நட்பு 2

நீ என் அருகில் இல்லாத போது என் கண்களை மூடிக்கொண்டு உன்னை நினைத்து புன்னகைத்து கொள்வேன்.. . இப்படிக்கு நட்பு!




சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம்
காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை...


எதிரியைக் காட்டிலும் நண்பனிடம் கவனமாக இரு.. எதிரிக்கு உன் பலம்தான் தெரியும்.. உன் நண்பனுக்குதான் உன் பலவீனமும் தெரியும்..!!


நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்..!!


நன்றாக பழகும் அனைவரும் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும் சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்..!!


நான் ஒரு கண்ணாடி.. என்னை பார்த்து நீ சிரித்தால், நானும் சிரிப்பேன்.. நீ அழுதால், நானும் அழுவேன்.. ஆனால் நீ அடித்தால், நான் அடிக்க மாட்டேன்.. உடைந்து போவேன்.. அது தான் உண்மையான நட்பு..!!


புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்..!!


நல்ல நண்பனைத் தேடுவதைவிட நீ நல்ல நண்பனாக இரு.. கட்டாயம் உன்னைத்தேடி நல்ல நட்பு அமையும்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.