நமது வாழ்வின் அடையாளங்கள் மாறப் போகிறது. (ஏசா.55:13)

நமது வாழ்வின்
   அடையாளங்கள்
   மாறப் போகிறது.
      (ஏசா.55:13)

🔹இந்த புதிய  மாதத்தில் இந்த புதிய நாளில் மாற்றத்தை கொண்டு வரும் மாறாத தேவனுடைய கிருபை நம்மில் பெருகுவதாக.

🔹நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ விதமான  மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்.

🔹ஆனால், இன்னும் சில காரியங்களில் மாற்றம் உண்டாகும் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

🔹சில காரியங்களில் மாற்றம் உண்டாகுமா? என்கிற சந்தேகத்தோடும் இருக்கிறோம்.

🔹சில காரியங்களில் இனிமேல் மாற்றமே உண்டாகாது என்று நாம் முடிவும் செய்திருக்கிறோம்.

🔹நாம் ஒரு மாறி வரும் உலகத்தில் இருந்தாலும், மாறாத தேவனை நம்பி இருக்கிறோம்.

🔹நம்முடைய வாழ்க்கையில்  எவைகளை மாற்ற வேண்டும்? எப்போது மாற்ற வேண்டும்? என்பதை தேவன் முன்னதாகவே முடிவு செய்து விட்டார்.

🔹அதனால், நமது விருப்பம் போல மாற்றத்தை கொண்டு வர மாட்டார்.

🔹தேவன் அவர் விருப்பம் போல மாற்றத்தை கொண்டு வருவார்.

🔹நமது பார்வையில் இப்போதே மாற்றம் வந்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றும்.

🔹அதற்கு தான் இதே வேத பகுதியில் 55:8 இல் உன் நினைவு என் நினைவு அல்ல; என் நினைவு அதைவிட உயர்வானது என்று சொல்லி விட்டார்.

🔹அதினால், தேவனுடைய விருப்பத்திற்கு விட்டு கொடுப்போம். ஏற்ற காலங்களில் புதிய மாற்றங்களை கொடுத்து நம்மை அழியாத ஆசீர்வாதத்தின் அடையாளமாக நிலை நிறுத்துவார்.

📖 தொடர்ந்து இந்த வேத வசனத்தை  தியானிப்போமா?

🅰 2 விதமான வாழ்வின்  அடையாளங்கள் என்ன?
1. மாற்றத்திற்கு முன் இருந்த வாழ்வின்   அடையாளம்.
- முட்செடி. (புதர்)
- காஞ்சொறி. (களை)
2. மாற்றத்திற்கு பின் இருக்கப் போகிற அடையாளம்.
- தேவதாரு மரம். (பசுமையான              பெரிய வளர்ச்சி)
- மிருதுச் செடி. (பசுமையான சிறிய வளர்ச்சி)

🅱 முட்செடி, காஞ்சொறி வாழ்வு எப்படிப் பட்டது?
1. எதற்குமே பிரயோஜனமில்லாதது
2. எப்பொழுதும் வேதனை நிறைந்தது.
3. எப்போது அழியும் என தெரியாதது.

🆎 தேவதாரு, மிருதுச் செடி வாழ்வு எப்படிப் பட்டது?
1. எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது.
2. எல்லா காலங்களிலும் செழிப்புள்ளது.
3. எந்த சூழ்நிலையிலும் அழியாதது.

🆗 இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை தான் நமது வாழ்வில் நமது தேவன் கொடுக்கப் போகிறார்.!

         இந்த மாற்றம் கர்த்தருக்கு கீர்த்தியை கொண்டு வரப் போகிறது.!!

         இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் நமது தேவன் நம்மை பலவிதமான சூழ்நிலைகளில் வழி நடத்தி வருகிறார்.!

👍🏼 "வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எந்த மாற்றமும் உண்டாகாது"

👍🏼 "அப்படி உண்டான மாற்றம் எதுவும் நிலைத்து நிற்காது"

🙏🏼 இதை புரிந்து கொள்ளுங்கள்.!

🙋🏻 தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.! ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.