அன்பு(LOVE) என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

அன்பு(LOVE) என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

அன்பு என்றால் உலகத்தார் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்கிறார்கள்
நமக்கு பிரியமானவர்களை பார்க்கும் போதும்  அவர்களோடு பேசும் போதும் அவர்களுக்கு உதவி செய்யும் போதும் நம்முடைய  சரீரத்திற்குள் ஏற்படக்கூடிய ஒருவித உணர்ச்சி தான் அன்பு என்று அநேகர் சொல்லுகிறார்கள்

நம்முடைய புதிய ஏற்பாட்டில் அன்பு என்றால் என்னவென்று பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவன் தெளிவாக கட்டளையிட்டு இருக்கிறார்
1) தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவது தான் அன்பு
1Jo 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

2) இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவன் எவனும் தேவனிடத்தில் அன்பு கூறுகிறான்
1Jo 5:1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

3) தேவனுடைய கட்டளையை கைக்கொள்ளும் போது தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு கூறுகிறோம்
1Jo 5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

4) பிதாவின் அன்பை நாம் அவருடைய குமாரனை நமக்கு ஒப்புக் கொடுத்ததினாலே அறிந்து இருக்கிறோம்
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

5) இயேசு கிறிஸ்து எப்படி பிதாவினிடத்தில் அன்பு செலுத்தினார்?
இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்து இருந்தார்
Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, ,,,,,
Joh 8:55 ..... அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து மரணபரியந்தம் பிதாவுக்கு கீழ்ப்படிந்து இருந்தார்
Phi 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

6) இயேசு கிறிஸ்துவினிடத்தில் நாம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து கீழ்ப்படியும் போது அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்
Joh 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
Joh 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
Joh 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

7) கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு ஒருவன் செவி கொடுத்து கீழ்ப்படியும் போது கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இருக்கிறான் கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இருக்கிறான் அவருக்கு அந்த வார்த்தைகளை கொடுத்த பிதாவினிடத்தில் அன்பு கூறுகிறான்
Joh 14:24 .. நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

8) அவருடைய வசனத்தை கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாய் பூரணப்பட்டு இருக்கும்
1Jo 2:5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

9) கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருக்கிறோம் என்று சொல்லுகிறன் அவன் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்
1Jo 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

10) இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இராதவன் அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள மாட்டான்
Joh 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்....
1Jo 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

அப்படியானால் அநேகர் தேவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கு விசுவாசம் வைத்தால்  மாத்திரம் போதும் என்கிறார்கள். அதினால் என்ன பிரயோஜனம்?
தேவனுடைய எல்லா கட்டளைகளையும் விசுவாசித்து எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும் போது அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம் அது தான் மெய்யான அன்பாக இருக்கிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.