தாவீதின் கூழாங்கற்களின் இரகசியம்

த&#3006
;வீது கோலியாத்தின் முன் , போர் ஆயுதங்களோடும்  போர் கவசங்களோடும்  நிற்கவில்லை.
ஆனால் சேனைகளின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் , ஐந்து  கூழாங்கற்களோடு நின்றான்.
ஓன்று தவறினால் மற்றொன்று  என்ற அவிசுவாசத்தில் ஐந்து கற்களை தெரிந்தெடுக்கவில்லை.
ஓன்று கோலியாத்தை வீழ்த்தியது .
மீதி நான்கின் கணக்கு எங்கே ?
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
II சாமுவேல் 21 .22
இன்று மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உள்ள
மனிதர்களோடு அல்ல நம் போராட்டம்.
சத்துருவையும் அவன் சேனைகளையும் அவமாக்க
தேவன் தெரிந்து கொண்ட பாத்திரங்கள் நாம்.
நம்மை குறித்த தேவனின் மகிமையான
திட்டங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போம்.
தேவ அழைப்பில் நிலைத்திருப்போம்.
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல
பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
அழைக்கப்பட்ட அழைப்புக்கு
பாத்திரவான்களாய் நடப்போம்.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகாகலாம்.
ஆனால் தேவனுடைய பிள்ளைக்கு
பாவத்தின் மீது  வெற்றி மேல் வெற்றி தான் அழகு.
விழுந்து எழும் ,  பின் மாற்ற வாழ்க்கையல்ல ,
அவர் அடிசுவடுகளில் தொடர்ந்து
முன்னேறும் வாழ்க்கையே முக்கியம்
<b>கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.</b>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.