ஜெபிக்க தடையாக காணப்படும் காரியங்கள் →
1) சோர்வு - இன்னும் ஜெபத்துக்கு பதில் கிடைக்கவில்லையே என்று சோர்வு அடைய கூடாது. அதனால தான் இயேசு சொன்னார் "சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்" லூக் 18:1. சோர்வினால் அநேகர் பின் வாங்கி போய் இருக்கிறார்கள். சோர்வு பிசாசின் கொடிய ஆயுதம். ஆபத்து காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது நீதி 24:10. ஒரு காரியத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்தால் பதில் கிடைக்கும் வரை ஜெபம் பண்ணி கொண்டே இருக்க வேண்டும். ஜெபத்தில் உறுதியாய் தரித்து இருங்கள் (ரோ 12:12)
ஒரு ஊழியக்கார் சொன்ன சாட்சி: அவரும் அவர் மனைவியும் ஒரு காரியத்திற்காக 35 வருடம் தொடர்ந்து ஜெபித்து வந்தார்கள். 36 ம் வருடம் அவர்கள் ஜெபம் கேட்க பட்டது. விசுவாசம் குறைந்தால் சோர்வு வந்து விடும்
2) வீண் பேச்சு - (சங் 26:4) தாவிது வீணரோடு (வீணாக நேரத்தை போக்குபவர்கள்) நான் உட்கார மாட்டேன் என்கிறான். மனிதரோடு அதிகம் பேசுகிறவன் தேவனோடு அதிகம் பேச மாட்டான். தேவனோடு அதிகம் பேசுகிறவன் மனுஷனுடன் அதிகம் பேச மாட்டான். உன் வாயின் வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக (பிர 5:2)
3) தூக்கம்: நீதி 20:13, 6:10,11 23:21. சிஷர்கள் ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் (மத் 26:40,43). தினசரி 6 அல்லது 7 மணி நேரம் தூங்கினால் போதும்.
4) உலக கவலை (லூக் 21:34 - உலக கவலை நமது இருதயத்தை ஒடுக்கும் (நீதி 12:25)
5) பெருந்திண்டி (லூக் 21:34) போஜனபிரியன் தரித்தரன் (ஆவிக்குரிய வாழ்க்கையிலும்) ஆவான் (நீதி 23:21)
6) அதிக வேலை - அதிக வேலையில் ஈடுபட்டதால் மார்த்தாளுக்கு தேவனுடைய பாதத்தில் அமர முடிய வில்லை (லூக் 10:41,42). சகோதரிகள் உலக வேலையை குறைத்து தேவனுடைய பாதத்தில் அமர முயற்சி செய்ய வேண்டும்
7) நவின சாதனங்கள் - TV, INTERNET, MOBILE, FACE BOOK, WHATSAPP, EMAIL, GMAIL, SKYPE, HI5, WECHAT. இன்றைக்கு அநேகர் இதற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இதை உபயோகிப்பது தவறு இல்லை. ஆனால் இவை நமது control ல் இருக்க வேண்டும். இதை உபயோகிக்கும் நேரம் குறைவாக இருக்க வேண்டும். இதனால் நமது ஜெப நேரம் குறைய கூடாது
