_*தேவனின் சாயல் - தேவனின் வழிகள்*_
_அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்._
_அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப்போலிருந்தது,_
_அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது._
_தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது._
(வெளிப்படுத்தின விசேஷம் 1 :13- 16)
_தேவன் தரிசனமாவார், தேவனின் முகத்தை யாரும் காண முடியாது._
(யாத் 33 :20)
_மோசேக்கும் இதுவே நடந்தது._
_பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார்._
(யாத் 33 :23)
_கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார், மேகஸ்தம்பம் கூடார வாசல்மேல் நின்றது._ (உபாகமம் 31:15)
_அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்,; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை._ (உபாகமம் 4:12)
_ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது._
(ஏசா 6 :1)
_அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்._
_அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது._
_அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்._
(கொலோ 1 :15, 17-18)
_தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது._
(1 யோவான் 1:5)
_என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்._
(உன்னதப்பாட்டு 5: 10)
_நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது. அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது._
(தானியேல் 7: 9)
_மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது._
(யாத் 24 :17)
_அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,_
_ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்._
(1 தீமோத்தேயு 6:15- 16)
*தரிசனம்*
_அவரின் தரிசனம் என்றும் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் நினைக்கிற மாதிரியும் இருக்காது. ஓவ்வொருவரின் தரிசனத்திலும் ஒவ்வொரு விதமாக வெவ்வேறு வழிகளில் வருவார், விவரிக்க முடியாத மகிமை உடைகளில் தரிசனமாவார்._
*நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.* (எபிரேயர் 12:29)
👇🏾👇🏾
_என்னை அனுப்பின பிதா தாமே சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. (யோவான் 5:37)_
அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்,; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை. (உபாகமம் 4:12)
_அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்._
(சங்கீதம் 30:5)_
_என் ஜனமே, கேள், நான் பேசுவேன், இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன், நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்._
(சங்கீதம் 50:7)
_மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்._
(உபாகமம் 20:4)
_நீ என் சமுகத்தை காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்._
(யாத் 33: 20)
*ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!*
(ரோமர் 11:33)
