கிரியைகள்

*கிரியைகள்*

மத்தேயு 16 :27 

*மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்;* *அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.*

ரோமர் 14 :12 

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் *தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.*

13  இப்படியிருக்க, நாம் இனிமேல் *ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக.* ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

2 கொரிந்தியர் 5 :10 

*ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு,* *நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.*

1 பேதுரு 1 :17 

*அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால்,* *இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.*

வெளிப்படுத்தின விசேஷம் 22 :12 

*இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.