பைபிளை_வாசிப்பதினால்_என்னென்ன #நன்மைகள்_உண்டாகிறது..?

#பைபிளை_வாசிப்பதினால்_என்னென்ன
          #நன்மைகள்_உண்டாகிறது..?
                                ****+****

        கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....!

     நாம் ஏன் பைபிளை வாசிக்க வேண்டும்...?
     அதனால் நமக்கு என்ன பயன்...?
     அது #ஆத்மாவை எப்படி உயிர்பிக்கிறது..!

   1.  #அது_தேவனுடைய_கட்டளை. :-

         நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,
                                      #உபாகமம் 6 :7
      நீ படித்தால் தான் பிள்ளைகளுக்கு போதிக்க முடியும்... வழிநடத்த முடியும்.

2. #தவறான_எண்ணங்களை_போக்குகிறது.

    இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

                                 #மத்தேயு 22 :29

3. #வசனம்_நம்மை_புடமிடுகிறது..!

        கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
                                 #சங்கீதம் 105 :19

4. #பைபிள்_புத்தியை_மாற்றுகிறது..!

       ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

                                   #மத்தேயு 7 :24

5. #நம்மை_நற்குணசாலியாக_மாற்றுகிறது.

   அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

                      #அப்போஸ்தலர் 17 :11

6. #பைபிள்_நம்மை_சுத்தமாக்குகிறது..!

        வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.

                            #சங்கீதம் 119 :9

7. #நாம்_பிசாசை_ஜெயிக்கமுடியும்...!

       அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
                                      .#மத்தேயு 4 :4

8. #வேதவசனம்_செழிப்பாக்கும்...!

   அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

                                        #சங்கீதம் 1 :3

9. #பைபிள்_நித்திய_ஜீவனை_தருகிறது..!

     வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

                                   #யோவான் 5 :39

10. #நாம்_ஏன்_வேதத்தை_வாசிக்க
      #வேண்டும்_ஆண்டவராகிய_இயேசு
      #கிறிஸ்து_வாசித்தார்_ஆகவே_நாமும்
      #வாசிக்க_வேண்டும்....#ஆமென்.

      தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
                                   #லூக்கா 4 :16

      வேதவாசிப்பு மட்டுமே உன் வாழ்க்கையை
மாற்றி சரியான வழியில் நம்மையும், நம் குடும்பத்தையும் வழி நடத்தும்....ஆமென்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.