என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்....?

என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்....?

முற்காலத்தில் மனிதன் பாவம் செய்தால் பாவம் போக ஆடு மாடு பலியாகும்

மனிதன் செய்த பாவத்திற்கு ஒன்றும் அறியாத ஆடு பலியாகும்

தேவன் அந்த ஆட்டை கைவிட்டார்......

அதே போல்தான் நம் ஆண்டவராகிய இயேசு கிருஷ்தூம் கூட

ஏசாயா
53 அதிகாரம்

4.மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச்
சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு,
சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5.நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய
அக்கிரமங்களினிமித்தம் அவர்நொறுக்கப்பட்டார்;நமக்குச் சமாதானத்தை
உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால்
குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே
போனோம்;கர்த்தரோநம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7.அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய
வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்
குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச்
சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத்
திறவாதிருந்தார்.

8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்;
அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்;ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து
அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர்
வாதிக்கப்பட்டார்.

9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர்
மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்;அவர் கொடுமை செய்யவில்லை; அவர்
வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

10.கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;
அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர்
தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்,கர்த்தருக்குச் சித்தமானது
அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என்
தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை
நீதிமான்களாக்குவார்;அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக
எண்ணப்பட்டு,அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக
வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;
பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஆம் அன்பு சகோதர்களே
பிதாவாகிய தேவன் இயேசுவை கைவிட்டார்.........

எதற்காக

நாம் செய்த பாவத்துக்கு எப்படி பாவம் இல்லாத ஒரு ஆடு பலியாகிறதோ

ஆம் இந்த பூமியில் பிறந்த அணைத்து மனிதர்களுக்கும் பாவத்தை நீக்க ஒரு
பெரிய பலி தேவை

அது மிக பெரிய பலியாய் இருக்க வேண்டும் தேவ துதர்கள் கூட பெரிய பலி என்று
கூற முடியாது
ஏனென்றால் கோடான கோடி தேவதுதர்கள் அவரிடம் உண்டு அதனால் தான் தேவன் சொல்ல முடியாத
மிக மிக பெரிய பலியை ( தம்முடைய நேச குமாரனை ) மனிதன் மீது உள்ள
அன்பின் நிமித்தம் மனிதன்
செய்த நன்மைக்காக அல்ல மனித செய்த தீமைக்க தம்முடைய குமாரனை பாவத்தை
நீக்குகிற பலியாய்
ஒப்புகொடுத்தார்

பிதாவாகிய தேவன் அவரை கொள்ள சித்தமானார் என்று வேதம் கூறுகிறது

பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை கைவிட்டார்.........என்பது உண்மை(
பாவத்தைநீக்குவதற்காக)
அதனால் தான் குற்றம் மில்லாத இயேசு
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கூறினார் .

இதையும் படியுங்க

1. "அசுத்தமும் பரிசுத்தமும் இரண்டு நேர் எதிர் துருவங்கள்" இரண்டும்
ஒரே இடத்தில் இருக்கவே முடியாது! அதுபோல் தேவனும் பாவமும் ஒரே இடத்தில்
இருக்கவே முடியாது. எனவே உலகத்தின் மொத்த பாவமும் தேவ ஆட்டுகுட்டியாகிய
இயேசுவின் மீது சுமத்தபட்டபோது அதுவரை அவரோடு ஒன்றாக இருந்து நடத்திய
தேவன் அவரைவிட்டு விலகியிருக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

2. பாவத்துக்காக பலியான மனுஷ குமாரனாகிய இயேசு மனுவர்க்கத்தின் மொத்த
பாவங்களையும் அவர் ஒருவரே சுமக்கவேண்டிய நிலை இருந்ததால் அதை இயேசு
ஒருவரே நிறைவேற்றும்படி பிதாவாகிய தேவன் அவரைவிட்டு விலகும் நிலை
ஏற்ப்பட்டது.

3. பிதாவானவரை பற்றி வேதம் சொல்கையில்"ஒருவராய்,சாவாமையுள்ளவ(ர்)(I தீமோ
6:16)என்று விவரிக்கிறது. எனவே மரணத்தை இயேசு ருசி பார்க்கையில்
பிதாவாகிய தேவன் அவரைவிட்டு விலகும் நிலை ஏற்ப்பட்டது.

யோர்தானில் ஞானஸ்தானம் எடுத்த நாளில் இருந்து தொடர்ந்து இயேசுவோடு கூடவே
ஒன்றாக இருந்து அவருக்கு செவிகொடுத்து போதித்து வழி நடத்திய பிதாவின்
ஆவியானவர், மேலேயுள்ள காரியங்களினிமித்தம் அந்த கடைசி நேரத்தில் இயேசுவை
விட்டு பிரிய நேர்ந்தது. சிலுவையில் தான் தொங்கும் அந்த கொடூர
வேதனையைவிட, பிதா ஒருகணம் அவரைவிட்டு பிரிந்ததை தாங்கமுடியாதவராய் இயேசு
அங்கு "என் தேவனே என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறுகிறார்" என்றே
நான் கருதுகிறேன்.

மேலதிக விளக்கம் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
__________________

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. இன்னொரு அர்த்தம், இதற்காகவே நான்.

    ReplyDelete