பாவமில்லாதிருப்பது என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மெய்யாகவே முடிகிற காரியமா?


அவனாகவே இதைச் செய்ய முடியாது. ஏனென்றால், எல்லாக் கிறிஸ்தவர்களும் நாள்தோறும் (அறிந்தோ, அறியாமலோ) பாவம் செய்கின்றனர். என்றாலும், அவனுடைய இரட்சகராகிய இயேசு தம் சொந்த நீதியினால் அவன் பாவத் தன்மையை மூடுகிறார்; எனவே, பலங்குன்றிய பெலவீனமான
கிறிஸ்தவனையும்கூட தேவன் தமது அன்புள்ள பிள்ளையாகக் கருதுகிறார்.

“ஒரு கிறிஸ்தவனை அவனுடைய
இரட்சகரிடமிருந்து இறுதியாகப் பிரித்து வைக்கும் ஒரே காரியம்
விசுவாசமின்மையே”.

பலங்குன்றிய பெலவீனமான கிறிஸ்தவனிடம் தேவன் பொறுமை காட்டி தம்மிடம் திருப்பும்படி அவனை இடைவிடாமல் அழைக்கிறார்.

1கொரிந்தியர்: 15:9,10 - "நான்
அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப்
பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது"

பிலிப்பியர்: 3:12 -
" நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேனென்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான்
பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்".

ஏசாயா: 1:18 - " வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்
சிவப்பாயிருந்தாலும், பஞ்சைப்போலாகும்"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.