பைபிள் அகராதி "அ" வரிசை 1

முதலெழுத்து கடவுளின் பெயர். ஆசியும் அந்தமும் என்றர்த்தங்கொள்ளும். (வெளி 1:8,11. 21:6. 22:13. ஏசா 41:4. 44:6) எழுத்து காண்க.


அகபு

கிலௌதி ராயனுடைய காலத்திலே சம்பவித்த பஞ்சத்தையும் பவுல் அப்போஸ்தலன் எருசலேமிலே சங்கிலிகளால் கட்டப்பட்டதையும் முன்னறிவித்த தீர்க்கதரிசி. (அப் 11:28. 21:10)


அகசீயா

(கர்த்தரின் சுதந்தரம்) ஆகாப் இராசாவின் மகன். இவன் கி.மு. 896 - 895 தன் தகப்பன் மரித்தபின்பு அரசாண்டான். (1இரா 22:40) யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன், இவனும் அரசாண்டான். (2இரா 8:25)


அகாயநாடு

கிரேக்கதேசத்தின் ஓர் பிரிவு. இதிலும் இந்த நாட்டிலுள்ள் கொரிந்து பட்டணத்திலும் கல்லியோன் என்பவன் அதிபதியாயிருந்தபோது பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அநேக சபைகளை நாட்டினர். (அப் 18:12, 2கொ 1:1)


அகாயுக்கு

பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபத்தை அந்த ஊருக்குக் கொண்டுபோன அகாயா நாட்டுக் கிறிஸ்தவன் (1 கொ 16:17)


அகாஸ்வேரு

மேதியகுலத்தானாகிய தரியுவின் தகப்பன் (தானி 9:1) இந்துதேசந்துவக்கி எத்தியோப்பிய தேசமட்டுமிருந்த நூற்றிபத்தேழு சீமைகளையாண்டு தன் பெண் ஜாதியாகிய வஸ்தியைத் தள்ளி, எஸ்தர் என்ற ஒரு யூதஸ்திரீயைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு யூதருக்கு நன்மைசெய்த ஓர் அரசன். மறுபெயர்,ஓநசஒநள. (


அகித்தூபு

(நல்லதம்பி) 1. பினெகாஸின் புத்திரனும் எலியின் பேரனுமானவன். (1 சாமு 14:3) அமரியாவின் புத்திரனும் சாதோக்கின் தகப்பனுமானவன். (1 நாளா )


அகித்தோப்பேல்

தாவீதின் ஆலோசனைக்காரன். (2 சாமு 15:12)

அகிமாஸ்

ஓர் ஆசாரியன் (2சாமு 15:27, 36)



அகிமெலேக்கு

(இராசபிதா) சவுலின் காலத்திலிருந்த பிரதான ஆசாரியன்;. (1 சாமு 22:9 2சாமு 8:17)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.