நாம் சத்தத்தை உயர்த்தி ஜெபிப்பதைச் சுற்றியுள்ள ஜனங்கள் கேட்டாலும்,
நாமோ ஜனங்களை நம் மனதிலிருந்து அனுப்பிவிட்டுதேவனுக்கு முன்பாகமாத்திரமே
ஜெபிப்பவர்களாய் நின்றுவிடமுடியும்.
இன்று நமக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் அதிகமான ஜெபங்களல்ல . . .பதில்
கிடைக்கும் ஜெபமேஇன்றைய நம்முடைய தேவையாகும்! இந்த இரண்டு
ஜெபத்திற்குமிடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இன்று அநேக ஜெபங்கள்
தேவனுடைய இராஜ்யத்தில் வலிமையற்றதாகவே இருக்கிறது. ஓர்சுத்த
இருதயத்திலிருந்துஅந்தரங்கமாய் அவருடைய சமூகத்தில் ஏறெடுக்கப்படும்
ஜெபங்களை மாத்திரமே தேவன் ஏற்றுக் கொண்டு, அந்த ஜெபங்களுக்குப் பதிலும்
தருகிறார்!!
நாம் எவ்வாறு ஜெபிக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து இயேசு
வலியுறுத்தியபோது, "அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்"
என எச்சரித்தார். அஞ்ஞானிகள் தங்கள் பிரார்த்தனையில் அநேக வார்த்தைகளைச்
சொல்லி ஜெபித்துவிட்டால் அதை கடவுள் கேட்டு விடுவார் என எண்ணுகிறார்கள்.
இதுவும் ஒரு கொடிய வஞ்சகமாகும். இவர்களைப்போலவே இன்றைய கிறி°தவர்களின்
நிலையும் பரிதாபமாகவே இருக்கிறது. தொடர்ந்து மூன்று மணிநேரங்கள்
ஜெபித்தால் தேவன் உடனடியாகக் கேட்பார் என்றும், ஒருநிமிடம் மாத்திரமே
ஜெபிக்கும் ஜெபத்தை அவர் கேட்க மாட்டார் என்றும் இவர்கள்
எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இயேசு இவ்விஷயத்தைக் குறித்து என்ன
எண்ணுகிறார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் நீண்ட நேரம் ஜெபிக்கிறீர்களா
என்பதைவிட உங்கள் ஜெபத்தில்விசுவாசம்இருந்தால், "எல்லாம் உங்களால்
கூடும்" என்றே கூறுகிறார். மேலும், விடாமுயற்சியான உறுதியும்
ஜெபத்திற்குத் தேவையானதாகும்.
ஆம்,
1) சுத்த இருதயம்
2) விசுவாசம்
3) விடாமுயற்சி
ஆகிய இவைகளே தேவனுடைய மகிமைக்காக ஜெபிக்கும் ஜெபத்திற்குத்
தேவையானதாகும். மாறாக, அநேக வசனிப்புகளான வார்த்தைகள் அல்ல!
அதேசமயம் நாம் ஒரு காரியத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று தடவை
தேவனிடம் ஜெபிக்கக்கூடாது என்பதும் பொருளாகாது! ஏனென்றால், கெத்செமனே
தோட்டத்தில் ஒரே காரியத் திற்காக இயேசு மூன்று முறை ஜெபித்தார் என
மத்தேயு 26-ம் அதிகாரத்தில் þநாம் வாசிக்கிறோம். 39-ம் வசனத்தில் முதல்
தடவை ஜெபித்தார். 42-ம் வசனத்தில் இரண்டாம் தடவை ஜெபித்தார். 44-ம்
வசனத்தில் மூன்றாம் தடவை ஜெபித்தார் என்றும், "அந்த வார்த்தைகளையே
சொல்லிஜெபம் பண்ணினார்" என்றும் வாசிக்கிறோம். எனவே ஒரு விஷயத்திற்காக
நாம் தேவனிடம் பதில் பெறும்வரை மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பதில்
தவறில்லை. ஆனால், நாமோ வீணான அல்லது அர்த்த மற்ற வார்த்தைகளைத் திரும்பத்
திரும்ப உபயோகிப்பதையே வேண்டா மென இயேசு கூறினார்.