நரகத்திலிருந்து நன்றி கடிதம்

From
                       Most.Rev.Dr. Lucifer,
                        Hell.

To
                   Rtd.Bishop. G.Devakadasham, Old secretary. Professor, All Pastors, All DC members,
KK CSI Diocese,
Nagercoil.

எனது பாசத்திற்குரிய எனது உடன் ஊழியர்களே, உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்களது பணிகளை நான் உன்னிப்பாக நரகத்திலிருந்து கவனித்து வருகிறேன். நான் ஆணையிட்டபடியே நீங்கள் செய்து வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சியே! சபைகளை அழிக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஊழியர்களை நான் ஏற்படுத்தி வருவது வழக்கம்.

ஹிட்லருக்கு பிறகு தகுதியான ஊழியர்கள் எனக்கு கிடைக்காமல் தவியாய் தவித்து வந்தேன். உங்களின் பணி எனக்கு நல்ல திருப்தியை தந்திருக்கிறது. தென்னிந்திய திருச்சபையில் இன்னும் சிலர் சபை வளர்ச்சி, ஜெபம் என இருக்கிறார்கள் அத்தனை பேரையும் வழக்கு போட்டு எப்படியாவது முடக்கி விட்டு நான் இருக்கும் இடத்திற்கு சீக்கிரம் வருகை தாருங்கள்.

"குமரி பேராயத்தின் பேராயர் தேவ கடாட்சத்தை* என்னால் மறக்க முடியாது. முழு தென்னிந்திய திருச்சபையையும் என்னிடம் மண்டியிட செய்த அவரது மூளை சூப்பர். போராட்டம், ஆர்ப்பாட்டம், வழக்கு, அடிதடி, ஊழல், மோசடி இப்படி என, எனது அத்தனை திட்டத்தையும் செயல்படுத்தின திறன் உமக்குதான் உண்டு. எனக்கே ஐடியா கொடுக்கிற அளவுக்கு 22 amendments விஷயத்தில் நீர் சாணக்கியரையும் முந்திவிட்டீர். நீர் நரகத்திற்கு வந்ததும் எனது personal secretary யாக வைக்கலாம் என நினைக்கிறேன்.குமரி பேராயத்தில் 16 ஆண்டுகளும் சினாடில் 4 ஆண்டுகளும் எனது சித்தம் செய்து கஜானாவை காலி செய்த எனது பாசத்திற்குரிய ஊழியன் நீர்தான். இவருக்கு யூதாசுக்கு கொடுத்திருக்கும் கனத்தை கொடுக்க காத்திருக்கிறேன்.

"முன்னாள் செயலர் பேராசிரியரையும்" நான் பாராட்டாமல் இருக்க முடியாது. எனது நம்பிக்கைக்குரிய ஊழல் குழுவை நியமனம் செய்ய அவர் எடுத்த முயற்ச்சி அபாரம்!*

"அண்ணன் புரூஸ்லியை" பாராட்டாமல் போனால் நரக சேனை எல்லாம் எனக்கு எதிராக முறு முறுத்துவிடும். வழக்கு வழக்கு என அப்பப்பா அவர் நடத்தும் நாடகமே படு ஜோர்.

"தம்பி தாவீது" என்ன ஆட்டம் ஆடுறான். நடனமாடுறதுல கில்லாடி தாவீது என்பதால் இந்த தாவீது பலே ஆட்டம்தான் போடுறான். தாவீதின் பணிகளுக்காய் கூட எனது நரக சேனை பாராட்டுகளை குவிக்கிறது.

தற்போதைய நிர்வாண (நிர்வாக) குழுவில் இருக்கும் எனது பன்னிரண்டு யூதாசுகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். மிகவும் அருமையாய் காணிக்கையை கொள்ளையடிக்கிறார்கள். இவர்களை மேலும் பத்தாண்டுகளுக்கு நான் வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். இவர்களை நான் மேலும் பத்தாண்டிற்கு நியமித்தால் பரலோகில் இருக்கிற பொற்தள வீதியில் இருக்கும் பொன் மற்றும் விலையேற பெற்ற அனைத்தையும் சுரண்டி விடுவார்கள். ஏசு நாதருக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

"எனக்கு கைகொடுத்து செயல்படும் போதகர்களுக்கு"நன்றி கூறுகிறேன். நீங்க மார்தாண்டம் ஷாப்பிங் காம்பிளஸில் அடித்த கராத்தே படு ஜோர். அபோதே உங்களுக்கு கடிதம் எழுதி வாழ்த்து கூற நினைத்தேன். நண்பர்களே நமது ஐக்கியத்தில் இணையாத சில போதகர்களை கண்டால் எனக்கு வெறுப்பாய் இருக்கிறது. அவர்களுக்கு மோசமான சபைகளில் transfer போட்டு பார்த்தேன். ஆயினும் நமது கூட்டத்தில் சேராமல் ஜெபம் ஜெபம் என ஓடுகிறார்கள். இவர்களை பார்த்து நீங்க சோர்ந்து போக வேண்டாம்.

"அனைத்து DC" உறுப்பினர்களையும் கரம் கூப்பி வாழ்த்துகிறேன். உங்களது அமைதிதான் குமரி பேராயத்தை மண்ணோடு மண்ணாக மாற்ற எனக்கு உதவுகிறது. "மக்களை ஏமாற்ற முடிந்தால் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து", எனது பணியை தொய்வில்லாமல் நான் செய்ய உதவுங்கள்.

இப்படிக்கு
"Lucifer"
Hell

(குறிப்பு: Lucifer -ன் இந்த கடிதத்தை அனைத்து தென்னிந்திய திருச்சபை மக்களுக்கும் அனுப்பி ஜெபிக்க தூண்டுங்கள்.)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.