06.02.2017
*இன்றைய நற்சிந்தனை*
"ஒரு சொல்லைச் சொல்லியபின் சிந்திப்பவருக்கு
நண்பரேயில்லை ?!!"
இதுவும் பின்னாய்வு அடிப்படையில்
வருவதே !
வாக்கால் பிழைசெய்தபின் சுய ஆய்வு செய்து மனம்
திருந்தி , *ஆத்மார்த்தமாய் தன் செயலுக்கு வருத்தம் தெரிவிப்போரை, நண்பர்கள் விட்டகன்றால், பிழை*
*மன்னிக்கத்தெரியாத நண்பர்களிடம்தான் உள்ளதேஅன்றி, முதலில் பிழைசெய்தவரிடம் அல்ல* ! அப்படிப்பட்ட
நண்பர்களை இழப்பதால் நஷ்டமேதும் இல்லை .
இன்னுமொரு கோணம் !
*நல்லனவற்றை இடித்துரைக்கும் நண்பர்களை விரோதிக்கும் மனிதர்கள் ஏராளம்* அதுபோலும் *மனிதர்களிடம் நட்புக்காக என்று அவர்கள் காலடியில் விழவேண்டிய அவசியமில்லை திருந்த நினைப்பவர்களாய் இருந்தால், அவர்கள் சுய ஆய்வு செய்து,தாமே விரோதம் விலக்கி நம்மிடம் வருவர்*
வாக்கின் தாக்கம் , பேசுபவரின் வார்த்தைகளால் மட்டுமின்றி ,
கேட்பவரின் மனநிலை, பண்புகளைப் பொருத்தும் அமையும் .
*அடிக்கடி முந்திரிக் கொட்டையாக மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும் அடங்காத குதிரைதானே*
*ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவருக்கு வெற்றியில்லை*
*ஒருசொல்லை சொல்லியபின் சிந்திப்பவருக்கு நண்பரேயில்லை*
"ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவருக்கு
வெற்றியில்லை ?!!!!" .....
சரியா ? சற்று சிந்திப்போம் !
*Review*" என்பது என்ன ? எதற்கு செய்கிறோம் ?
*தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளை மீண்டும் செய்யாமலும் அதன்வழிமீண்டும் தோல்வியைச் சந்திக்காது இருக்கவும் தானே* !
எந்த முயற்சி / திட்டமிடலிலும் அனைத்து
ஓட்டைகளையும் முதலிலேயே கண்டறிந்து களைவது செயல்
முறை சாத்தியமன்று ! *வாழ்க்கையே பின்னாய்வுகள் மூலம் முன்னேறுவதுதான்*!
தோல்வியின் பின்னும் ஆய்வு செய்யாது தொடர்பவனை
"வடிகட்டின முட்டாள் " என்கிறோம் !
எனவே *செயலுக்குப் பின் சிந்தனை*என்பது வெற்றி கிட்டவும் ,
ஓரளவு கிட்டிய வெற்றியை மேம்படுத்தவும் தேவை !
நமது மனம் எனும் ரதத்தை,
இரண்டு குதிரைகள் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.
*ஒரு குதிரைஅறிவு, மற்ற ஒரு குதிரை உணர்ச்சிகள்*
இந்த பயணத்திலே
ஏதாவது ஒரு குதிரை விரைவாக
மூக்கை நீட்டி விட்டும்
அது அறிவு என்ற
குதிரையானால் ஆபத்தில்லை
ஆனால் அடிக்கடி முந்திரிக் கொட்டையாக
மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும்அடங்காத குதிரைதானே.
முன்' கோபம் என்று சொல்வார்கள்
சிந்திப்பதற்கு முன்பே வருவதால் அது முன்கோபம்
உண்மையில் ஒரு நொடி சிந்திக்க
அவகாசம் எடுத்துக்
கொண்டால் நிச்சயம்
ஒரு போதும் கோபமே வராது
அப்படியே வந்தாலும்
அது உறுதியாக நியாயமாகத்தான்
இருக்கும்,அதை 'பின்'கோபம் என்று பேர்வைக்கலாம்
*வில்லால் மாண்டவரை விட சொல்லால் மாண்டவர் கோடி கோடியே*
நா காப்போம்.
*ஒரு நிமிடம் போதும் அதிகம் நேசிப்பதற்கு*
*ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு பிரிவதற்கு*
