவார்.
பழைய ஏற்பாட்டு மேசியாவாகிய கிறிஸ்துவின் வருகையைப் புதிய ஏற்பாடு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. (யோவான்: 5:38). அந்த மேசியா மூலம் அடையும் இரட்சிப்பின் மார்க்கத்தை பழைய ஏற்பாடு போதிக்கிறது. (ரோமர்: 3:21; 2தீமோத்தேயு: 3:15).
கிறிஸ்து தாமே பழைய ஏற்பாட்டை உபயோகித்தார். அப்போஸ்தலரும் பழைய ஏற்பாட்டை பயன்படுத்தினர்.
ஒரே பொருள்
இறைவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் படம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் ஆகமம் வரை, இந்த 66 ஆகமங்களில் வரையப்பட்டு இருப்பதைக் காணலாம். இந்த பரிசுத்த வேதாகமம் முழுவதும் இயேசு என்னும் ஒரே ஆளை படம் பிடித்துக் காட்டுகிறது.இயேசு தான் வேதாகமத்தின் திறவு கோல்; இயேசு தான் வேதாகமத்தின் வரலாறு; இயேசுதான் வேதாகமத்தின் ஒரே ஒப்பற்ற பொருள்; இயேசு தான் வேதாகமத்தின் நடுமையப் பொருள்; இயேசுதான் வேதாகமத்தின் உயிர்துடிப்பு.
புதிய ஏற்பாட்டு பின்னணியை விளங்கிக் கொள்ள...
புதிய ஏற்பாட்டை விளங்கிக் கொள்ள அதன் பினனணியை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்த பின்னணியம் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியாவுக்கும், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமாகிய மத்தேயுவுக்கும் இடைப்பட்ட சுமார் 400 ஆண்டு கால சரித்திர பின்னணியமாகும். இதை இடைப்பட்ட காலம் என்று கூறலாம்.புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை கற்றுக் கொள்ளுமுன் இந்த பின்னணியங்களை சுருக்கமாக காண்போம்:
பழைய ஏற்பாடு தரும் கடைசி சரித்திரக் குறிப்புகள்...
எஸ்றா, நெகேமியா பழைய ஏற்பாட்டின் கடைசி சரித்திரப் புத்தகங்களாகும். அவை யூத மக்களைக் குறித்த கீழ்க்காணும் சரித்திரக் குறிப்புகளோடு முடிவடைகின்றன.- கி.மு.537 வரை உலக வல்லரசாய் விளங்கிய பாபிலோன் பேரரசை பொ்சிய மன்னனாகிய கோரேசு முறியடித்து மேதிய - பொ்சிய பேரரசு உலக வல்லரசாய் மாற வகை செய்தான். அதன் மூலம் பாபிலோனில் சிறையிருந்த யூதர் கி.மு.536 ல் எருசலேமுக்குத் திரும்பி வந்து தேவாலயத்தைக் கட்டினர். கோரேஸ் மன்னன் இதற்கு அனுகூலமாயிருந்தான். இந்த சரித்திரக் குறிப்புகளை எஸ்றா : 1 - 6 அதிகாரங்களிலும் ஆகாய் மற்றும் சகரியா புத்தகங்களிலும் வாசிக்கிறோம்.
- எஸ்றா கி.மு.457 ல் எருசலேமுக்குத் திரும்பி வந்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதருக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்தான். (எஸ்றா: 7 - 10 அதிகாரங்கள்).
- கி.மு.445 ல் நெகேமியா எருசலேமுக்கு வந்து முன்பு நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட எருசலேமின் மதில்களை பழுது பார்த்துக் கட்டினான். இதைத் தொடர்ந்த காலத்தில் மல்கியா தீர்க்கதரிசி மார்க்க சீர்திருத்த செய்திகளைக் கொடுத்தான். (இக் குறிப்புகளை நெகேமியா மற்றும் மல்கியா புத்தகங்களில் வாசிக்கலாம்)
மனதில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
சிறைப்பட்டுச் சென்ற யூதர்கள், தாங்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட்ட போதிலும், மேதிய - பொ்சிய ஆட்சிக் காலத்தில் அனைத்த யூதர்களும் யூதாவுக்கு திரும்பி வரவில்லை. செருபாபேல், எஸ்றா, நெகேமியா ஆகியோர் வெவ்வேறு காலக் கட்டங்களில் (கி.மு.536,457,445) யூதாவுக்குத் திரும்பி வந்த போது அவர்களுடன் ஒரு சிலரே திரும்பி வந்தனர்.70 ஆண்டுகால சிறையிருப்பு கி.மு.536 ல் முடிவடைந்து விட்டபடியால், பல யூதர் பாபிலோனிலேயே தங்கி விட்டனர். பிறர், மேதிய-பொ்சிய ஆளுகைக்குட்பட்ட பல தேசங்களுக்கும் சிதறிச் சென்றனர். இவர்களையும், பின்பு கி.பி. 70 ம் ஆண்டில் எருசலேம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதறிச் சென்ற யூதரையுமே “சிதறியிருக்கிற 12 கோத்திரங்கள்” என அழைக்கிறோம்.
மேற்கண்ட சரித்திர சம்பவங்களுடன் பழைய ஏற்பாடு முற்றுப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து 400 ஆண்டு சரித்திர சம்பவங்கள் வேதாகமத்தில் பழைய புதிய ஏற்பாடுகளில் எழுதப்படவில்லை.
இந்த 400 ஆண்டுகால யூத சரித்திரம் “தள்ளுபடி ஆகமங்கள்” என்று அழைக்கப்படும் யூத இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.
“இருண்ட காலம் அல்லது ஆகமங்களுக்கு இடைப்பட்ட காலம்” என அழைக்கப்படும் இந்த குறிப்பிட்ட 400 ஆண்டு காலத்தில் 4 முக்கிய சரித்திரக் குறிப்புகளைப் பார்க்கிறோம்.
1. பொ்சியரின் காலம் - கி.மு.450-330
2. கிரேக்கரின் காலம் - கி.மு.330-166
3. மக்கபேயர் மற்றும் ஹாஸ்மோனியரின் காலம் - கி.மு.166-63
4. ரோமரின் காலம் - கி.மு.63 முதல் தொடர்ந்த காலம்.
நமது ஆண்டவர் இயேசு மேசியாவாக, உலக இரட்சகராக வந்து அவதரிக்கத் தெரிந்து கொண்ட யூதகுலம் மேற்கண்ட 4 காலங்களில் கடந்து சென்ற பல்வேறு நிலைகளை குறித்து இனி காண்போம்.
1. பொ்சியரின் காலம்: (கி.மு.450-330)
பொ்சியாவின் ஆட்சியில் யூதர் விடுவிக்கப்பட்டது குறித்து மேலே கண்டோம். தங்கள் காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் சுயாதீன ஆட்சி நிலையை யூதருக்கு கொடுத்து பொ்சியர் ஆட்சி செய்தமையால், யூதர் பிரதான ஆசாரியரின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டு, மேலான அதிகாரத்தில் பொ்சியருக்கு கீழ்ப்பட்டிருந்தனர். நெகேமியாவின் நாட்களுக்குப்பின் பல ஆண்டுகள் இந்நிலை தொடர்ந்தது.
பொ்சியாவின் ஆட்சியில் யூதர் விடுவிக்கப்பட்டது குறித்து மேலே கண்டோம். தங்கள் காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் சுயாதீன ஆட்சி நிலையை யூதருக்கு கொடுத்து பொ்சியர் ஆட்சி செய்தமையால், யூதர் பிரதான ஆசாரியரின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டு, மேலான அதிகாரத்தில் பொ்சியருக்கு கீழ்ப்பட்டிருந்தனர். நெகேமியாவின் நாட்களுக்குப்பின் பல ஆண்டுகள் இந்நிலை தொடர்ந்தது.
2. கிரேக்க சாம்ராஜ்யம்: கி.மு.330-166)
நியாயாதிபதிகளின் காலத்திலிருந்தே கிரேக்கர்கள் உலக சரித்திரத்தில் தலை தூக்க ஆரம்பித்தாலும், கி.மு.332 ல் மகா அலெக்சாண்டர் பொ்சியரை தோற்கடித்தபோதுதான் கிரேக்க சாம்ராஜ்யம் உலக வல்லரசாக தலை தூக்கிற்று.கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாண்டர் கி.மு.332 ல் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினான். கி.மு.331 ல் முழு உலகமும் அவன் பாதபடியில் வந்தது. கி.மு.327 ல் இந்தியாவை ஜெயித்து பாபிலோனை அதன் ஆதி மேன்மைக்கு எடுத்துக் கட்ட வேண்டுமென்று தீர்மானித்தபோது தனது 32 வது வயதில் (கி.மு.323) இந்தியாவில் மரணமடைந்தான்.
புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட காரணம்:
இவன் யூதர்களோடு மிகவும் நட்பாக நடந்து கொண்டான். எருசலேமை அழிக்காமல் விட்டுவிட்டான். முழு உலகத்திலும் கிரேக்க பட்டணங்களை நிறுவினான். தான் ஜெயித்த பகுதிகளிலெல்லாம் கிரேக்க கலாச்சாரத்தையும், கிரேக்க மொழியையும் மக்கள் தழுவும்படி செய்தான்.
எனவே, அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு பாலஸ்தீனம் முழுவதிலும் கிரேக்க நிறுவனங்கள் பெருகின. கிரேக்கக் கலாச்சாரமும், கிரேக்க மொழியும் யூதர்கள் மேல் திணிக்கப்பட்டது. எனவேதான், பிற்காலத்தில் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என பார்க்கிறோம்.
மகா அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு:
சரியான வாரிசு இல்லாதபடியால், மகா அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு கிரேக்க சாம்ராஜ்யம் அவனுடைய தளபதிகள்:
1. தாலமி
2. செலுக்கஸ்
3. காசண்டர்
4. லிசி மாக்கஸ் - என்பவர்களால் பிரித்து ஆளப்பட்டது.
2. கிரேக்க சாம்ராஜ்யம் - தொடர்ச்சி...
எபிரேய பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது; இது “செப்துவஜிந்த்” (SEPTUGENT) மொழி பெயர்ப்பு (LXX) என அறியப்படுகிறது.
கிரேக்கக் கலாச்சாராம் யூதர்கள் மத்தியில் பரவியபோது புதிதாய் பிறந்த யூத சந்ததியினர் கிரேக்க மொழியை மட்டுமே அறிந்திருந்தனர். எனவே, இம் மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று. இந்நாட்களில் பிரதான ஆசாரியன் யூதர்களின் மார்க்கத் தலைவனாக இருந்தான். “சனகரிப் சங்கம்” என்று அழைக்கப்பட்ட யூத ஆலோசனை சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை சங்கத்திற்குப் பிரதான ஆசாரியனே தலைவன். எருசலேமில் உள்ள தேவாலயம் இந்த ஆலோசனை சங்க ஆட்சிக்கு மைய ஸ்தலமாக விளங்கியது. நியாயப்பிரமாணக் கல்விக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. பஸ்கா பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. தாலமியர்கள் ஆண்டபோது கிரேக்க கலாச்சாரத்தை யூதர்கள் மேல் திணிக்கவில்லை. கி.மு.198 வரை பாலஸ்தீனத்தை இவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர்.
அ) தாலமியர்:
தாலமியர்கள் யூதர்களை பட்சமாய் (கனிவாய்) நடத்தினார்கள்.எபிரேய பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது; இது “செப்துவஜிந்த்” (SEPTUGENT) மொழி பெயர்ப்பு (LXX) என அறியப்படுகிறது.
கிரேக்கக் கலாச்சாராம் யூதர்கள் மத்தியில் பரவியபோது புதிதாய் பிறந்த யூத சந்ததியினர் கிரேக்க மொழியை மட்டுமே அறிந்திருந்தனர். எனவே, இம் மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று. இந்நாட்களில் பிரதான ஆசாரியன் யூதர்களின் மார்க்கத் தலைவனாக இருந்தான். “சனகரிப் சங்கம்” என்று அழைக்கப்பட்ட யூத ஆலோசனை சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை சங்கத்திற்குப் பிரதான ஆசாரியனே தலைவன். எருசலேமில் உள்ள தேவாலயம் இந்த ஆலோசனை சங்க ஆட்சிக்கு மைய ஸ்தலமாக விளங்கியது. நியாயப்பிரமாணக் கல்விக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. பஸ்கா பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. தாலமியர்கள் ஆண்டபோது கிரேக்க கலாச்சாரத்தை யூதர்கள் மேல் திணிக்கவில்லை. கி.மு.198 வரை பாலஸ்தீனத்தை இவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர்.
ஆ) செலுக்கியர்கள்
தாலமியர்களுக்குப்பின் பாலஸ்தீனம் செலுக்கியர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. இவர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி அவர்கள் மேல் கிரேக்க கலாச்சாரத்தை திணித்தனர். இதை பெரும்பாலான யூதர்கள் விரும்பவில்லை; ஏனெனில் யூதர்கள் ஒரே தெய்வ வணக்கம் உடையவர்கள். கிரேக்கர்களோ பல தெய்வ வணக்கமுடையவர்கள். கிரேக்கர்களுடைய கலாச்சாரமும், ஒழுக்க நெறிகளும், அறநெறிகளும் யூதர்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது.
கிரேக்கக் கலாச்சாரம் பாலஸ்தீனத்தில் பரவுவதை எதிர்த்து பரிசேயர் என்னும் யூத மார்க்கப் பிரிவினர் மிகவும் போராடினர். ஆனால், ஆசாரிய வம்சத்தை சார்ந்த அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த சதுசேயர் என்னும் பிரிவினரோ, கிரேக்கக் கலாச்சாரம் யூதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவில்லை; மாறாக வரவேற்றனர். எனவே, பரிசேயர் சதுசேயர் எனும் இரு மார்க்க எதிர்க்கட்சியினர் யூதருக்குள்ளே தோன்றினர். இவர்களைக் குறித்த பின்பு விரிவாக பார்ப்போம்.
அலெக்சாண்டருடைய தளபதிகளில் தாலமியருடைய வழி வந்தவர்கள் தாலமேயு என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் எகிப்தை ஆண்டார்கள். (மற்ற இரு தளபதிகள் ஆண்ட பகுதிகளின் விபரங்கள் இப்போது நமக்கு தேவையில்லை).
இ) அந்தியோக்கஸ் எப்பிபானஸ்
இந்நிலையில் செலுக்கியரின் வழிவந்த அந்தியோக்கஸ் எப்பிபானஸ் எனும் அரசன் தன்னை கடவுளின் நிலைக்கு உயர்த்தினான். யூதர்கள் தன்னை வணங்கும்படி கட்டளையிட்டான். யூதர்கள் இதை எதிர்த்தபடியால் அவா்களது மத சடங்குகளையும், ஆசாரங்களையும் அழிக்க பிரயாசப்பட்டான். எதிர்த்தவர்களை கொலை செய்தான். எருசலேம் தேவாலயத்தில் தகனபலி செலுத்தப்படும் இடத்திற்கு அருகில் கிரேக்க கடவுளாகிய ஸீயஸின் சிலையை நாட்டினான். கிரேக்கர்கள் தேவாலயத்திற்குள் பிரவேசித்தனர். பன்றி பலி செலுத்தப்பட்டது. யூதர்களின் முக்கிய கிராமங்களில் ஸீயஸின் சிலை வைக்கப்பட்டு அதற்கு பலி செலுத்த வேண்டும் என்று யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. மக்கபேயர் மற்றும் ஹாஸ்மோனியரின் காலம்: (கி.மு.166-63)
செலுக்கியரின் மார்க்க நீதி அநீதிகளை பொறுத்துக் கொள்ளாத யூதர்கள், மக்கபீயஸ் தலைமையில் அந்தியோக்கஸ் எப்பிபானசின் சேனைக்கு எதிராகப் புரட்சி படையாய் எழும்பினர். யூத மார்க்கத்திற்காகவும், யெகொவா தேவனின் நாமமப் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து செலுக்கியர்களோடு போரிட்டார்கள். பல யுத்தங்களுக்குப் பிறகு எருசலேமை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள். தீட்டுப்பட்ட தேவாலயத்தை சுத்திகரித்து பண்டிகை கொண்டாடினர். இந்தப் பண்டிகை “விளக்குகளின் பண்டிகை” அல்லது “பிரதிஷ்டையின் பண்டிகை” என்று அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து வந்த ரோம ஆட்சியின் கீழும், யூதாஸ் மக்கபீயஸிக்கு பின்பு வந்த யோனத்தான், சீமோன், யோவான் ஹிர்க்கானஸ் போன்ற யூதத் தலைவர்கள் பிரதான ஆசாரியர்களாகவும், தளபதிகளாகவும், யூத தேசத்தை ஆளும் அதிபதிகளாகவும் செயல்பட்டு அந்நிய ஆட்சியின் கீழ் யூத தேசத்தை ஒர தனி தேசமாக பாதுகாத்தனர்.
மக்கபேயரின் இவ்வித ஆட்சியின் காலத்தில்தான் ஏதோமியர் உட்பட புறஜாதிய மக்கள் பலரும் மக்கபேயரின் ஒடுக்குதலுக்கு பயந்து தாங்களும் விருத்தசேதனம் பெற்று யூதர்களாய் மாறினர். இப்படி வந்தவர்களையே “யூத மார்க்கத்தமைந்தவர்கள்” என்று நாம் அறிகிறோம். மக்கபேயருக்குப் பின்பு ஹாஸ்மோனியர் என்னும் யூத வம்சம் யூதரை ஆண்டது. இவர்களில் பிரதானமானவன் “ஹிர்க்கானஸ்” என்னும் பிரதான ஆசாரியன் ஆவான். இக்காலத்தை தொடர்ந்து உள்நாட்டுப் போர்களும், யுத்தங்களும் யூதருடைய ஒற்றுமையைக் கலைத்தன.
என்றாலும், சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின் மக்கபேயரின் ஆட்சிக் காலத்தில் யூதர் தனி நாட்டுச் சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு ரோமப் பேரரசு உலக வல்லரசாக தலைதூக்கிற்று.
செலுக்கியரின் மார்க்க நீதி அநீதிகளை பொறுத்துக் கொள்ளாத யூதர்கள், மக்கபீயஸ் தலைமையில் அந்தியோக்கஸ் எப்பிபானசின் சேனைக்கு எதிராகப் புரட்சி படையாய் எழும்பினர். யூத மார்க்கத்திற்காகவும், யெகொவா தேவனின் நாமமப் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து செலுக்கியர்களோடு போரிட்டார்கள். பல யுத்தங்களுக்குப் பிறகு எருசலேமை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள். தீட்டுப்பட்ட தேவாலயத்தை சுத்திகரித்து பண்டிகை கொண்டாடினர். இந்தப் பண்டிகை “விளக்குகளின் பண்டிகை” அல்லது “பிரதிஷ்டையின் பண்டிகை” என்று அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து வந்த ரோம ஆட்சியின் கீழும், யூதாஸ் மக்கபீயஸிக்கு பின்பு வந்த யோனத்தான், சீமோன், யோவான் ஹிர்க்கானஸ் போன்ற யூதத் தலைவர்கள் பிரதான ஆசாரியர்களாகவும், தளபதிகளாகவும், யூத தேசத்தை ஆளும் அதிபதிகளாகவும் செயல்பட்டு அந்நிய ஆட்சியின் கீழ் யூத தேசத்தை ஒர தனி தேசமாக பாதுகாத்தனர்.
மக்கபேயரின் இவ்வித ஆட்சியின் காலத்தில்தான் ஏதோமியர் உட்பட புறஜாதிய மக்கள் பலரும் மக்கபேயரின் ஒடுக்குதலுக்கு பயந்து தாங்களும் விருத்தசேதனம் பெற்று யூதர்களாய் மாறினர். இப்படி வந்தவர்களையே “யூத மார்க்கத்தமைந்தவர்கள்” என்று நாம் அறிகிறோம். மக்கபேயருக்குப் பின்பு ஹாஸ்மோனியர் என்னும் யூத வம்சம் யூதரை ஆண்டது. இவர்களில் பிரதானமானவன் “ஹிர்க்கானஸ்” என்னும் பிரதான ஆசாரியன் ஆவான். இக்காலத்தை தொடர்ந்து உள்நாட்டுப் போர்களும், யுத்தங்களும் யூதருடைய ஒற்றுமையைக் கலைத்தன.
என்றாலும், சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின் மக்கபேயரின் ஆட்சிக் காலத்தில் யூதர் தனி நாட்டுச் சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு ரோமப் பேரரசு உலக வல்லரசாக தலைதூக்கிற்று.