*உலகத்தின் பாவத்திற்கான பரிகாரம் இயேசுவின் இரத்தம்*
(1யோவான் 2: 2)
*நித்திய பரிகாரி*
(ரோமர்5:8,
2 கொரிந்தியர் 5:21
யாத் 15: 24)
*நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.*(ரோமர் 5 :8)
*நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.*
(2 கொரிந்தியர் 5 :21)
பிதாவாகிய தேவன் (ஏழாம் வானமான உன்னதத்திலே MOST HIGH) வாசம் செய்கிறார் என்பதும் இயேசு கிறிஸ்து அவரின் ஒரே பேரான குமாரன் என்பதும் இயேசு கிறிஸ்து யாருக்கு சித்தம் இருக்கிறதோ அவர்களுக்கு வேளிப்படுத்துவார் என்பதும் வேதம் தெள்ளந்தெளிவாக உரைக்கிறது. இயேசுவும் பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே என ஜெபிக்க சொல்லியிருக்கிறார். நாமும் பிதாவை இயேசு கிறிஸ்து நாமத்தாலே வேண்டுகிறோம். இவைகள் தரிசனங்கள் மூலமாகவும் நிரூபணம் ஆகிறது. இந்த உலகத்திற்க்கு இயேசு வந்தார். பிதா அனுப்பினார். ஏன் கன்னி மரியாள் மூலம்? ஒரு குழந்தை கர்ப்பத்திலிருந்து என்ன பாடுகளை உணர்கிறது, அந்த நீர் குட அனுபவம், தொப்புள் கொடி அனுபவம் - கண்டு உலக அனுபவம் சிறு பிராயம் முதல் 30 வயதுவரை உறவு - நடபு - பிரிவு அனுபவம் - தெய்வீகம்- எல்லாவற்றையும் உணர்ந்தார். ஆவியிலே நிறைந்திருந்தார். பிதாவையே நாடினார். நாம் யாரை நாடனும்? இயேசுவை. பிதாவை ஒருவனும் அறியானே. பிதாவின் சித்தம் அறிந்தவர் இயேசுவே! நமக்காக பிதாவிடத்தில் பரிந்து பெருமூச்சோடு ஜெபிப்பவர் இயேசுவே.
*இயேசு நான் தனித்திரேன். பிதா என்னுடனே இருக்கிறார்* என்கிறார்.
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
(யோவான் 17 :22)
பிதாவும் இயேசுவும் ஆத்துமாவிலும் ஆவியிலும் ஒன்றாயிருக்கிறார்கள். நாமும் ஒருவருக்கொருவர் ஒன்றாக இருக்க வேண்டும் என பிதாவை வேண்டி உம் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளும் என்கிறார்.
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
(யோவான் 17 :11)
_*ஆக நாம் ஓருவருக்கொருவர் ஆவியிலும் ஆத்மாவிலும் ஒன்றாகயிருந்து தேவனைப்பற்றிய தர்க்கம் இல்லாமல் பிதாவாகிய தேவனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தால் வேண்டி ( இந்த உலகம் பாவமாக இருக்கிறதால் நமக்கு இரட்சகர் இயேசு நம்மோடு இருதயத்தில் வாசம் செய்ய வேண்டும்) கொண்டு தேவனை மகிமைப்படுத்தி துதித்து தெய்வ பயத்தோடு நடுக்கத்துடன் இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டும். எந்தப்பிரிவு கிறிஸ்தவருக்கும் இயேசுவே வழி இயேசுவே சத்தியம் இயேசுவே ஜீவன்.*_