எக்காள சத்தப் பண்டிகை பாகம் 2


இருண்ட காலத்தக்குப் பின் தொனித்த எக்காளங்கள்:

1. கி.பி.1517 - "விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல்" என்ற சத்தியத்தோடு மார்டின் லுத்தர் எழுந்தார். இதனால், லுத்தர் அனுபவித்த பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அநேக சீர்திருத்தவாதிகள் இரத்த சாட்சியாய் இந்த சத்தியத்திற்காக மரித்தார்கள். சபையை கீழ் நிலைக்கு இழுத்துச் சென்ற அநேக துர் உபதேசங்களுக்கு விரோதமாய் மார்டின் லுத்தர் தைரியமாய் பிரசங்கித்தார். நாம் கிரியைகளினாலோ, சடங்காச்சாரத்தினாலோ அல்லாமல், விசுவாசத்தினாலே இரட்சிக்கப்படுகிறோம் என்று அறிவுறுத்தினார்.

2. கி.பி.1524 - பாப்திஸ்துகள் எழும்பி தண்ணீரில் மூழ்கித்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற சத்தியத்தைக் கொண்டு வந்தார்கள்.

3. கி.பி.1738 - பரிசுத்தத்தையும் சுத்திகரிப்பையும் எக்காளத் தொனியில் முழங்குவதற்காக கர்த்தர் ஜான் வெஸ்லியை எழுப்பினார். பரிசுத்தத்திற்கும் வேறுபட்ட ஜீவியத்திற்கும் ஒப்புக் கொடுத்து அநேக கிறிஸ்தவர்கள் முன் வந்தார்கள். பாவ ஜீவியத்தைப் பற்றி உணர்த்தப்பட்ட ஜனங்கள் ஆயிரமாயிரமாய் தெருக்களில் அழுது புலம்பினார்கள். இதனால், பிரஞ்சுப் புரட்சியின் கொடுமையிலிருந்து இங்கிலாந்து தேசத்தார் பாதுகாக்கப்பட்டனர்.

4. கி.பி.1865 - நடைமுறை கிறிஸ்தவ ஜீவியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வந்தது. இரட்சண்ய சேனை பிறந்தது. டாக்டர்.பெர்னாண்டோ அநேக அனாதை இல்லங்களை ஸ்தாபித்தார். அது போன்ற இயக்கங்கள் 1886 ஆம் ஆண்ட முதல் ஏராளமாய் பெருகிற்று.

5. கி.பி.1875 - பரிசுத்தத்திற்கும் சுத்திகரிப்பிற்கும் மறுபடியும் திரும்பினார்கள். சுத்திகரிப்பு என்பது திட்டமான அனுபவமாக
வலியுறுத்தப்பட்டது. கெஸ்விக் இயக்கம் ஆரம்பமானது.

6. கி.பி.1880 - ஏ.பி.சிம்சன் தெய்வீக சுகமளித்தலைப் பற்றிய சத்தியங்களைக் கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்து நமது
பாவங்களுக்காக மட்டும் சிலுவையில் மரிக்காமல் நமது சரீரத்தின் நோய்களை நீக்கவும், வழியுண்டாக்கினார் என்று பிரசங்கித்தார்.

7. கி.பி. 1890 - பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பற்றி சத்தியமும் அந்நிய பாஷையில் பேசுவதுமாகிய சத்தியங்களும் வெளிவந்தன.1906ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுமிடத்தில்
அசுசா தெருவில் நடந்த எழுப்புதல்கூட்டங்களில் கர்த்தர் பரிசுத்தாவியின் நிறைவை அபரிதமாக ஊற்றினார். இது அநேக தேசங்களுக்கு பரவியது. அநேக பெந்தெகோஸ்தே ஆலயங்கள் உருவாயின.

8. கி.பி. 1948 பெரிய பெரிய சுவிசேஷ விழாக்களில் எக்காளச் சத்தம் பெருந்தொனியாய் முழங்கிற்று. பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், டி.எல.ஆஸ்போர்ன் போன்ற கர்த்தருடைய ஊழியர்கள் எழுந்தனர். ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடந்தன. பெருங் கூட்டத்தார்
இரட்சிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில்தான் இஸ்ரவேல் தேசம் மீண்டும் உருவானது. மட்டுமல்ல, பரிசுத்தாவியின் பின்மாரி அநேக ஸ்தாபன சபைகளில் ஊற்றப்பட்டது.

9. கி.பி.1962 - இன்றும் புதிய அபிஷேகம் புராட்டஸ்டாண்டசபைகளில் பற்றி பிடித்தது. கத்தோலிக்கர் மத்தியிலும் பரவியது. ஆழமான வேத பாடங்களை நடத்தும் ஊழியம் ஆரம்பமானது. முழு உலகத்தையும் சுவிசேஷத்தால் நிரப்பக் கூடிய சுவிசேஷ ஊழியம் நிறைந்த நாட்களுக்குள்
வந்திருக்கிறோம். 1962 பிப்ரவரி 26 க்குப் பின் 'அக்கி யூரியஸ்' என்ற சின்னமாகிய பானையிலிருந்து தண்ணீர் ஊற்றும் மனிதனின் அடையாளத்துக்கும் வந்திருக்கிறோம்.



கிறிஸ்து வருவதற்கு முன்பாக நிலைநிறுத்திக்
கொண்டிருக்கும், நிலைநிறுத்தப் போகும் சத்தியங்கள்:

- பரிசுத்தாவியின் ஒன்பது வரங்கள் -
1கொரிந்தியர்: 12:8-10

- உண்மையான ஆவிக்குரிய ஆராதனை - ஆவியிலே பாடி, கீத வாத்தியங்களோடு ஆராதிப்பது.

- விடுதலையின் ஊழியம், பிசாசின் பிடியிலிருந்தும், பாரம்பரியங்களிலிருந்தும், குறி சொல்லுதலிலிருந்தும் மக்களை விடுவிப்பது.

- ஆலயத்தில் தெய்வீக ஆராதனை ஒழுங்குகள்:

1. ஊழியத்துக்கடுத்த 5 வகை வரங்கள் - எபேசியர்: 4:11

2. சரீரமாகிய ஊழியம்

- எல்லா ஊழியங்களையும் ஒன்றாகக் கட்டுதல். எண்ணாகமம்: 10 அதிகாரம். தேவன் ஊழியத்திலே ஒற்றுமையையும், ஒருமுகப்பாட்டையும் கொண்ட வருதல்.

- யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தல் - ஆவிக்குரிய பிளவுபட்ட காலத்திற்கு முடிவு உண்டாக்குதல்.



எக்காளப் பண்டிகை... தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைவேறுதல்:

தேவன் நமக்களிக்கும் புதிய சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்போது இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை பரிபூரணமாக ஒப்புக் கொடுக்கும்போது நாம் தனிப்பட்ட முறையில் இந்த அனுபவத்துக்கு வருகிறோம். பெரிய காரியங்களை நடைமுறைக்கு கொண்டு வர தேவனுடைய அழைப்புக்கு செவி கொடுப்போமாக.


எபிரேயர்: 6:2 - "பூரணராகும்படி கடந்து போவோமாக..."

வாசித்துப் பாருங்கள்: ஏசாயா: 60:1; எபேசியர்: 5:14-16

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.