பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள்
* பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள் எவை? அதை எப்படி கையாள்வது?
* மனஸ்தாபங்கள், மனவருத்தங்களை கையாள்வது எப்படி? கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான கருத்துக்களை கையாள்வது எப்படி?
* தலைவர், பராமரிப்புக்குழு நடக்கும் வீட்டுக்காரர் மற்றும் அவர்கள் குடும்பத்தார், மற்ற முதிர்ச்சி பெற்ற விசுவாசிகள், உதவி தலைவர்கள், அவிக்குரிய பெற்றோர், புதிய நபர்கள் - இவர்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள், தகவல்கள் - இவைகளைக் கையாண்டு நல்ல முறையில் குழுவை நடத்தி அதைப் பெருக்கத்திற்குள் நடத்தி, ஒரு குழு மூலமாக பல குழுக்களை ஆரம்பித்து பெருக வேண்டும்.
குழுவுக்கும் அதன் தலைவருக்கும் இருக்க வேண்டிய குணாதிசயங்கள்
1. தேவனை நேசிக்கவும், அவரை அறிகிற எல்லா அறிவிலும் வளர வேண்டும். எல்லாரைக் காட்டிலும் அவரை அதிகம் நேசிக்கிறவனாக இருக்கிறவன்.
(மாற்கு: 12:29-31)
2. கற்றுக்கொள்ளவும், கீழ்படியவும் ஆர்வமாய் இருக்க வேண்டும். (பிலிப்பியர்: 3:1-14). அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் விட்டு வெறுக்கிறவனாக இருக்க வேண்டும்.
3. வேதத்தை தியானிக்கிறவனாக அதை பகிர்ந்து கொள்ள அறிந்தவனாக இருக்க வேண்டும்.
(2தீமோத்தேயு: 3:14-17)
4. ஜெபிக்கிறவனாக இருக்க வேண்டும். மன்றாட்டு ஜெபம், ஆசீர்வதிக்கும் ஜெபம், விடுதலைக்காக ஜெபம். (பிலிப்பியர்: 4:4-7)
5. நல்ல உறவை கட்டி எழுப்புகிறவனாக இருக்க வேண்டும்.
(கொலோசெயர்: 2:2-4)
6. பிறருக்கு ஆறுதலும், ஆலோசனையும் கொடுக்கத்தக்கவனாக இருக்க வேண்டும்.
(ரோமர்: 12:1,2,10)
7. நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். பிறரை உற்சாகப்படுத்தவும், புத்தி சொல்லவும், பயிற்றுவிக்கவும் கடனாளிகளாக இருக்கிறோம். (எபிரெயர்: 10:24,25)
8. தேவனை ஆராதிப்பதிலும், கூடிக் கொண்டாடுதலும் தேவையான ஒன்று. அன்பை பகிர்ந்து கொள்ளுதல், ஐக்கியப்படுதல், விசாரித்தல். (2கொரிந்தியர்: 2:14,15; 8:23,24)
9. தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால், குழுக்கள் பெருக்கமடைய வேண்டும். உருவாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று. (அப்போஸ்தலர்: 20:20)
10. சந்திக்கப்படாதோரை கிறிஸ்துவின்
சுவிசேஷத்தினால் சந்திக்கவும்,
சந்திக்கப்பட்டோரை வேதாகமத்தை கற்றுக் கொடுத்து அவர்களை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் நல்ல செயல்படும் பொறுப்புள்ள அங்கத்தினராக மாற்றி, சந்திக்கப்படாதோரை சந்திக்கத்தக்கவராக பயிற்சி கொடுத்து, சமுதாயத்தை மறுரூபப்படுத்த வேண்டும். (1பேதுரு: 3:15)
தலைவர்கள் கடமை
ஒரு தலைவன் ஆற்ற வேண்டிய கடமைகள்:
1. தூண்டுகோலாக இருப்பவர்
2. மேய்ப்பர்
3. தலைவர்
4. உருவாக்குபவர்
5. இயக்குநர்
சுவிசேஷத்தை
அறிவிக்கும் முறை
*.ஏதாவது இருவருக்கும் உறவு ஏற்படத்தக்கதாக பேசுங்கள்.
*.பாராட்டக்கூடிய ஒன்றைக் கண்டு பிடித்துப் பேசுங்கள்
*.மார்க்க சம்பந்தமாக, குடும்ப சம்பந்தமாக, சபை சம்பந்தமாக கேள்விகளைக் கேளுங்கள்
*.அவர்கள் சொல்வதை அக்கறையாய் கவனியுங்கள்
*.உரையாடலை கிறிஸ்துவுக்கு நேராக திருப்ப அறிந்திருங்கள்
*.சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்