1) துஷ்ட மிருகங்கள் மானை சுற்றி இருக்கிறது = இந்த உலகில் நம்மை சுற்றிலும் பொல்லாத மனிதர்கள் சூழ்ந்து உள்ளார்கள். என்னை சூழ்ந்து கொள்ளுகிற என் பிராண பகைஞருக்கு மறைவாக என்னை காப்பாற்றும் (சங் 17-9). எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னை சூழ்ந்து கொண்டது (சங் 40-12)
என்கிறான் தாவீது பக்தன். பொல்லாத மனிதர்கள் நம்மை சுற்றி இருந்தாலும் அவர்களால் நாம் கறை படக்கூடாது
2) இதனுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கை (எப்போது வேண்டுமானாலும் சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய் இதனை தாக்கலாம்) = இந்த உலகில் நாமும் யுத்த களத்தில் இருக்கிறோம். பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6 :12. மாம்சத்தோடும், இரத்தத்தோடும் நமக்கு போராட்டம் உண்டு (எபேசி 6-12). நல்ல போராட்டத்தை போராடினேன் (2 தீமோ 4-7)
3) தீமையோடு எதிர்த்து நிற்காது (தன்னை தாக்க வரும் மிருகங்களுக்கு எதிர்த்து நிற்காது) = இந்த உலகில் நாமும் நமக்கு தீமை செய்கிற மக்களோடு எதிர்த்து நிற்க கூடாது. அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் (மத் 5-39)
4) மான்களின் கால் உறுதியானது (2 சாமு 22-34) = நாமும் ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டும் (ரோ 12-12) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் (1 பேது 5-9)
5) வேட்டைகாரன் கைக்கு தப்பும் (நீதி 6-8) = நாமும் பிசாசின் வலையில் சிக்காதபடி ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும் (1 பேது 5-8)
6) காட்டில் தங்க (குடியிருக்க) இடம் கிடையாது = இந்த பூமியில் வாழும் நாமும் பரதேசி. நமக்கு சொந்தம் கொண்டாட ஒரு இடம் கூட உலகில் இந்த பூமியில் கிடையாது. நான் பரதேசியாய் தங்கும் வீட்டில் உமது பிரமாணங்கள் எனக்கு கீதங்களாயின (சங் 119-54). நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது (பிலி 3-20)
7) பயந்த சுபாவம் கொண்டது = நாமும் இந்த உலகத்தில் தேவ பயத்தோடு வாழ வேண்டும். தேவ பயம் இருந்தால் பாவம் செய்ய மாட்டோம். பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு பூரண படுத்தகடவோம் (2 கொரி 7-1)
8) அழகானது = உன் முகருபம் அழகாயிருக்கிறது (உன் 2-14). மோசே முகம் பிரகாசித்தது (யாத் 34-29) தானியேல் & அவனுடைய நண்பர்கள் முகம் களையுள்ளதாக காணப்பட்டது (தானி 1-15). என் முகத்துக்கு இரட்டிப்புமாய் இருக்கிற தேவனை இன்னும் துதிப்பேன் (சங் 42-11)
9) வேகமாக ஓடக்கூடியது (2 சாமு 2-18) = நாமும் இந்த உலகில் பண ஆசையை விட்டு ஓட வேண்டும் (1 தீமோ 6:9-11) பாலியத்திற்கு இச்சைகளை விட்டு ஓட வேண்டும் (2 தீமோ 2-22). இயேசுவை நோக்கி ஒட வேண்டும் (எபி 12-1)
10) சாதுவானது = நான் சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவன் என்றார் இயேசு (மத் 11-29). நாமும் இப்படிபட்ட சுபாவத்தை வெளிப்படுத்த வேண்டும்.
11) மான் நிரோடையை வாஞ்சித்து கதறும் (சங் 42-1) மான் கதற 2 காரணங்கள் உள்ளது (1) தாகத்தால் கதறும் (2) துஷ்ட மிருகங்கள் (செந்நாய்) மானை கடித்தவுடன் மான் தப்பி ஓடும். கடிபட்ட இடத்தில் இரத்தம் வரும். இந்த இரத்த வாடையை மோப்பம் பிடித்து செந்நாய் பின் தொடரும். மான் தண்ணீர் உள்ள ஆறு, ஓடையை கடந்து விட்டால் செந்நாயினால் அதை கண்டு பிடிக்க முடியாது. (கொலை செய்கிறவர்கள் இந்த முறையை பின்பற்றுவார்கள். அவர்கள் நதியை கடந்து விட்டால், மோப்ப நாயால் அவனை கண்டு பிடிக்க முடியாது) = இந்த மானை போல நமது ஆத்துமா தேவ சமுகத்தை (ஆலயம், ஜெபம், வேத வாசிப்பு) வாஞ்சிக்க வேண்டும்.