அழைப்பு
தாவீதை அழைத்தேன் அவன் என்னை துதித்தான்
ஆபிரகாமை அழைத்தேன் அவன் என்னை விசுவாசித்தான்
மோசேயை அழைத்தேன் அவன் என் ஜனத்தை வழி நடத்தினான்
உன்னை அழைத்தேன் நீ ஏனோ வர மறுக்கிறாய்
பிறருக்கு ஆறுதல் சொல்ல அழைக்கப்பட்ட நீ உனக்கு ஆறுதல்சொல்ல யாரை தேடுகிறாய்
தாவீதை பார் என்றேன் எதற்கு துதிக்க ,
நீ பார்த்தது அவன் பெலவீனத்தை
சிம்சோனை பார் என்றேன் எதற்கு தைரியம் வேண்டும் என்பதற்கு
நீ பார்த்தது அவன் வீழ்ச்சியை
ஆசீர்வாதத்தை பார்த்த நீ பாடுகளை பார்த்தவுடன் ஏன் ஓடுகிறாய்
மனிதனை பார்க்க காலை தேய்த்த நீ என்னை பார்க்க முழங்காலை மறுப்பது ஏனோ
கொம்பின் அபிஷேகம் கோலியாத்தை வீழ்த்தும் என்றால்
அக்கினி அபிஷேகம் உலகத்தை அசைக்கும்
உன் விசுவாசம் எங்கே?
உன் விசுவாச வார்த்தை எங்கே?
அறிக்கை செய் வெற்றி உன்னை தொடரும்
யுத்தத்தைக் கண்டு பயப்படாதே
யுத்த களத்திற்கு வா யுத்தம் என்னுடையது ஜெயம் உன்னுடையது.