"எசனீயர்"
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பாலஸ்தீனாவில் பரிசேய,
சதுசேயர்களைப்போல
"எஸ்சென்ஸ்"(Essenes) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வகுப்பினர் எனஜொசிப்பஸ்கூறுகிறார். 1947 ல் சவக்கடல் அருகில் 'கும்ரான்' என்னுமிடத்தில் (எரிகோவிலிருந்து தெற்கே 8 1/2 மைல்) புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அநேக சுருள்களையும், கட்டிடங்களின் பகுதிகளையும் கண்டு பிடித்தனர். இது ஒரு பாலைவனப்பகுதி.
இப்பகுதியில் மக்கள் கி.மு.100 முதல் கி.பி.100 வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதி மக்களைத்தான்
"கும்ரான் மக்கள்"என்றும்,
"சவக்கடல் கும்ரான் சுருள்கள் இனம்"(Dead Sea Scrool Community) என்றும் அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலுள்ள அநேக சுருள்கள் இதில் இருந்தது. இச்சுருள்களுக்கு ஆங்கிலத்தில்"IQIs"எனப்படும்.
'அந்தியோகஸ் எபிபனேஸ் IV'(Antiochus Epiphenes IV) என்ற இராஜா மிகவும் கொடுமையானவன். யூதர்களை
துன்பப்படுத்தினான்.
'ஹசிடியர்கள்' மிகவும் பக்தியுள்ளவர்கள். இவர்களுக்கு இம் மன்னன் உபத்திரவம் தந்ததினால் சுருள்களை எடுத்தக் கொண்டு சவக்கடலின் அருகே உள்ள 'கும்ரான்' என்னுமிடத்தில் தங்கியதாக பாரம்பரியம் உண்டு.
இந்த ஹசிடியர்கள் பக்திக்குரிய யூதர்கள். மக்கபேயர் புரட்சியில் மக்கபேயருக்கு உதவி செய்தார்கள். ஹசிடியர்கள் மக்கபேயருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பின்பு இந்த மக்கபேயர்கள் பக்தியில் குறைந்துபோய், போரில் மட்டும் முக்கிய கவனம் செலுத்தினர். எனவே, ஹசிடியர்கள் தங்களுடைய ஆதரவிலிருந்து விலகிக் கொண்டனர். எனவே, உபத்திரவம் அதிகரித்தது. எனவே, இவர்கள் யூதேயாவின் வனாந்திரத்தில் சவக்கடல் அருகே உள்ள குகைகளில் தங்கினர்.
தோற்றம்:
யூத மதத்தில் பரிசேயர், சதுசேயர், எசனேயர், செலோத்தியர் என்ற நான்கு மெய் விளக்கியல் கிளைகள் உண்டு என்று ஜொசிப்பஸ் கூறுகிறார். எசனேயர் என்ற சொல்'காசியாச்'என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என'பைலோ'(Philo) என்பவர் கருதினார்.'காசியாச்'என்ற சொல்'புனிதன்'அல்லது'பக்தன்'என்று பொருள்.
பரிசேயர் ஆவிக்குரிய வாழ்வை கடைபிடிக்காதவர்களை விட்டு தங்களை வேறுபடுத்திக் கொண்டார்கள். எசனேயர், சமயநெறியை சரிவரக் கைக்கொள்ளும்படி மக்கள் சமூகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள். முக்கியமாக பிற்காலத்தில் எழுந்த'பிதாகோரியர்'
( Pythagoreans) என்ற மெய்விளக்கியல் வகுப்பார் மூலம்'எசனேய வகுப்பு'உருவாயிற்று. யோனத்தான் ஆட்சியின்போது கி.மு.161 - 148, அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர் ஜொசிப்பஸ் கூறுகிறார்.
மக்கபேயர் கலகத்திற்குப் பின்னால் எழுந்த அதிகாரப் போட்டியில் சீமோன் ஆசாரியனாகவும், ஆளுநராகவும் அதிகாரத்தைக் கைப்பற்றவே,பரிசேயர், சதுசேயர், எசனேயர்ஆகிய இம் மூன்று வகுப்பினர் தோன்றினர் என்று W.R.ஃபார்மர்(W.R.Farmer) என்ற வேத பண்டிதர் கூறுகிறார்.