நியாயாதிபதிகளின்காலம்


நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வனாந்திரத்தில் சுற்றித் திரிந்த இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்தை வந்தடைந்தார்கள். அவர்களை நடத்தி வந்த யோசுவா பல யுத்தங்களை நடத்தி வெற்றி கண்டு கானான் தேசத்தை இஸ்ரவேலரின் 12 கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருந்தான். தேவன் தம்முடைய ஜனங்களுக்கு பாலும்ஈ தேனும் ஓடுகின்ற தேசத்தைக் கொடுத்ததுமட்டுமின்றி தம்மை ஆராதிக்கவும், சேவிக்கவும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் ஆர்வம் கொண்டிருந்த இஸ்ரவேலர் தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் செல்லவில்லை. மாறாக, அவர்களோடு கூட வாழ்ந்து கொண்டிருந்த பிற இனத்தவரோடு ஒன்றுபட்டு வாழவே கற்றுக் கொண்டார்கள். அந்த இனத்தவரோ விக்கிரகங்களை வணங்கி, வழிபாட்டின் அம்சங்களாக
காமகளியாட்டத்தையும், குழந்தைகளைப் பலியிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

மலைப் பாங்கான பகுதிகள் இஸ்ரவேலரின் வசம் இருந்தன. ஆனால், பள்ளத்தாக்குகள் பிற இனத்தவரின்
கட்டுப்பாட்டுக்குள் இருந்தபடியால், இஸ்ரவேலரின் கோத்திரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு
தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கோத்திரத்தாரும் தனிப்பட்ட முறையில் செயல்படத் துவங்கினார்கள்.
தேவனை ஆராதித்ததுமட்டு
மின்றி அவர்கள் பாகாலையும் வழிபட்டார்கள். பன்னிரண்டு சகோதரர்களின் சந்ததியினராக
இருந்தபோதிலும், அந்நிய ஜனங்களோடு போர் செய்வதைவிட தங்களுக்கிடையே சண்டை போடவே அதிக நேரம் செலவழித்தார்கள்.

தேவனுடைய ஜனங்கள் அவருடைய பாதையில் நடக்காமல் மீறி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறியவும், தேவனுடைய கிருபைகள் இதன் நடுவே எப்படி செயல்பட்டது என்பதையும் நியாயாதிபதிகளின் காலங்களிலிருந்து நாம் அறியலாம்.

இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகள்:


1. தலைவன்: ஒத்னியேல் (நியாயாதிபதிகள்: 3:7-11)
பகைவன்:
மொசபெத்தோமயா அரசனாகிய கூஷான் ரிஷாதாயீம்
அடிமைத்தனம்: 8 ஆண்டுகள்


2. தலைவன்: ஏகூத் (நியாயாதிபதிகள்: 3:12-20)
பகைவன்: மோவாபின் அரசனாகிய எக்லோன்
அடிமைத்தனம்: 18 ஆண்டுகள்
அமைதி: 80 ஆண்டுகள்

3. தலைவன்: சம்கார்
பகைவன்: பெலிஸ்தியர் (நியாயாதிபதிகள்: 3:31)



4. தலைவி: தெபோரா, சேனை தலைவன் பாராக் (நியாயாதிபதிகள்: 4:5)
பகைவர்: காத்சேரின் அரசனான யாபீன், செனைத் தலைவன் சிசேரா
அடிமைத்தனம்: 20 ஆண்டுகள்
அமைதி: 40 ஆண்டுகள்


%
5. தலைவன்: கிதியோன் (நியாயாதிபதிகள்: 6:8)
பகைவர்: மீதியானியர், அமலேக்கியர்
அடிமைத்தனம்: 7 ஆண்டுகள்
அமைதி: 40 ஆண்டுகள்


6. தலைவன்: அபிமெலேக்கு அரசனாதல்
யோசாபின் கதை: அமலேக்கியர் மரணம்
சு+ழ்நிலை: உள்நாட்டு கலகம்


7. தலைவன்: தோலா - இசக்கார் கோத்திரம் (நியாயாதிபதிகள்: 10:1,2)
நீதி வழங்கின காலம்: 23 ஆண்டுகள்

8. தலைவன்: யாபீர் - கிபியாத்தான் (நியாயாதிபதிகள்: 10:3-5)
நீதி வழங்கின காலம்: 22 ஆண்டுகள்


9. தலைவன்: எப்தா - கிலேயாத்தான் (நியாயாதிபதிகள்: 10:6-12:7)
பகைவர்: அம்மோனியர்
அடிமைத்தனம்: 18 ஆண்டுகள்
நீதி வழங்கின காலம்: 6 ஆண்டுகள்
(குமாரத்தியை குறித்த பொருத்தனை நிறைவேற்ற பலியிடப்பட்டது. ஷிபலோத் - கதை)


10. தலைவன்: இப்சான் - பெத்லகேம் ஊரான் (நியாயாதிபதிகள்: 12:8-10)
நீதி வழங்கின காலம்: 7 ஆண்டுகள்

11. தலைவன்: ஏலோன் - செபுலோன் கோத்திரத்தான் (நியா: 12:11,12)
நீதி வழங்கின காலம்: 8 ஆண்டுகள்


12. தலைவன்: அப்தோன் - எப்பிராயீம் கோத்திரத்தான் (நியா: 12:13-15)
நீதி வழங்கின காலம்: 8 ஆண்டுகள்


13. தலைவன்: சிம்சோன் - தாண் கோத்திரத்தான் (நியா: 13:16)
பகைவர்: பெலிஸ்தியர்
அடிமைத்தனம்: 40 ஆண்டுகள்
நீதி வழங்கின காலம்: 20 ஆண்டுகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.