வேதாகம கால அளவுகள், எடைகள்


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை - ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை

1. தாலந்து (60 மினா) - 75 பவுண்டு - 34 கிலோ கிராம்

2. மினா (50 சேக்கல்) - (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு - 0.6 கிலோ கிராம்

3. சேக்கல் (2 பெக்கா) - 2/5 அவுன்ஸ் - 11.5 கிராம்

4. பிம் ( சேக்கல்) - 1/3 அவுன்ஸ் - 7.6 கிராம்

5. பெக்கா (10 கேரா) - 1/5 அவுன்ஸ் - 5.5 கிராம்

6. கேரா - 1/50 அவுன்ஸ் - 0.6 கிராம்


நீட்டல் அளவை:

வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை

1. முழம் - 18 அங்குலம் - 0.5 மீட்டர்

2. சாண் - 9 அங்குலம் -
23 செ.மீ

3. கையளவு - 3 அங்குலம் -
8 செ.மீ

முகத்தல் அளவை:
உலர்ந்த தானிய அளவை:

1. கோர் (ஓமர்) (10 எப்பா) - 6 மரக்கால் - 220 லிட்டர்

2. லெதேக் (5 எப்பா) - 3 மரக்கால் - 110 லிட்டர்

3. எப்பா (10 ஓமர்) - மரக்கால் - 22 லிட்டர்

4. சேயா ( 1/3 எப்பா) - 7 குவார்ட்ஸ் - 7.3 லிட்டர்

5. ஓமர் (1/10 எப்பா) - 2 குவார்ட்ஸ் - 2 லிட்டர்

6. கேப் (1/18 எப்பா) - 1 குவார்ட்ஸ் - 1 லிட்டர்

திரவ அளவை:

1. பாத் (1 எப்பா) - 6 காலன் - 22 லிட்டர்

2. இன் (1/6 பாத்) - 4 குவார்ட்ஸ் - 4 லிட்டர்

3. லாக் (1/72 பாத்) - 1/3 குவார்ட்ஸ் - 0.3 லிட்டர்


நாள், மணி நேரக் கணக்கு

ஒரு யூத நாள் என்பது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய அஸ்தமனம் முடிய 8 சம பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

1. முதலாம் ஜாமம் - சூரிய அஸ்தமனம் முதல் இரவு 9 மணி வரை.

2. இரண்டாம் ஜாமம் - இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை

3. மூன்றாம் ஜாமம் - நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை

4. நான்காம் ஜாமம் - அதிகாலை 3 மணி முதல் சூரிய உதயம் வரை.

5. முதலாம் ஜாமம் - சூரிய உதயம் முதல் காலை 9 மணி வரை

6. இரண்டாம் ஜாமம் - காலை 9 மணி முதல் நண்பகல் வரை

7. மூன்றாம் ஜாமம் - நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை

8. நான்காம் ஜாமம் - பிற்பகல் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை.


யூத நாள் காட்டி (காலண்டர்)

யூதர்கள் இரு வகை காலண்டரை பயன்படுத்தினர்:

1. அரசாங்கக் காலண்டர்:

இராஜாக்களுடைய அதிகாரப்பூர்வமானது; குழந்தைப் பிறப்பு, ஒப்பந்தங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.

2. மதக் காலண்டர்:
/p>

பண்டிகைகள் முதலானவ‌ைகள் கணக்கிடப்பட்டன.

யூதர்களின் மாதங்கள் - ஆங்கில மாதங்கள் - நாட்கள் - அரசு மாதம் - மதமாதம்:

1. ட்டிஷ்ரி - செப்டம்பர் - அக்டோபர் - 30 - 1 - 7

2. கெஸ்வான் - அக்டோபர் - நவம்பர் - 29 (அ) 30 - 2 - 8

3. ஜிஸ்லெவ் - நவம்பர் - டிசம்பர் - 29 (அ) 30 - 3 - 9

4. ட்டிபெத் - டிசம்பர் - ஜனவரி - 29 - 4 - 10

5. ஷீபெத் - ஜனவரி - பிப்ரவரி - 30 - 5 - 11

6. ஆதார் - பிப்ரவரி - மார்ச் - 29 (அ) 30 - 6 - 12

7. நிசான் - மார்ச் - ஏப்ரல் - 30 - 7 - 1

8. ஐயார் - ஏப்ரல் - மே -
29 - 8 - 2

9. சிவான் - மே - ஜூன் -
30 - 9 - 3

10. ட்டம்மூன் - ஜூன் - ஜூலை - 29 - 10 - 4

11. ஆபிப் - ஜூலை - ஆகஸ்ட் - 30 - 11 - 5

12. எலூல் - ஆகஸ்ட் - செப்டம்பர் - 29 - 12 - 6

எபிரேய மாதங்கள் ஒன்று 30, அடுத்தது 29 நாட்களாக மாறிவரும்.

நமது ஆண்டைவிட அவர்களுடைய ஆண்டு குட்டையானது (வருடத்திற்கு 354 நாட்கள்).


எனவே, ஒவ்வொரு 3 ஆண்டுகளிலும் (19 ஆண்டுகளில் 7 முறை) இன்னொரு 29 நாட்களைக் கொண்டு மாதம் சோ்க்கப்படும். அப்படி சோ்க்கப்படும் ஆண்டில்
“வேதார்” என்னும் மாதம் “ஆதார், நிசான்” மாதங்களுக்கிடையே சோ்க்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.