"உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, கொலை செய்வார்கள்"

120 சீனர்களை புனிதர்களாக அர்ச்சிப்பு செய்த போப் ஒருவரின் கதையை மட்டும்
அடிக்கடி கூறி கொண்டே இருந்தார்...

'அன் வாங்'என்ற சிறுமி ஒருத்தியின் கதை தான் அவரை அந்தளவு கவர்ந்திருந்தது.
சீன கிறிஸ்தவர்களால் மறக்க முடியாத ஒன்று கம்யூனிஸ்டுகளின்பாக்சர்
புரட்சி. மிஷனரிகள், பாதிரியார்கள், குழந்தைகள், பெண்கள் என பலர்
'கிறிஸ்தவர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட காலம்.

ஜூலை 1,1900 அன்று 'டாநிங்க்' என்ற சீன கிராமத்து கிறிஸ்தவர்கள் சுற்றி
வளைக்கப்பட்டனர். சிக்கிய அத்தனை கிறிஸ்தவர்களையும் அங்கிருந்த
தேவாலயத்தில் அடைத்த பாக்சர்கள்,சீனாவில் அந்நிய மார்க்கத்தை ஏற்க
அரசாங்க அனுமதி இல்லை என்றும் கட்டளையை ஏற்காத மக்களிற்கு மரண தண்டனை
விதிக்கப்படும் என்றும் கூறினார்களாம்.

அதற்கு அஞ்சி பலர் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து செல்ல ஆரம்பித்தனர்.
ஆனால் சிலர் தேவாலயத்தை விட்டு நகரவில்லை. அவர்களுள் இன்று பெயர்
காணப்பட்டவர்கள்அன் வாங், ஆன்று டிபிங்க், லூசியா வாங், அவரின் 5-வயது
மகள், 9-வயது மகன் ஆகியோர்.

அன் வாங் சிறு வயதில் இருந்தே கிறிஸ்தவ மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவள்.
அந்த நாளன்று அவளிற்கு 14 வயது எட்டியிருந்தது. பாக்சர்களுக்கு அஞ்சிய
அன் வாங்கின் வளர்ப்பு தாய் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து அங்கிருந்து
விலகினார். அன் வாங் வராமல் நிற்பதை கண்டு அவளது கையை பிடித்து இழுக்க
அவள் இன்னொரு கையால் தேவாலயத்தின் வாயிற்கதவை பிடித்து கொண்டு வர மறுத்து
அழுதாளாம். போராடி பார்த்த வளர்ப்பு தாய் அன்வாங்கை விட்டு சென்று
விட்டார்.

மறுதலிக்க மறுத்த கிறிஸ்தவர்களை புரட்சியாளர்கள் தேவாலயத்திலேயே
அடைத்துவிட்டனர். இருளில் கிடந்தால் மனம் மாறலாம் என்பதற்காக தான். ஆனால்
அன் வாங்கும் அவளுடன் இருந்த பிற கிறிஸ்தவர்களும் பின் வாங்கவில்லை.
தேவாலாயத்தில் இருந்த மெழுகுவர்த்திகளை கொழுத்திய அன் வாங் ஜெபிக்க
ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் சேர்ந்து பிற கிறிஸ்தவர்களும் இரவு
முழுவதும் ஜெபமாலைகளுடன் பிராத்தனையில் அமர்ந்துவிட்டனர்.

அதிகாலையில் தேவலாயத்திற்கு வந்த புரட்சியாளர்கள், தேவாலயத்தை திறந்தனர்.
மெழுகுவர்த்தி ஒளியில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை கண்ட
பாக்சர்களுக்கு ஆத்திரம் அதிகமானது. அங்கிருந்தவர்கள் எல்லாரும்
அடிக்கப்பட்டு தேவாலயத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டனர்.
அவர்கள் மறுதலிக்காமல் உறுதியாய் நிற்க சிரச்சேதம் முடிவு செய்யபட்டது.
அத்தனை கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாக்சர்கள் இழுத்து சென்றனர்.
போகும் வழியிலும் அன்வாங் ஜெபித்து கொண்டே சென்றாள். அவளுடன் இருந்த
பிறரும் பாடல்களையும் வசனங்களையும் கூறி கொண்டே சென்றார்களாம்.

'வெய்' என்ற சீன கிராமத்து தேவாலயம் முன்பு சிரச்சேதம்
நிறைவேற்றப்பட்டது. வரிசையாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தலை
துண்டிக்கப்பட்டனர்.பாக்சர்களுக்கு அஞ்சாத அன் வாங் இரத்தம் படிந்த
அவ்விடத்தில் முழங்கால் படியிட்டு தேவாலயத்து சிலுவையை நோக்கியவாறு
கண்களை மூடிவிட்டாள்.

அவளது தலையை துண்டிக்க வந்த புரட்சிகாரன், அவளை நோக்கி,"திருச்சபையை
மறுதலி"என்றான். அன்வாங் பதில் சொல்லவில்லை. அவளை தொட்டு மீண்டும்
ஒருமுறை சொன்னான். கண்ணை திறந்த அன்வாங்,"என்னை தொடாதே, கிறிஸ்துவை
மறுதலிக்க என்னால் முடியாது, என்னை கொன்றுவிடு"
என்றிருக்கிறாள்.

அவள் இளவயதுள்ளவளாயும் அழகாகவும் இருப்பதை கண்ட அவன் அவளை கொல்ல
மனதில்லாமல்,"நீ கிறிஸ்துவை விட்டால், நல்ல வசதியுள்ள குடும்பத்தில்
உன்னை மணம் முடித்து வைப்பேன். உன் வாழ்நாள் எல்லாம் நீ இன்பமாக
வாழலாம்"என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அன் வாங் திருச்சபையை
காட்டி,"நான் கிறிஸ்துவிற்கு மணப்பெண்ணாய் நிச்சயம் செய்யபட்டவள்"என்று
சொல்லிவிட்டாள்.

இதனை கேட்டு எரிச்சலுற்ற அந்த புரட்சிகாரன், அவளது இடது தோள்பட்டையில்
இருந்து சிறு மாமிசத்தை வெட்டி விட்டான்."தேவாலயத்தை மறுதலிக்க போகிறாயா
மாட்டாயா?"என்று மீண்டும் கேட்க அன் வாங்"மாட்டேன்"என்றாள். இடது கை
வெட்டபட்டது. அன் வாங் மண்டியிட்ட வாறே,"பரலோகத்தின் கதவு
திறந்திருக்கிறது, இயேசு, இயேசு, இயேசு"என்று சத்திமிட்டாள். அவள்
அவ்வாறு சத்தமிட அவளது தலையும் வெட்டபட்டு தரையில் விழுந்தது.

தலையை இழந்த நிலையிலும் அன் வாங்கின் உடல் முழங்கால் இட்டவாறே இருந்தது.
அந்த புரட்சிகாரன் முதுகு பகுதியை எட்டி உதைக்க அந்த உடலும் நிலத்தில்
விழுந்தது. கொலை செய்யப்பட்ட 11 பேரையும் (அவர்களில் 6 நபர்கள் அடையாளம்
தெரியவில்லை) பாக்சர்கள் ஒரே குழியில் புதைத்து விட்டனர்.

இதனை கண்ட வாங் லௌ என்ற 80 வயது மூதாட்டி அன் வாங்கின் கொலையை தன்
நாற்குறிப்பில் எழுதிவிட்டு மறைந்துவிட்டார். அன்வாங்கின் வாழ்வை வெளி
உலகத்திற்கு கொண்டு வந்த வாங் லௌ சீன மக்களால் இன்றும்
மதிக்கப்படுகின்றார்.

பாக்சர் புரட்சி தணிந்தது. நவம்பர் 6,1901 அன்று சீன கிறிஸ்தவர்கள் அந்த
உடல்களை மீண்டும் தோண்டி எடுத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த
உடல்கள் எல்லாம் சிதையாமல் இருந்ததாம். இந்த செய்தி அங்கு வேகமாக பரவ,
சீன கிறிஸ்தவர்கள் பலர் அவ்விடத்தில் கூடி அழுது அந்த உடல்களை முறையாக
அடக்கம் செய்தனர்.

அன் வாங்கின் பாட்டியார், தந்தை, வளர்ப்பு தாய் என கிறிஸ்துவை கைவிட்ட
அனைவரும் கிறிஸ்துவை ஏற்றனர். கத்தோலிக்க சபை அன் வாங்கை புனிதாராக
அறிவித்தது.இன்றும் சீனாவில் அன் வாங்கின் வாழ்வு மறக்கப்படவில்லை....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.