Type Here to Get Search Results !

வேதாகம வினாடி வினா - 3

வேதாகமப் பகுதி : தொடக்கநூல் (ஆதியாகமம்) : 41 முதல் 50ம் அதிகாரம் வரை
மற்றும் யாத்திராகமம் 1 to 10 வரை,
——————————

1. இந்த நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள் என்று சொன்ன
பார்வோனுக்கு மோசேயின் பதில் என்ன?

a). பாலைநிலத்தில்தான் நாங்கள் கடவுளுக்கு பலியிடுவோம்
b). எகிப்தியர் எங்களை அடிப்பார்களே.
c). எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள்
பலியிடுவதாகுமே.

2. எகிப்திய மன்னன் கூறியதற்கு எபிரேய மருத்துவ பெண்களின் பதில் என்ன?

a). மருத்துவப்பெண் [நாங்கள்] வருமுன்னரே அவர்களுக்கு பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது.
b). நாங்கள் கடவுளுக்கு அஞ்சி இருக்கிறோம்.
c). குழந்தைகளை நாங்கள் கொல்லமாட்டோம்.

3. அம்ராம் பெற்ற பிள்ளைகள் யார்? யார்?

a). கோராகு,நெபேகு
b). ஆரோன்,மோசே
c). லிப்னி,சிமெயி

4. இனி என் முகத்தில் விழிக்காதே, என்று பார்வோன் கூறியதற்கு மோசேயின் பதில் என்ன?

a). இனி உன் முகத்தில் விழிக்கப்போவதில்லை
b). எங்கள் ஆண்டவருக்கு செலுத்துவதற்கான பலிகளை என் கையில் தாரும்
c). பார்வோனே, இத்தனை அற்புத,அதிசய,
அடையாளங்களை கண்டும் இன்னும் கடவுளை நம்பவில்லையா?

5. ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு கூறியது என்ன?

a). உனக்கு பதிலாக நானே பேசுவேன்
b). ஆரோன் உனக்கு கடவுள் போல இருப்பான்
c). நான் உன் வாயிலும் ஆரோன் வாயிலும் இருந்துக்கொண்டு நான் செய்ய
வேண்டியதை அறிவுறுத்துவேன்

6. இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!இது யார் யாரிடம் கூறியது?

a).பார்வோன் மோசேயிடம் கூறியது
b).கடவுள் மோசேயிடம் கூறியது
c)கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கூறியது

7. பார்வோனுக்கு கனவு இருமுறை வந்ததன் காரணம் என்ன?

a).கடவுளால் உறுதி செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்பதால்
b).பார்வோன் யோசேப்பை எகிப்தின் அதிபதியாக நியமித்ததால்
c).எகிப்து தேசம் எங்கும் மகா கொடுமையான பஞ்சம் வரும் என்ற காரணத்தால்

8. எங்கள் குற்றப்பழியை மன்னித்தருளும்" என்று யோசேப்பின் சகோதரர் கூறிய
பொழுது யோசேப்பின் பதில் என்ன?

a).அஞ்சாதீர்கள்,நான் என்ன கடவுளா?என்று கேட்டார்
b).கடவுள் உங்கள் தீமையை நன்மையாக மாற்றிவிட்டார்
c).உங்களையும்,உங்கள் குழந்தைகளையும்,பேணிக்காப்பேன் என்று ஆறுதல் அளித்தார்

9. யாக்கோபு தன் மகன்களிடம்" என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள்
என்று ஏன் கூறினார்?

a).யோசேப்பும் இல்லை,சிமியோனும் இல்லை என்பதால்
b).பென்யமினை கூட்டிக்கொண்டு எகிப்து செல்ல வேண்டும் என்று சொன்னதால்
c).யோசேப்பை இழந்து தவித்ததால்

10. யாக்கோபின் வாழ்நாள் மொத்தம் எத்தனை ஆண்டுகள்?

a).147 வருஷம்
b).130 வருஷம்
c).110 வருஷம்

11. யூதாவை விட்டு செங்கோல் நீங்காது,எதுவரை?

a).அரசுரிமை உடையவர் வரும் வரையில்
b).மக்களினங்கள் அவருக்கு பணிந்திடும் வரையில்
c).சமாதான கர்த்தர் வருமளவும்

12. அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்,இது யாருடைய கூற்று?

a).ரூபன்
b).யூதா
c).பென்யமின்

13. யோசேப்பு தன் சகோதரரை பார்த்து என் தகப்பனார் இன்னும் உயிரோடே
இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?

a).அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை
b).திகிலடைந்து நின்றனர்
c).நம் தந்தை உயிரோடு இருக்கிறார் என்று சொன்னார்கள்

14. அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்த்த பெண்மான் யார்?

a).யோசேப்பு
b).இசக்கார்
c).நப்தலி

15. எவற்றுக்கு பதிலாக உங்களுக்கு தானியம் தருவேன் என்று சொல்லி அந்த
ஆண்டு முழுதும்எகிப்தியரை காப்பாற்றினார்?

a).ஆட்டு மந்தைகள்
b).கால்நடைகள் எல்லாம்
c).மாட்டு மந்தைகள்

விடைகள் Answer:-
————————

Question [1] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 8:26]

Question [2] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 1:19]

Question [3] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 6:20]

Question [4] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 10:29]

Question [5] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 4:15]

Question [6] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 3:14]

Question [7] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 41:32]

Question [8] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 50:21]

Question [9] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 42:36]

Question [10] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 47:28]

Question [11] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:10]

Question [12] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 43:8,9]

Question [13] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 45:3]

Question [14] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:21]

Question [15] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 47:17]

Post a Comment

0 Comments