1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம் (வெளி 10-3) = பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி) (சங் 132-16). நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு (சங் 118-15).
2) பின்னடையாது (நீதி 30-30) - தேவ ஜனங்கள் அவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைய கூடாது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் - எபிரேயர் 10:38. பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய் விட கூடாது.
3) தைரியமான மிருகம் (நீதி 28-1) = நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும் (1 யோ 3-21). விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும் (எபேசி 3-12)
4) பலமானது (நியாதி 14-18) = நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் - சங் 84-7
5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் (நாகூம் 2-12) = தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம் (உபா 8-3). வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன் (யோபு 23-12)
6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும் = அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது - மத் 7-11)
7) பயப்படாது = தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது. ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார் (மாற்கு 4-40). விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.
8) மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3-10) = மறைவிடம் தாழ்மையை குறிக்கும். நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளி படுத்த வேண்டும்
9) பிசாசு சிங்கம் போல நம்மை விழுங்க சுற்றி வருகிறான் = சிங்கங்கள் வாயை அடைத்தார்கள் (எபி 11-33). சிங்கத்தின் வாயில் இருந்து இரட்சிக்கபட்டேன் (2 தீமோ 4-17). பிசாசை நாம் ஜெயிக்க வேண்டும்
10) காட்டுக்கு ராஜா = நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம் (வெளி 1-6)