1) அடிக்கபடுகிற ஆடு (சங் 44-22) = தேவ ஜனங்கள் அடிக்க படுகிற ஆடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் ஆடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8-32). தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2-21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14-22)
2) சத்தமிடாத ஆடு (அப் 8-32, ஏசா 53-7) = வீட்டில் சண்டை, பிரச்சினை வரும் போது வாயை முட வேண்டும். காது கேளாதவர்கள் போல் இருக்க வேண்டும். பேச்சினால்தான் அநேக பிரச்சினை வருகிறது. பாடுகளில் நாம் மெளனமாக இருக்க வேண்டும். அவரே அதைத் தன் மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன் - புலம்பல் 3 :28
3) மேய்ச்சலின் ஆடுகள் (சங் 100-3) = ஆடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள நிலத்தை தேடி செல்லும். அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். சபை என்பது நம்மை charge பண்ணும் இடம். தினம் தமது phone யை charge செய்வது போல வாரம் ஒரு முறை சபைக்கு சென்று நமது ஆத்தமாவை charge செய்து வர வேண்டும். தேவ பிள்ளைகள் தங்கள் ஆத்துமாவுக்கு ஏற்ற செய்திகள் கிடைக்கும் சபைக்கு செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது
4) ஆடுகள் அசை போடும் (தியானம்) = ஆடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1-2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1-3)
5) பழுது இல்லாத ஆடு (லேவி 22-21) = இது பரிசுத்தத்தை குறிக்கிறது. நமது பேச்சு, சிந்தனை, கிரியை எல்லாம் பரிசுத்தமாக காணப்பட வேண்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22-11)
6) கர்த்தருடைய கரத்தில் உள்ள ஆடு (யாத் 9-3) = இது பாதுகாப்பை குறிக்கிறது. ஒருவனும் (பிசாசு) அவைகளை என் கரத்தில் இருந்து பறித்து கொள்ளுவதில்லை (யோ 10-28)
7) சர்வாங்க தகனபலியான ஆடு (யாத் 9-3) = நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் - ரோ 12-1
8) ஜீவன் உள்ள ஆடு (யோ 10-10) = ஜீவன் = இரட்சிப்பு. நமது இரட்சிப்பு நஷ்டம் அடையாதபடி பார்த்து கொள்ள வேண்டும். இரட்சிப்பு நிறை வேற பிரயாச பட வேண்டும் (பிலி 2-12)
9) மேய்ப்பனை குறித்து அறிந்த ஆடு (யோ 10-15) = ஆட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23-1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்
10) மேய்ப்பன் சத்தத்திற்கு செவி கொடுக்கும் ஆடு (யோ 10-3) = அவர் சித்தப்படி, சொற்படி நடக்க வேண்டும்
11) பூரணத்தை நோக்கி வளரும் ஆடு (யோ 10-10) = நாமும் இயேசுவை போல பூரணம் அடைய வேண்டும். கிறிஸ்து நம்மில் உருவாக வேண்டும் (கலா 4-19)
12) ஆடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் = இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை குறிப்பிடுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3-18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.
13) தொழுவத்தில் இல்லாத வேறே ஆடுகள் (யோ 10-16) = இது இரட்சிக்க படாத ஐனங்களை குறிக்கிறது. இவர்கள் இயேசுவின் தொழுவத்தில் சேர்க்கபட நாம் இவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், இவர்களுக்காக ஜெயிக்க வேண்டும்.