இன்று அநேகர் புதிய உடன்படிக்கையின் கிருபைக்குக் கீழ் நாம்
இருக்கிறபடியால் 'இனியும்' பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்று
எண்ணுகிறார்கள். இதுபோன்றவர் களுக்காகவே இயேசு, "நியாயப்பிரமாணத்தை
அழிக்கிறதற்கு அல்ல,நிறைவேற்றுகிறதற்கேவந்தேன்" எனக் கூறினார். இவ்வாறு
புதிய ஏற்பாட்டின் கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுவார்கள் என
யூதா தன்னுடைய நிருபத்தில் முன்கூட்டியே எச்சரித்தார் (யூதா 4). ஆங்கில
வேதாகமத்தில் 'காமவிகாரத்திற் கேதுவாய்' என்ற வார்த்தை பாவம் செய்வதற்கு
'லைசென்ஸாகப்'புரட்டுவார்கள் என்றே கூறப்பட்டுள்ளது. தேவனுடைய
பிரமாணங்களை 'மிக எளிதாய்' எடுத்துக் கொள்ளும்படி கிருபை உதவிசெய்கிறது
என்றே இவர்கள் துணிந்து கூறுகிறார்கள் !
இவ்வாறு, ஓர் தரம் குறைந்த வாழ்க்கைக்காக தேவகிருபை தரப்படவேயில்லை.
புதிய ஏற்பாட்டில் ஒருவன் பெற்றுக் கொள்ளும் தேவ கிருபை அவனைப் பாவத்தின்
வல்லமையிலிருந்து விடுதலையாக்கும் என்றேரோமர் 6:14கூறுகிறது. அதாவது
நாம்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படியேஇக்கிருபை உதவி செய்கிறது. பழைய
உடன்படிக்கையில் தன் சொந்த பெலனால் கைக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போன
ஒருவன், புதிய உடன்படிக்கையின் கீழ் பரிசுத்தாவியின் பெலனாகிய கிருபையைப்
பெற்று, தான் முன்பு தோற்றுப்போன பிரமாணங்களையெல்லாம் ஜெயமாய் கைக்
கொண்டிட முடியும்! இவ்விதமாகவே நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை
பெற்றிருக்கிறோம்.
எப்படியெனில், கிருபையின் மூலமாய்பிரமாணங்களை என்
இருதயத்திலேயேகீழ்ப்படிகிறபடியால், வெளியரங்கமான பிரமாணத்திற்கு நான்
கட்டுப்பட அவசியமில்லாமல், விடுதலை பெற்றிருக்கிறேன். இதைத்
தெளிவுபடுத்தும்படியே இயேசு தன் சீஷர்களிடம் நியாயப்பிரமாணத்தை அழிக்க
அல்ல, அதை நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் எனக் கூறினார். வெறும் மோசேயின்
எழுத்தின் பிரமாணமான "விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை
செய்யாதிருப்பாயாக....." என்ற வெளியரங்கமான கற்பனையை இயேசு நிறைவேற்றாமல்
இப்பிரமாணங்களைத் "தனக்குள்" தன் சிந்தை வாழ்க்கையில் நிறைவேற்றினார்.
அதாவது, வெறும் எழுத்தின் பிரமாணத்தையல்ல,முழு ஆவியின்
பிரமாணத்தையும்அவர் நிறைவேற்றி முடித்தார்!
இவ்வாறு, அவர் நிறைவேற்றி முடித்ததுபோலவேநாமும் நிறைவேற்றும்படிஇயேசு
இப்போது நம்மை அழைக்கிறார்.
அதேசமயம் நாம் ஒரு காரியத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று தடவை
தேவனிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் பொருளாகாது! ஏனென்றால், கெத்செமனே
தோட்டத்தில் ஒரே காரியத் திற்காக இயேசு மூன்று முறை ஜெபித்தார் என
மத்தேயு 26-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். 39-ம் வசனத்தில் முதல்
தடவை ஜெபித்தார். 42-ம் வசனத்தில் இரண்டாம் தடவை ஜெபித்தார். 44-ம்
வசனத்தில் மூன்றாம் தடவை ஜெபித்தார் என்றும், "அந்த வார்த்தைகளையே
சொல்லிஜெபம் பண்ணினார்" என்றும் வாசிக்கிறோம். எனவே ஒரு விஷயத்திற்காக
நாம் தேவனிடம் பதில் பெறும்வரை மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பதில்
தவறில்லை. ஆனால், நாமோ வீணான அல்லது அர்த்த மற்ற வார்த்தைகளைத் திரும்பத்
திரும்ப உபயோகிப்பதையே வேண்டா மென இயேசு கூறினார்.
பிரமாணங்களின் முக்கியத்துவத்தை இயேசு போதிக்கையில்,
"நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்,
நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதின் ஒரு சிறு
எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 5:17,18)என்றார்.
அதுவும், கற்பனைகளைக் கைக்கொண்டு ஜீவிப்பதிலும் இரு சாராரை இயேசு
குறிப்பிட்டார்! இவைகளில்சிறிதானதொன்றையும் மீறாமல் கைக்கொண்டு
போதிக்கிறவன்பரலோக இராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான் என்றும்,
இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய்
மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன்
என்னப்படுவான் என்றும், அழுத்தம் திருத்தமாக கூறினார்! (மத்தேயு 5:19).
இவ்வசனத்தில், வானத்தையும் பூமியையும் காட்டிலும் தேவனுடைய பிரமாணங்களே
மேலானது என இயேசு வலியுறுத்திக் கூறியதை கவனித்துப்பாருங்கள்.
பரலோகத்திலும் தேவனுடைய பிரமாணங்களே மேன்மையாகக்
கருதப்படுவதால்,ஒவ்வொருதேவப்பிரமாணங்களையும் கைக்கொள்ளவேண்டுமென்றே இயேசு
வலியுறுத்தினார். ஆம், இதை மறுப்பவர்களை "வேதப் புரட்டர்கள்" என நாம்
அடையாளம் காண்போமாக!
தேவகிருபைக்கு களங்கம் கற்பிக்கும் வேதப் புரட்டர்கள்! - சகரியா பூணன்
0
September 01, 2016
Tags