*நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு (உலகத்திற்கு) ஒத்த வேஷந்தரியாமல் - ரோ 12 -2*
மேலை உள்ள வசனம் ஆண்கள்/பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.
சில சகோதரிகள் நகையை வெறுத்து இருப்பார்கள். ஆனால் நகைக்கு செலவாகும் பணத்தை எல்லாம் உடைக்கு (dress) செலவு செய்வார்கள். இது தவறு.
ஸ்திரீகள் விலையேறப் பெற்ற வஸ்திரத்தினால் தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும் 1 தீமோ2:9,10
உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு
அலங்காரமாயிராமல், 1 பேதுரு 3 :3
லெளகிக (உலக) இச்சைகளை வெறுக்க வேண்டும் - தீத்து 2-12
தமிழில் ஒரு பழமொழி உண்டு "மனிதன் சாப்பிடுவது தன் வயிற்றிற்கு, ஆனால் உடுப்பது மற்றவர்கள் பார்ப்பதற்கு"
ஆலயத்துக்கு, திருமணத்துக்கு செல்லும் போது எளிய உடை உடுத்தி செல்ல வேண்டும்.
இஸ்லாமிய சகோதரிகள் உடைகளை கவனித்து பாருங்கள். சத்தியத்தை அறியாத அவர்கள் எவ்வளவு அடக்கத்தோடு உடை உடுத்துகிறார்கள்.
வசனம் படிக்க படிக்க உலகத்தை வெறுக்க வேண்டும் - சங் 119-128
கிறிஸ்தவ ஜிவியத்தின் ஆரம்பம் நம்மை வெறுப்பது - மத் 16:24,25
எல்லோருக்கும் வேத வசனம் நன்கு தெரியும், சிலர் வேதத்தை கூட போதிப்பார்கள், ஆனால் அவர்கள் உலகத்தை வெறுப்பது இல்லை. காரணம் வசனம் அவர்களில் கிரியை செய்ய வில்லை. சாப்பிட்ட மருந்து உடலில் கிரியை செய்ய செய்ய நோய் நம்மை விட்டு நீங்குகிறது. அது போல வசனம் கிரியை செய்ய செய்ய உலகம் வெறுக்க வேண்டும். ஆடம்பரங்கள் குறைய வேண்டும்.
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 1 கொரிந்தியர் 10 :23. தேவ ஜனமே உனது உடை மற்றவர்களுக்கு பக்தி விருத்தியை உண்டாக்குகிறதா ?
நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12 :48 - இயேசு நீயாயத்தீர்ப்பு நாளில் வசனத்தை கொண்டு நம்மை நீயாயந்திர்ப்பார். (இந்த வசனத்தின்படி நீ ஜீவிக்கவில்லை
அதனால் நரகத்துக்கு போ)
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். சங்கீதம் 119 :60