சங்கீதம் 1 விளக்கவுரை:- (Charles MSK)



வwtச. 1-6 அறிமுகம்:-

முதலாம் சங்கீதத்தை
சங்கீத நூலின் முகவுரையாக
கொள்ளலாம்.

ஆசீர்வாதங்களை பெறும் வழியை போதித்து பாவிகளின் இறுதி அழிவையும் கூறி எச்சரிப்பதே இச்சங்கீதத்தின் நோக்கம் ஆகும்.

சங்கீத நூலின் முழுமையின் கருப்பொருளாக இச்சங்கீதம் அமைகிறது.

இச்சங்கீதத்தில் இருவகை மனிதர்களை படம் பிடித்து காடுகிறது.

சாதி, இனம், மதம், மொழி, பால், நிறம் போன்றவற்றை கொண்டு மனிதனை நியாயம் தீர்காமல் அவனது மனபாங்கின்படியும் செயல்களின்படியும் கர்த்தர் நியாயம்தீர்க்கிறார்.

தலைப்பு:-

“இரு மனிதர்கள்”,
“இரு வழிகள்”,
“இரு முடிவுகள்”.

உட்பிரிவுகள்:-

* வச.1-3 நீதிமானின் வழியும் ஆசீர்வாதமும்

* வச.4-5 துன்மார்கரின் வழியும் நிலையும்

*வச.6 இருவரின் முடிவுகள்.

வசன விளக்கம்:-

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

அ). எவைகளை செய்ய கூடாது? இவைகளுக்கு எதிரானவற்றை கண்டுபிடிப்பதன் மூலம் எவைகளை செய்ய வேண்டும் என்பதை கண்டுகொள்ளலாம்.

எதில் நடக்க வேண்டும்?

கர்த்தருடைய
ஆலோசனையில் நடக்க வேண்டும். இந்த ஆலோசனையை வேத தியானம், ஜெபம், தேவ செய்திகளை கவனமாய் கேட்டல், ஆவிக்குரிய மூபர்களிடம் கேட்டு அறிதல் போன்ற வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

எங்கு நிற்க்க வேண்டும்?

கர்த்தருடைய மக்கள் நீதிக்காக உண்மைக்காக நற்ச்செய்தி பணிக்காக நிற்க்கும்பொழுது சேர்ந்து நிற்க்க வேண்டும்.

எங்கு உட்க்கார வேண்டும்?

துதிக்கிறவர்களோடு
உட்க்கார வேண்டும்.

ஆ). திருடுகிற அநேகர் கொலை செய்வதில்லை. கொலை செய்கிற சிலர் திருடுவதில்லை. ஆக, எல்லா பாவமும் செய்கிறவன் தான் பாவியல்ல ஒரு பாவத்தில் நிலைத்திருப்பவனும் பாவிதான் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

2.கர்த்தருடையவேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

தியானம் என்றால் என்ன?

“வாசித்து, மீண்டும் மீண்டும் வாசிப்பதோடு சொல்லி பார்த்து, பல கோணங்களில் சிந்தித்து, கேள்விகள் கேட்பதின் மூலம் ஆராய்ந்து அறிவது தியானம் ஆகும்.”

நீர் இவ்விதம் தியானிக்கிறீரா?
தியானிக்காவிடில் எவ்வாறு அதன்படி நடக்க முடியும்????

வசனம் 3-4

நீதிமான்:-

நீர்கால்கள் ஓரம் நடப்பட்ட மரம்:

எல்லா நலமும் பெற்று, நிலைத்திருத்தல்.

இலையுதிராதிருத்தல்:

தாழ்ச்சி அடையாமல் இருந்து (23:1), மனிதருக்கு மகிழ்சியும், சமாதானமும் தருதல்.

கனிதந்து:

மற்றவருக்கு நற்செயல் செய்து பயனுள்ளவராக வாழ்தல்.

துன்மார்கன்:-

காற்று பறக்கடிக்கும் பதர்:
ஈரமில்லாமல் (நண்மைகளை அனுபவியாமல்), நிலைத்து நிற்க்காமல், மற்றவருக்கு எவ்வித பயனுமில்லாமல் வாழ்வான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

நீதிமான்களின்
ஆசீர்வாதங்கள்:

அவன் நீர்கால்களின் (ஆசீர்வாதங்களின்) ஓரமாய் நடப்படுவான்.

கனிக்கொடுப்பான் (மற்றவர்க்கு பயனுள்ளவனாய் இருப்பான்.

நிழல் தருவான் செழிப்பாய் இருப்பான்.

அவன் தானாக வாழ்ந்த காட்டுமரம் போலிராமல் நடப்பட்ட மரத்தை போன்றவன். அதாவது ஒரு மரத்தை நடுகிறவர்கள் இடம் பார்த்து நட்டு அதை கண்ணும் கருத்துமாய் வளர்பதை போன்று கர்த்தர் அவனை பராமரிப்பார்.

ஒரு ஆசீர்வாதமல்ல பல ஆசீர்வாதங்கள் (நீர்கால்கள்) இருக்கும் இடத்தில் வைக்கபடுவான்.

அவன் செய்வதெல்லாம் வாய்கும் என்பதே மாபெரும் ஆசீர்வாதம். அதாவது குடும்பத்திலும், சமுதாயத்திலும், தொழிலிலும், ஊழியத்திலும் செய்வதெல்லாம் வாய்கும்.

4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

நெல் போன்ற தானியங்களின் அறுவடையில்
தானியங்களுடன் அரிசி இல்லாமல் வெறும் உமி மட்டும் இருக்கும் அதுவே பதர் ஆகும். இது எதற்குமே பயனற்றது அது போலவே துன்மார்கர் எதற்கும் பயன்படமாட்டார்கள்.

5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

இன்றைய அனைத்து சபைகளிலும் தேவ பிள்ளைகளுடன் பதர் போன்றவர்கள் உள்ளனர். காலம் வரும்போது அவைகள் பிரிக்கபடும் (மத் 3:12).

6.கர்த்தர்நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

தன்மார்கர் மட்டுமின்றி
அவர்களின் வழியும் அழிக்கப்படும். அல்லேலூயா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.