நற்கிரியைகள்

ஒரு ஊழியர்  ஊழியத்தின் நிமித்தம் ரயில் மார்க்கமாக  கல்கத்தாவில் இருந்து டில்லி வந்து கொண்டு  இருந்தார். ரயிலில் ஜன நெருக்கடி காரணமாக ரயில் நிலையத்தில் இறங்கி ஆகாரம் சாப்பிட முடியவில்லை. இரவில் பசியோடுதான் தூங்க வேண்டிய நிலையை கர்த்தர் அனுமதித்து விட்டார் என்று எண்ணி ஜெபித்து படுத்து கொண்டார்.

அவருக்கு மேல் birth ல் இருந்த சகோதரனும் டில்லி வரும் பயணிதா ன். இரவில் அந்த சகோதரன் தன்னுடன் கொண்டு வந்த ஆகாரத்தை உண்ணும் முன்னால் அதில் பாதி ஆகாரத்தை ஊழியர் இடம் கொடுத்து சாப்பிடும்படியாக கூறினான். ஊழியர் மறுத்தும் அவன் விட்டபாடில்லை. அவன் இப்படி சொன்னான். நான் கொடுக்கும் சப்பாத்திகளை நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் அவைகள் வீணாய் போய் விடும் என்றான். மேலும் அவன் கூறினான் எனது அருமை தாயார் நான் இவவிதமான பிரயாணங்களுக்கு கிளம்பி விட்டால் போதும், எனக்கு மாத்திரம் அல்ல, மற்றொருவரும் சாப்பிட போதுமான அளவிற்கு ஆகாரத்தை கட்டாயம் ஆயத்தம் செய்து கொடுப்பது அவர்களின் பிறவிக்குணம். தனித்து சாப்பிடும் உணவை விட அதில் பிறருக்கு பங்கிட்டு கொடுத்து அந்த சந்தோஷ மகிழ்ச்சியின் மத்தியில் சாப்பிடுவதே பாக்கியம் என்று கருதும் இரக்கமும், ஈகை குணமும் உளளவர்கள் எனது அன்பு தாயார் என்றான், அந்த இந்து சகோதரன். அந்த ஊழியர் உண்ண போதுமான சப்பாத்தியும், சுவையான காய்கறி கூட்டையும் ஆயத்தம் செய்திருந்தார்கள் அந்த சகோதரனின் தாயார்.

இன்னொரு சம்பவத்தையும் அந்த ஊழியர் குறிப்பிட்டிருந்தார். ஒரு கிறிஸ்தவ ஜசுவரியவானான ஒரு மனிதனின் கருப்புகட்டி மண்டிக்கு  இந்த ஊழியர் சென்றிருந்தார். கருப்பு கட்டி மண்டிக்குள் கருப்புகட்டிகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. அந்த நேரம் ஒரு ஏழை மனிதன் அங்கு வந்து அந்த பெரிய கிறிஸ்தவ ஜசுவரியவானை பார்த்து "ஜயா ஒரு சின்ன துண்டு கருப்புகட்டி மாத்திரம் தாருங்கள். அதை கடித்து நான் தண்ணீர் மாத்திரம் குடிக்க  ஆசைபடுகிறேன் " என்று கேட்டானாம். அதற்கு அந்த பணக்காரன் "உனக்கு கொடுக்க என்னிடம் கருப்புகட்டி ஒன்றும் இல்லை. ஒன்று செய், கையில் கருப்புகட்டி துண்டு ஒன்று இருப்பது போலவும் அதை நீ கடித்து தின்பதாகவும் உனக்குள் கற்பனை செய்து கொண்டு தண்ணீர் குடி, தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கும்" என்று சொல்லி அந்த ஏழை மனிதனை விரட்டி விட்டான் அந்த கிறிஸ்தவ பணக்கார வியாபாரி.

கல், மண், மரத்தை கும்பிடும் ஒரு இந்து தாயின் அன்பையும், ஜீவனுள்ள தேவனாம் இயேசு கிறிஸ்துவை தொழுது கொள்ளும் ஒரு கிறிஸ்தவனின் கல் நெஞ்சத்தை இங்கே கண்டோம்.

கிறிஸ்தவ மார்க்கம் பரவாமல் இருக்க தடை கற்களாக இருப்பவர்கள் புறமதஸ்தவர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் என்ற நாமத்தை தரித்த கிறிஸ்தவர்கள்தான்.

பேதுரு அப்போஸ்தலனின் நிருபத்தை நாம் வாசித்தால் கிறிஸ்தவர்கள் "அக்கிரமக்காரர்" என்று அழைக்கபட்டதை 1 பேதுரு 2-12 ம் வசனத்தில் தெளிவாக காணலாம்.  புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 பேதுரு 2 :12

இயேசு ஊழியக்காரர்களை "அக்கிரம செய்கைகாரரே" என்னை விட்டு அகன்று போங்கள் என்கிறார் - மத் 7-22,23

யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையில் தொற்காள் என்று அர்த்தங் கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள். அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள். அப்போ 9 :36

மனுஷர் உங்கள் நற்கிரியைகளை கண்டு, பரலோகத்தில் இருக்கிற பிதாவை மகிமைபடுத்த வேண்டும் (மத் 5-16)

தேவ ஜனமே உன்னுடைய நற்கிரியைகள் மூலம் தேவ நாமம் குடும்பத்தில், அக்கம்பக்கம், வேலை பார்க்கும் இடத்தில் மகிமை அடைகிறதா ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.