🙏🙏🙏 🙏இறைவனே! ஏன் இப்படி?🙏🙏🙏🙏

---------------------------------------------------------
🌺  "என்னை ஏன் பலவீனப் படுத்தி விட்டீர்?

✝  "நீ என் பலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக"..
--------------------------------------------------------

🌺 "எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?"

✝ " நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல என்பதால்"....

------------------------------------------------------

🌺  " குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு அனுமதித்தீர்?"...

✝  " தெளிவான முடிவுகளை எடுக்கும் பயிற்சியை நீ பெறுவதற்காக"...

------------------------------------------------------

🌺  " நான் கேட்டதையெல்லாம் நீர் ஏன் தரவில்லை?"

✝ " உனக்கு எது தேவையோ அதை மட்டுமே நான் தர விரும்புவதால்"....

------------------------------------------------------

🌺 " அநீதியாளர்களை ஏன் எனக்கு எதிராக ஜெயிக்கவிட்டீர்?"

✝ " நீதியினிமித்தம் துன்பப் படுவது அவசியம் என்பதால்".....

-----------------------------------------------------
🌺  "விசுவசித்துக் கேட்டவைகளை நீர் அருள வில்லையே -ஏன்?"

✝  "சரியானவைகளை நீ விசுவசித்துப் பழகுவதற்காக".....

------------------------------------------------------

🌺  " மற்றவர்களை மாற்றாமல் என்னையே நீர் மாறச் சொல்கிறீரே?"..

✝ " என்னை நேசிக்கிறவர்களைத்தான் நான் மாற்ற விரும்புகிறேன்"....

------------------------------------------------------

🌺 "அவசியமான சில நன்மைகளை நீர் எனக்குத் தரவில்லையே?"

✝ " மிகத் தேவையானது இல்லாமலும் நீ வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதால்"....

-----------------------------------------------------

🌺 "ஏன் எனது நல்லத் திட்டங்களை நீர் தோல்வியடையச் செய்தீரே?"

✝ " அதைவிட நல்ல திட்டங்களை உனக்காக நான் வைத்திருப்பதால்"....

------------------------------------------------------

🌺 " வேறு சிலருக்கு நீர் அளித்த உயர்வை எனக்கு நீர் தரவில்லையே?"

✝ "அவர்களின் அழைப்பு வேறு, உன் அழைப்பு வேறு என்பதால்"...

------------------------------------------------------

🌺  "நீண்ட காலம் என்னை காக்க வைத்து விட்டீரே?"

✝ "நான் தரும் நன்மைகள் உன்னில் நிலைத்திருக்க அந்த காத்திருப்பு அவசியம் என்பதால்".....

------------------------------------------------------

🌺 " நான் மட்டும் சிறு தவறு செய்தாலும் தண்டித்து விடுகிறீரே?"

✝ " என் பிள்ளையிடம் சிறு தவறும் இல்லாத பரிசுத்த வாழ்வை விரும்புவதால்"....

-----------------------------------------------------

🌺 " என்னுடைய பல கேள்விகளுக்கு நீர் பதில் தருவதேயில்லையே?"

✝ " நீ விளக்கங்களைச் சார்ந்தல்ல, விசுவாசத்தைச் சார்ந்து வாழ்வதற்காக"....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.