நீ பலுகிப் பெருகுவாயாக._*
(ஆதி.35:11)
- இன்றைய உலகத்தின் சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்த வார்த்தைக்கு மாறாக இருக்கிறது.
- நமது குடும்ப சூழ்நிலையைப் பார்க்கும்போதும் இந்த வார்த்தைக்கு சம்பந்தமே இல்லாமல் தான் இருக்கிறது.!
- இன்றைக்கு எங்கு பார்த்தாலும் ஒரே வறட்சி தான் நிலவுகிறது.!
- இந்த சூழ்நிலையில் இந்த வார்த்தை சாத்தியமாகுமா?
- மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் வாய்ப்பேயில்லை என்று தான் தோன்றுகிறது.!
- ஆனால், தேவனுடைய கண்ணோட்டத்தில் இது சாத்தியமாகிறது.!
- எப்படியென்றால்,
இந்த சூழ்நிலைகளை எல்லாம் அறிந்து தான், இந்த வார்த்தையைச் சொல்லுவதற்கு முன்பு, தான் யார் என்பதை அறிமுகப்படுத்துகிறார்.!
-அவர் யார்?
*_சர்வ வல்லமையுள்ள தேவன்_*
- இப்போது சொல்லுங்கள்.! இந்த வார்த்தை நிறைவேறுமா?
- நிச்சயமாக நிறைவேறும்.! ஏனென்றால், நமக்கு வாக்கு கொடுத்திருக்கிற தேவன் *_சர்வ வல்லமையுள்ள தேவன்_*
♦ இந்தப் பெருக்கத்தின் பிண்ணனியை தியானித்து பார்ப்போம்?
1. எல்லாவற்றையும் படைத்த போது மனிதனுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் (ஆதி.1:28)
2. ஜலப்பிரளயத்திற்குப் பின்பு நோவாவுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் (ஆதி.9:1,7)
3. பூமியெங்கும் பாஷை மாறிய பின்பு முற்பிதாக்களுக்கு கொடுத்த ஆசீர்வாதம்
ஆதி.13:15,16.
ஆதி. 26:24.
ஆதி.35:9-15.
♦ இந்த வார்த்தையை யாக்கோபுக்கு சொல்ல காரணம் என்ன?
- யாக்கோபு ஆதி.28:22 இல் செய்த பொருத்தனையை நிறைவேற்றத் தவறிவிட்டான்.!
- அதைத் தான் ஆதி.35:1 இல் தேவன் ஞாபகப்படுத்துகிறார்.!
♦ இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள யாக்கோபு என்ன செய்தான்?
1. அர்ப்பணித்தான்.
2. ஆயத்தப்பட்டான்.
3. ஆராதனை செய்தான்.
♦ இதற்காக தேவன் என்ன செய்தார்?
1. புதிய நாமத்தைக் கொடுத்தார்.
- இஸ்ரவேல்.
2. புதிய பரிவாரங்களைக் கொடுத்தார்.
- குடும்ப ஆசீர்வாதம்.
- குடியிருப்பின் ஆசீர்வாதம்.
3. புதிய ஆரம்பத்தைக் கொடுத்தார்.
- பானபலி.
♦ பிரியமானவர்களே,
நாமும் இந்த வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதங்களை இந்த ஆண்டு சுதந்தரித்துக் கொள்வோம்.!
- இனி நமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், வேலை ஸ்தலத்திலும் ஒரே பெருக்கம் தான்.!
- மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய பெருக்கம் உண்டாகப் போகிறது.!
- நமது சபைகள் பெருகப் போகிறது.! நமது ஊழியங்களும் பெருகப் போகிறது.!!
- நமக்கு வேண்டிய பொருளாதாரமும் பெருகப் போகிறது.!
- இனி வனாந்திரமும் இல்லை.! வறட்சியும் இல்லை.!!
- இந்த ஆண்டு தேவப் பிள்ளைகளுக்கு, ஒரே செழிப்பு தான்.! குதூகலம் தான்.!! கொண்டாட்டம் தான்.!!!
♦ இந்த வார்த்தைகளை விசுவாசிப்போம்.! ஜெபிப்போம்.!!
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.! ஆமென்.