தீர்க்கதரிசி மோசே அய்யா
40 வருட யாத்திரையை கர்த்தரின் துணையோடு வெற்றியாய் முடித்தவர்.
30 லட்சத்திற்க்கு மேற்ப்பட்ட ஜனங்களை பொறுமையாய் வழி நடத்தினவர். பத்து கட்டளைகளை தேவனிடம் பெற்று தந்தவர்.
பழைய ஏற்பாடு புத்தகத்தில் முதல் ஐந்து ஆகமங்களை எழுதியவர். கர்த்தரின் பெட்டியை கட்டளைக்கு ஏற்றார்போல் முதலில் செய்தவர். கர்த்தரின் கட்டளைகளை அச்சு பிசகாமல் நிறைவேற்றியவர்.
மிகப்பெரிய யாத்திரையை 30 லட்சத்திற்க்கு மேற்ப்பட்ட ஜனங்களை 40 வருடங்கள்
வழிநடத்திய மோசே அய்யா – சாந்த குணமுள்ளவர். முகமுகமாய் தேவனை அறிந்தவர், கர்த்தருக்கு சிநேகிதனைப்
போன்றவர்- 120 வயதிலும் பலம் குறையாமல், பார்வையுடனும் இருந்தவர்.
இவர் பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்க்கு செல்லும் வாய்ப்பை பெறவில்லை.
தீர்க்கதரிசி மோசே அய்யாவுக்கு நேர்ந்தது, கர்த்தரின் தீர்ப்பு. அது நமக்கு ஒரு பாடம். இஸ்ரவேல் மக்கள் தண்ணீர் வேண்டும் என்று முறையிட்டு வாதம் செய்தபோது மோசேயும் ஆரோனும் கர்த்தரிடம் வேண்டினார்கள். கர்த்தர்
5 சிறிய அறிவுரைகள் சொன்னார்.
1. நீ கோலை எடுத்துக்கொள்
2. ஆரோனை கூடி வரச்சொல்
3. சபையோரை கூடி வரச்சொல்
4. கன்மலையோடு பேசுங்கள்
5. எல்லோருக்கும் தண்ணீரைத் தாருங்கள்
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச் செய்தார்கள்.
முதல் மூன்று அறிவுரைகளை செய்த மோசே கன்மலையுடன் பேசவில்லை, பாறைதானே என நினைத்து விட்டாரோ?
இருமுறை கன்மலையை அடித்தார், இதுவும் அவிசுவாசமோ?
இந்த சந்தர்ப்பத்தில்தான் மோசேயின் கீழ்படிதலில் சரிவு வந்தது.
கர்த்தர் சபை முன்பு பிரசங்கம் செய்யச்சொல்லவில்லை.
அதற்க்குப் பதிலாக
மோசே மக்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
30 லட்சம் பேர் அருந்தினர்கள். ஓடையல்ல ஆறு போல ஓடியிருக்கும்.
இதில் மோசே உபயோகித்த
"நாங்கள்" என்ற சொல் தங்கள் பெருமையை பறை சாற்றுவது போல. இது முதல் தவறு.
மோசே – கண்மலை பார்த்து
கோபமாய் பேசியது இரண்டாவது தவறு. கோலை ஓங்கி அடித்தது மூன்றாம் தவறு.
ஏனென்றால் கோல்
கர்த்தருடையது. மோசே
சிங்கமா மாறினார். வல்லமையாக பேசினார், ஆனால் ஆடாக இல்லை.
★ எலிசா வாழ்க்கையிலும் இந்த பெருமை ஆட்க்கொண்டது. தன்னை சொட்டையன் என்று சொன்னதற்க்காக 2 கரடியை வரவழைத்து 42 இளைஞரை கொன்றது நல்ல செயலா? கர்த்தரின் வல்லமையை துஷ்பிரயோகம் செய்தார் எலிசா.
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்".
(எண்ணாகமம் 20: 2-12)
கண்மலையைப் பார்த்து பேசுங்கள் என்றார் கர்த்தர். பேசவில்லை. ஆனால் மோசே கோலை இரண்டுதரம் கன்மலையை அடித்தார்.
கோலை அடித்தது மிக தவறு அதுவும் கையை மேலே ஓங்கி அடித்தது கர்த்தரின் திட்டத்திற்க்கு கீழ்படியாததையே காட்டுகிறது. மோசே சபைக்கு முன்பு பிரசங்கம் செய்தது, மோசே அய்யா உபயோகித்த "நாங்கள்" என்ற பதம் அவருடைய சுயத்தை வெளியே காட்டியது – கர்த்தரின் நாமத்தை பரிசுத்தப்படுத்தாமல் – அதை விட மிகப்பெரிய தவறாய்ப்படுகிறது.
மோசே அதற்க்காக மூன்று முறை கர்த்தரிடம் வருந்தினார்.
கோபம் மனிதனை மாற்றியது, நா உளறியது – மோசேக்கு கானான் தேசத்தை தூரத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பே கிட்டியது. ஏன் என்னாவாயிற்று மோசேக்கு என்று யோசித்தால் ஒரே காரணம் அவர் கூட்டி வந்த மக்களின் நம்பிக்கை அற்ற பேச்சும், வாதமும், நடவடிக்கையும்தான் இவரை கோபப்படுத்தி பேச வைத்திருக்கிறது. இருந்தும் கோபத்தை தவிர்த்திருந்தால்?
இந்த கண்மலை சம்பவத்திற்க்குப்பிறகு மோசேயின் வாழ்க்கையிலே மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பதை பிறகு நடக்கும் சம்பவங்களில் சாந்த குணமுள்ளவராக காட்டுகிறது.
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். எண்ணாகமம் 12 :3 என வேதம் சொல்லுகிறது.
ஒப்பற்ற மோசேயின் வாழ்க்கை அற்புதமானது. தேவனே எல்லாவற்றையும் செய்தார்.சின்ன குழந்தையிலேயே அவரை காப்பாற்றி வளரச் செய்தார். ஞானம் பெற்றார். அரண்மனையில் 40 வருட வாழ்க்கை. பின் 40 வருட மனைவி மக்களுடன் மேய்ப்பனின் வாழ்க்கை. கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து 40 வருட கானான் தேசத்தை நோக்கி பயண வாழ்க்கை. மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கை. விருந்தினர் போல் வந்து திரும்பிப் போனார்கள். ஆனாலும் தேவன் (மோசேயின் குமாரன் எலியேசர் – எலியேசரின் குமாரன்) ரெகபியாவை தலைமையாளன் ஆக்கினார். மோசே லேவிய கோத்திரத்தார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் தேவன் அற்புதமாகவே மாற்ற விரும்புகிறார். அவர் விரும்புவது நம்முடைய சுத்தமான இருதயத்தையே.
மத்தேயு 5 : 8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
– தமிழ்மணி
Tamilmanicbe.WordPress.com
