வேதாகமம் தேவனுடைய வார்த்தையா?... அல்லது மனிதனுடைய வார்த்தையா?
வேதாகமம் மற்றெந்த புத்தகத்தையும் விட தனித்தன்மை வாய்ந்தது. வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடாகவும் , மனிதர்களுக்கு அளிக்கப்படும் அவருடைய வார்த்தையாகவும் விளங்குகிறது. மனிதர்களால் எழுதப்பட்ட எந்த ஒரு புத்தகத்தைப் பார்க்கிலும் அது மேன்மையானது.வேதாகமம் உண்மையிலேயே தேவனுடைய வார்த்தை என்பதை சிலர் நம்ப மறுக்கிறார்கள். அது பிழையற்றதாகவும், அது நம்பத்தக்கதாகவும் இருக்கின்றதா என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். எந்த அளவிற்கு தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தையாயிருக்கிறது என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
“தேவனுடைய வார்த்தை” என்ற பதத்தின் பொருள், வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் பேசப்பட்டது என்பது அல்ல. வேத வாக்கியங்களில் மனிதர்கள் அல்லது தேவதூதர்கள் அல்லது சாத்தானின் வார்த்தைகளும்கூட இடம் பெற்றிருக்கின்றன.
உதாரணமாக, வேதாகமத்தில் பாவகரமான பல செயல்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், வேதாகமம் அவைகளை ஆதரிக்கவில்லை. மாறாக, அது அவைகளை கண்டிக்கிறது.
வேத வாக்கியங்கள் சாத்தான் கூறிய சில பொய்களைக் குறித்தும் கூறுகிறது. (ஆதியாகமம்: 3:4). ஆனால், அதை வேதாகமத்தில் சோ்ப்பதனால், இந்தப் பொய்கள் அனைத்தும் உண்மைகள் என்று வேதாகமம் போதிக்கவில்லை. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களும், பலரால் பேசப்பட்ட வார்த்தைகளும் வேதாகமத்தில் பிழையின்றி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கு அது உத்திரவாதம் அளிக்கிறது.
வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வாயிலிருந்து பிறந்தது என்பது அதன் பொருளல்ல.
தேவன் பாிசுத்த ஆவியின் மூலமாக, அதை எழுதும்படி தேவ மக்களை தூண்டினார். எனவே, வேதாகமம் தேவனுடைய வார்த்தையாகிறது. தேவன் வேதாகமத்தின் அமைப்பையும், உள்ளடக்கத்தையும் தீர்மானித்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட மேற்பார்வையாளர் எனக் கூறலாம்.
சில கேள்விகள்
- வேதாகமம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?- அல்லது அது விசேஷித்த மதப்பிரகாரமான நுண்ணறிவு கொண்ட மனிதர்களின் வார்த்தைகளா?
- வேதாகமத்தின் சில பகுதிகள் மட்டும் தேவனுடைய வார்த்தையா? - அல்லது வேதாகமம் முழுவதும் தேவனுடைய பரிசுத்த வார்த்தையா?
- வேதாகமம் முற்றிலுமாக பிழையற்றது என்று நாம் உண்மையில் நம்ப முடியுமா?
இக் கேள்விகளுக்கு வேதாகமம் தன்னைக் குறித்து நமக்கு போதிக்கும் 3 முக்கியமான “அஸ்திபாரக் கற்களைக்” குறித்து பார்ப்போம்:
இந்த மூன்று அஸ்திபாரக் கற்களாவன:
1. உந்துதலின் கோட்பாடு (Doctrine of Inspiration)
2. பிழையற்ற தன்மையின் கோட்பாடு (Doctrine of Inerrancy)
3. பொருள் விளக்கத்தின் சட்டம் (Law of Interpretation)
உந்துதலின் கோட்பாட்டைக் குறித்து முதலாவது காண்போம்:
A. வேதாகமம் : அது எங்கிருந்து வருகிறது?
உந்துதலின் கோட்பாடு
மூல வார்த்தை: “தியோப்நுஸ்டஸ்” (Theopneustos)உந்துதலின் கோட்பாடு
“உந்துதல்” என்ற பதத்தினுடைய பொருளை அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தையில் காணலாம்:
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது...” (2தீமோத்தேயு: 3:16).
துரதிர்ஷ்டவசமாக, “உந்துதல்” என்ற வார்த்தையின் பொருள், மூல பாஷையான கிரேக்க மொழியில் இவ்வார்த்தை அளிக்கும் பொருளிலிருந்து வேறுபட்டிருக்கிறது. உண்மையில், அது தவறான வழி நடத்துதலை அளிக்கிறது.
“உந்துதல்” என்ற வார்த்தை “உள் சுவாசித்தல்” அல்லது “பிறப்பித்தல்” என்று பொருள்படும் இன்ஸ்பிரோ (inspro)என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.
இந்த வார்த்தையை சாியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், தேவன் வேதாகமத்தை எழுதிய மனிதர்களுக்கு வார்த்தைகளை சுவாசிக்கச் செய்து அவைகளை எழுதுவதற்கான ஒரு குறிப்பிட்ட வல்லமையையும் அளித்தார் என்ற தவறான முடிவுக்கு வருகிறார்கள். வேத வாக்கியங்கள் நமக்கு இவ்வாறு போதிக்கவில்லை. நாம் இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் விரும்பவுமில்லை.
இங்கு தியோப்நுஸ்டோஸ் (Theopneustos) என்ற கிரேக்க வார்த்தை ஒரு வினைச் சொல்லாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையில் தியோஸ் (Theos) மற்றும் நுஸ்டோஸ் (pneustos) என்ற இரண்டு வார்த்தைகள் அடங்கியுள்ளன.
"தியோஸ்" (Theos) என்ற வார்த்தையின் பொருள் “தேவன்” என்பதாகும்; “நுஸ்டொஸ்” என்ற வார்த்தை “பிறப்பித்தல்” அல்லது “ஊதுதல்” என்று பொருள்படும். எனவே, "தியோப்நுஸ்டோஸ்" என்ற வார்த்தையின் பொருள் “தேவனால் பிறப்பிக்கப்பட்டது” என்பதாகும்.
“தேவனால் - பிறப்பிக்கப்பட்ட வார்த்தைகள் - பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள்”
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலடன் பேசி, “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டது (தேவனால் சுவாசிக்கப்பட்டது)” என்று கூறியபோது, தேவன் மனிதர்களுடைய எழுத்துக்கள் அல்லது சிந்தனைகளில் ஒரு விசேஷித்த வல்லமையை சுவாசத்தைப்போல அளிக்கவில்லை.மாறாக, தேவன் மனிதர்களுடைய சிந்தனைகளில் தம்முடைய வார்த்தைகளை அளித்து அவைகளை அவர்கள் எழுதும்படி செய்தார்.
1கொரிந்தியர்: 2:13 வசனம் இதே கருத்தை வலியுறுத்துகிறது:
“அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசுகிறோம்”.
வேதாகமத்தின் தெய்வீக உந்துதலை விளக்கும் இரண்டாவது முக்கியமான வேதபகுதி: 2பேதுரு: 1:20-21 வசனங்களாகும்:
“வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்”
வேதாகமத்தில் எழுதப்பட்ட எந்த வார்த்தையும் மனிதனுடைய கிரியையினால் அல்லது உணர்வினால் எழுதப்படவில்லை என்பதை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்கு இந்த வசனம் நமக்கு உதவுகிறது.
வேதாகமத்தை எழுதிய ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டார்கள் அல்லது வழி நடத்தப்பட்டார்கள். ஆனால், தேவன் ஒரு இயந்திரத்தை கட்டுப்படுத்துவதுபோல அவர்களுடைய சிந்தனைகளையும், கரங்களையும் கட்டுப்படுத்தவில்லை.
தேவன் மனிதனை பரிசுத்த ஆவியைக் குறித்த அறிவுடனும், உணர்வுடனும் சிருஷ்டித்தார். அவர் மனிதனுடன் பேச நினைக்கும்போது, அவர் மனுக்குலத்தை எவ்வாறு வடிவமைத்தார் என்ற உண்மையை அவர் புறக்கணிப்பதில்லை.
வேதாகம எழுத்தாளர்கள் ஏதோ வித்தை போன்று “தானே இயங்குகிற” முறையில் நிச்சயமாக வேதாகமத்தை எழுதவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவ்வாறு கிரியை செய்வதில்லை! இப்படிப்பட்ட கிரியை தேவனிடமிருந்து வந்தது என்று கூறும் எந்த வாதத்தையும் குறித்து நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், 2தீமோத்தேயு: 3:16 வசனத்தின்படி, வேதாகமத்தின் எழுத்துக்கள் பரிசுத்த ஆவியின் உந்துதலுக்குட்பட்டன. அவற்றை எழுதினவர்கள் அல்ல, வேதாகமம் பரிசுத்தாவியின் உந்துதலுக்குட்பட்டது, வேதாகமத்தை எழுதினவர்களல்ல.
எனவே, நாம் 2தீமோத்தேயு: 3:16 மற்றும் 2பேதுரு: 1:20-21 வசனங்களை இணைக்கும்போது, வேதாகமம் பின்வரும் வழியில் பரிசுத்தாவியின் உந்துதலுக்குட்பட்டது என்று அறிகிறோம்.
“பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட” மனிதர்கள் “தேவனால் பிறப்பிக்கப்பட்ட” வார்த்தைகளை எழுதினார்கள். இந்தத் “தேவனுடைய வார்த்தைகள்” ஒரு கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் உருவாக்குவதற்கு தெய்வீக அதிகாரம் பெற்றவையாகும்.
“சத்தியம்”
அதை அளித்தல்
அதை பதிவு செய்தல்
அதை புரிந்து கொள்ளுதல்
உந்துதல் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இரண்டு முக்கியமான மற்றும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட கருத்துக்கள் நமக்கு உதவுகின்றன. அதை அளித்தல்
அதை பதிவு செய்தல்
அதை புரிந்து கொள்ளுதல்
அந்த 2 கருத்துக்கள்: 1. வெளிப்பாடு 2. பிரகாசிப்பித்தல்
மனித அறிவு ஒருக்காலும் அறிந்திராத சத்தியத்தைத் தேவன் நேரடியாக அறிவிக்கும் அவருடைய செயல் “வெளிப்பாடு” எனப்படும். அந்த சத்தியத்தை தேவனுடைய வெளிப்பாடில்லாமல் மற்ற எந்த வழியிலும் அறிந்து கொள்ள முடியாது.
வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை மறுபடியும் பிறந்த விசுவாசிகள் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் இயக்கம் அல்லது உதவி,“பிரகாசிப்பித்தல்” என்று குறிப்பிடப்படுகிறது. வேத வாக்கியங்கள் விவரிக்கும் உந்துதல் இந்த 2 கிரியைகளில் ஒன்றையாகிலும் போன்றதல்ல.
பின்பு, வெளிப்பாடு, உந்துதல் மற்றும் பிரகாசிப்பித்தல்ஆகிய இம்மூன்றும் எவ்வாறு ஒன்றாக கிரியை செய்கின்றன?
வெளிப்பாடு: சத்தியத்தை அளித்தல்
உந்துதல்: அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொண்டு அதைப் பதிவு செய்தல்
பிரகாசிப்பித்தல்: வெளிப்படுத்தப்பட்டு, உந்துதலளிக்கப்பட்ட சத்தியத்தைப் புரிந்து கொள்ளுதல்
வேத வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சத்தியத்தின் வெளிப்பாட்டை தேவனால் மட்டுமே மனுக்குலத்திற்கு அளிக்க முடியும். அது தேவனிடத்திலிருந்து மனிதனுக்கு அளிக்கப்படும் ஒரு தெய்வீக செய்தியாகும்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் இந்த தெய்வீக செய்தியைப் பெற்றுக் கொண்டு பின்பு அதை மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக அதைப் பதிவு செய்த முறை அல்லது வழி உந்துதல் எனப்படுகிறது.
தேவனால் வெளிப்படுத்தப்பட்டவைகளை மனிதன் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவனுடைய மனதும், இருதயமும் பிரகாசிப்பிக்கப்பட வேண்டும்.
“எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டும்.” (யோவான்: 14:26).
“சத்திய ஆவியானவர் நம்மை பிரகாசிப்பிக்கிறார்” (யோவான்: 14:17).
“ஜீவ சுவாசம்”
வேத வாக்கியங்கள் தேவனுடைய உந்துதலினால் எழுதப்பட்டவை:இது வேதாகமத்தைக் குறித்து மிக முக்கிய உண்மைகளில் ஒன்றாகும். வேத வாக்கியங்கள் தேவனுடைய சொந்த சிருஷ்டிப்பின் வல்லமையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவை என்பது இதன் பொருள்.
மனிதன் தேவனைக் குறித்து உலகத்திற்கு அறிவிப்பதற்காக உபயோகிக்கும் வார்த்தைகளாலும், கருத்துக்களாலும் வேதாகமம் எழுதப்படவில்லை. தேவன் தாமே, பரிசுத்த ஆவியானவரின் மூலமாக, அதி முதல் அந்தம் வரை வேத வாக்கியங்களின் நூலாசிரியராகவும், வடிவமைப்பாளாராகவும் இருந்தார். அவர் தம்மைக் குறித்தும், மனுக்குலத்திற்கான தம்முடைய திட்டத்தைக் குறித்தும் நமக்குக் கூறுவதற்காக வேதாகமத்தை நேரடியாக “பிறப்பித்தார்”
ஏற்கனவே கூறியதுபோல, வேதாகமத்தை எழுதியவர்கள் தேவனால் “பிறப்பிக்கப்பட்டார்கள்” என்பது இதன் பொருளல்ல; வேதாகமம் தேவனால் பிறப்பிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். தேவனுடைய பிறப்பிக்கும் சுவாசத்தினால் தேவனுடைய வார்த்தை உருவாக்கப்பட்டது.
தேவன் ஆதாமுக்கு “ஜீவ சுவாசத்தை” (ஆதியாகமம்: 2:7) அளித்ததுபோல, அவர் வேதாகமத்திற்குள் உயிர்ப்பிக்கிற தம்முடைய ஆவியை அளித்தார். (யோவான்: 6:63).
எனவே, வேதாகமம் தேவனுடைய சொந்த “வாக்கு” அல்லது “சுவாசமாக” இருக்கிறபடியால், அது “தேவனுடைய வார்த்தை” என்று சாியாக அழைக்கப்படுகிறது.
தேவனுடைய வாா்த்தை நமக்கு விலையேறப் பெற்ற ஜீவனை அளிக்கும் மூலாதாரம் (யோவான்: 6:63). அது ஜீவனும், வல்லமையுடையது (எபிரேயர்: 4:12).
நாம் தேவனுடைய வார்த்தையை பரிசுத்தமுள்ள பயத்துடனும், மரியாதையுடனும் கவனமாக வாசித்து, அதில் புதைந்து கிடக்கும் சத்தியங்களின் ஆழங்களை தோண்டியெடுப்பதற்கு நாட வேண்டும்.
B. வேதாகமம் - நாம் அதை நம்ப முடியுமா?
பிழையற்ற தன்மையின் கோட்பாடு (Doctrine of Inerrancy)
முந்திய பகுதியில், தேவன் வேத வாக்கியங்களை “பிறப்பித்தார்” என்ற அடிப்படையான உண்மையை பார்த்தோம். வேதாகமம் மனிதர்களின் கண்டுபிடிப்பு, கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்களாயிராமல் - தேவனுடைய வார்த்தையாயிருக்கிறபடியால், நாம் அதை முற்றிலுமாக நம்ப முடியும். இந்த ஆதாரத்தின் அடிப்படையில், நாம் பிழையற்ற தன்மையின் கோட்பாட்டை அறிந்து கொள்ளலாம்.
நம்பத்தக்கதது, பிழையற்றது
“பிழையற்ற தன்மை” என்றால் என்ன?
பிழையற்ற தன்மை என்பது:
வேதாகமத்தின் எழுத்தாளர்களால் (தேவனால் பிறப்பிக்கப்பட்ட வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள்) தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதியின் மூலப் படிவங்களிலும் தவறுகள் அல்லது பிழைகள் இல்லை.
பிழையற்றது என்ற வாா்ததைக்கு பதிலாக தவறற்றது என்ற வார்த்தையையும் உபயோகிக்கலாம். தவறற்றது என்றால், இரட்சிப்பையும், தேவனிடம் மனிதனுக்குள்ள உறவு முறையையையும் குறித்த வேதாகமத்தின் அடிப்படையான செய்தி முற்றிலுமாக நம்பத்தக்கது என்று பொருள்.
வேதாகமம் பிழையற்றது (பிழைகள் இல்லாமல்) மற்றும் தவறற்றது நம்பத் தகுந்தது என்று நாம் விசுவாசிக்கிறோம்.
இதை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்கு வேதாகமத்தின் எந்த ஒரு வாக்கியத்தையும் குறித்த மூன்று கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும். அவை:
1. அவ் வேத வாக்கியத்தை எழுதின எழுத்தாளர் அது ஒரு உண்மையான கருத்தைக் கூறுகிறாரா? - அல்லது ஒரு பொய்யை மிகவும் சாியாக, பிழையில்லாமல் பதிவு செய்கிறாரா?
உதாரணமாக, தவறான ஒரு கருத்தை நாம் உண்மையுடனும், பிழையில்லாமலும் எழுதலாம். ஆதியாகமத்தில், நன்மை தீமை அறியத்தக்க ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பது குறித்து சாத்தான் கூறிய பொய் சாியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது:“நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சாத்தான் கூறினான். (ஆதியாகமம்: 3:4); என்றாலும், அப்படிப்பட்ட கீழ்ப்படியாமையின் செயல் மரணத்தினால் தண்டிக்கப்படும் என்று தேவன் முன்னதாகவே கூறியிருக்கிறார் (ஆதியாகமம்: 3:3).
வேதாகமத்தில், சாத்தான் ஏவாளை வஞ்சித்த விதம் பிழையில்லாமலும், உண்மையுடனும் விவரிக்கப்பட்டுள்ளது.
இது இந்த உதாரணத்தின் பிழையற்ற தன்மையாகும்.
2. வேத வாக்கியத்தின் எழுத்தாளர் நேரிடையான விஞ்ஞான மொழி நடையில் எழுதியுள்ளாரா - அல்லது வழக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மொழி நடையை உபயோகப்படுத்துகிறாரா?
வேதாகம எழுத்தாளர்கள் “பூமியின் நான்கு திசைகள்” (ஏசாயா: 11:12) என்று எழுதினபோது, அவா்களுக்கு புவியியலைக் குறித்த சரியான அறிவு இருந்ததில்லை என்று சிலர் கூறலாம்.அல்லது “வானத்தின் மதகுகள்” (ஆதியாகமம்: 7:11) என்ற சொற்றொடர் அண்ட சராசரத்தைக் குறித்து ஒரு தவறான, கற்பனையான தோற்றத்தை அளிக்கிறது என்றும் அவர்கள் கூறலாம்.
என்றாலும், இந்த மொழி நடை ஒரு அடையாளமான அல்லது மறைபொருளை அர்த்தத்துடனும், நோக்கத்துடனும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால், எந்தக் குழப்பமும் ஏற்படுவதற்கு இடமில்லை.
நாம் சூரியன் “உதிப்பதைக்” குறித்தும், “அஸ்தமிப்பதைக்” குறித்தும் அடிக்கடி பேசுகிறோம். விஞ்ஞானத்தின்படி, இது நேரிடையாக உண்மையல்ல - ஏனென்றால், பூமியே சுற்றுகிறது. சூரியன் அல்ல.
ஒரு விசேஷமான அர்த்தத்தின்படி இது உண்மை - ஏனென்றால், பூமியிலிருந்து பார்க்கும்போது, சூரியன் உதிப்பது போலவும், அஸ்தமிப்பது போலவும் காட்சியளிக்கிறது.
நம்முடைய செய்தி நிறுவனங்கள் “சூரியன் உதிக்கும்” நேரத்தையும், அது “அஸ்தமிக்கும்” நேரத்தையும் அறிவிக்கும்போது, அவர்கள் தவறாக அறிவிக்கிறார்கள் என்று நாம் அவர்களைக் குற்றம் சாட்ட முடியாது!
3. வேத வாக்கியத்தின் எழுத்தாளர் “ஏறக்குறைய சரியான” எண்ணிக்கைகளைக் குறித்துக் கூறுகிறாரா? அல்லது அவர் ஒரு துல்லியமான கணக்கீட்டை அளிக்கிறாரா?
வேதவாக்கியத்தில் அளிக்கப்பட்ட எண்ணிக்கை ஏறக்குறைய சரியாக இருக்குமென்றால், அதில் கூறப்பட்டவை முற்றிலுமாக உண்மையானவை என்று ஏற்றுக் கொள்ள முடியும்.நம்முடைய அன்றாட பேச்சு வழக்கில் இப்படிப்பட்ட எண்ணிக்கை கணக்கீடுகளை அதிகமாக உபயோகிக்கிறோம். வேத வாக்கியத்தின் நோக்கத்திற்கு ஒரு துல்லியமான எண்ணிக்கை அளிக்கப்பட வேண்டியதன் அவசியமில்லாதபோது, இந்தக் கணக்கீடுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
வேதவாக்கியத்தின் பிழையற்ற தன்மையைக் குறித்துப் பேசும்போது, எழுத்தாளரின் நோக்கத்தில் உள்ள பொருள், அச்செய்தியை அளிப்பதற்கான காரணம் மற்றும் வேத வாக்கியங்களின் உண்மையை வெளிப்படுத்தும் அவருடைய மொழி நடை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
வேதாகமத்தின் உள்ளே
பிழையற்ற தன்மையின் சான்று
பிழையற்ற தன்மையின் கோட்பாடு எங்கிருந்து வருகிறது?பிழையற்ற தன்மையின் சான்று
வேதவாக்கியங்களிலிருந்து என்பது இக் கேள்விக்கான பதில். வேதாகமம் தன்னுடைய பிழையற்ற தன்மையைக் குறித்து என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:
1. வேத வாக்கியங்களின் சாட்சி:
அ) பழைய ஏற்பாடு: பழைய ஏற்பாட்டில் “...என்று கர்த்தர் கூறுகிறார்” போன்ற சொற்றொடர்கள் 3,800 முறைக்கும் மேலான இடங்களில் இடம் பெற்றுள்ளன. பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் தாங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து பேசுவதைக் குறித்து முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்... கர்த்தருடைய சாட்சி சத்தியமுமாயிருக்கிறது” (சங்கீதம்: 19:7) என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறான்.
வேதாகமத்தின் முழுமையான நம்பகத்தன்மைக்கு இது ஒரு நேரிடையான ஆதாரமாகும். “உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்” (சங்கீதம்: 119:160). “அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்” (சங்கீதம: 111:7). நீதிமொழிகளும் இதே கருத்தைத் தொிவிக்கிறது: “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்” (நீதிமொழிகள்: 30:5).
“கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2சாமுவேல்: 23:2) என்று இராஜாவாகிய தாவீது கூறுகிறான். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற மற்ற பல தீர்க்கதரிசிகளும் இதைப் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தகிறார்கள்.
ஆ) புதிய ஏற்பாடு: புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள், தேவன் தங்களுடன் பேசினார் என்ற உண்மைக்கும் சாட்சியளிக்கிறார்கள். சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்களில் உள்ள பல வேத வாக்கியங்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. (லூக்கா: 1:70; எபிரேயர்: 4:12; ரோமர்: 7:12; யாக்கோபு: 4:5).
வேதாகமத்தின் போதனை மற்றும் உந்துதலின் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அனைத்துக் கருத்துக்களையும் நாம் ஆராயும்போது, வேதாகமம் தன்னுடைய சொந்த பிழையற்ற தன்மையைப் போதிக்கிறது என்று திட்டமாக அறிகிறோம்.
எனவே, வேதவாக்கியங்களை எழுதினவர்கள் தேவனுடைய வார்த்தையைக் குறித்துப் பேசினார்கள். தேவனுடைய வார்த்தையை எழுதினார்கள் என்பது தெளிவாகிறது.
ஆனால், வேத வாக்கியங்களின் பிழையற்ற தன்மைக்கு மிகப் பெரிய சாட்சிகளில் ஒன்று பின் தொடர்கிறது:
அது ...
2. இயேசு கிறிஸ்துவின் சாட்சி:
தேவ குமாரனாகிய இயேசு, வேத வாக்கியங்களின் முழுமையான தெய்வீக அதிகாரத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் சாட்சியளித்தார். அவர் குறிப்பாக பழைய ஏற்பாட்டின் நிறைவை பின்வருமாறு உறுதிப்படுத்துகிறார்: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” (லூக்கா: 22:44).பரிசேயர்கள் இயேசுவினிடம் தர்க்கித்தபோது, அவர் “வேதவாக்கியம் தவறாதது” (யோவான்: 10:35) என்று கூறினார். அவர் வேத வாக்கியத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் போதித்தார்.
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் (ஒரு சிறிய எபிரேய எழுத்து) ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் (ஒரு எபிரேய எழுத்தின் சிறிய உறுப்பு) ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லகிறேன் (மத்தேயு: 5:17,18).
குறிப்பாக, இயேசு பல பழைய ஏற்பாட்டு சம்பவங்களையும், நபர்களையும் குறித்துக் கூறினார். தம்முடைய போதனையில் இவைகளைக் குறிப்பிடுவதால் அவைகள் முழுமையாக நம்பத்தக்கவை என்று உறுதிப்படுத்தும் வகையில், இயேசு தம்முடைய ஒப்புதலின் முத்திரையை அவைகளின் மீது பதிக்கிறார்.
அது பற்றிய சுவிசேஷங்களிலுள்ள இக்குறிப்புகளின் ஒரு பட்டியல்:
சிருஷ்டிப்பு மற்றும் திருமணம் - மத்தேயு: 19:5
ஜலப்பிரளயம் மற்றும் நோவாவின் பேழை - லூக்கா: 17:26, 27
சோதோம் மற்றும் கொமாராவின் அழிவு - லூக்கா: 17:28,29
தீரு மற்றும் சீதோனின் அழிவு - மத்தேயு: 11:21,22
விருத்தசேதனம் - யோவான்: 7:22
பஸ்கா - மத்தேயு: 26:2
நியாயப்பிரமாணம் - யோவான்: 7:19
கட்டளைகள் - மத்தேயு: 19:7-9
யூத விவாகரத்து சட்டம் - மத்தேயு: 19:7-9
எரிகிற முடசெடியின் உண்மை - மாற்கு: 12:26
யோனா மற்றும் பெரிய மீனின் அனுபவம் - மத்தேயு: 12:40
நினிவேயின் மனந்திரும்புதல் - மத்தேயு: 12:41
சாலமோனின் மகிமை - மத்தேயு: 6:29
சாலமோனின் ஞானம் - மத்தேயு: 12:42
கூடாரப் பண்டிகை - யோவான்: 7 ம் அதிகாரம்
தாவீது சமூகத்து அப்பங்களைச் சாப்பிடுதல் - மத்தேயு: 12:3
ஆசாரியர்கள் ஓய்வு நாளைப் பரிசுத்த குலைச்சலாக்குதல் - மத்தேயு: 12:5
எலியாவின் நாட்களில் வானம் அடைபட்டது - லூக்கா: 4:25
குஷ்டரோகியான நாகமானின் சம்பவம் - லூக்கா: 4:27
உலோக சர்ப்பத்தின் சம்பவம் - யோவான்: 3:14,15
ஆபேல் மற்றும் சகரியாவின் கொலை - மத்தேயு: 23:35
மேசியாவின் பணி - லூக்கா: 4:16-21
யோவான்ஸ்நானகனின் பணி - மத்தேயு: 17:10-13
எலியாவின் பணி - மத்தேயு: 17:10-13
தானியேலும், அவனுடைய மேலான தீர்க்கதரிசனமும் - மத்தேயு: 24:15
3. தீர்க்கதரிசனத்தின் சாட்சி
வேத வாக்கியத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் யாவும் முழுமையாக நிறைவேறின என்ற உண்மை வேதாகமத்தின் பிழையற்ற தன்மைக்கு ஒரு வல்லமையான சாட்சியாகும். வேதாகமத்தில் சம்பவங்களைக்குறித்த எந்த நிபந்தனையற்ற தீர்க்கதரிசனமும் - இன்றைய நாளின் சம்பவங்களைக் குறித்தத் தீர்க்கதரிசனங்கள் உள்பட - நிறைவேறாமல் போகவில்லை! பிற்காலங்களைக் குறித்த இந்த தீர்க்தரிசனங்கள் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே அளிக்கப்பட்டன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்த 333 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன என்று சில வேத பண்டிதர்கள் கூறுகின்றனர்.
ஒரு தனிப்பட்ட நபரைக் குறித்த பல தீர்க்கதரிசனங்கள் தற்செயலாக நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறு 83 பில்லியனில் ஒன்று என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நபர் தேவனைக் குறித்த 8 தீர்க்கதரிசனங்களை மட்டும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறு நம்ப முடியாத அளவிற்கு மிகவும் குறைவாகும்.
இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த 300 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ள ஒரு குறிப்பிடத்தக்க அற்புதத்தை சிந்தித்துப் பாருங்கள்! உண்மையில், ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் அறிந்த தேவன் மட்டுமே வேதாகமத்தின் ஒரே நூலாசிரியர். (வெளிப்படுத்தல்: 1:17,18).
கிறிஸ்துவைக் குறித்த பெரும்பாலான தீர்க்தரிசனங்கள் அவருடைய பிறப்பிற்கு பல நூறு வருடங்களுக்கு (சில தீர்க்கதரிசனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு) முன்பாக அளிக்கப்பட்டன என்றாலும், அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின. மற்ற தீர்க்கதரிசனங்கள் - அறிவு மற்றும் மக்கள் தொடர்பின் பெருக்கம் (தானியேல்: 12:4) மற்றும் இஸ்ரேல் ஒரு தேசமாக நிலைநிறுத்தப்படுதல் (ஏசாயா: 61:4) - போன்றவை நம்முடைய காலங்களில் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
தேவனுடைய பரிசுத்த வார்த்தையில் உள்ள தீர்க்கதரிசனங்கள் மனிதனால் எழுதப்பட்டவை அல்ல. மனிதனுடைய வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்களை எதிர்காலத்தை அறிந்திருக்கின்ற தேவன் ஒருவரால் மட்டுமே அத்தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற முடியும்.
“வேதாகமத்திற்கு வெளியே பிழையற்ற தன்மையின் சான்று”
வேதாகமத்தில் மிகுதியான சரித்திரக் குறிப்புக்கள் உள்ளபடியால், அதனுடைய பிழையற்ற தன்மையை நாம் சரி பார்க்க முடியும். வேதாகமத்தின் பிழையற்ற தன்மையை சரி பார்ப்பதற்கு இரண்டு விதமான சான்றுகள் உள்ளன.அ) தொல் பொருள் ஆராய்ச்சியின் சான்று
ஆ) பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களின் சான்று
அ) தொல் பொருள் ஆராய்ச்சியின் கண்டு பிடிப்புகளிலிருந்து கிடைக்கும் சான்று:
தொல் பொருள் ஆராய்ச்சியின் எந்தக் கண்டுபிடிப்பும் ஒரு வேதாகம குறிப்பை தவறு என்று நிருபித்தது கிடையாது என்பதை கருத்தில் கொள்வது முக்கியமாகும். உண்மையில் வேதாகமத்தைக் குறித்த 25,000 இடங்கள் தொல் பொருள் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் பல விதமான சம்பவங்கள், மக்கள், வம்ச வரலாறு போன்றவற்றைக் குறித்த வேதாகமக் குறிப்புகளின் பிழையற்ற தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன. தொல் பொருள் ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது. பல தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சரித்திர இடங்களை கண்டு பிடிப்பதற்காக வேதாகமத்தைப் பணன்படுத்துகிறார்கள்!
ஆ) பண்டைய காலத்தின் ஆவணங்களிலிருந்த சான்று:
பல பத்தாண்டுகளுக்கு முன், ஆடுகளை மேய்க்கும் சிறுவன் பல பெரிய கல்லறைகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பண்டைய கால ஆவணங்களை கண்டு பிடித்தான். இந்த ஆவணங்கள் “சவக்கடல் சுருள்கள்”என்று அழைக்கப்பட்டன. அவைகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு பிரதிகளில் பல இருந்தன. ஏற்கனவே இருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளுடன் அவைகளை ஒப்பிடும்போது, எந்த முக்கியமான வேறுபாடுகளும் காணப்படவில்லை!
இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், ஏற்கனவே உள்ள பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் முழுமையான பிரதிகளைவிட சவக்கடல் சுருள்கள் 1000 வருடங்கள் பழமையானவை.
சுருங்கக் கூறினால், உலகப்பிரகாரமான எந்த இலக்கியத்தையும்விட, வேதாகமத்திற்கு அதிகமான பண்டைய கால எழுத்துச் சான்றுகள் உண்டு. பண்டைய காலங்களிலிருந்த வேதாகமம் ஒரு சிறந்த ஆவணமாக திகழுகிறது. வேதாகமம் பண்டைய கால புத்தகங்களைவிட முற்றிலுமாக நம்பத்தக்கது என்று உறுதியுடன் கூறலாம்.
ஆயிரக்கணக்கான வருடங்களான வேதாகமம் எந்த மாற்றத்திற்குட்படாமலும், நம்பக்கூடிய அளவிற்கு பிழையில்லாமல் நீடித்திருக்கிறது!
“பிழையில்லாத சத்தியம்”
வேதாகமம் தெய்வீக வழிநடத்துதலினால் எழுதப்பட்டது என்பதற்கு, தொல்பொருள் ஆராய்ச்சியும், பண்டையகால ஆவணங்களும் ஒரு மறைமுகமான, ஆனால், போதிய நிருபணத்தை அளிக்கிறது. கண்கூடக் காணக்கூடிய இந்த உண்மையான சான்றுகளில் வேதாகம பிழையற்றதாக இருக்குமென்றால், அது தன்னுடைய ஆவிக்குரிய உண்மைகளிலும் பிழையற்றதாக இருக்குமென்பது மிகவும் நிச்சயமாகும்.வேதாகமத்தின் பிழையற்றதன்மை மற்றும் நம்புவது ஆகியற்றைப் பொறுத்தவரையில், அதிலுள்ள சத்தியத்தை அறிவிப்பது யார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவன் பிழையற்ற சத்தியத்தை அறிவிக்கிறார். இது உண்மை. ஏனென்றால், ஒப்புயர்வற்ற, “சத்திய தேவன்” (ஏசாயா: 65:16), “பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல” (எண்ணாகமம்: 23:19; தீத்து: 1:3; எபிரேயர்: 6:18).
எனவே, தேவன் சத்தியமுள்ளவரானபடியால் (யோவான்: 3:3; 17:3), அவருடைய வார்ததையும் சத்தியமாகும் (யோவான்: 17:17); தேவன் மீதான நம்முடைய விசுவாசத்தையும், அவ்விசுவாசத்தின் கிரியையும் வாழ்க்கை மற்றும் ஒழுக்கத்தையும் முற்றிலுமாக வழி நடத்தும் ஒரு நம்பகமான வழிகாட்டியாக அவருடைய வார்த்தை செயல்படுகிறது.
C. வேதாகமம்: நாம் அதை எவ்வாறு புரிந்து கொள்வது?
பொருள் விளக்கத்தின் சட்டங்கள் (Law of Interpretation):
முதன்மையானமுக்கியத்துவம்:
இதுவரை பின்வரும் குறிப்புகளை குறித்து பார்த்தோம்;பொருள் விளக்கத்தின் சட்டங்கள் (Law of Interpretation):
முதன்மையானமுக்கியத்துவம்:
1. அனைத்து வேத வாக்கியங்களும் நமக்கு தேவனால் அளிக்கப்படடவை; அவை மனிதர்களின் கண்டுபிடிப்போ அல்லது அபிப்பிராயோமோ இல்லை... எனவே...
2. தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் முற்றிலுமாக பிழையற்றது; இரட்சிப்பு மற்றும் கிறிஸ்துவ வாழ்க்கையைக் குறித்து நாம் அறிய வேண்டிய அனைத்திலும் முழுமையாக நம்பகமானது.
இந்த அடிப்படையான இரண்டு கொள்கைகளும் உண்மையாயிருப்பதால், நாம் ஒரு சரியான தொலை நோக்குடன் வேதாகமத்தை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கைக்கொள்ளும்படி நாட வேண்டும்.
தேவன் தம்முடைய வார்த்தையை அளிப்பதற்கு பல நூற்றாண்டுகளாக மிகுதியான பிரயாசத்தை மேற் கொண்டார். அவர் நிச்சயமாக நமக்கும் அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட நோக்க்த்திற்காக அதை நமக்கு அளித்துள்ளார்.
எனவே, நாம் அதை வாசித்து, சரியாகப் புரிந்து கொண்டு, நம்முடைய வாழ்க்கையிலும், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அதை முறையாக உபயோகப்படுத்துவது நம்முடைய முதன்மையான முக்கியத்துவமாக இருக்க வேண்டும்.
முயற்சி செய்யுங்கள்!
நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரிடமிருந்து ஒரு முக்கியமான கடிதம் வருகிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கடிதம் மிகுந்த வேதனையிலும், தியாகத்திலும் அனுப்பப்படுகிறது. அந்த கடிதம் வேறொரு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதில் எழுதப்பட்டுள்ளவற்றை புரிந்து கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி செய்வீர்கள் அல்லவா?அப்படியானால், உங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, ஜீவனுள்ள சத்தியம் அடங்கியுள்ள, தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எவ்வளவு அதிகமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்!
துரதிர்ஷ்டவசமாக, வேதாகமத்திற்கு, பலரும் பல வித்தியாசமான வழிகளில் பொருள் விளக்கமளிக்கிறார்கள். இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், குழப்பத்தையும் அளித்துள்ளது.
நாம் நம்முடைய சொந்த அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்காக வேத வாக்கியங்களுக்கு விளக்கமளிக்கக்கூடாது.
“பாதையைப் பின்பற்றுங்கள்”
கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவயங்களாகவும், தலைவர்களாயிருக்கும் ஒவ்வொருவரும், “வெட்கப்படாத ஊழியக்காரர்களாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாயும், தேவனுக்கு முன்பாக உத்தமர்களாக (நம்மை) நிறுத்துவதற்கு ஜாக்கிரதையாயிருக்கும்படி” (2தீமோத்தேயு: 2:15) வேதாகமம் கட்டளையிடுகிறது.“பகுத்து” என்ற வார்த்தை ஆர்த்தோடோர்னவுட்டா (Orthotornounta) என்ற கிரேக்க வார்த்தயைலிருந்து வருகிறது; “வெட்டுதல்” என்பது இவ்வார்த்தையின் நேரடியான பொருள். இந்த வார்த்தை, நிலத்தை உழுவது, அல்லது ஒரு சாலையைக் கட்டுவது ஆகியவற்றை விளக்குவதற்காக உபயோகிக்கப்படுகிறது.
ஒரு உண்மையான அர்ப்பணிப்புடைய “வேலையாள்” (கிரேக்க வார்த்தை - ergon- “உழைப்பு”, “முயற்சி”) தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை அளிப்பதில் மிகவும் சரியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று பவுல் இந்த வேதபகுதியில் வலியுறுத்துகிறார்.
ஒரு தேவ ஊழியர் தேவனுடைய வார்த்தையின்படியான வாழ்க்கைப் “பாதையைப்” பின்பற்ற வேண்டும்; தன்னுடைய போதனையினாலும், முன் மாதிரியினாலும் மற்றவர்களும் அதையே செய்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும்.
தேவனுடைய வார்த்தையைப் “பகுத்தல்” என்றால் அதை இரண்டு துண்டாக வெட்டுவது என்பது பொருளல்ல. மாறாக, வேதாகமத்திலுள்ள சத்தியங்களையும், கொள்கைகளையும், பகுத்துணர்ந்து, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி, பின்பு அதை உண்மையுடன் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
“பொருள் விளக்கம்”
வேதாகமத்திற்கு பொருள் விளக்கமளிப்பது எப்படி? என்பதைக் குறித்து பார்ப்போம். இது பொருள் விளக்க சாஸ்திரம் அல்லது Hermeneutics” என்று அழைக்கப்படுகிறது.வேதவாக்கியங்களின் சத்தியங்களை நம்முடைய அனுதின நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தாவிட்டால், தேவனுடைய வார்த்தையைக் குறித்த பல்வேறு கோட்பாடுகளைக் கற்பதில் அதிகமான பயன் இல்லை. வேத வாக்கியங்களின் சத்தியங்களை நாம் கைக் கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தையில் உள்ள பயங்கரமான வல்லமையையும் அபிஷேகத்தையும் நாம் அனுபவிக்கத் துவங்குகிறோம்!
தேவனுடைய வார்த்தையை சரியாகப் புரிந்து கொண்டு, அதை நம்முடைய வாழ்க்கையில் உபயோகிப்பதற்கு, நாம் 3 முக்கியமான குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்:
1. வேதவாக்கியங்களின் மூலம் சர்வ வல்லமையுள்ள தேவன் அனைத்து மக்களிடமும் அதிகாரத்துடன் பேசுகிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக நாம் வேதாகமத்தை வாசிக்கத் துவங்க வேண்டும்.
2. நாம் வேதாகமரீதியாக கேட்கும் திறனை உருவாக்க வேண்டும் - தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து, கீழ்படிவது என்பது இதன் பொருள்.
3. வேதாவாக்கியங்களுக்கு கவனமாக பொருள் விளக்கமளிப்பதற்குத் தேவையான நடைமுறைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்.
“தேவனுடைய வார்ததைக்கு பொருள் விளக்கமளித்தலும் அதைக் கற்றுக் கொள்ளுதலும்”
வேதாகமம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாயிருப்பதாக பலர் உணருகிறார்கள். சரித்திரக் காலத்தில், மக்கள் வேதாகமத்தை வாசிக்காதபடி சபைத்தலைவர்கள் அவர்களைத் தடுத்தார்கள். ஏனென்றால், அது அவர்களைக் குழப்பி விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். இப்படியாக, வேதவாக்கியங்களின் பொருள் விளக்கங்களை சபையின் கல்விமான்களும், வேதசாஸ்திரிகளும் மட்டுமே கற்றறிந்தார்கள்.ஆனால், தேவன் தம்முடைய வார்த்தையை ஒருபோதும் ஒரு சிலருக்காக மட்டும் அளிக்கவில்லை! ஒவ்வொரு மனிதனும் வேதவாக்கியங்களை அறிந்து அவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
வேதாகமம் எழுதப்பட்ட மூலபாஷைகளைக் கற்பதும், வேதாகம காலத்தின் கலாச்சாரங்களை அறிந்து கொள்ளுதலும் வேதாகமத்தை நன்கு கற்றறிவதற்கு பயனுடையவையாக இருக்கும். ஆனால், அவைகளை அறிவது அத்தியாவசியமானது அல்ல. ஏனென்றால், இரட்சிப்பின் சத்தியங்கள் மற்றும் நம்முடைய இரட்சகருடனான நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான சத்தியங்கள் ஆகியவை அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியவையாகும். வேதவாக்கியங்களும் இக்கருத்துக்களை வலியுறுத்துகின்றன.
உதாரணமாக, தீர்க்கதரிசனங்களைக் குறித்து தீர்மானிக்கும் கடமையை மக்கள்தாமே பெற்றிருந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது (1கொரிந்தியர்: 14:29). அவர்கள் பெற்றுக் கொண்ட சத்தியத்தின் அடிப்படையில் இக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் (உபாகமம்: 13:1-5; கலாத்தியர்: 1:8,9; அப்போஸ்தலர்: 17:10-12).
தேவனுடைய வார்த்தை அனைத்து மக்களுக்கும், அனைத்துக் காலங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, பரிசுத்த வேத வாக்கியங்களைக் கற்பதற்கும், அவற்றிற்கு பொருள் விளக்கமளிப்பதற்கும் தேவையான 10 முக்கியமான கொள்கைகளை இனி பார்ப்போம்.
1. உங்களுடைய வேதாகமத்தை பொருளின் அடிப்படையில் வாசியுங்கள்:
வேதாகமத்தில் ஒரு தலைப்பை அல்லது வார்த்தையைத் தொிந்து கொண்டு, அந்த தலைப்பு அல்லது வார்த்தையைக் குறித்த ஒவ்வொரு வேதாகம குறிப்பையும் தேடுங்கள்.
உதாரணமாக: “மீட்பு” என்ற வார்த்தை வேதாகமத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. உங்களிடம் ஒத்த வாக்கிய விளக்கவுரை (கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் கிடைக்கும்) இருந்தால், “மீட்பு” “மீட்பர்” போன்ற வார்த்தைகள் இடம் பெறும் வேதவாக்கியங்களைக் கண்டு பிடியுங்கள். வேதாகமத்தில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படும் பல வேதவாக்கியங்களை வாசிப்பதன் மூலம், ஒரு வேதாகம பொருள் அல்லது வார்த்தையைக் குறித்து நாம் அதிகமாக புரிந்து கொள்ள முடியும்.
2. வேத வாக்கியம் வேத வாக்கியத்திற்கு பொருள் விளக்கமளிக்கட்டும்:
வேத வாக்கியத்தின் தனிப்பட்ட பகுதிகள் வேத வாக்கியங்களின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்திருப்பதில்லை; அவை தேவனுடைய முழுமையான வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
எனவே, வேத வாக்கியத்தின் ஒவ்வொரு பகுதியும், முழு வேதாகமத்தினுடைய சத்தியத்தின் அடிப்படையில் பொருள் விளக்கமளிக்கப்பட வேண்டும்.
வேதாகமம் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டிருந்தாலும், அது இன்னும் ஒரு ஒருங்கிணைந்த இணக்கமுள்ள புத்தகமாகும். ஏனென்றால், பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் ஒருவரால் மட்டுமே அது எழுதப்பட்டது.
உதாரணமாக: வெளிப்படுத்தல்: 13:16-18 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “மிருகத்தின் முத்திரையைக்” குறித்து, அது என்னவாயிருக்கும் என்று பல ஊகங்கள் எழும்பின. அது நம்முடைய கையில் அல்லது நெற்றியில் வைக்கப்படும் ஒரு கணிப்பொறி துணுக்கு (Computer Chip) என்று சிலர் நினைக்கிறார்கள். வேறு சிலர் அது பச்சைக் குத்துவது போன்ற ஒரு முத்திரை என்று கூறுகின்றனர்.
ஆனால், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, வேதாகமத்தில் “நெற்றி” என்ற வார்த்தை நம்முடைய சித்தத்தையும், சிந்தனையையும் குறிக்கிறது என்று அறிகிறோம்.
வேதாகமத்தில் , “கை” என்ற வார்த்தை நம்முடைய வேலை அல்லது கிரியைகளைக் குறிக்கிறது. ஒரு “முத்திரையை” பெறுவது என்பது தற்செயலாக நிகழக்கூடியது அல்ல. நாம் நம்முடைய அறியாமையினால் “முத்திரையை” பெறவும் முடியாது, முத்திரையை பெறுவதற்கு, நாம் மிருகத்தை ஆராதிக்க வேண்டியிருக்கும். (வெளிப்படுத்தல்: 13:15).
மிருகத்தை ஆராதிக்க வேண்டுமென்றால், அதை ஆராதிக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் தீர்மானித்து, நம்முடைய செயல்களினால் அத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அந்த தீர்மானத்தை அனைவரும் காணும் வகையில் அது தெளிவான ஒன்றாயிருக்கும்.
“மிருகத்தின் முத்திரை” ஒரு தொழில் நுட்பக் கருவியை விட அதிகமானது. அது அந்திக்கிறிஸ்துவிற்கு நாம் அளிக்கும் விசுவாசம் மற்றும் உண்மையைக் குறித்ததாயிருக்கக் கூடும் அல்லது அது தேவனை மட்டும் குறித்ததாயிருக்கக் கூடும்.
அந்த “முத்திரை” உண்மையில் என்னவாயிருக்கும் என்று நமக்கு தெரியாது - ஆனால், விசுவாசிகளுக்கு அது ஒரு திகைப்பாக இருக்காது அல்லது அந்த முத்திரையை அவா்கள் தற்செயலாகப் பெறமாட்டார்கள் என்று வேதாகமம் தெளிவாக நமக்குக் கூறுகிறது.
3. சுற்றியுள்ள மற்ற வசனங்களை கவனியுங்கள்:
வேதவாக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும்போது, அவ்வசனத்திற்கு முன்பாகவும், அவ்வசனத்திற்குப் பிறகும் உள்ள வசனங்களையும் கவனிப்பது மிகவும் முக்கியமாகும்.
பின்வரும் கேள்விகளுக்கு விடை காண அது உதவியாயிருக்கும்:
- குறிப்பிட்ட வசனம் யாருக்காக கூறப்பட்டது?
- அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாதங்கள் அல்லது சூழ்நிலைகள் யாவை?
- இந்த வசனத்தை அதைச் சுற்றியுள்ள வசனங்கள் இன்னும் தெளிவாக விளக்குகின்றனவா?
ஒரு வசனத்தை அல்லது ஒரு வசனத்தின் சொற்றொடரை, பரிசுத்த ஆவியானவரால் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து எடுத்து, வேறு இடத்தில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது அந்த வசனத்திற்கு மிகவும் தவறான விளக்கம் அளிக்கிறது.
ஒரு இளைஞன் தேவனிடத்திலிருந்து ஒரு வார்த்தையைப் பெறுவதற்கு முயற்சித்ததை குறித்த ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. அவன் தன்னுடைய வேதாகமத்தை திறந்து, பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தான். சில நிமிடங்களுக்கு பின்பு, அவன் பக்கங்களை புரட்டுவதை நிறுத்தி, திறந்திருக்கும் பக்கத்தில் தன்னுடைய விரலை வைத்து, அவனுடைய விரல் குறிப்பிடும் வசனத்தை வாசித்தான். அவன் வாசித்த வசனம் இவ்வாறு கூறியது: “யூதாஸ் புறப்பட்டுப்போய், நான்று கொண்டு செத்தான்” (மத்தேயு: 27:5).
இந்த வார்த்தை அவனை திடுக்கிடச் செய்தது. எனவே, அவன் மறுபடியும் முயற்சித்தான். இந்த முறை அவனுடைய விரல், லூக்கா: 10:37 - வசனத்தின் மீது இருந்தது. “நீயும் போய் அந்தப்படியே செய்” என்று அவ்வசனம் கூறியது.
அந்த இளைஞன் இப்போது, உண்மையாகவே பயந்து விட்டான்; இன்னும் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம் என்று அவன் நினைத்தான். எனவே, அவன் இன்னும் அதிகமான பக்கங்களை (மத்தேயு அல்லது லூக்காவில் இல்லாமல்) புரட்டினான். அவன் பக்கங்களை புரட்டுவதை நிறுத்தியபோது, அவனுடைய விரல் யோவான்: 13:27 வசனத்தின் மீது இருந்தது. அவ்வசனம் இவ்வாறு கூறுகிறது: “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்.”
அந்த இளைஞன் தன்னுடைய வேதாகமத்தைக் கீழே வைத்து விட்டு, அலறிக் கொண்டு தன்னுடைய அறையிலிருந்து வெளியே ஓடினான்!
இந்த முட்டாள்தனமான கதையைக் கேட்டு நாம் சிரிக்கலாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. சாத்தான் ஒரு மதப்பிரகாரமான ஆவி; அவன் வேத வாக்கியங்கள் மற்றும் மனித சுபாவத்தைக் குறித்து, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அதிகமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறான். வேத வாக்கியத்தை எவ்வாறு புரட்டுவது என்று அவன் அறிந்திருக்கிறான். எனவே, அவன் நம்முடைய அறியாமையையும், சுயநலமான விருப்பங்களையும் உபயோகித்து விளையாட விரும்புகிறான்.
இதை அவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் முயற்சித்து (ஆதியாகமம்: 3:1-6), மனுக்குலத்தை வீழ்த்துவதில் வெற்றியும் அடைந்தான். அவன் அதை இயேசுவினிடமும் முயற்சித்தான் (மத்தேயு: 4:1-11). ஆனால், பிசாசானவன் அவரைத் தோற்கடிக்க முடியாதபடிக்கு அவர் தேவனுடைய வார்த்தையில் ஞானமுள்ளவராயிருந்தார்.
நாம் வேதாகமத்தை அறிய வேண்டும். நாம் அதைச் சரியான முறையில் உபயோகப்படுத்த வேண்டும். நம்முடைய சொந்த விருப்பங்களுக்கேற்ப வசனங்களைக் கலக்கவோ அல்லது சோ்க்கவோ கூடாது.
4. ஒரே வேத வாக்கியம் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்:
தேவன் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் கூறும்போது, அதை நாம் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று பொருள். பல வேளைகளில், வேதாகமத்தில் அடிக்கடி கூறப்படாத காரியங்கள், அடிக்கடி கூறப்படும் காரியங்களால் விளக்கமளிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக: 1கொரிந்தியர்: 15:29 - வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார். “மேலும் மாித்தோர் உயிர்த்தெழா விட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?”
பவுலினுடைய வார்த்தைகளின் பொருள் என்ன?
வேதாகமத்தில், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் குறித்து இந்த ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறித்த பல பொருள் விளக்கங்கள் உண்டு. ஆனால் அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடமில்லை.
நம்மால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட வேத வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு முழு கோட்பாட்டை அதிலிருந்து உருவாக்குவது தவறு.
1கொரிந்தியர்: 15 - ம் அதிகாரத்தில் பவுல், மரித்தோரின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலின் உறுதிப்பாட்டைக் குறித்துக் கூறுகிறார் - நாம் அதிகமாக அறிந்திராத ஞானஸ்நான சடங்கைக் குறித்து அல்ல. விசுவாசிகளின் ஞானஸ்நானத்தைக் குறித்து பல வேத வாக்கியங்கள் நமக்கு ஒரு தெளிவான வழிநடத்துதலை அளிக்கின்றன. (மத்தேயு்: 25:19; அப்போஸ்தலர்: 8:35-38; ரோமர்: 6:3-6 மற்றும் பல).
இவற்றைப் போன்ற பல வேத வாக்கியங்கள் மறுபடியும் பிற்நத ஓர் விசுவாசி ஞானஸ்நானம் பெறும்படி ஓர் உறுதியான அடிப்படையை அளிக்கின்றன.
5. வேத வாக்கியத்திலுள்ள தெளிவைக் கவனியுங்கள்:
சில வேளைகளில், புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒரு வேத பகுதியை நாம் வாசிக்கிறோம்.
உதாரணமாக: விசுவாசத்தினால் வரும் நீதியைக் குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் மீண்டும், மீண்டும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், நீங்கள் யாக்கோபு: 2:14-16 வசனங்களை வாசிக்கும்போது, நாம் விசுவாசத்தினால் மட்டுமல்ல, “கிரியைகளினாலும்” நீதிமான்களாக்கப்படுகிறோம் என்று யாக்கோபு வலியுறுத்துவதைப் போல தோன்றுகிறது.
என்றாலும், யாக்கோபு விசுவாசத்திற்கு விரோதமாகப் போதிக்கவில்லை; மாறாக, அவா் இரண்டு வகையான விசுவாசத்தைக் குறித்து கூறுகிறார். செத்த விசுவாசம் என்று அழைக்கப்படும் ஒரு வித விசுவாசம் வெறுமையான வாதமாகவும் அல்லது சமய கோட்பாடாகவும் மட்டுமே உள்ளது (பிசாசுகளும் “விசுவாசிக்கின்றன” யாக்கோபு: 2:19)!
விசுவாசத்தின் மற்றொரு வகை இரட்சகரின் மீதான அன்பினால் விளையும் ஒரு கீழ்ப்படிதலின் வாழ்க்கைக்கு நேராக நம்மை வழிநடத்தும் இரட்சிப்பின் விசுவாசமாகும்.
நம்முடைய “கிரியைகள்” நாம் நம்புவதாகக் கூறும் கொள்கையினுடைய உண்மைத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது: அவை நம்முடைய விசுவாசத்தின் கனியாகும் (யாக்கோபு: 2:17,19,26; யோவான்: 15:1-8,16; ரோமர்: 6 ம் அதிகாரம் முழுவதும்).
மறுபடியும் பிறவாமல் இரட்சிப்பைப் பெறுவதற்காக நாம் செய்யும் மதப்பிரகாரமான கிரியைகள் உண்மையான விசுவாசமாயிருக்க முடியாது என்று வேதாகமம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால், உண்மையான விசுவாசத்தின் விளைவு, பிதாவாகிய தேவனுடைய மகிமைக்காக செய்யப்படும் நற்கிரியைகளாகும் (மத்தேயு: 5:16).
6. நேரடியான பொருள் விளக்கத்தை உபயோகியுங்கள்:
வேதாகமத்தை ஒரு விளங்காத புலப்படாத மொழியில் எழுதும்படி வேதாகமத்தை எழுதினவர்களிடம் தேவன் கூறவில்லை. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் ஆழமான மறைமுகமாக அர்த்தங் கொண்ட கதைகளல்ல.
மாறாக, தேவன் இயற்கையான மனித மொழியை உபயோகித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட சத்தியத்தை அறிவிக்கிறார் என்று உந்துதலின் கோட்பாடு நமக்குப் போதிக்கிறது. வேதாகமத்தில் உண்மையாகவே நிகழ்ந்த சம்பவங்கள் சரித்திரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அது வலியுறுத்துகிறது.
அ) மொழியைக் குறித்து:
போதனை அல்லது தீர்க்கதரிசனம் போன்றவற்றை பெறுபவர்கள் அவற்றின் “எளிமை வாய்ந்த, தெளிவான பொருளைப்” புரிந்து கொள்ள வேண்டுமென்பது பொருள் விளக்கத்தின் நோக்கமாகும்.
ஒரு வேதபகுதிக்குப் பொருள் விளக்கமளிக்கும்போது, ஆசிரியரின் காலத்தில் அதற்கு அளிக்கப்படடிருந்த பொருளில் மாற்றம் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
வார்த்தைகளின் பொருளிலும், அவ்வார்த்தைகள் எவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதிலும் நாம் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு சாதாரண மொழி, வார்த்தைகளைப் பல்வேறு வழிகளில் உபயோகிக்கிறது. அது வேதாகமத்திலும் அவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. பொருள் விளக்கமளிப்பதில், நேரடியான பொருள் விளக்கமளிப்பதற்கும், மறைமுகமான பொருளை அளிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். (பிழையற்ற தன்மையின் கோட்பாடு - என்ற தலைப்பின் கீழ் இதைக் குறித்து முன்பே விரிவாக பார்த்தோம்.)
ஆ) சரித்திர சம்பவங்களைக் குறித்து:
வேதாகமத்திலுள்ள சரித்திர சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்தவையாகும். இச்சம்பவங்களை அவை நிகழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள்.
வேதவாக்கியங்களுக்கு நேரடியான பொருள் விளக்கம் அளிக்கும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மையை வலியுறுத்த நாம் தவறி விடக் கூடாது.
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களைப் போன்ற சம்பவங்கள், சமீப காலத்தில் நடைபெறவில்லையென்பதால் அவை உண்மையல்ல என்று கூறி விட முடியாது.
நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயம், பாபேல் கோபுரத்தில் பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது. யாத்திராகமத்தின் காலத்தில் எகிப்தில் நேரிட்ட வாதைகள், கன்னியிடம் பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் வாழ்க்கை - இந்த அனைத்து அற்புதங்களையும் வேதாகமம் உண்மையுடனும், பிழையில்லாமலும் பதிவு செய்துள்ளது.
தேவன் “இருக்கிறவராகவே இருப்பதால்” , வேதாகமத்திலுள்ள அனைத்து அற்புத சம்பவங்களும் அவருடைய வல்லமைக்கு மிஞ்சினவையல்ல. ஏனெனில், “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதியாகமம்: 18:14).
7. வேதாகம “ஒப்புமைகளும்”, “நிழலாட்டங்களும்” முரண்பாடற்றவையாக இருக்க வேண்டும்:
பிற்காலத்தில் வாழப் போகிற ஒரு நபருக்கு அல்லது நிகழப் போகிற சம்பவத்திற்கு தற்போது தீர்க்கதரிசன அடையாளமாக உள்ள ஒரு பொருள் அல்லது சம்பவம், “ஒப்புமை” அல்லது “நிழலாட்டம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வேதாகமரீதியான “நிழலாட்டம்” அந்ம நபர் அல்லது சம்பவத்தின் குணநலன்களைப் பெற்றிருக்கிறது.
உதாரணமாக: யாத்திராகமம் 11 மற்றும் 12 ஆம் அதிகாரத்திலுள்ள பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவிற்கு ஒரு “ஒப்புமை” அல்லது நிழலாட்டமாகும்.
யாத்திராகமத்தின் காலத்தில் மக்களை சங்காரக்காரனுடைய கரங்களுக்கு மீட்டுப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், உலகத்தின் பாவங்களுக்காக மரித்து, மீட்பைப் பெற்றுத்தந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு ஒரு தீர்க்கதரிசன அடையாளமாகும்.
பழைய ஏற்பாட்டு ஒப்புமையாகிய பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்த தேவ ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவிற்கு நிழலாட்டமாகும்.
இக்கருத்திற்கு மற்றொரு உதாரணமான, தேவனுடைய பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைக் குறித்து எபிரேயர்: 10:1 வசனம் இவ்வாறு கூறுகிறது: “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே, அவைகளை செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்த மாட்டாது”.
கிறிஸ்து பாவத்திற்கான பலியை செலுத்தி விட்டபடியால், பாவத்திற்காக தொடர்ந்து மிருகங்களை பலியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த கிரியை பாவத்திற்கான “ஒரே நிரந்தர” பலியாயிருப்பதால், அனைத்து காலங்களிலும், அனைத்து இடங்களிலும் அவரை ஏற்றுக் கொள்கிற அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கு, அது போதுமானதாகும். (யோவான்: 3:16; எபிரேயா்: 9:11,12, 23-28; 10:10; 1பேதுரு: 3:18).
இந்த பழைய ஏற்பாட்டு ஒப்புமைகள் தங்களுக்குள் முழுமை பெற்றவை அல்ல. தேவன் ஒரு நோக்கத்தோடு அவை முழுமைபெறாதபடி செய்திருக்கிறார். ஏனென்றால், கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் முழுமையான நிறைவேறுதலுக்கு இந்த ஒப்புமைகள் ஒரு நிழலாட்டமாக மட்டுமே உள்ளன.
ஒரு “ஒப்புமையின்” ஒவ்வொரு சிறிய கருத்திற்கும் நாம் பொருள் விளக்கமளிக்காமல், ஒரு பொதுவான, மேலோட்டமான பொருள் விளக்கத்தை அளிக்க வேண்டுமென்பது முக்கியம்.
ஒப்புமைகள் ஒரு கோட்பாட்டிற்கு உதாரணமாக பயன்படுத்தபட வேண்டுமேயன்றி, புதிதாக ஒரு கோட்பாட்டை உருவாக்குவதற்கு அல்ல - என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.