கனவுகள் இருந்தும் சிறைச்சாலை தான் வாழ்க்கையோ என்றிருந்த யோசேப்பை தேசத்தின் அதிபதியாய் உயர்த்தின கர்த்தர்;
தரிசனத்தை மறந்து 40 வருடங்களாய் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேயை தலைவனாய் உயர்த்தின கர்த்தர்;
உண்டாக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இச்சையினால் விழுந்துபோன சிம்சோனைக் கொண்டு பெலிஸ்தியரை அழித்த கர்த்தா்;
நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்கு வழிமாறி சென்ற யோனாவை மீனைக்கொண்டு திரும்பிவரசெய்து நினிவேயில் எழுப்புதலை கொண்டுவந்த கர்த்தர்;
இன்றும் ஒருவேளை மாதங்களோ வருடங்களோ ஆகியும் உனக்கு கொடுத்த தரிசனங்கள், கனவுகள், வாக்குத்தத்தங்கள் நிறைவேறாமல் தத்தளித்து கொண்டிருந்தால் திகையாதே, கலங்காதே! உன்னை இலட்சிய கரை சேர்க்க அதற்கான வழிகளை அறிந்தவர் நிச்சயமாய் செய்து முடிப்பார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற தீவிரிக்கிறார்.
வெற்றி நிச்சயம்! விடுதலை சத்தியம்!!
