*"மலடியாயிருந்த தன் மனைவிக்காக, ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்"* (ஆதி. 25:21).
ஈசாக்கு எங்கே போய் ஜெபித்திருந்திருப்பார்? அந்த நாட்களில் ஆசரிப்புக் கூடாரம் இல்லை. தேவனுடைய ஆலயம் இல்லை. ஆபிரகாம் ஜெபிக்க வேண்டும், கர்த்தரை சந்திக்க வேண்டும், கர்த்தரிடத்தில் விசாரிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்போதெல்லாம் பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினபோது, கர்த்தர் பலிபீடத்தின் ஜுவாலையிலே இறங்கி வந்தார். ஆபிரகாமோடு பேசினார்; உடன்படிக்கை செய்தார்.
ஈசாக்கு, தேவனை நோக்கி ஊக்கமாக விண்ணப்பம் செய்ய நினைத்தபோது, அவருடைய உள்ளம் ஒரு பலிபீடத்தையே நாடியிருந்திருக்கும்! யூத ரபீமார், ஈசாக்கு ஜெபிக்கச் சென்ற பலிபீடம், "மோரியா மலையிலிருந்தது" என்று சொல்கிறார்கள். அது வாலிப வயதிலே, ஈசாக்கு பலி செலுத்தப்படுவதற்கு, ஆபிரகாம் கட்டின பலிபீடம். அங்கே முட்புதரில் தன்னுடைய கொம்புகளை சிக்க வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த ஆட்டுக்கடாவை, ஆபிரகாம் பலியிட்டார். அந்த இடம், "யேகோவாயீரே" என்று அழைக்கப்பட்டது.
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அதை ஆபிரகாமும், ஈசாக்கும் கேட்டார்கள் (ஈசாக்கு முதல் முதல் தேவ சத்தம் கேட்ட இடம் இதுதான்). "நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், பெருகவே பெருகப் பண்ணுவேன்" (ஆதி. 22:17) என்று கர்த்தர் தெளிவாக பேசினார்.
ஈசாக்கு அந்த சத்தத்தையும், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தையும் மறந்து விடவில்லை. ஆகவேதான் கர்த்தர், வாக்குத்தத்தம் செய்த இடத்திற்கு ஈசாக்கு தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போய் தேவனை நோக்கி வேண்டுதல் செய்தார். வேதத்தில் சிறந்த கணவனும் மனைவியுமாக ஈசாக்கும், ரெபெக்காளும் இடம் பெறுகிறார்கள். மலடியாயிருந்த ரெபெக்காள் குழந்தைபெறும்படி, ஈசாக்கு ஜெபம் பண்ணினார். இரட்டை குழந்தைகள் வயிற்றிலிருப்பதை உணர்ந்த ரெபெக்காள், "இது எப்படி ஆகும்?" என்று, கர்த்தரிடத்திலே ஜெபித்து விசாரித்தாள். ஜெபிக்கிற கணவன், மனைவியால் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்.
உங்களுக்கு ஒரு ஜெப இடம் தேவை. ஆபிரகாமும், ஈசாக்கும் தேவனுடைய பலிபீடத்தின் அருகே ஜெபம் செய்தார்கள். அன்னாளும், எசேக்கியா ராஜாவும், தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தார்கள். யெப்தாவும், சாமுவேலும், மிஸ்பாவிலே தேவ சந்நிதியிலே தங்கள் காரியங்களைச் சொன்னார்கள். தானியேல் எருசலேமுக்கு நேராய் தன் பலகணிகளைத் திறந்து வைத்து, ஜெபித்தார். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஜெப இடமாக, கெத்சேமனே தோட்டத்தை தெரிந்து வைத்திருந்தார். தான் காட்டிக் கொடுக்கப்படுகிற அன்று இரவு, ஜெபிக்க கெத்சேமனேl தோட்டத்திற்குச் சென்றார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வீட்டில் ஜெப அறையை உருவாக்குங்கள். போதுமான இட வசதி உங்கள் வீட்டில் இராமல் இருந்தால், ஒரு சுவர் மூலையையாவது கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த இடத்திற்கு வரும்போதெல்லாம், தேவ பிரசன்னத்தை உணருங்கள். ஆவியாய் இருக்கிற தேவன், உங்கள் ஜெபத்தைக் கேட்க, எப்போதும் ஆவலுள்ளவராய் இருக்கிறார். நிச்சயமாகவே உங்கள் ஜெபத்திற்கு பதில் தந்தருள்வார்.
நினைவிற்கு:- *"அப்படியே நாங்கள் உபவாசம் பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்"* (எஸ்றா 8:23).
சகோ. J. சாம் ஜெபத்துரை.
ANRANRULLA APPAM
March 09, 2017.
*PLEADING FOR WIFE!*
*“Now Isaac pleaded with the Lord for his wife, because she was barren; and the Lord granted his plea and Rebecca his wife conceived.”* (Genesis 25:21).
Where would have Isaac gone to pray? During those days there was no tabernacle of meeting or church of God. Whenever Abraham wanted to pray, wanted to meet God and wanted to have fellowship with God, he built an altar and offered burnt offering to God. God descended on the flames of the altar and spoke to Abraham; entered into a covenant with him.
When Isaac wanted to make fervent prayer to God, his mind would have sought an altar. The Jewish Rabbis say that the altar to which Isaac went to pray was in the Mount Moriah. That was the altar built by Abraham to sacrifice Isaac in his youth stage. It was there, Abraham had sacrificed a ram caught in a thicket by its horns. That place was called as “Yehovah Yire” ("The Lord will provide").
Then the Angel of the Lord called out of heaven and both Abraham and Isaac heard it. (This is the first instance wherein Isaac heard the voice of God). God clearly spoke, “Blessing I will bless you, and multiplying I will multiply your descendants as the stars of the heaven and as the sand which is on the seashore” (Genesis 22:17).
Isaac did not forget that voice and the promises of God. That is why he took his wife to the spot where God made the promises and prayed to God from there. Isaac and Rebecca find a place in the Bible as the best couple. Isaac pleaded with God for Rebecca who was barren, to bless her with a child. When Rebecca felt two children struggling within her and she said “If all is well, why am I like this?” and inquired God in prayer. When husband and wife pray, their family will be blessed.
You need a place to pray. Abraham and Isaac prayed near the altar of God. Hannah and King Hezekiah went to the church of God and prayed. Jephthah and Samuel spoke all their words before the Lord in Mizpah. Daniel opened his windows towards Jerusalem and prayed.
Jesus Christ had chosen the Garden of Gethsemane as his place to pray. He went to the Garden of Gethsemane to pray on the night in which He was betrayed.
Dear children of God, create a prayer room in your house. If sufficient space is not available in your home dedicate at least a corner for praying. Feel the presence of God whenever you come to that space. God who remains as a Spirit is always eager to listen to your prayer. He will definitely answer your prayer.
To meditate : *“So we fasted and entreated our God for this and He answered our prayer.”* (Ezra 8:23).
Bro J. Sam Jebadurai.